எழுதிய பவித்ரா நந்தகுமார் திலீபன் மாமா எங்கேயடா நீ?


பன்னிரண்டு தினம்
உயிரை உருக்கினாயே
உன் தாய் உருக
உன் தந்தை கதற
இனத்திற்காக விளக்கானாய்
அண்ணா
இருபத்தெட்டென்ன
எத்தனை காலம் போனாலும்
உன் குரல் ஒலிக்கும்
என் தேசத்தில்
ஒளியான பிளம்பே
தியாக இன் சுடரே
ஊண் உண்ண மறந்தாயே
எரிகிறது நீ
மூட்டிய தீ
அணையாது ஒரு போதும்
ஏக்கங்கள் பல கோடி
மீண்டும் வாடா
திலீபா
இன்னுமொரு தியாகம் காண
துள்ளித்திரியும்
வயதில்
துவண்டு போனாயே
பன்னிரண்டு நாளில்
இந்திய தேசம்
வேடிக்கை பார்த்தது
உலகம் கை கட்டி நின்றது
தமிழீழம் கதறியது
உன் உயிர்தான்
குடித்தார்கள்
அரக்கர்கள்
காந்தியின் அகிம்சை என்ன
உன் அகிம்சைக்கு நிகராகுமா
பார்தீபா இன்றைய ஒளி
உன் தியாகத்தின் ஒளி
"மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
சுதந்திர தமிழீழம் மலரட்டும்"


ஆக்கம் பவித்ரா நந்தகுமார்


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக