மட்டுநகர் கமல்தாஸ் எழுதிய உயிரை உருக்கிய உன்னதம்

உயிரை நிறுத்தி
உடலை வருத்தி
உரிமை கேட்ட உறவே !
உறவுகளுக்கு உறவாய்
வாழும் உயிரே !
உயிர் கரைந்தோடும் வரை
உறுதி ஊற்றை உடைக்கதிருந்தாய்
அளப்பெரும் தியாகம் ஒன்றை
அழகன் வீதியில் நிகழ்த்தி காட்டி
நிலையானாய் அகிலத்தில்
வாடும் பூவுக்கு நீர் எதற்க்கு என்பது போல
சாகும் பூவுடளுக்கு புத்தாடை எதற்க்கென
பிடிவாதமாயிருந்தாய்
உற்றெடுத்த கண்ணீரிலே
உறுதி தளர எண்ணவில்லை
இன விழியில் ஓடும் கண்ணீரைத் துடைக்கவே
உயிரை உருக்கினாய்
உண்ணாநோன்பிருந்து
பன்னிரண்டு கரத்தோனின் வீதியிலே
பன்னிரண்டு நாள் காத்திருந்தான் பார்த்தீபன்
வேலனின் பூசையை நிறுத்தி விட்டு
வேங்கையின் மீதி பன்னீரினால் நீராட்டி
பூக்களினால் வீர உடலை போர்த்தினோம்
இனகூட்டத்தின் நெருக்கடியிப்புழுதியை
மக்களின் கண்ணீரில் அடங்கிப்போனது
பாரத தேசத்தின் பொய்முகம்
கிழிந்து போனது
ஈழத்தாயவள் மடியில் ஏந்தினால்
உயிர்த்தார்கள் ஈழ மண்ணில்
பல தியாகித்திலீபன்

‌ஆக்கம் மட்டுநகர் கமல்தாஸ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக