தாய் நிலத்தை உருமறைத்த விடுதலைப் புலிகளின் பெண்போராளிகள்!

விடுதலைப் புலிகள் அமைப்பில் பெண் போராளிகள் தமக்கெனத் தனியான படைப்பிரிவுகளைக் கொண்டிருந்தனர். விடுதலைப் புலிகளின் அனைத்துக் கட்டமைப்புக்களிலும் பெண் போராளிகள் தங்களின் பங்களிப்பினைச் செலுத்தியிருந்தனர்.
பெண் போராளிகள் தனியே தங்கள் படையணிகளைக் கொண்டு இலங்கை மற்றும் இந்தியா நாட்டு இராணுவத்தினருடன் பல்வேறு சண்டைகளையும் மேற்கொண்டு சாதனைகளை படைத்துள்ளனர்.
இந்நிலையில் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிகட்ட போரின் போது விடுதலைப் புலிகள் புதுகுடியிருப்பு ஆனந்தபுரத்தில் அதி உச்சமான போர்களத்தை சந்தித்துள்ளனர்.
அங்கே ஆண் போராளிகளுக்கு நிகராக பெண்போராளிகள் போராடியிருக்கின்றனர். அதற்கு ஆதாரமாக பெண் போராளிகளின் உடமைகள் மற்றும் உருமறைப்பின் அடையாளங்கள் இன்னமும் அங்கே சாட்சியமாக காணப்படுகின்றன.
ஆனந்தபுர சமர்க்களத்தில் விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் வீர மரணமடைந்தபோது. பெண் போராளிகளின் சிந்தனையில் தாய் நிலதேசம் உருக்குலைந்து போகும் அறிகுறிகள் தென்பட்டு இருக்குமோ தெரியவில்லை.
இந்நிலையில், எதிரியின் கண்படாமல் இருக்கட்டும் என்று தாய் நிலத்தை உருமறைத்தது போன்ற காட்சி இன்றும் ஆனந்தபுரத்தை அழங்கரித்து நிற்கின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக