அய்யா திலீபன் எங்கையா போகின்றாய்!-காசி ஆனந்தன்!

அய்யா திலீபன் எங்கையா போகின்றாய்!
அய்யா திலீபன் எங்கையா போகின்றாய்!

மேடையில் நீ ஏறினால் இடி முழங்கும்
சிங்களத்து காடை வெறிப்படையின் காதுகளில் நெருப்பு விழும்!
கூட்டத்தில் நிற்கும் தமிழ் இளைஞ்சர் தோல் எலும்பு பூட்டுக்குள் இரும்பு மலை புறப்படும்
எதிரியின் வீழாத கோட்டை மதில் வெடிக்கும்
தமிழர் இனம் ஆளாத ஆளாத என்று ஓர் அலை கிளம்பும்
வலை அணிந்த இளம்பெண்கள் கையும்
வெடிகுண்டின் முலை திருகி எறியும்
உன் முழக்கம் அதை செய்யும்.
பணியாகி விழத்துடித்தாய் எங்கள் படைத் தலைவா
இனியும் இடிமுழக்கம் எண்டைக்கு நாம் கேப்போம்..
அய்யா திலீபன் எங்கையா போகின்றாய்!
அய்யா திலீபன் எங்கையா போகின்றாய்!
சண்டையிலே வெறிப்படைகள் சட சட என்று அன்று பெய்த குண்டு மழை ஆடி குளித்த இளம் புலியே!
சண்டையிலே வெறிப்படைகள் சட சட என்று அன்று பெய்த குண்டு மழை ஆடி குளித்த இளம் புலியே!
ஆண்ட சிங்களவர் வெறிப்போரில் அன்று நீ மண்டிருந்தால்
எங்கள் மனம் ஆறிப்போயிருக்கும்.
வெடிகுண்டும் கையுமாய் வீழ்ந்திருப்பாய் எதிரிகளின் படையிலும் நாலு பேர் படையிலே கிடந்திருப்பர்
வெடிகுண்டும் கையுமாய் வீழ்ந்திருப்பாய் எதிரிகளின் படையிலும் நாலு பேர் படையிலே கிடந்திருப்பர்.
வெட்ட வெறும் கையேடு வீரா நீ இந்தநாள் பட்றென்று வீழ பாக்கின்றாய் துடிக்கின்றோம்.
அய்யா திலீபன் அய்யா திலீபன் எங்கையா போகின்றாய்!
இந்தியா அரசே நீ ஏமாற்றி விட்டாய் போ !
ஒன்றை நீ உணர்க என்றைக்கும் விடுதலைத் தீ குன்றியதாய் வரலாற்றில் குறிப்பில்லை படித்துப் பார்..
ஒடுக்கப்பட்டோர் பக்கம் உள்ளேன் என்று உரைத்த நீ கொடுக்கான்கள் பக்கம் கூடி உலவுகிறாய்..
ஒடுக்கப்பட்டோர் பக்கம் உள்ளேன் என்றாய் இன்று நீ சிங்களவன் கைபந்தம் ஆகி கழுத்தை அருக்கின்றாய்..
இந்திய அரசே! இது தமிழீழ மண்
இந்திய அரசே! இது தமிழீழ மண்
வேந்தனில் இந்தமண்ணின் விலை பொருள்
வேந்தனில் இந்தமண்ணின் விலை பொருள்
வல்ல தமிழீழம் மண்னல்ல ,கடல்ல மில்லரை பெற்ற மிகப்பெரிய தாய் வயிறு
வல்ல தமிழீழம் மண்னல்ல ,கடல்ல மில்லரை பெற்ற மிகப்பெரிய தாய் வயிறு
நீ உதவிக்கு இல்லை என்றால் எம் விடுதலை தீ அடங்கி போகும் என தினையளவும் என்னதே!
நீ உதவிக்கு இல்லை என்றால் எம் விடுதலை தீ அடங்கி போகும் என தினையளவும் என்னதே!
வானம் இடிந்து விழும் ,புயல் இங்கு வெறி ஆடும், மின்னல் நெருப்பு கிழிக்கும், கடல் பொங்கும், கூத்தாடும் பூகங்கம்,
பிறளையம் குமுறி எழும் பார்த்திருக்க கண்முன் தமிழீழப் பழம் தொங்கும்…
வானம் இடிந்து விழும் ,புயல் இங்கு வெறி ஆடும், மின்னல் நெருப்பு கிழிக்கும், கடல் பொங்கும், கூத்தாடும் பூகங்கம்,
பிறளையம் குமுறி எழும் பார்த்திருக்க கண்முன் தமிழீழப் பழம் தொங்கும்…
இங்கே பார் ஒரு பிள்ளை எலும்பாய் உருகுகிறன்
இங்கே பார் ஒரு பிள்ளை எலும்பாய் உருகுகிறன்
மங்கி மங்கி ஒரு விளக்கு மரணத்தை அழைக்கிறது.
மங்கி மங்கி ஒரு விளக்கு மரணத்தை அழைக்கிறது.
இங்கே பார் ஒரு பிள்ளை எலும்பாய் உருகுகிறன்
காம்பு கழன்று ஒரு சிறு பூ தனைப் பெற்ற மரத்தின் வேரில் எருவை விள மெல்ல அசைகிறது,
காம்பு கழன்று ஒரு சிறு பூ தனைப் பெற்ற மரத்தின் வேரில் எருவை விள மெல்ல அசைகிறது,
அய்யா திலீபன் எங்கையா போகின்றாய்!
அய்யா திலீபன் எங்கையா போகின்றாய்!
எங்கையா போகின்றாய்!
– உணர்ச்சி பாவலர் காசி ஆனந்தன்-

0 கருத்துகள்:

கருத்துரையிடுக