இலங்கையில் அப்போது அதிகளவான பொது மக்கள் பயன்படுத்தும் நூலகமாகவும், வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இரண்டாவது பெரிய நூலகமாகவும் திகழ்ந்த யாழ் நூலகம் எரிக்கப்பட்டு 35 ஆண்டுகளாகிவிட்டன.
எம்பி. தியாகராஜாவை புளொட் இயக்க சுந்தரம் சுட்டுக்கொல்ல அதற்குப்பதில் இராணுவம் நாச்சிமார் அம்மன் கோயில் கோபுரத்தை எரித்தது. இதிலிருந்து யாழில் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. 
இதற்குப்பதிலாக இதுவரை ஆயுதமெளனம் காத்துவந்த விடுதலைப் புலிகள் இயக்கம் லெப்.சீலன் தலைமையில் 18 பேர் (தலைவர் உட்பட) உரும்பிராய் பிள்ளையார் கோயிலடியில் வைத்து முதலாவது வீதித் தாக்குதலை 28.05.81 நள்ளிரவு நடத்தினர். . இதில் கலந்துகொண்ட வர்களில் 5பேர் புலம்பெயர் தேசங்களின் உள்ளனர். கலாவதி உட்பட.இதுவே விடுதலைப்புலிகளின் கன்னி வீதித்தாக்குதலாகும். இரண்டாவது உமையாழ்புரத்தாக்குதல்
இதேநேரம் 31.05.81 இலங்கையின் மாவட்ட அபிவிருத்தி சபைத்தேர்தல் நடைபெற இருந்தது. இதற்கான ஆயத்தம் எல்லா இடமும் நடைபெற நல்லூரிலும் சிவசிதம்பரத்தின் பிராந்திய செயலகத்திலும் ஆயத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவ்வாறு ஆயத்த வேலைகள் செய்துகொண்டிருந்த 2 பேர் இதன் எதிரொலியாக கொல்லப்பட்டனர்.
அதுவரை தேர்தலைப் புறக்கணிப்பதாக இருந்த மக்கள் இச்சம்பவத்துடன் கிளர்ந்தெழுந்து 100% வாக்கினை அளித்து கூட்டணியை வெல்லவைத்தனர். இது இராணுவத்தை மேலும் ஆத்திரமூட்டச் செய்தன. 31.05.81 தேர்தல் வெற்றிக்களிப்பில் இருந்த மக்களுக்கு அன்று நள்ளிரவு இடி விழும் என எதிர் பார்க்கவில்லை.
இது இப்படி இருக்க பிரேமதாச - லலித் - காமினி திசாநாயக்க இடையிலான முக்கோண போட்டி காமினியை உந்த காமினி இவர்களை வீழ்த்தி முன்னுக்குவர யாழ் நூலகத்தை எரிக்க திட்டமிட்டான். இதற்கு அவன் ஆலோசகரும், சட்டத்தரணியும் உந்துதலாக இருந்தனர்.
காமினியுடன் 3 பஸ்களில் சுமா‌ர் 150 வரையான காடையர்கள், விடுப்பில் இருந்த பொலிஸ், யாழ் பொலிஸ் ஆகியோர் இத்துரோகத்திற்கு துணைநிண்டனர். யாழ் நூலகமும் இவர்கள் எண்ணம்போல் எரிந்தது. ஆனால் காமினியின் அரசியற் கனவு கறைபடிந்ததாக ஆகிவிட்டன. இதனால் ஈழத்தமிழர்களின் விலை மதிக்க முடியாத பொக்கிசங்கள் அழிந்து நாசமாகின
இதனா‌ல் கையெழுத்துப்பிரதிகள், ஓலைச்சுவடிகள், சங்கிலியன் கால மருத்துவ நூல்கள், வாகடங்கள் என விலைமதிப்பற்ற நூல்கள் எரிந்து சாம்பராகின.
யாழ் நூலகம் எரிதல் கண்டு கலங்கிய பல்கலைக்கழக மாணவர்கள் கையில் டைனமேற் வெடியுடன் பல்கலைக்கழக நூலகத்தை காப்பாற்ற திரிந்தனர். இவர்களுடன் தலைவர் பிரபாகரன், லெப் சீலன் உள்ளிட்ட போராளிகளும் அப்போது கிட்டத்தட்ட இரண்டு லட்சம் புத்தகங்கள் வரையில் இருந்த பல்கலைக்கழக நூலகத்தை காப்பாற்ற காவலிருந்தனர்.
இந்நூலக எரிப்பானது ஈழத்தமிழர் மத்தியில் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்

அறிவு
வயல் எரிந்தது
ஆனாலும்
தமிழன் அறுவடை
குன்றவில்லை.

எப்படை கொண்டும்
அழிக்க முடியாத 
கொடை தமிழறிவு
சென்ற இடமெல்லாம்
வென்று நிமிரும்
சிறார்கள் படை..!

திரும்பும் இடம்
எங்கினும் சாதனைத்
திடல்.! விட்டதைப்
பிடிக்கும் பாய்ச்சல்
கல்வியும் செல்வமும்
கை வசம். வீரம்
மட்டும் கட்டுக்குள்.
தூரம் அதிகமில்லை.!

கூலிப்படை கொண்டு
அறிவுப் பட்டறையை
பற்றவைத்தான்
காடையரைக் கொண்டு
சொத்தழித்தான்.
உலகப் படை கொண்டு
வீரத்தில் கைவைத்தான்..!

அழிந்ததாய் அழித்ததாய்
நினக்கும் எவையும்
அழியவில்லை..இதை
அறிவிழந்தவன்
அறியும் நாள் தூரமில்லை
தரப்படுத்தல் தடை தாண்டி
உலகுக்கே உரமிடும்
எங்கள் அறிவு ஜீவிகள்
உருவாகும் தளங்களில்
இருந்து உரைப்போம்
காலம் நம் கையில்....
வாழும் வரை போராடு
வையம் நம் வசம்..!


ஆக்கம்  கவிஞர் எழுத்தாளர் தயாநிதி



உயிரினும் மேலான
தாய் நாடு
உருவமே மாறியது
இன் நாளில்.
உயிர்ப் பயிர்
மேய்ந்திடும்
மேல் நாடும்
கை கொடுத்தே
ஓய்ந்தது இன் நாளில்...

அரச மரத்தோடு
வந்தார்கள்
புத்த மதத்தோடு
நிறைந்தார்கள்
அடித்துப் பறிப்பதை
பிழைப்பாக்கி
அப்பாவித் தமிழரை
அழித்தார்கள்
அவர்கள் இன்பத்தை
தொலைத்தார்கள்
இன்நாளில்../
வந்தோரை வாழ
வைக்கும் பண்பாட்டால்
சொந்த மண்ணிலேயே
அகதியுமானார்கள்.
கட்டிக் காத்திட்ட
கலை கலாச்சாரம்
காற்றிலே கரைந்திட
வீதிக்கு வீதி
சதிராட்டம்.நடக்குதாம்
இன்நாளில்..!
கோலம் கலைந்திட்ட
திரு நாட்டை
ஒரு கரம் கொண்டு
வரைதல் எவ்வாறு..
வளங்கள் நிறைந்த
நம் நாட்டின்
நலன் காத்தல்
வேண்டாமோ!
பலம் கொண்டெழுந்து
ஒன்றாகி அதனை
மீட்டல் ஒன்றே
கடனாகும் இன் நாளில்..

ஆக்கம்  கவிஞர் எழுத்தாளர் தயாநிதி




தண்ணீரில் கண்ணீர்கரையும்
காலம் கங்கணமிட்டிருக்கும்
செங்குருதி சிதைந்தோடும்

வெஞ்சினவேளை விரையும்



துரோகத்தின் கொடுமையை
விரோதத்தின் வெப்பியாரத்தை
புத்தனின் தேசப்பித்தர்களும்
புத்தியிலேற்றும் நாள்வரும்


ஈழத்தின் புனிதத்தை கலைத்த
அத்தனை வல்லரசுப் போர்முனையும்
முற்றுகை முகாமிட்டழிக்கும் ஒருநாள்
புத்தனின் போதிமரத்தோடு தேசத்தையும்


உடல்கருகி ஊண்சிதைந்து
கடல்தாண்டி அலை கொதிக்க
உணவளித்து ஆறுதலுரைப்பார்
எல்லாளன் வம்சத்துப்பிள்ளைகள்


முள்ளிவாய்க்காலின் எதிர்த்தாக்கம்
கட்டாயம் நடக்கும் தென்புலத்தில்
துட்டகாமினியின் குடிகளையும் காக்கும்
தூயசோழவீர வேங்கைக்கொடி அன்று



ஆக்கம்  கவிஞர்
வன்னியூர் செந்தூரன் 

வன்னியின் வீரமகன்
வரலாறான துக்ககாலம்
கானகக்கரைகளின் காவல்
கனலில் களம் கண்ட லீமா

மணலாறு முதல் ஆனையிறவு குடாரப்பு
முல்லைக்கோட்டை முதல் மன்னார் என
மன்னனின் பாதமறியாப் போர்க்களங்களுண்டோ
மருண்டோடாத மூர்க்கப் படைகளுமுண்டோ

பால்ராஜ்அண்ணா ஒரு தனிச்சரித்திரம்
ஈழத்தமிழ் போராட்டக்காவியத்தில்
மற்றைய தளபதிகளிலிருந்து சற்று வேறுபட்டவர்
மரணத்தை முன்னிலையில் ஏற்கத்துணிந்த மறவன்

முல்லைநிலத்தின் மைந்தன் வீழ்ந்ததுமே
வன்னியினெல்லை வற்றத்தொடங்கியதுண்மை
மாரடைப்பில் மௌனிக்காவிட்டால்
முள்ளிவாய்க்காலும் பகைக்கு கனவே என்றும்..


ஆக்கம் கவிஞர்-வன்னியூர் 

செந்தூரன்-



கனப்பொழுதும் 
நினையேன்
எனக்கும் நடக்கும் என்று

இதயம் சுக்குநூறாக
செத்த உடலங்களின்
மேல் ஏறி
நடந்து வந்த வலி
மறவேன்
உடலை எமக்கு
பாதையாக்கி
மடிந்து கிடந்த 
என் உறவுகளின்
உதிரம் இன்னும்
கறையாக 
படிந்திருக்கிறது
என் பாதங்களில்


முரட்டு வஞ்சனை 
செய்து 
வகை வகையாய் 
கொன்று குவித்த 
புத்தனின் கூட்டம்
அதன் மீதேறி 
ஆனந்த தாண்டவம்
ஆட 
எம் குருதி 
மட்டுமா
ஆயுதமும் மௌனித்து 
போனதே!

இரவிரவாக
சரண்டைய மனமின்றி
போகும் உயிர் போகட்டும்
என தைரியம் 
எனக்கூட்டி
எனைச்சுமந்து
வந்த சகோதரனின்
கையை கட்டி போட்டது
என் பாவம் 
என்பேன்
களத்தில் மடியாமல்
இன்று வெற்று 
வீரவசனங்கள் 
பேசும் போது 
வெட்கத்தால் 
தலைகுனிகிறேன்

வெறிச்சோடிய 
எம் சாலைகளும்
அழுது புலம்பிய 
உறவுகளும் 
கண்ணில் நிழலாடுவதை 
காண்கிறேன் தினமும்

இரவோடு இரவாக 
வெளியேறி 
எம் மண்ணில் 
ஒழிந்து 
அயல் தேசம் வந்து
அழுது புலம்புகிறேன்
ஈழத்து மகள் எனும் 
நாமத்துடன்


ஆக்கம் பவித்ரா நந்தகுமார் 



சமவுரிமை வேண்டுமென 
சமர் புரிந்த தமிழ் இனமே !
சர்வதேசம் உதவுமென்று 
ஏமார்ந்து போனோமே!

குண்டு மழை உடல் துளைக்க 
குருதியில் நாம் குளித்தோம் 
வைக்கோல் குவியல்கள் போல் 
வீதியெங்கும் பிண மலைகள்

வெள்ளைக்  கொடியேந்தியோரும் 
கொடூரமாய் கொல்லப்பட்டார் 
தன்மான மறத்தியரும் 
உடல் கிழித்து கசக்கப்பட்டார்

சர்வதேசம் உயிர் காக்க வருமென்று 
நாம் நம்பி தவித்து நின்றோம் 
அண்டை நாடு இந்தியாவின் 
வருகைக்காய் தவமிருந்தோம் 

தமிழர் இனம் அழியும் வரை 
யாரும் இங்கு வரவில்லை 
நாம் அழிந்த பின்பு  இங்கு 
அறிக்கைகள் பல விட்டார்

அச்சிட்ட அறிக்கைகளை திருத்துவதில்
 ஐ நா சபை என்றுமே முதல் இடம் தான்!
நீதித் தேவதையின் கண்களும் குருடாகி விட்டது 
சர்வதேசமும் தமிழர் முதுகில் குத்தியதால்.


எமது தேச உணர்வுடன் ஆக்கம்
 சேமமடுவூர் சிவகேசவன்
முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் இன்று காலை இடம்பெற்றது. இந்த நிகழ்வை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுடரேற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், மத குருமார்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், ரவிகரன், டெனிஸ்வரன், ப.சத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர், சாட்சியங்கள் அற்ற படுகொலைகளாக முள்ளிவாய்க்கால் படுகொலைகள் இடம்பெற்றன. முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் எந்தவித சாட்சியங்களும் இன்றி கொல்லப்பட்டார்கள். இவ்வாறு இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கு இலங்கையின் சட்டத்தில் இடமில்லை. உள்ளக விசாரணை நடத்தப்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சரியான தீர்வு கிடைக்காது. இதனாலேயே சர்வதேச குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துவதாக தெரிவித்த வடமாகாண முதலமைச்சர், சர்வதேச விசாரணையின் மூலமே உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையும் என தெரிவித்தார்.

மேலும் கடந்த கால யுத்தத்தில் யார்? யார்? கொல்லப்பட்டார்கள், எவ்வாறு கொல்லப்பட்டார்கள்? யாரால் கொல்லப்பட்டார்கள்? என்ற சாட்சியங்கள் இல்லை. இது குறித்து விசாரணை செய்யவேண்டும். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது மரபு ரீதியானது. ஒன்று சேர்ந்து சோகத்தை வெளிப்படுத்துவது எங்களின் பாரம்பரிய மரபாகும். இந்த அஞ்சலி நிகழ்வுகளைக் கூட கடந்த அரசாங்கம் தடுத்த போதிலும், புதிய அரசாங்கம் எங்கள் மனநிலையை புரிந்துகொண்டு தடை விதிக்கவில்லை. அதேபோல் தமிழ் மக்களின் பிரச்சினைக்காக தீர்வுகளை புதிய அரசாங்கம் வழங்கும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இன்றைய நாள்
தமிழர்களின் கறுப்பு தினம்
இதயங்கள் இரத்தக்கண்ணீர்
வடித்து நின்ற நாள்
இனவெறியால்

எம் மக்களை இரக்கமின்றி
மண்ணுக்குள் புதைத்த நாள்
அங்கங்கள் இழந்து
ஆயிரம் ஆயிரம் உறவுகள் 
நிற்கதியான நாள்
மௌனமாக கண்களை மூடி
கண்ணீர் வடித்து செல்ல முடியாது
இதயம் புலம்புகிறது,
விடிவொன்று எமக்கு கிடைக்காதா என
ஏங்குகிறது.....???

இறந்த எம் இனத்தினரை எண்ணி
கண்ணீரோடு கண்களைமூடி
மௌன அஞ்சலி செலுத்துகிறேன்,
ஆத்மா சாந்தியடைய..


எமது தேச உணர்வுடன்


ஜெசுதா யோ

எமை எரித்த சாம்பலில் இருந்து மீண்டும் எழுவோம்...
காலம் ஒன்றல்ல இரண்டல்ல பல நூறு வரலாறுகளை எம் இனத்திற்கு கொடுத்திருக்கிறது. தோற்று விட்டோம் என துவழாமல் விழுந்த இடத்தில் இருந்து அக்கினி சிறகாக மீண்டும் எழுவோம். முள்ளிவாய்க்கால் முடிவினை தரவில்லை எமக்கு விழுந்தால் மீண்டும் எப்படி எழ வேண்டும் என்ற படிப்பினையை தந்திருக்கிறது. லட்சக்கணக்கான உயிர்களை மண்ணில் விதைத்துள்ளோம். ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு விடுதலை வீரனின் வரலாற்றை சுமந்து நிற்கிறது. மீண்டும் புலிகள் வருவார்கள் என காத்திருப்பது தவறு முதலில் நாம் தான் புலிகள் என உணர வேண்டும். புலிகளே மக்கள், மக்களே புலிகள் இதுவே வரலாறு. அவர்கள் வேறு நாம் வேறாக வாழ்ந்திட வில்லை அவர்களோடு தான் நாம் ஒன்றாக வாழ்ந்திருக்கிறோம் நம் அனைவரின் வீட்டில் இருந்தும் ஒரு மாவீரனையும் போராளியையும் கொடுத்திருக்கிறோம் அப்படி இருக்க நம்மோடு வாழ்ந்த புலிகள் நமக்கும் அதே உணர்வினை விட்டு சென்றுள்ளனர்.
வரலாற்றில் பல விடுதலை போராட்டங்கள் நடைபெற்றன இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவை வென்றும் இருக்கிறது பல தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
நாம் ஒரு நேர்மையான போராட்டத்தில் தோல்வியினை பெற வில்லை. ஒரு துரோக வரலாற்றின் முதுகிலே குத்தப்பட்ட நிலையிலேடயே வீழ்ந்தோம். நேர்மையான போராட்ட வரலாற்றில் இதுவரை தாம் விழ வில்லை அதை பல வரலாறுகள் அறியும். தோல்வியை சகிக்காத சிங்களமும், பயத்தினை தாங்காத உலக வல்லாதிக்க நாடுகளும், சிங்கள கைக்கூலிகளான இந்திய அரசும் எம்மை நேராக நெஞ்சிலே குத்த முடியாமல் முதுகிலே குத்தி வெற்றி வரலாறு படைத்ததாக சாயம் பூசிக்கொள்கிறது. இதுவரை எத்தனை மாவீர வரலாறுகளை கொண்ட இனம் என்ற நிலையில் இருந்து சற்று விலகி யோசித்து பார்த்தால் 2009ல் மரணித்த பொது மக்களும் ஒரு வகையில் மாவீரர்கள் தான். தங்கள் சொந்த நிலத்தையும் சுய நிர்ணயத்தையும் விட்டு வெளியேற முடியாத நிலையில் வருவது வரட்டும் என களத்தினில் நின்று மடிந்து போனார்களே அவர்களை என்ன சொல்வது. அவர்கள் தாமே மரணத்தை தேடவில்லை அவர்கள் நன்றி மறக்காமல் தங்களை பணயம் வைத்தார்கள்.
முள்ளிவாய்க்கால் முடிவானது உலக நாட்டிற்கும், சிங்களத்து வங்குரோத்துகளுக்குமே தவிர எமக்கல்ல. இன்று நாட்டப்பட்டிருக்கும் கல்லறைகள் நமக்கான செய்திகளை கூறும் எரிந்த சாம்பல் மீண்டும் உயிர் பெறும் இது திண்ணம்.
இன்று போராட்டங்கள் ஓய்ந்த நிலையில் தலைவரின் இருப்பை அறியாத நிலையில் நாம் திரிபு படுத்தப்படும் நிலையிலும் இருக்கிறோம். காரணம் தமிழ் மக்களுக்கு ஆதரவாக வெளிச்சாயம் பூசப்படும் சிலரால் மறைமுகமாக சிங்கள ஆதரவோடு எமை தாக்கும் நிலையில் தடுமாறுகின்ற நிலையில் காணப்படுகின்றோம். தலைவர் பிரபாகரன் அனாதை பிணமாக்கப்பட்டதாகவும் அவருக்கு வீரவணக்கம் என்றும் சில இணையங்கள் செயற்படுவதும் இன்று வேதனையை தருகிறது. தாங்கள் தான் புலிகள் என்றும் தாங்கள் எல்லாம் அறிவர் என்றும் பீத்திக்கொண்டு தங்கள் வியாபார நடவடிக்கையை தொடர்கின்றனர். ஈழப்போராட்டத்தில் உண்ணிப்பான கவனம் தேவை அதிலும் முள்ளிவாய்க்கால் இறுதி நிமிடங்கள் களத்தில் இறுதி வரை நின்றவனுக்கே புரியும் வெளியே இருந்து கொண்டு பேசுவதால் எந்த பொய்யும் உண்மையாக போவதில்லை.
"சுட்டு விட்ட பூமி இது மீண்டும் மீண்டும் கருத்தரிக்கும் எம் போராட்டம். எவன் வந்து தடை இடினும் நேரான பாதையில் மீண்டும் களம் புகுவோம் விரைவில்"

 எமது தேச உணர்வுடன் பவித்ரா நந்தகுமார்
சர்வதேசமே...,
நான் இன்று உன்னோடு தான்
பேசப் போகிறேன்...
உன்னிடம் மட்டும் தான் இன்று
வினா தொடுக்க போகிறேன்
நீ அறிவாயா நீ யார் என்று?
நீயும் இனவழிப்பாளிதான்.
உன் மேலே நான் சான்றிதழ் குத்துகிறேன்.
மனித குலத்தின் அவல உச்சத்தின்
எவரஸ்ட் விருதுக்கு தகுதி பெற்ற
வல்லரசுகளே... நீங்கள்
காட்டிக்குடுத்து...
கலைகள் குடுத்து கருவிகுடுத்து
உலகின் மூத்த குடியை
அடி பணிய வைக்க
சிங்களத்தை தட்டிக் கொடுத்த
குற்றவாளிதான்
வீச்சுக்கள் மேலெழ
மூச்சற்று தவித்து கிடந்த
தமிழினத்தின் கருவறுக்க
வைத்த அச்சாணிகள் தான்
தமிழின் வீரத்தை, எங்களின் தியாகத்தை,
விலை மதிப்பில்லாத தமிழின் உதிரத்தை உறிஞ்சி குடிக்க முனைந்த
களவாணிக் கூட்டம் தான்
கூடி நின்று நாடி வந்த வெள்ளை புறாக்களை
உரித்து தின்ற கொடூர கொலையாளிகள் தான்
நந்திக்கடல் எங்கள் குருதியால்
நனைந்து சிவப்பாகிய போது
உன் விழியும் செவியும்
அரசியல் விபச்சாரியோடு கூடாலா கொண்டது?
சொல் சர்வதேசமே...
எங்கள் பிள்ளைகள் வன்பறிப்பாளரால்
கிழித்தெறியப்பட்ட போது உன்
உணர்வுகள் என்ன சிங்களத்தின்
பிச்சைக்காய் ஏங்கியா கிடந்தது?
ஆண்டுகள் ஏழு ஆகியே போனது
மாண்டு போனாரா மீண்டு வருவாரா
நிலையறியாது எம்மவர் இருப்பு நகருது
தீண்டிடும் வலிகளை சுமந்தவர் நாம்
எம் மீது சர்வதேசமே ஏன் நீ மௌனத்தை விதைக்கிறாய்?
ஏன் தவறிழைத்தாய்?
எம்மை சாவுக்குள் தள்ளி ஏன் ஏப்பம் விட்டாய்?
உன் தலமை வீட்டு வாசல் ஜெனீவாவில் நாம்
கூடி நின்று தீயினில் எரிந்த போது
பிண சாம்பல் தின்னும் சுடலை புழுக்களாய்
நீ ஏன் கிடந்தாய்?
எமக்கு தடை விதிக்கும் உன்னால் எங்கள் சாவுகளை கணக்கிட முடிந்த உன்னால்
எம் சாவுக்கு தடைவிதிக்க முடியாது
போனது எதனால்
உயிரற்ற உடல்களை புணரும் பன்றி கூட்டம் சிங்களத்தின்
வகையறைகளை கருத்தெடுக்கும் உன்னால்
எங்கள் கலி நிலையை கவனிக்க முடியாது கிடப்பது எதனால்?
வாயினிக்க தேனினை ஊற்றி
தேனோடு கலந்த விசத்தினை ஈழ
மண்ணுக்கு ஏன் ஊற்றி கொன்றாய்.
நாங்கள் தமிழர்கள்.
என்ற இழி நிலையோ?
மூத்தவினம் அழிவினை நோக்க வேண்டும் என்ற உயர்நிலையோ?
வருடம் இருமுறை பட்ட புண்ணாற
இனக்கொலை விசாரணை என்பாய்
சாகடித்த கொலையாளியை
சிரித்து சிகப்பு கம்பளத்தில் வரவேற்பாய்
நாங்கள் சிரிக்க முடியாது ஏக்கத்தோடு
உன் வாழ்விடம் தேடி வந்து வேண்டுகிறோம்
எங்கள் சிறகுகளை தந்துவிடு
நாம் சுயமாய் பறக்க எம்மை விடு
என்றோம்
நீயோ முன் வழியே வா என்றழைத்து
பின்வழியே
நீண்ட கூராயுதத்தால் குத்திக் கிழிக்கின்றாய்
நாங்கள் அன்று செத்து கொண்டிருந்தோம்
இன்று குற்றுயிராய் துடித்து கொண்டிருக்கிறோம் எம்மை தேடுவாரில்லை
தேற்றுவாரில்லை காணாமால் போவதுவும்
மறைமுக கைதுகளும் இன்றும்
உச்சம் கண்டு கிடப்பதை நீ
ஏன் அறியாமல் கிடக்கிறாய்?
எம்மை கை விட்டு
சாணாக்கியம் பேசுகிறாய். நல்லாட்சி மைத்திரியோடு
உன் ஊருக்கு அழைக்கிறாய்
உத்தமனாய் பழகுறாய்
எங்கள் வலிகளின் மேல் நின்று நீ
சங்கீதம் இசைக்கிறாய்
புரிந்து கொள் சர்வதேசமே...
நாங்கள் இறகுகள் வெட்டப்பட்ட
பறவையாக துடிக்கிறோம்
எழுந்து பறக்க எம்மால் முடியவில்லை
எமக்கான இறகுகளை தா என்று தானே
இறைஞ்சுகிறோம்...
உலகே நீ எம்மை ஏறி மிதிக்கிறாய்
கிடங்குகளில் திமிற திமிற போட்டு
மூடுகிறாய்
நாங்கள் அழும் குரல்கள்
நல்லாட்சி தாண்டி வெளியில் வராது
உன் பரந்த கரங்களால் முடக்குகிறாய்
நாங்கள் முனகுகிறோம்.
நாங்கள் முனகுகின்றோம்
கட்டப்பட்டு கிடக்கும் கரங்களையும்
கால்களையும் விடுவிக்க துடிக்கிறோம்
முடியவில்லை
உன்னால் போடப்பட்டிருக்கும் அடக்குமுறை
அந்த நிலக்கிடங்குகளில் அடங்க வைத்து
விழிகள் மட்டும் எங்களை மூடிய
மண்ணை நனைத்து கொள்கிறது
அந்த ஈரத்தையும் நீ இல்லாமல் செய்து
தவிக்கும் எம்மை பூண்டோடு சாய்க்கிறாய். சர்வதேசமே
யாரிடம் சொல்லியழ இந்த துயர்நாளை?
நீதான் எம் இறுதி நம்பிக்கை
உன் பார்வைக்காகவே சிதைக்கப்பட்ட எங்கள் வீர விதைகளை உன் முற்றத்தில் விதைத்தோம் நிர்வாணமாக்கப்பட்ட எங்கள் உறுதி குரல்களை உன் சந்தியலே ஒலிக்க விட்டோம்.
செத்த தாயின் முலைப்பாலை உறிஞ்சிய
சிசுவின் தவிப்பை
உன் வீட்டோரம் காட்டி நின்றோம்
பருகிய பால் ஈரம் காயுமுன்னே
சரிந்து கிடந்த சிசுவை உன் மூஞ்சைக்கு நேரே கிடத்தி சென்றோம்
எதையும் காணவில்லை உன் விழிகள்
ஆர்வமாய் எங்கள் சாவுகளை நீ
தின்று மென்றாய்
வினையை விதைத்தவன் வரைந்த வரவிலக்கணத்தில்
எங்கள் வலிகளுக்கு நாமே காரணம் என்கிறான்.
நீ சந்தோசமாய் ஏற்று
தருவான் நீதி வாங்கு அவனிடம்
என்று புது கதை புனைகிறாய் சர்வதேசமே...
புலிமகன் புகுத்திய புது கொள்கைகள் போர்குற்றம் என்கிறான் அவன்
நீ புதுவகை செய்யும் சட்டங்கள் இயற்றி
எம்மை தடுக்கிறாய்
ஏன் உலகே...?
உன் மனிதமும் உரிமையும் எங்கோ அடகு வைக்கப்பட்டுவிட்டனவா?
சுகங்கள் அற்று திறந்த சிறையில்
விலங்குகள் அற்ற விலங்குகளாய்
உயிரை மட்டும் கொண்டலையும்
எங்கள் ஏக்கங்களின் விடியல்
விடியாமலே கிடக்கிறது
சர்வதேசமே...
உன் கண்களை திறந்து பார் 
இல்லை எங்கள் சாவுகள் தான் 
நீ பசியாறும் பிக்‌ஷாக்கள் என்றால் 
எங்கள் நெஞ்சை பிழந்து வரும் குருதியாற்றில் 
நீராடி வா எங்கள் உடல்களை தருகிறோம் சுவை மிக்க பிக்‌ஷாக்களாக....
******************************************
தேச உணர்வுடன் ஆக்கம்  கவிமகன்.இ

கசப்பான கால விசாரணை முடிந்து தலைமைக்கு முடிவு எடுக்கம் படி அறிக்கை போகிறது …பார்த்த தலைமை சரி ஆள் வீடுக்கு போகும்படி பதில் கொடுக்கிறார் அதை ஜெயம் அண்ணைக்கு கூறினார்கன் அண்ணை உங்களை வீடுக்கு போகட்டம் என்று ..
சிரித்தபடி ஜெயம் அண்ணை சொன்ன பதில் சுட்டுபோட்டு உடலை கொடுக்கபடி அதை கேட்ட தலைவர் இவன் என்ன இப்படி இருக்கிறான் என்று திகைத்து ஜெயம் அண்ணையின் மனஉறுதி கண்டு மீண்டும் அவரை போராட்ட வாழ்வில் இணைக்கிறார் 1997 ஆம் ஆண்டு தாண்டிக்குளம் மீதான தாக்குதலுக்கு கருணாம்மான் தலமையில் ஒரு பிளாட்டுன் லீடரா ஜெயம் அண்ணை வருகிறார் …அப்பொழுது விஷேட வேவுக்கு தளபதியா லெப்டினன் கேணல் தனம் பொறுப்பாக இருந்தார் ..
ஜெயம் அண்ணையை பார்த்த அனைவருக்கும் ஒரு வியப்பு இவ்வளவு உயரம் ஆள் ஒரு இராணுவ மிடுக்கு பக்கத்தில் போகவே பயம் வரும் பார்ப்பவர்களுக்கு ஆனால் மிக இளகிய பாசக்காரன் பேசும்போது கண் கலங்கினா மீண்டும் பேசாமல் சரி போ என்று அனுப்பி விடுவார் ..
தாண்டிக்குளம் சண்டையில் தொடையில் காயப்பட்டு இரண்டுநாள் களமுனையில் நின்றார் எவருக்கும் சொல்லவில்லை காயம் என்று பின்னர் சோர்வு வரும்போதுதான் கண்டுபிடித்து பின்னணிக்கு அனுப்பபட்டார் ….
அதே காலப்பகுதியில் பெரியமடு நோக்கி முன்னேறிய ராணுவத்தின் மீதான தாக்குதலின் தனம் அண்ணை வீரச்சாவு அடைகிறார் சண்டை முடிந்து வேவு போராளிகள் சோகமா முகாம் திரும்ப ஒரு புத்துணர்வா வந்து இறங்கினார் தளபதி ஜெயமா விஷேட வேவு புலிளை பொறுப்பெடுக்க வந்தவுடன் சொன்ன வார்த்தை வ தகடு என்றால் வண்டில் இருந்து சோறு சாப்பிட வேணும் தம்பியா ..
அன்றில் இருந்து மன்னார் மாவட்டம் பொறுப்பு எடுக்கும் வரை தனது பணிகளை மிக சிறப்பா செய்து கொண்டு இருந்தார் ..
பின்னர் திருமண பேச்சு எழும்போது ஜெயம் அண்ணையை விசாரணை செய்த புலனாய்வு துறை ஞானம் அக்காதான் அவரை திருமணம் செய்ய போறாவாம் என்று கதை வரும்போது எல்லோருக்கும் அவரை பார்க்கும் ஆர்வம் இவரை விசாரிச்சவா என்றால் அவர் பெரியா ஆள் என்று சும்மா பகிடி கதைப்பாங்கள் ….
திருமணத்தை நடத்தி வைத்த தலைவர் மாலை எடுத்து கொடுத்துவிட்டு சொன்னது உன்னுடைய சீதனக்காணி நீயே அடிச்சு பிடிச்சது எடு என்று அப்பொழுதான் தெரியும் ஞானம் அக்கா மன்னார் மாவட்டத்ததை சேர்த்தவர என்று …
ஓயாத அலைகள் மூன்றை தொடக்கி வைத்தவரும் ஜெயம் அண்ணையே பெயரில் வெற்றியை சுமந்த தளபதி…
எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியில் நிற்க்கின்றோம். கண்ணிருந்தும் குருடர்களாய் உலகமே மௌனித்து, மனிதம் மரத்துப்போன அந்தநாட்கள் ஒவ்வொரு தமிழனினது நெஞ்சினில் என்றும் அகலாத கரிய நாட்க்கள். அந்த நாளில் தமிழீழத்துக்காய் வித்தாகிய அனைவருக்கும் வீரவணக்கம்.
தமிழீழம் என்பது ஈழத்தமிழருக்கான சலுகையல்ல, அது உரிமை. காலங்காலமாக எமக்கு சொந்தமான பூமி, எம் பாட்டர்களும், முப்பாட்டிகளும் அதற்க்கு முந்தியவர்களும் வாழ்ந்த எமக்கே உரித்தான மண், அதைத்தானே உரிமை கொண்டாடினோம் !! அதுக்காக்கத்தானே போராடினோம். இந்த உலகமும், ஆதிக்க சக்திகளும் முக்கால்வாசி விடையங்களை, தலை கீழாகவே புரிந்து வைத்திருந்தன என்பதற்க்கு தமிழீழ விடுதலைப்போராட்டம் சிறந்த உதாரணம். யாரை குற்றம் சொல்வது என்பதை விட, நாம் என்ன செய்யப்போகின்றோம் என்பதுதான் முக்கியம்.
எவ்வளவு இழப்பைக்கொண்டும் ஒற்றுமை வரவில்லையே நமக்கு ? சிங்களத்தின் எல்லாக்கட்சியும் தமிழனுக்கு உரிமை கொடுப்பதில்லை, தமிழர்களை அடிமைப்படுத்துதல் என்ற கருத்துக்களில் ஒற்றுமையாய் இருக்கிறார்கள், நாங்கள் தமிழீழம் என்ற கோட்ப்பாட்டில் கூட ஒற்றுமையாக இருக்க முடியவில்லை, இதற்க்கு மேலும் திருந்தவும் வாய்ப்பில்லையோ என்று எண்ணத் தோன்றுகின்றது. நம்முள் ஒற்றுமை இல்லை, இருந்தாலும் எதிரி அதை இலகுவாக உடைத்துவிடுகின்றான், இதற்க்கு நாமே முழுப்பொறுப்பு. ஒற்றுமை இல்லாத இனம் என்றுமே சுதந்திரமடையாது.
சிங்களம் எமது உரிமைகளுக்கு செவிமடுக்குமென்ற முட்டாள்த்தனத்திலிருந்து எப்படி வெளிவந்தோமோ, அதேபோல இந்தியா தமிழீழத்தைப் பெற்றுத்தரும் என்ற நிலை மாற்றம் அடைய வேண்டும். சனநாயக வழியில் சர்வதேச போர்க்குற்ற விசாரணைகள் வெற்றி பெறச்செய்வதன் மூலம், பொதுவாக்கெடுப்பு மூலம் தமிழீழம் அமைக்கலாம். ஆக ஒற்றுமை என்ற முதற்படியில் நாமெல்லாம் கால்வைத்தால் எமது பலம் பல்கிப்பெருகும், அதன் மூலம் எல்லா விடையங்களையும் சாதிக்கலாம். இந்த ஒற்றுமைப்படுத்தலுக்கான மிகப்பெரிய அமைப்பாக ஊடகங்கள் இருக்கின்றன என்பதை இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டும்.
ஆங்காங்கே நீட்டப்படும் ஆதரவுக்கரங்களை இறுகப்பற்றி, மெல்ல மெல்ல எமது இறுதி இலக்கை எட்டவேண்டும், விடுதலை என்ற நீண்ட இலக்கை அடைவது சுலபமல்ல, அது நாடு, அயல் நாடுகள், பிராந்தியம் என நீண்ட அலகுகளை தாண்டி உருவாக்க வேண்டும். மாவீரர்களும், போராளிகளும், மக்களும் செய்த தியாகங்கள் போற்றுதற்க்குரியது, அதற்க்கு தமிழீழம் மட்டுமே ஈடானது என்பதை அனைவரும் புரிந்து செயற்ப்படுவோம்.
மே 18 உலகத் தமிழர்களால் இனவழிப்பு நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் அன்றையதினத்தில் கேளிக்கை நிகழ்வுகளை தவிர்த்து, எம்மாவீரர்களையும்,எம் மக்களையும், நினைவேந்தல் செய்வோம்.
“சிங்களத்தின் கனவுகள் ஒருநாள் கலையும் எம்மாவீரர்கள் கண்ட கனவுகள் பலிக்கும்” என்ற தலைவனின் கூற்றின்படி, தேச விடுதலையை முன்னெடுப்போம்.
தலைவர் வருவார் அவர் தலைமையில் தமிழீழம் அமையும்..
..................................................................
தமிழன் செந்நீரும் கண்ணீரும் சிந்திய
முள்ளிவாய்க்கால் நினைவுகளை மறக்கமுடியுமா ?
அந்த நினைவுகளை வெறும் வார்த்தைகளால் கூறிவிட முடியாது
அனுபவித்தவர்கள் இப்போதும் அநாதைகளாய்த்தான் அந்தரிக்கிறார்கள் !!

                               164324_121100571293606_107838335953163_139021_2280519_n

முள்ளிவாய்கால் களமுனை இன்னும் பரமரகசியமாகவே இருந்து வருகையில் இறுதி இரண்டு வாரங்கள் புதிதாக வரவழைக்கப்பட்ட விசேட படைப்பிரிவின் கட்டுப்பாட்டில் இருந்ததாக முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

முள்ளிவாய்க்காலில் எல்லாம் முடிந்து போய்விட்டதாக பலர் நினைத்து வந்தாலும் அங்கு நிகழ்ந்தேறியவை இன்றும் விடைகாணமுடியா மர்மங்களாகவே நீடித்துவருகின்றது. அந்த மர்மங்களிற்கு ஓரளவு விடையளிப்பதாகவே இந்த தகவல் அமைந்துள்ளது.
முள்ளிவாய்க்காலில் சண்டை மிகப்பெரும் வரலாற்றுச் சோகத்துடன்
நிறைவடைவதற்கு இரண்டு வாரத்திற்கு முன்னர் களமுனைக்கு விசேட
படைப்பிரிவு ஒன்று வந்திருந்ததாகவும் அவரகள் அதிநவீன ஆயுதங்களுடன் காணப்பட்டதாகவும் அவர்களை நேரிடையாக களத்தில் கண்ட முக்கய உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
விசேட படைப்பிரிவில் வந்திருந்தவர்களது கையில் அதிநவீன ஆயுதங்கள் இருந்ததாகவும் அவர்கள் திடகாத்திரமான உடலமைப்பைக் கொண்டிருந்ததாகவும் தமிழில் பேசிவந்ததாகவும் தான் சந்தித்த ஆச்சரியம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இவர்களது வருகை பற்றியோ அல்லது அவர்கள் பற்றியோ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளிற்கே தெரியாமல் இருந்ததாக கூறும் அவர் தலைவரின் நேரடித் தொடர்பில் இருந்தவர்களாக இருக்கலாம் எனவும் கூறினார்.
சுமார் இருநூறிற்கும் அதிகமானவர்களை கொண்டிருந்த இந்த விசேட படைப்பிரிவின் கட்டுப்பாட்டில்தான் தலைவரது பாதுகாப்பு ஏற்பாடுகள்
இருந்துள்ளது. இவர்கள் எதிர்கொண்ட களத்தில் சிங்களப்படை பெரும் இழப்புகளைச் சந்தித்ததை நேரடியாக பார்த்ததாக அவர் கூறினார்.
தலைவரது நேரடித் தொடர்பில் வெளிநாடுகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற போராளிகளே இறுதிக்கட்டத்தில் தலைவரது பாதுகாப்பிற்கு வரவழைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவரகளது ஏற்பாட்டில் தலைவர் பாதுகாப்பாக வெளியேறி இருக்கலாம் எனவும் தான் கருதுவதாக அவர் தெரிவித்தார்.
இருநூறிற்கும் அதிகமான விசேட படையணிப் போராளிகள் வெளியில்
இருந்து இறுக்கமான களச்சூழல்களை ஊடறுத்து களத்திற்கு செல்ல
முடிந்துள்ளதென்றால் அந்த வழியில் தலைவர் உள்ளிட்டவர்கள் வெளியேறிச் சென்றிருக்க வாய்ப்புகள் உள்ளது.
சண்டைக்களம் மிக மோசமான இழப்புகளுடன் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நகர்ந்து கொண்டிருக்கையில் அந்த இக்கட்டான வேளையில் கூட களமுனை தலைவரது கட்டுப்பாட்டில்தான் இருந்துள்ளது என்பதை இந்த விசேட படையணியின் உள்நுழைவும் வெளியேற்றமும் சுட்டிக்காட்டுகின்றது.
விரைவில் மர்மங்கள் விடுபட்டு விடுதலை ஒளி பிரகாசிக்கும் சாத்தியங்கள் தென்படுகின்றது. நம்பிக்கையுடன் களமாடுங்கள் தமிழர்களே வெற்றி நிச்சயம்.
உலகமெங்கும் பரவிவாழும் தமிழர்கள் உங்கள் உங்கள் தளங்களில் முழுமூச்சுடன் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள். நாமெல்லாம் எதிர்பார்க்கும் அதிசயம் இந்த உலகில் நிகழும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை மட்டும் இந்நேரத்தில் உறுதிபடத் தெரிவிக்க முடியும்.
யாழ்ப்பாணத்தில் பிறந்த ஒவ்வொரு தமிழனையும் தலை குனியச் செய்து கொண்டிருக்கும் சம்பவங்கள் நாளாந்தம் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. வாள் வெட்டுச் சம்பவங்கள், பாலியல் வன்முறைகள், போதைப் பொருள் பாவனை மற்றும் கைதுகள், குழுச் சண்டைகள், சாதிச் சண்டைகள், என யாழ்ப்பாணம் மாறியுள்ளது.
யாழ்ப்பாணத்தின் இந்த நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நீதிபதி இளஞ்செழியன் கடுமையான தண்டனைகளையும் அறிவிப்பபுக்களை நாளாந்தம் வெளியிட்டுக் கொண்டிருந்தாலும், குற்றங்களும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு பிணை வழங்கப்பட மாட்டாது என்றும், மரண தண்டனையே வழங்கப்படுமென்றும் கூறிய போதும் பாலியல் சம்பவங்கள் குறையவில்லை.
அண்மையில் செம்மணிப் பகுதியால் தனியே வந்து கொண்டிருந்த ஆசிரியை ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் பாலியல் சேட்டைகள் செய்துள்ளனர். அதிஸ்டவசமாக அவ்வழியினால் குறித்த நேரத்தில் வாகனங்கள் வந்தமையினால் இளைஞர்கள் நழுவிச் சென்றுவிட்டனர். இதுபோன்று அண்மைக் காலமாக யாழ்ப்பாணத்தில் பல சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
யாழ்ப்பாணம் தற்போது போதைப் பொருட்களின் மையமாக மாறிவருகின்றது. இந்தியாவின் கேரளாவிலிருந்தும், பாகிஸ்தானிலிருந்தும் கடல்வழியாக கொண்டுவந்து யாழ்ப்பாணம் ஊடாக இலங்கைக்குள் கொண்டுவரும் தமது விநியோக மார்க்கமாக வியாபாரிகள் மாற்றி வருகின்றார்கள். அதேபோல் தென் இலங்கையிலிருந்து போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் விநியோக மார்க்கமாகவும் யாழ்ப்பாணத்தைப் பயன்படுத்துகின்றன என்பது தெரியவந்துள்ளது.
அதேவேளை, யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கஞ்சா மற்றும் ஹெரோயின் போன்ற போதைப் பொருட்களும் அண்டைய வாரங்களில் கைப்பற்றப்பட்டுள்ளது. இவற்றை நேரடியாக பொலிஸாரே கண்டுபிடிக்கவில்லை. பொது மக்கள் வழங்கிய தகவலைத் தொடர்ந்தே கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், சமூக விரோதச் செயலில் ஈடுபடுகின்ற குழுக்களோடு பொலிஸார் சிலருக்கு தொடர்புகள் காண்ப்படுகின்றதான சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டு வருவதை அவதானிக்ககூடியதாக இருக்கின்றது.
காராணம் போதைப் பொருட்கள் தொடர்பாக பொதுமக்களினால் பொலிஸாருக்கு தகவல்களை வழங்கும்போது அவ்வாறு தகவல்களை வழங்கிய சிலரது விபரங்கள் வெளியாகி இருக்கின்றது. பொலிஸாரால் பாதுகாக்கப்பட வேண்டிய விபரங்கள் இவ்வாறு வெளியாகின்றமையால் தகவல்களை வழங்குபவர்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன. இது, ‘வேண்டாம் வம்பு’ என்று பொது மக்கள் ஒதுங்கி செல்லும் சூழலையே உருவாக்கும்.
இவற்றுக்கு அப்பால் தென் இலங்கையிலிருந்து போதையூட்டும் லேகியங்கள், உருண்டைகள் என்பவற்றையும் யாழ்ப்பாணத்தில் அதிகமாக விற்பனை செய்வதில் சமூக விரோதிகள் ஈடுபட்டுள்ளார்கள். அதேபோல், தென் இலங்கையிலிருந்து பாலியல் தொழிலாளர்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைத்து விபச்சாரத்தையும் யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கச் செய்துள்ள சமூக விரோதிகளின் நோக்கம் வெற்றியடைந்துள்ளது.
இவற்றின் விளைவாக சுயம் இழந்து சிந்திக்கின்ற எமது இளைஞர்கள் ஆளுக்கொரு குழுவாக தமக்கென ஒரு பெயரையும் சூட்டிக் கொண்டு கோடாரிகள், வாள்கள், கத்திகள், கைக்குண்டுகள் என தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதும் அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் சுன்னாகத்தில் செல்வந்தர் ஒருவர் தனது மகளை காதலிக்கும் ஒரு சாதி குறைந்த இளைஞனை பழி வாங்குவதற்காக கூலிக்கு இரண்டு இளைஞர்களை ஈடுபடுத்தியதில் தொடங்கியது, இந்த வாள்வெட்டுக் குழுக்களின் செயற்பாடுகள்.
இப்போது ஊருக்கு ஒரு குழு என்றவகையில் பெருகியுள்ளன. முன்னர் இரவு நேரங்களில் வீடு புகுந்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் இப்போது தமது சண்டித்தனத்தை வெளிப்படுத்துவதற்காக பகலிலேயே துரத்தி துரத்தி வெட்டுவதை துணிகரமாக செய்கின்றார்கள்.
கடந்த வாரம் கோண்டாவிலில் இரண்டு இளைஞர்கள் புகையிரத தண்டவாளத்தில் படுத்திருந்து பலியானதாக ஒரு செய்தி வெளியாகி இருந்தது. உண்மையில் அந்த இளைஞர்களில் ஒருவர் கோப்பாயையும், மற்றவர் திருநெல்வேலியையும் சேர்ந்தவரகள். இருவருமே தண்டவாளத்தில் படுக்கும் அளவுக்கு மன உளச்சலுக்கு உள்ளாகி இருந்ததாக தெரியவில்லை. இருவரும் இணைந்து தண்டவாளத்தில் படுக்கும் அளவிற்கு நெருங்கிய நண்பர்களும் இல்லை எனத் தெரிகின்றது.
இந்நிலையில், அவர்களை கொலைசெய்தவர்களே அவ்விடத்தில் கொண்டுவந்து தண்டவாளத்தில் போட்டுவிட்டு அவர்களின் மரணத்தை திசை திருப்பியிருக்கின்றார்கள் என்பதே உண்மையாக இருக்க முடியும் என்று முழு யாழ்ப்பாண மக்களுமே சந்தேகிக்கின்றார்கள். இப்படி ஒரு சந்தேகம் பொலிஸாருக்கு வந்திருக்கின்றதா? அப்படி ஒரு கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருக்கின்றார்களா? என்பது தொடர்பாக எந்தச் செய்திகளும் இதுவரை தெரிய வரவில்லை.
இவ்வாறன சூழலிலேயே, வாள்வெட்டுக் குழுவொன்றைப் பொலிஸார் சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்துள்ளனர். மானிப்பாய் லோட்டன் வீதியை சேர்ந்த தனு ரொக் என அழைக்கப்படும் இந்த குழுவின் தலைவன் எனக் கருதப்படும் மோகன் தனுசன் (20வயது) என பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு சுவிஸ்லாந்தில் உள்ள ‘மோட மாமா’ என குறிப்பிடப்படும் ஒருவர் நிதியுதவி அளித்துள்ளமைக்கான ஆதாரங்களும் பொலிஸாரிடம் சிக்கியுள்ளன.
இந்நிலையில் குறித்த ‘மோட மாமா’ சுவிஸ்லாந்தில் இருந்து கொண்டு, யாழில் குற்றங்களுடன் கூடிய சூழலை உருவாக்குவதற்காக மோட்டுத்தனமாக பணம் வழங்கினாரா? – மோட மாமாவின் பின்னணி என்ன? போன்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தற்போது, யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டுச் சம்பவங்கள் மற்றும் சமூகவிரோதச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாருக்கு மேலதிகமாக அதிரடிப்படையையும் நடவடிக்கையில் ஈடுபடுத்துமாறு நீதிபதி இளஞ்செழியன் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல் விடுத்திருக்கின்றார்.
நீதிபதியின் அறிவிப்புக்களினால் வாள்வெட்டுக் குழுக்கள் கதி கலங்கியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் சிலாகிக்கப்படுகின்றது. ஆனால் அதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை. அப்படியாக இருந்திருந்தால், முதன் முதலில் வாள்வெட்டுச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு இன்னும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டில்லு குழுவோடு, ஆவா குழுவோடும் இந்த நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்க வேண்டும். ஆனால் அண்மைய நாட்களில் பல குழுக்கள் உருவாகி விட்டார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
வடக்கில் படைகள் குறைப்புச் செய்ய வேண்டும் என்றும், படை முகாம்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றும், படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் நிலங்களை, மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு படைகள் தூரப்பகுதிக்கு சென்றுவிட வேண்டும் என்றும் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கையில் வாள் வெட்டுக் குழுக்களை கட்டுப்படுத்தும் போர்வையில் மக்கள் மத்தியில் மீண்டும் அதிரடிப்படையினரை வரவழைக்க வேண்டிய துரதிஷ்டம் அரங்கேறுகின்றது.
வாள் வெட்டுக் குழுக்களும், போதைப் பொருட்களும் அதிகரித்துள்ளதன் பின்னணி நோக்கமே, படையினரின் அவசியத்தை நமக்கு உணர்த்துவதா? அல்லது யுத்தம் தமிழ் இனத்தை சிதைத்துவிட்டதால் ஆயுதம் ஏந்திய படைகளே தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்ற நிலையிலேயே தமிழ் இனம் வந்து நிற்கின்றதா? என்ற கேள்விகள் ஆராயப்பட வேண்டியவையாகும்.
இந்நிலையில், இவ்வாறான சம்பவங்களை கண்காணிக்கவும், தடுக்கவும் விழிப்புக் குழுக்களை அமைப்பது தொடர்பாக பேசப்படுகின்றது. ஆனால் விழிப்புக் குழுவாக செயற்பட்டவர்களையே வாள்வெட்டுக் குழுக்கள் தாக்கிய சம்பவங்களும் யாழ்ப்பாணத்தில் நடந்தேறியுள்ளன. ஆக, விழிப்புக் குழுவாக செயற்படுவதற்கும் மக்கள் அஞ்சுகின்ற நிலையில், விழிப்புக்களும் வெற்றியளிக்கப்போவதில்லை. இரகசியக் குழுக்களின் செய்பாடுகளே தற்போதைய யாழ்ப்பாணத்தின் சூழலில் ஓரளவு பயன்மிக்கதாக இருக்கும். இதை யாரால் சமூகம் சார்ந்த சிந்தனையோடு செய்யமுடியும்?


-ஈழத்துக் கதிரவன்-
நல்லிணக்கத்தை ஒரு போதும் ஆயுத முனையில் கட்டியெழுப்ப முடியாது என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொது மக்களின் காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருக்கும் வரையிலும் நல்லிணக்கம் ஏற்படப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.மூத்த ஊடகவியலாளர் குசல் பெரேராவின் கட்டுரைகள் அடங்கிய நூல் வெளியிட்டு விழா இன்று கொழும்பில் இடம்பெற்றது.
கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் பல்லின மக்கள் வாழும் பொதுவான நாடாக இலங்கை மாற்றியமைக்கப்பட வேண்டும்.அதிகளவான விதவைப் பெண்களை கொண்ட வடக்கில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினரை நிலைநிறுத்தி காணிகளை அபகரிக்கும் செயற்பாடு ஒரு போதும் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை காண்பதற்கான சூழலை ஏற்படுத்தாது.
இந்நிலையில், இராணுவத்தினர் தொடர்ந்தும் வடக்கில் நிலைகொண்டிருக்கும் பட்சத்தில் மீண்டும் வடக்கில் ஆயுதப் போராட்டம் ஒன்று ஏற்படக்கூடும்.
எவ்வாறாயினும், அரச பயங்கரவாதத்தின் காரணமாகவே விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உருவாகியதாகவும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் வடக்கிலுள்ள இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டிருந்தால் இன்று நல்லிணக்க செயற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கும்.
எனினும், இந்நிலை தொடர்ந்தும் நீடிக்குமாக இருந்தால் வடக்கில் மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாவதை எவராலும் தடுக்கமுடியாது.இராணுவ ஆட்சிக்குட்பட்டு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் வடக்கு மற்றும் கிழக்கில் நல்லிணக்கத்தை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முள்ளி வாய்கள் என்பதை நினைத்தாலே எங்கள் உடல்கள் நடுங்குகின்றது எம்மினம் கொண்டழித்த வஞ்சகரை முன் நிறுத்துகின்றது,

 இத்தனை உயிர்களை அழித்தும் இதையமற்ற துரோகிகள் இன்னும் வாழ்வதை நினைத்தால் நெஞ்சம் ரணமாகிது,

  நிம்மதி தொலைகிறது  சத்தியப்பதைக்காய் தாயம் மீட்புக்காய் தன்னுயிர் தந்தவர் அவருக்காய் பதிவான காணொளி ஒன்று எமது நெஞ்சத்தின் அறுத்து நினைவதை சுமந்து வருவதுபாரீர் 

தமிழீழ விடுதலை புலிகளின் ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் வரலாற்று நினைவுகள்.

மாவீரர்களின் வீர வரலாறு
இசைப்பிரியா (1982 ) ஆண்டு மே திங்கள் இரண்டாம் நாள் யாழ் நெடுந்தீவை பூர்வீகமாகவும் மானிப்பாயை வாழ்விடமாகவும் கொண்ட தர்மராஜா வேதரஞ்சினி இணையரின் நான்காவது மகள் பிறந்தாள் சோபனா என்று அவளுக்கு பெயர் சூட்டபட்டது பேரழகும் புன்சிரிப்பும் நிறைந்த மழலையை எண்ணி மனம் நிறைந்த கனவுகளோடு சீராட்டி தாலாட்டி பாலுட்டி வளர்த்தனர்.
மழலையால் தன் குறும்புகளால் அனைவரையும் கவர்ந்தவள் வளர்ந்து சிறுமியானாள் அக்கா மூவரோடும் தங்கையோடும் அயலாவரோடும் அழகு பதுமை அன்றாட கடமைகளான பாடசாலை செல்லுதல் பள்ளி தோழிகளோடு விளையாடுதல் என கவலையில்லாமல் பொழுதுகள் கழிந்தன. இக்காலகட்டத்தில் அனைவரின் இதயத்தையும் கவர்ந்திழுக்கும் இதயத்தில் கேளாறு என்ற செய்தி இடியாய் வந்திறங்கியது.
இரக்ககுணத்தோடு அனைவரையும் அணுகும் இதயத்தில் ஓட்டை உண்டு என்றன மருத்துவ அறிக்கைகள் .மாறி மாறி பல சோதனைகள் இடம்பெற்றன. மனவேதனையோடு இருந்த குடும்பத்தினருக்கு ஒருவழியாக மகிழ்ச்சியான செய்தி வந்தடைந்தது.இதயத்தில் ஓட்டை இருந்தாலும் இவருக்கு எந்த சிக்கலும் இல்லை என்று மருத்துவர்கள் கூறினர்.ஆறுதல் அடைந்த சோபனாவின் குடும்பத்தினர் இவரை தொடர்ந்து படிக்க வைத்தனர். சோபனா ஐந்தாம் ஆண்டு வரை மானிப்பாய் கிரீன் மெமோரியல் பாடசாலையில் கல்வி கற்றாள். சிறுவயதில் இருந்தே அமைதியான பயந்த குணமுள்ளவர் சோபனா.தன் வயதுக்கு மீறிய இரக்க குணமுள்ளவர் யாரவது துன்பப்படுவதை பார்த்தால் மனமிரங்கி ஓடிசென்று அவர்களுக்கான உதவிகளை செய்து விடுவார். ஆடல் பாடலில் அதிகம் ஆர்வம் கொண்டவள்.அவற்றை முறையாக கற்றுகொள்ளும் முன்னரே ஏற்கனவே பயின்றவள் போல் திறம்பட செய்துகாட்டி பலரையும் ஆச்சரியப்பட வைத்தாள்.
புலமை பரீட்சை எழுதி சித்தியடைந்தவள் .யாழ்ப்பாணம் வேம்படி மகளீரி கல்லூரியில் மேற்படிப்புக்காக சென்றால்.அமைதியாக படிப்பை தொடர்ந்துகொண்டு இருக்கையில்(1995 ) ஆண்டு முன்றாம் கட்ட ஈழப்போர் யாழ்ப்பாணத்தில் மையம் கொண்டிருந்த வேளை அது.எதிரியானவன் பெருமெடுப்பிலான தாக்குதல்களின் ஊடாக யாழ் நகரை கைப்பற்றினான்.தான் முன்னேறிச்செல்லும் பாதையெங்கும் காண்பவரையெல்லாம் அடித்தும் துன்புறுத்தியும் படுகொலை செய்தான்.உயிரை காக்க ஊரையும் உடமையையும் விட்டுவிட்டு கையில் கிடைத்தவற்ரோடு நடந்தும் ஓடியும் விழுந்தும் எழும்பியும் வன்னியை நோக்கி ஓடினர் மக்கள்.அவர்களில் சோபனாவின் குடும்பமும் ஒன்று.ஒரு வழியாக உயிரை கையில் பிடித்துகொண்டு சோபனாவின் குடும்பத்தினர் வன்னிக்கு சென்றனர்.வன்னி மண்ணும் வரவேற்பில் பேர்பெற்ற மக்களும் இவர்களை அன்புக்கரம் நீட்டி வரவேற்றனர்.
சோபனா தனது மேற்படிப்பை வன்னியில் தொடர்ந்தாள். வன்னி மண்ணுக்குள் சென்ற நாளிலிருந்து தமிழீழ விடுதலை போர் பற்றிய தேவையினையும் தன கடமையினையும் நன்கு உணர்ந்து கொண்டாள்.தமிழீழ விடுதலை புலிகளின் பரப்புரை குழுவினரால் நடத்தப்படும் வகுப்புக்களில் அதிக ஈர்ப்பு கொண்டாள்.ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு தீப்பந்தம் ஆனால்தான் ஓயாது ஒலித்துகொண்டிருக்கும் வெடியோசை ஓய்ந்து ஒளிமயமான எதிர்காலம் தமிழனுக்கு விடியும் என்று உணர்ந்தாள்.(1999 ) ஆண்டு பாடசாலைக்கு பரப்புரை செய்யவந்தவர்களோடு கடமையும் கண்ணியமும் நிறைந்த தமிழீழ விடுதலைப் புலிகளோடு தன்னை இணைத்து கொண்டாள்.சோபனா.
இசைப்பிரியா நினைவில்…
இயக்கத்தில் இணைந்து கொண்டால் இயக்க பெயர் ஒன்று சூட்ட வேண்டுமல்லவா சோபனா என்ற பெயர் இவரது தோற்றத்தோடு எவ்வளவு ஒத்துபோகின்றதோ அதைவிட அதிகளவில் பொருந்த கூடிய ஒரு பெயர் இவருக்கு இடப்படுகின்றது.இயல் இசை நாடகத்துறையில்தான் இவரது விடுதலை பயணம் இருக்க போகின்றது என்பது தெரிந்தோ என்னவோ இசையருவி என பெயர் சூட்டப்பட்டது இசையருவியாய் விடுதலை போராளியாய் தொடக்க பயிற்சிகளை முடித்தாள்.சோபனா,தமிழின விடுதலைக்காக தன முழு நேரத்தையும் ஒதுக்கினாள்.இசையருவியின் உடல்நிலை காரணமாகவும் இவரது கவர்ந்திழுக்கும் அழகான தோற்றமும் இவளை ஊடகத்துறை போராளியாக தெரிவு செய்ய வைத்தது.இசையருவி என்ற அழகான தமிழ் பெயரோடு தன் பணியை தொடங்கியவளை .இசையின் மேல் இவளுக்கு இருந்த விருப்பம் காரணமோ என்னமோ தோழிகள் இவளை இசைப்பிரியா என்று அழைக்க தொடங்கினர்..
நிதர்சனத்தின் ஊடாக தன்னை அறிமுகபடுத்தினாள்.கண்ணீர் என்ற இவள் குரலை கேட்டவர்கள் ஒவ்வொரு மாதமும் இடம் பெறும் விடுதலை தொடர்பான நிகழ்வுகள் புலம்பெயர் மக்கள் பார்ப்பதற்காக உருவாக்க படும் ஒளிவீச்சு காணொளி சஞ்சிகையின் நிகழ்வுக்கு தலைமை தாங்கினாள். தாயகத்தில் இவளை எத்தனை பேர் அறிவரோ தெரியாது ஆனால் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் எல்லோராலும் நன்கு அறியப்பட்டவள்.
கனீர் என்ற இனிமையான குரலும் அழகான தோற்றமும் அனைவரின் மனதிலும் பதிந்தது.இவரது பெயர் பலருக்கும் தெரியாது விட்டாலும் உருவத்தை நன்கு அறிந்தனர்.இசைப்பிரியாவை தொடர்ந்து அவரது தங்கையும் தன்னை தமிழீழ விடுதலை புலிகளோடு இணைத்துக்கொண்டு களத்திடை போராளியானார்.இசைப்பிரியாவின் பணி ஒளிவீச்சு மட்டும் நின்றுவிடவில்லை ஊர் ஊராய் சென்று போடப்படும் தெருக்கூத்துகளிலும் மேடைகளில் இடம்பெறும் கலைநிகழ்வுகளிலும் இவளது பங்கு இருந்தது.
அத்தோடு கள இழப்பு ஏற்படுவதற்கு முன்னர் வரை தமிழீழ தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினாள். அது மட்டுமல்லாமல் தமிழீழத்தில் வெளியாகிய சில குறும்படங்களிலும் நடித்திருக்கிறாள். (2007 ) ஆண்டு இசைப்பிரியாவுக்கு அகவை இருபத்து ஆறாக இருந்தபோது இவருக்கான திருமண ஏற்பாடுகள் இவரது பெற்றோரால் மேற்கொள்ளபட்டன. நீண்ட தேடலின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலி போராளி ஒருவரே இவருக்கு மாப்பிள்ளையாக இவரது பெற்றோரால் தெரிவுசெய்யபட்டார். கடற்புலிகளின் சிறப்பு தளபதி திரு சூசை அவர்களின் கீழ் இயங்கிய கடற்படைத் தளபதி சிறிராம் என்பவரே இசைப்பிரியாவை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவரும் இணைந்து மகிழ்வானதும் சிறப்பானதுமான திருமண வாழ்வை வாழ்ந்தனர். வெளிநாட்டில் வாழும் சகோதரனின் உதவியோடு புதுமனையில் குடிபுகுந்தனர்..
நாட்டுகானதும் வீட்டுகானதுமான இவர்களது கடமை நல்லமுறையில் நடந்தது.இவர்களது இலக்கணமாக இசைப்பிரியா தாய்மையுற்றாள். இதே காலப்பகுதியில் சிறிலங்கா படையினரின் வன்னி மீதான போர் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் உதவியோடு பெருமெடுப்பில் நடைபெற்று கொண்டிருந்தது. தாய்மையுற்றிருந்த இசைப்பிரியாவுக்கு குழந்தை பிறந்தது.இவர்களின் பெயர் சொல்ல ஒரு புலிமகள் பிறந்தாள். அகல்யாள் என்று அவளுக்கு பெயரிடப்படுகின்றது. கண்ணும் கருத்துமாக தன் மகளை வளர்த்து வந்தாள் இசைப்பிரியா போராட்டம் உச்சகட்டத்தை அடைந்த வேளையது குழந்தைக்கான பால்மாவை தேடி தேடி ஓடி ஓடி வாங்கி வைத்திருந்தாள்.குழந்தை அகல்யாலும் வழமைக்கு மாறாக மூன்று அல்லது நான்கு மாதத்திலையே தன் அன்னையை பார்த்து அம்மா என்று அழைக்க ஆரம்பித்தாள்.உயிருக்கு உயிராய் தம் குழந்தையை கவனித்து வந்தாள்.அந்த வேளையில் ஒருநாள் குழந்தைக்கு காச்சல் காய தொடங்கியது நாளுக்கு நாள் உடலின் வெப்பநிலை அதிகரித்து கொண்டே சென்றது.நெருப்பு காச்சலில் குழந்தையின் உடல் நடுக்கியது மருத்துவ வசதிகளோ மருந்துகளோ சரியாக கிடையாத இனஅழிப்பு போர் சுழல் அது நோய்க்கான மருந்து கிடைக்காத நிலையில் தன் உயிரென எண்ணியிருந்த நான்கு மாத குழந்தை அகல்யாளின் உயிர் பரிதாபமாக பிரிந்தது.
மழலையின் மொழியில் உலகையே மறந்திருந்தவளுக்கு திடீரென உலகமே இருண்டு போனது. பதறினாள் கத்தினாள் அழுதாள் ஆனால் எதுவுமே அவள் குழந்தையை திருப்பி கொடுக்கவில்லை. சுவாசித்து கொண்டிருக்கும் நடைபிணமானாள்.இருப்பினும் சிறு வயது முதல் இரக்ககுணம் கொண்டவள் அல்லவா இசைப்பிரியா தன் சோகத்தை உள்ளே வைத்து வேதனை பட்டு கொண்டிருந்தாலும் இன அழிப்பின் உச்ச நடவடிக்கையால் வன்னி மண்ணின் மண்ணே தெரியாத அளவுக்கு பிணக்குவியலும் காயம் பட்டவர்களுமாக துடித்து கொண்டிருக்கையில் ஓடி சென்று தன்னால் முடிந்த உதவிகளை செய்தாள்.ஆறுதல் கூற யார் வருவார் என்று எண்ணியிருந்தவர்கள் எல்லாம் அரவணைத்து முன்னின்று அவர்கள் வீட்டு மரண சடங்குகளை நடத்தி வைத்தாள்.
வன்னியில் இசைப்பிரியாவோடு அவளது பெற்றோரும் அக்காவின் குடும்பமும் போராளி தங்கையும் இருந்தனர்.வெளிநாட்டில் இருக்கும் இரு சகோதரிகளும் வயிற்றில் நெருப்பை கட்டியவர்களாக தன் குடும்பத்தை எண்ணி தவித்துக்கொண்டு இருக்கையில் அவர்கள் பயந்ததுபோல் குண்டு வீச்சுக்கு இலக்காகி பெற்றோரோடு இருந்த சகோதரியின் கணவன் இறந்துவிட முன்று குழந்தைகளோடு சகோதரி அவலை ஆனாள்.இதுவரை இவர்கள் குடும்பத்தில் இரண்டு சாவு விழுந்து விட்டது மே திங்கள் நடுப்பகுதி அது இசைப்பிரியாவின் போராளி தங்கை படுகாயமுற்றாள் தன் பெற்றோரும் சகோதரி குழந்தைகள் அனைவரும் அவ்விடத்தை விட்டு செல்ல ஏற்பாடுகளை மேற்கொண்டாள் இசைப்பிரியா. தன் கையிலிருந்த தங்க வளையலை அம்மாவிடம் கொடுத்தவள் போகுமிடத்தில் இதை விற்று காயமடைந்த தங்கைக்கு மருத்துவம் பார்க்கும்படி கூறினாள்.
நீங்கள் சென்றுவிடுங்கள் நானும் எனது கணவனும் மற்றைய போராளிகளோடு இணைந்து சரணடைந்துவிட போகின்றோம் என்று கூறினாள்.அவர்கள் தன் கண்ணிலிருந்து மறையும் வரை கைகளை அசைத்துக்கொண்டு இருந்தாள்.அவர்களை இறுதியாக பார்ப்பது இதுதான் என்று எண்ணினாளோ என்னவோ அவர்கள் மறையும் வரை பார்த்திருந்தால். மே திங்கள் ( 18 ) நாள் சிறிலங்கா அரசு போரில் வெற்றிகொண்டதாக அறிவித்தது.
வர்ணிக்க முடியாத கோரச்செயலால் வன்னி முழுவதையும் கையக படுத்தியது சிறிலங்கா அரசு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் சரணடைந்தனர்.காயபட்ட போராளிகள் மீதும் மக்கள் மீதும் பதுங்கு குழிகளுக்குள் இருந்தவர்கள் மேலும் சிங்கள வெறியர் புளுடோசர் கொண்டு ஏறி மிதித்தனர்.தம் மண்ணோடு மண்ணாகி மடிந்து போயினர் தமிழர் சரணடைந்த போராளிகளில் இசைப்பிரியாவும் கணவர் தளபதி சிறிராமும் இருந்தனர்.ஊடகத்துறையில் செயற்பட்டவர் என்பதினால் இசைப்பிரியா இலகுவாக அடையாளம் காணப்பட்டார்.பல பெண் போராளிகளோடு இவளும் எங்கோ இழுத்து செல்ல பட்டாள்.தளபதி சிறிராமும் கைதாகி வேறொரு இடத்திற்கு இழுத்து செல்லபட்டார்.முள்வேலி கம்பிக்குள் குழந்தைகளும் பெண்களுமாக தமிழர்கள் அடைக்க பட்டனர்.உலகத்தமிழர் எல்லாம் கதறியழ சிங்களம் வெற்றிமுரசு கொட்டியது.உலகெங்கும் தன் வெற்றி செய்தியை கொண்டாடியது.
ஓயுமலைய புலிகள் அலைகள் தமிழ் மக்களெல்லாம் தம் விடுதலைக்காய் போராடும் புலிகள் என்பதை மறந்தவன் உலகநாடுகளுக்கு சாதகமான பதிலை கூறி ஏமாற்றி வந்தான் தாயக உறவுகளை போர்க்கைதிகளாக வைத்து புலம்பெயர் தமிழரையும் அடக்க எண்ணினான்.இப்படியாக ஆண்டுகள் கடந்து விட்டது (2010 ) ஆம் ஆண்டு மே திங்கள் ஏக்கத்திலும் ஏமாற்றத்திலும் உலகத்தமிழினம் ஏங்கி தவித்துக்கொண்டு இருக்கையில் வெற்றிவிழ கொண்டாடியது சிங்கள அரசு.சிறிது நாட்கள் கழிந்தன படுகொலை செய்யபட்ட பலரின் புகைப்படங்கள் வெளியாகின அன்று ஒரு நாள் மிக அருகில் நின்று சுடப்பட்ட நிலையில் முக்கின் அருகேயும் கன்னம் காதருகேயும் குருதி வழிந்தபடி இறந்த ஒரு பெண்ணின் படத்தை சிறிலங்கா அரசு வெளியிட்டது.இவர்தான் விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரக என்று கூறியது.பார்த்தவர் அனைவருக்கும் குறைப்பட்ட செய்தி பொய்யென்று தெரிந்தாலும் படத்தில் இசைப்பிரியாவை பார்த்தனர் மனம் துடிக்க உறைந்து போயினர்.
இது உண்மையாக இருக்குமா அல்லது சிங்களத்தின் கபட நாடகத்தின் இதுவும் ஒன்ற என்று கேள்விகள் இருந்தன.இந்த காலகட்டத்தில்தான் உலக நாடுகளினால் சிறிலங்கா மீது அழுத்தங்கள் கொடுக்கப்பட தொடங்கின.அதன் ஒரு வடிவமாக இங்கிலாந்தை தளமாக கொண்ட சனல் நான்கு தொலைகாட்சி தமிழர்கள் சிங்கள படைகளால் படுகொலை செய்யப்படும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை தோற்றுவித்தது.மார்கழி திங்கள் இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டு சனல் நான்கு தொலைக்காட்சியால் இன்னுமொரு வீடியோ வெளியிட பட்டது.அதில் இசைப்பிரியாவும் இன்னும் சில பெண் போராளிகளும் கொடூரமாக கொல்லபட்டு கிடந்தனர்.அநாகரீகமான முறையில் ஆடைகள் களையப்பட்டு இறந்து கிடந்தனர்.கைகள் பின்னால் கட்டபட்டு கொடூரமாக சித்திரவதை செய்யபட்டு பாலியல் வன்புணர்வின் பின்னர் இவர்கள் படுகொலை செய்யபட்டு இருந்தனர்.
உலகத்தமிழினமே உறைந்துபோய் கண்ணீர் விட்டநாள் அது மிருகத்திலும் கொடூரமான சிங்களவர் இவர்களை எப்படியெல்லாம் சித்திரவதை செய்திருப்பான் என்று எண்ணுகையில் அவர்களின் அவலக்குரல் மனக்கண்ணில் பட்டது.அம்மா அம்மா என்று கத்தியிருப்பாள் வழியால் துடித்திருப்பாள் வாழ்வில் பல வலிகளோடு இருந்தவளுக்கு என்ன கொடுமையிது.தன் இனத்தின் விடுதலைக்காய் போரடியவளுக்கு சிங்களம் கொடுக்கும் தண்டனை இதுவா அம்மா அம்மா என்று கதறியவளை தம் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சேயும் கூறியதுபோல் இரையாக்கினார்கள்.அருகில் சென்று முகத்தில் துப்பாக்கியால் சுட்டனர் தன் குழந்தையின் இறப்பாலும் தமிழ் இனத்தின் அழிவாலும் நடைபிணமாய் அலைந்தவள் துப்பாக்கியால் சுடப்பட்ட வேளையில் – என்ற விக்கலோடு தன் முச்சை விட்டால் இசைப்பிரிய கொல்லபட்டார் கணவன் சிறிராமின் பெயரும் சிறிலங்கா அரசால் வெளியிடபட்ட இறந்தோர் பட்டியலில் இடம்பெற்றது.
தமிழனின் விடிவிற்காய் வாழ்ந்த இவரும் கோரமாக கொல்லப்பட இவர்களது குடும்பத்தில் மொத்தமாக நான்கு உயிர்கள் பலியாகின கதறி துடித்தவள் கடைசியில் என்ன நினைத்திருப்பாளோ காப்பற்ற யாரவது வருவாரா என்று எண்ணியிருப்பாளோ தாலட்டு பாடி தூங்க வைத்த தாயை தன் தோள் சுமந்த தந்தையை மகிழ்வாய் கூடிவிளையாடிய சகோதரிகளை பிரிக்க முடியாது இணைந்த கணவனை எண்ணியிருப்பாளோ உயிருக்கு உயிராய் பெற்று வளர்த்த குழந்தையின் இறுதி கணங்களை எண்ணியிருப்பாளோ அயோ அயோ என கொடுமையிது.