ஒரு பெண் போராளி ஒரு ஆண் போராளியிடம் சொன்ன ஒரு வார்த்தை (உண்மை சம்பவம்)

ஒரு பெண் போராளி ஒரு ஆண் போராளியிடம் சொன்ன ஒரு வார்த்தை. அந்த வார்த்தை இன்னும் பல ஆண் போராளிகளின் மனதில் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு……!

உண்மை சம்பவம்
தமிழீழ தேசத்தில் பல இடங்களில் திடிர் திடிரென சிங்கள காடையருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் மோதல் இடம் பெறுவது வழக்கம். ஆனால் சிங்கள காடையன் தனது வீரத்தை பெண் போராளிகளிடம் தான் அதிகம் காட்டி பல தடவைகள் துண்டைக்கானம் துனியைக் காணாம் என்று ஓடிய பல வரலாறுகள் உள்ளது.
சிங்கள படைகள் அதிகமாக இராணுவ நகர்வினை பெண் போராளிகளின் பக்கங்களில் இருந்து தான் தொடங்குவார்கள் ஏன் என்றால் பெண்களிடம் தங்கள் வீரத்தை காட்டி தாங்கள் முன்னேறி விட்டோம் என்பதை உலகிற்கு காட்டுவதற்கு ஆனால் இவை எல்லாம் எங்கள் பெண் போராளிகளிடம் நடக்கவில்லை சிங்களவன் அடிக்கு மேல் அடி தான் வாங்கினான். ஒரு நாள் தற்செயலாக இராணுவத்தில் சுற்றிவலைப்பில் பல பெண் போராளிகள் மாட்டி விட்டார்கள். சிங்களவனின் தாக்குதலில் பல போராளிகள் காயப்பட்டார்கள் என்ன செய்வது என்று தெரியாமல் பெண் போராளிகள் தினறிக்கொண்டு  இருந்த போது பக்கத்தில் நிலைகொண்டுள்ள ஆண் போராளிகள் இராணுவத்தை சுற்றிவளைத்து ஒரு பக்கத்தை உடைத்து உள்ளே மாட்டிக்கொண்ட பெண் போராளிகளை வெளியேற்றினார்கள்.
அப்போது சில பெண் போராளிகளுக்கு நடக்க கூட முடியாமல் காயப்பட்டிருந்தார்கள் அவர்களின் சிலர் வலி தாங்க முடியாமல் அழுதார்கள் அவர்களின் அழுகைச் சத்தத்தை வைத்து அந்த இடத்திற்கு இராணுவத்தினர் தாக்கினார்கள் அப்போது ஒரு ஆண் போராளி சொன்னான் தங்கசி அழவேண்டம் உங்கள் சத்தத்தை வைத்து ஆமி அடிக்கின்றான் என்று ஆனால் அவர்களால் வேதனையை தாங்க முடியாமல் மறு படியும் அழுதார்கள்.
கோபப்பட்டான் ஆண் போராளி உங்களிடம் ஒரு தடவை சொன்னால் கேக்க மாட்டிங்களா என்று கோபத்துடன் கேட்டான் அப்போது ஒரு பெண் போராளி சொன்னால் அண்ணா நீங்கள் எல்லோரும் எங்கள் பக்கத்தில் இருக்கும் போது ஏன் நாங்கள் பயப்பட வேண்டும் என்று கேட்டால் ஆண் போராளியின் வாயில் வேறு பதில் வரவில்லை.
ஆண் போராளிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சிங்கள இராணுவம் ஓட்டம் எடுத்தான் பின்பு காயப்பட்ட போராளிகளை பக்குவமாக அந்த இடத்தை விட்டு பாதுகாப்பன இடத்துக்கு அனுப்பி வைத்தனர் ஆண் போராளிகள்.
இறுதி யுத்தத்தில் எம்மை நம்பிய பெண் போராளிகளை கூட பாதுகாக்க முடியாமல் போய் விட்டது துரோகிகளின் துரோகத்தால் என்று சில ஆண் போராளிகளின் இன்றைய வேதனை…..!
உண்மை சம்பவம்
நன்றி.
யாழ்காந் தமிழீழம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக