நெருப்பினில் கால் வைத்து
செருக்கோடு நடையிட்ட
ஈழ மங்கையே
உன் திடம் கொண்ட
மாந்தர் பூமியில்
இல்லையம்மா
எதிரியவன் உயிர்
குடித்து
தமிழ் மண் காத்து
வரிப்புலியாய்
உறுமிடும் போது
கிழக்கே வெளிக்கிறது
சூரியன் அல்லாமல்

தலைவனின் உறுதி
ஏற்று
விடுதலை பாதை
கடந்தவர்களே
காவியம் பாடுகிறோம்
முடமாக்கப்பட்ட
மௌனிகளாய்


பவித்ரா நந்தகுமார்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரது உருவத்தை தாலியில் செதுக்கி திருமணம்  ஒன்று நடைபெற்றுள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்தி பரவியுள்ளது.
இது புலம்பெயர் நாடு ஒன்றில் இடம்பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.  அவர்களது திருமண புகைப்படமும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்விடயம் தற்போது தமிழ் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தினையம், ஆர்வத்தினையும் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈழ மண்ணின்
வாசனை அறியும் முன்
கருவிலே இறந்த
குழந்தைகள் எத்தனை
பூவாக தாய் மண்ணில்
பிறந்தோம்
காயாகும் முன்
உதிர்ந்த உயிர்கள் எத்தனை

விழிகளில் புதைந்த
கனவுகள் எத்தனை
விடிகாலை அறியாது
உதிர்ந்த பூக்களும் எத்தனை

ஈழம் சுமந்த வலிகள்
எம் இதயம் மறக்குமா?
இருப்பிடம் இழந்து
எளிதியாய் அலைந்தோம்
அதை நெஞ்சம் மறக்குமா?

விலங்கிட்டு சிறையிட்டான்
தமிழர் விதியையே
மாற்ற துடித்தான் சிங்களவன்
இதை தமிழினம் மறப்பதா ?

உயிர்களை இழந்து
உடமைகள் தொலைத்து
வாழ்விடம் தேடி அலைந்து
கண்களில் கண்ணீர்
நதியென வடிந்தது
இதை மறக்குமா? எம் தேசம்

எத்தனை கொடுமைகள்
எம் மண்ணில் நடந்தது
ஏனோ உலகம்
விழிகள் மூடி கிடந்தது
அத்தனை சோகமும்
எம் நெஞ்சம் மறக்குமா ?
 


ஆக்கம் சிவா TE
குலமகளே
உன் உதிரமா அவர்கள்
இல்லையே
ஆனாலும் துடித்தாயம்மா
ஏழு பேர் விடுதலை
உன் மூச்சானதே
அக்கினியும் உன்
உரு ஆனதே
செங்கொடியே
துளிர் விட முன்பே
துளிர் விட்டு
எரிந்தது உன் தேகம்
முத்துக்குமார் மூட்டியா
தீயோ
அணையவில்லை
நீயும் விளக்கில்
எண்ணை போல்
சுடரேற்றி சென்றாயே
வல்லாதிக்கம்
மௌனம் காத்த
நேரம் உன் எதிரொலி
ஆடித்தான் போனான்
இந்தியனும்.

பறையடித்து கலை
வளர்த்து
தமிழ் உணர்வு
கொடுத்து
ஆடிய பாதம்
மண்ணில் துடிதுடித்து
விழுந்த போதும்
அடங்கவில்லை
இந்தியத்தின் இயந்திர முகம்

தூக்கு கயிறும்
துரும்பாகும்
ஒரு நாள்
என் ஈகம் பறைசாற்றும்
விரைவில்
ஈழத்தமிழர் மறக்கவில்லை
உன் திரு வதனம்
கண்ணுக்குள் வாழ்கிறாய்
தினமும்
நீ மூட்டியது
வெறும் தீயல்ல
விடுதலை வேட்கையம்மா!!


ஆக்கம் பவித்ரா நந்தகுமார்

சிறிலங்கா இராணுவத்தினர், அடுத்தவாரம் தமது முப்படையினரைக் கொண்ட பெரும் போர்ப் பயிற்சி ஒன்றில் ஈடுபட உள்ளனர். வரும் செப்ரெம்பர் 3 ஆம் நாள் தொடக்கம், 25 ஆம் நாள் வரை கொக்கிளாய் பகுதியில் இடம்பெறவுள்ள இந்த போர்ப் பயிற்சிக்கு "நீர்க்காகம்"என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த போர்ப்பயிற்சியில் சிங்களப்படையினருடன் சேர்ந்து பங்களாதேஸ், சீனா, இந்தியா, ஜப்பான், மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான், மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 50 படையினர் உட்பட, மேற்குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த 3500 படையினர் இந்த பயிற்சியில் பங்கு பற்ற உள்ளனர் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்?
எனது பதிவின் நோக்கம் இந்த பயிற்சி பற்றியதல்ல.!
இந்த பயிற்சியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்ற சிங்களக் கடற்படையினரின் சண்டைப்படகுகள் பற்றியது.
நண்பர்களே...!!
இதேபோன்று ஒரு போர்ப் பயிற்சி, போன வருடமும் சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டது.
அதில் சிங்களக் கடற்படையினரின் பாவனைக் கடற்கலமான "டோராவிற்கு" பதிலாக, கடற்புலிகளிடமிருந்து கைப்பற்றிய சண்டைப்படகுகளின் தொழில்நுட்பத்தை கொண்டு "அதே போன்று வடிவமைக்கப்பட்ட சண்டைப்படகுகளை கொண்டே" அந்த பயிற்சியை மேற்கொண்டிருந்தனர்.
புலிகளின் படகுகளையும், அதேபோன்று சிங்களக் கடற்படையால் உருவாக்கப்பட்ட, படகுகளின் படங்களையும் இணைத்துள்ளேன் அதை பார்க்கும் போது உங்களுக்கே புரியும்.
2009 ஆம் ஆண்டு வரை சிங்களக் கடற்படையின் பிரதான சண்டைப்படகாக "இஸ்ரேலிய தயாரிப்பான டோறாப்படகுகளையே" பயன்படுத்தி வந்தது.
இந்தச் சிறிய வகைப்படகுகளே சண்டைக்கு இலகுவானதாக உலக கடற்படையால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதையே தான் கடற்புலிகளுக்கு எதிரான போரில் சிங்களக் கடற்படை இஸ்ரேலிடமிருந்து கொள்வனவு செய்து பயன்படுத்தி வந்தது.
காலப்போக்கில் சிங்கள அரசு கடற்புலிளின் படகு போல, அவர்களின் தொழில் நுட்பத்தை நகல் (Copy) செய்து சொந்தமாக தயாரித்தது.
ஆனபோதும் கடற்புலிகளுடனான போரில் உலகத்தரம் வாய்ந்த சண்டைப்படக்கான "டோராவை" புலிகளின் சொந்த முயற்சியால் உருவாக்கப்பட்ட சண்டைப் படகுகளைக்கொண்டு கடலின் அடியில் மூழ்கடித்து வந்தனர் கடற்புலிகள்.
கடற்புலிகள், தொடர்ந்து கடலில் ஆதிக்கம் செலுத்தி வர, சிங்களக் கடற்படை கதிகலங்கியது.
1990 ஆம் ஆண்டு நடுப்பகுதிகளில் தினமும் "டோராப் படகு"மூழ்கடிப்புச் செய்தியே தாயகத்தில் முன்னிலை வகித்திருந்தது. அந்தளவு தூரம் கடலில் புலிகள் ஆதிக்கம் செலுத்தினர்.
ஆரம்பத்தில் தனிப்படகுகளில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த சிங்களக் கடற்படை, பின்னைய காலங்களில் கூட்டமாகத் திரியவேண்டி இருந்தது.!
பொதுவாக ஒரு நாட்டுடனான போரின் போது அந்த நாடுகளின் யுத்த நிலைமை பற்றி, ஒவ்வொரு நாடுகளும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருப்பர்.
அதே போலவே புலிகளுக்கும் சிங்களப்படையினருக்குமான போரின் உத்திகளையும், அதற்கான பாவனைக் கலங்கள் (ஆயுதங்கள்) பற்றியும் உன்னிப்பாக அவதானிப்பர்.
அதன் வெளிப்பாடாக 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற போது, சிங்கள அரசிடமிருந்து ஈரானிய அரசு கடற்புலிகளின் போர்த்தொழில் நுட்பத்தைச் சிங்கள அரசிடமிருந்து பெரும் தொகைக்கு வாங்கி இருந்தனர். (ஈரானிய அரசு கோத்தபாய ராஜபக்ஸவிடமிருந்து வாங்கியது இது பற்றிய ஒரு பதிவு முன்னர் பதிவிட்டுள்ளேன்)
ஆக, முன்னைய போர் ஒத்திகையில் போது நல்ல பெறு பேறுகளை கொடுத்தது கடற்புலிகளின் சண்டைப்படகு தொழில் நுட்பம்.!
ஆகவே தான் சிங்கள அரசு அந்த தொழில்நுட்பத்தை கொண்டு பெரும் தொகையான சண்டைப்படகுகளை உற்பத்தி செய்து வருகின்றது. இந்த ஒத்திகைக்கும் இந்த படகுகளே பாவிக்கப்படலாம். (இதில் சிறிய நாடுகளுக்கான ஏற்றுமதி நோக்கமும் சிங்கள அரசு கொண்டுள்ளது)
புலிகளின் படகில் அப்படி என்ன சிறப்பு உள்ளது?
புலிகளுடனான போரில் "பெரும் பட்டறிவை" கொண்ட நாடான சிங்களம் உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப் பட்ட சண்டைப்படகான டோராவை புறம்தள்ளி புலிகளின் தொழில்நுட்பத்தைக் கையில் எடுத்தமைக்கான காரணத்தை பார்ப்போம்.
புலிகளின் சண்டைப்படகுக்களில் பிரதானமாக இருந்த சிறப்பு அம்சங்கள்.!
(அ) கனரக ஆயுதங்கள், எரிபொருள் கலன்கள், ஆயுதங்களுக்கான ரவைகள் என பெரும் சுமைகளை ஏற்றியவாறு அதி கூடிய வேகம்.
(ஆ) அந்த வேகத்துக்கு ஈடுகொடுக்கக் கூடிய படகுக் கட்டுமானம் (வேகம் அதிகரிக்கும் போது படகு பிரிந்து விபத்து ஏற்றப்படுவதற்கு சந்தர்ப்பம் அதிகம்)
(இ) எல்லா காலநிலைக்கும் தாக்குப்பிடிக்கக் கூடியது.
(ஈ) சண்டைகளின் போது வேகமாகவும் அதேநேரம் சடுதியாக திரும்பக்கூடியவாறு அமைக்கப்பட்டிருந்த அதன் அடிப்பகுதி.
(உ) மிக முக்கியமானது குறைந்த உற்பத்திச்செலவு
இப்படி பல சிறப்பு அம்சங்களை கொண்ட தமிழனின் தொழில்நுட்பம் களவாடப்பட்டு விற்பனைக்கு தயாராகி உள்ளது.
சிங்களம் ஒரு நாட்டு அரசாக இருந்தபோதும் அதனால் எந்த ஆயுத தொழில் நுட்பத்தையும் சொந்தமாக உருவாக்க முடியவில்லை.
ஆனால், கிடைத்த சிறு வளங்களைக் கொண்டே, தமிழர் ராணுவம் "ஆணியில் இருந்து விமானத்தில் போட்ட குண்டுவரை" சொந்தமாக தயாரித்தே பயன்படுத்தினார்கள்.!
உண்மையில் புலிகளே இராணுவத் தொழில் நுட்பத்தில் வல்லுனர்கள் என்பதை சிங்களம் இந்த படகுகள் மூலம் மீண்டும் நிருபித்துள்ளது.!
ஏக்கங்களுடன்
- ஈழத்துத் துரோணர்.!!

எதிர்வரும் 14 ஆம் திகதி வடக்கினை ஒன்றுதிரட்டி யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணி மற்றும் ஒன்று கூடலுக்கு " எழுக தமிழா " என பயிர் சூட்டப்பட்டுள்ளது. கண்டணப்பேரணி மற்றும் பொங்குதமிழ் ஒன்று கூடலினை இணைக்கும் பெயராக " எழுக தமிழா " என பெயர் சூடப்பட்டுள்ளதாக ஏற்ப்பாடுக்குழு தெரிவித்துள்ளன.
தமிழர்களை ஒரு கோசத்தின் கீழ் ஒரு கொள்கையின் கீழ் முழுமையாக அணிதிரட்டும் செயலுக்கு பெயர் பொங்குதமிழ், தமிழர்களை பீடித்த மொத்த அடக்குமுறைகளையும் உடைத்தெறியும் பொதுக்களத்தை குறிக்கும் குறியீடு, ஊர் கூடி, ஆடிப்பாடி, விடுதலைக்கூத்தாடி, நம்மை நாமே ஆழ்வதையும், அனைத்துவித தடைகளிருந்தும் எம்மை விடுவித்து கொள்ளுதலையும் பிரகடனம் செய்து கொள்ளும் மந்திர உச்சாடனம் பொங்குதமிழ்..
தாயகத்தில் முதலாவது பொங்கு தமிழ் நிகழ்வை நடாத்துவதற்கு பெரும் பங்கு வகித்த செ.கஜேந்திரன் அவர்கள் “எமது நிலம் எமக்கு வேண்டும்” எனும் மாபெரும் நிகழ்வின் முக்கியத்துவத்தை இச் செவ்வியில் விளக்குகின்றார்தாயகத்தில் முதலாவது பொங்கு தமிழ் நிகழ்வை நடாத்துவதற்கு பெரும் பங்கு வகித்த செ.கஜேந்திரன் அவர்கள் “எமது நிலம் எமக்கு வேண்டும்” எனும் மாபெரும் நிகழ்வின் முக்கியத்துவத்தை இச் செவ்வியில் விளக்குகின்றார்
யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் பொங்குதமிழ் 2001 இல் முதன்முறையாக நிகழ்த்தப்பட்டது. அங்கு மூன்று வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டன. தன்னாட்சி உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம், ஆகும்.. நிகழ்வை நடாத்துவதற்கு பெரும் பங்கு வகித்தார் செ.கஜேந்திரன் அவர்கள்..
எனவே பொங்குதமிழ் என்பது ஆன்மதுச்ச்சொல். நூற்றாண்டு கால அடிமைத்தனத்தை உடைத்தெறியும் தமிழ் சமூகத்தின் கூட்டுணர்வுச்சொலென அடையாளப்படுத்தப்படுள்ள நிலையில் கண்டன பேரணி மற்றும் ஒன்று கூடலை " எழுக தமிழா " என பெயரிட ஏற்பாட்டுக்குழு முடிவு செய்துள்ளது..
* சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை உருவாக்கக்கூடிய இத்தகைய நடவடிக்கைகளை உடனைடியாக தடுத்து நிறுத்துமாறும்.
*தமிழ் மக்கள் முழுமையாக மீள்குடியேறக்கூடிய வகையில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்குமாறும்?
* தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தினரை வெளியேறுமாறும்,
* தமிழின அழிப்பிற்கான பொறுப்புக்கூறலுக்காக ஒரு முழு அளவிலான சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை பொறிமுறையை வலியுறுத்தியும்,
* காணாமல் போக செய்யப்படடோர் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
*அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்குமாறும் அத்துடன் பயங்கரவாததடைசட்டத்தை நீக்கக்கோரியும்,
இந்த மாபெரும் ஒன்றுகூடல் மற்றும் பொங்குதமிழ் இடம்பெறவுள்ளது.. இதற்க்கு அனைத்து தமிழ் மக்களும் ஒன்று திரண்டு குரல் எழுப்பி எமினத்தின் உரிமைக்குரலை இந்த உலகிற்கு உரக்க சொல்லுவோம்..

பாராளுமன்றத்தில் நேற்று விலங்குத்தீவன (திருத்த) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தத் தகவல்களை முன்வைத்தார்.

 
யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்கு அந்தந்த மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் பின்னடிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கடந்த ஜூலை மாதம் எட்டாம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமரிடத்திலான நேரடி கேள்வி நேரத்தின்போது வடக்கு கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தில் குண்டு மற்றும் ஷெல் வீச்சுக்களால் பாதிக்கப்பட்டு அவற்றின் துகள்களுடன் ஆபத்தான நிலையில் பாடசாலை மாணவர்கள் இளைஞர் யுவதிகள் உள்ளிட்ட பலதரப்பட்டவர்கள் காணப்படுகின்றார்கள். அவர்களுக்கு சத்திரசிகிச்சை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை உடன் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்திருந்தேன்.

அச்சமயத்தில் விபரங்களை வழங்குமாறு பிரதமர் கூறியிருந்ததோடு மீள்குடியேற்ற அமைச்சர், சுகாதார அமைச்சர் ஆகியோருடன் கலந்தாலோசித்து உள்நாட்டில் காணப்படும் அவசர வைத்தியசாலைகளில் சிகிச்சையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் கூறியிருந்தார். அத்தோடு தேவை ஏற்படின் வெளிநாட்டு மருத்துவ சிகிச்சைகளையும் வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனுவடன் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருந்தார். பிரதமரின் இந்த பதிலுக்கு அமைய வடக்கில் உள்ள 5 மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களுக்கும் விபரங்களை வழங்குமாறு கடிதம்மூலம் கோரிக்கை விடுத்திருந்தேன்.

இக்கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டு 65 நாட்களாகிவிட்டன. வெறுமனே இரண்டு மாவட்ட அரசாங்க அதிபர்கள் தகவல்களை வங்கியுள்ளனர்.அதன்டிப்படையில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 410 பேர் இவ்வாறு குண்டுகளுடன் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். 132 பேர் பாடசாலை மாணவர்கள். இவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அவசியம். கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அரசாங்க அதிபர்கள் இந்த தகவல்களை வழங்குவதற்கு பின்னடிக்கின்றனர்.

நல்லாட்சி அரசாங்கத்தில் மக்களுக்கு சேவையாற்ற நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகள் இவ்வாறு பின்னடிக்கின்றனர். 65 நாட்களாகியும் அவர்கள் கடிதம் கிடைத்தது என்றுகூட பதிலளிக்காமை கவலையளிக்கிறது என்றார்.
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் 132 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 410 பேர் தமது உடல்களில் ஷெல் மற்றும் குண்டுகளின் சிதறல்களுடன் வாழ்ந்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
காலம் ஒன்றல்ல இரண்டல்ல பல நூறு வரலாறுகளை எம் இனத்திற்கு கொடுத்திருக்கிறது. தோற்று விட்டோம் என துவழாமல் விழுந்த இடத்தில் இருந்து அக்கினி சிறகாக மீண்டும் எழுவோம். முள்ளிவாய்க்கால் முடிவினை தரவில்லை எமக்கு விழுந்தால் மீண்டும் எப்படி எழ வேண்டும் என்ற படிப்பினையை தந்திருக்கிறது.

லட்சக்கணக்கான உயிர்களை மண்ணில் விதைத்துள்ளோம். ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு விடுதலை வீரனின் வரலாற்றை சுமந்து நிற்கிறது. மீண்டும் புலிகள் வருவார்கள் என காத்திருப்பது தவறு முதலில் நாம் தான் புலிகள் என உணர வேண்டும். புலிகளே மக்கள், மக்களே புலிகள் இதுவே வரலாறு.

அவர்கள் வேறு நாம் வேறாக வாழ்ந்திட வில்லை அவர்களோடு தான் நாம் ஒன்றாக வாழ்ந்திருக்கிறோம் நம் அனைவரின் வீட்டில் இருந்தும் ஒரு மாவீரனையும் போராளியையும் கொடுத்திருக்கிறோம் அப்படி இருக்க நம்மோடு வாழ்ந்த புலிகள் நமக்கும் அதே உணர்வினை விட்டு சென்றுள்ளனர். வரலாற்றில் பல விடுதலை போராட்டங்கள் நடைபெற்றன இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவை வென்றும் இருக்கிறது பல தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

நாம் ஒரு நேர்மையான போராட்டத்தில் தோல்வியினை பெற வில்லை. ஒரு துரோக வரலாற்றின் முதுகிலே குத்தப்பட்ட நிலையிலேடயே வீழ்ந்தோம். நேர்மையான போராட்ட வரலாற்றில் இதுவரை தாம் விழ வில்லை அதை பல வரலாறுகள் அறியும். தோல்வியை சகிக்காத சிங்களமும், பயத்தினை தாங்காத உலக வல்லாதிக்க நாடுகளும், சிங்கள கைக்கூலிகளான இந்திய அரசும் எம்மை நேராக நெஞ்சிலே குத்த முடியாமல் முதுகிலே குத்தி வெற்றி வரலாறு படைத்ததாக சாயம் பூசிக்கொள்கிறது.

இதுவரை எத்தனை மாவீர வரலாறுகளை கொண்ட இனம் என்ற நிலையில் இருந்து சற்று விலகி யோசித்து பார்த்தால் 2009ல் மரணித்த பொது மக்களும் ஒரு வகையில் மாவீரர்கள் தான். தங்கள் சொந்த நிலத்தையும் சுய நிர்ணயத்தையும் விட்டு வெளியேற முடியாத நிலையில் வருவது வரட்டும் என களத்தினில் நின்று மடிந்து போனார்களே அவர்களை என்ன சொல்வது. அவர்கள் தாமே மரணத்தை தேடவில்லை அவர்கள் நன்றி மறக்காமல் தங்களை பணயம் வைத்தார்கள். முள்ளிவாய்க்கால் முடிவானது உலக நாட்டிற்கும், சிங்களத்து வங்குரோத்துகளுக்குமே தவிர எமக்கல்ல. இன்று நாட்டப்பட்டிருக்கும் கல்லறைகள் நமக்கான செய்திகளை கூறும் எரிந்த சாம்பல் மீண்டும் உயிர் பெறும் இது திண்ணம்.

இன்று போராட்டங்கள் ஓய்ந்த நிலையில் தலைவரின் இருப்பை அறியாத நிலையில் நாம் திரிபு படுத்தப்படும் நிலையிலும் இருக்கிறோம். காரணம் தமிழ் மக்களுக்கு ஆதரவாக வெளிச்சாயம் பூசப்படும் சிலரால் மறைமுகமாக சிங்கள ஆதரவோடு எமை தாக்கும் நிலையில் தடுமாறுகின்ற நிலையில் காணப்படுகின்றோம்.

தலைவர் பிரபாகரன் அனாதை பிணமாக்கப்பட்டதாகவும் அவருக்கு வீரவணக்கம் என்றும் சில இணையங்கள் செயற்படுவதும் இன்று வேதனையை தருகிறது. தாங்கள் தான் புலிகள் என்றும் தாங்கள் எல்லாம் அறிவர் என்றும் பீத்திக்கொண்டு தங்கள் வியாபார நடவடிக்கையை தொடர்கின்றனர். ஈழப்போராட்டத்தில் உண்ணிப்பான கவனம் தேவை அதிலும் முள்ளிவாய்க்கால் இறுதி நிமிடங்கள் களத்தில் இறுதி வரை நின்றவனுக்கே புரியும் வெளியே இருந்து கொண்டு பேசுவதால் எந்த பொய்யும் உண்மையாக போவதில்லை.

“சுட்டு விட்ட பூமி இது மீண்டும் மீண்டும் கருத்தரிக்கும் எம் போராட்டம். எவன் வந்து தடை இடினும் நேரான பாதையில் மீண்டும் களம் புகுவோம் விரைவில்”

நன்றி

ஆக்கம் பவித்ரா நந்தகுமார்
போரிலே சாதனைசெய்ய
புகழாரம் தந்தோரே
புண்ணியதேசத்தை
புத்தர் பேர்சொல்வோர்
புதைத்து நின்றபோது

அன்னிய ஆதிக்கத்தின் அரவணைப்பில்
அன்டயநாட்டின் அனுசரணையில்
வெந்து கருக வெடி குண்டுகொண்டு
வீரரை விடுதலை
விரும்பிகளை
வெற்றி வாகை என்ற பெயரின்
தமிழ் இனத்தின் உயிர்களை
துட்சமென நினைத்து
துரோகத்தனத்துடன்
முள்ளி வாய்காலில்
மூடி ஒடுக்கிவைத்து
கொள்ளிவைத்த 
கொடியோரே......

நாம்மடிவது ஒருமுறை
மானம் இளக்கான்
தமிழ்ழீழத்தமிழன் என்பதை
வீறுகொண்டு தலைவன் படை
காத்துநிற்க விடிவை இருளாக்கிய
வீரமில்லாக்கோளைகளே-நீங்கள்
நேர்முகம் காட்டாது
நீதிவழி வாழாது
கோழையாய் குறுக்குவழிவந்து
குள்ள நரிவேசம்போட்டு எம்மை
எம்மித்தை முள்ளியில் முற்றுப்புள்ளியாய்
எண்ணி நிற்கும் உமக்கு ----

முடிந்ததென்று நினைக்கும்  அதே வன்னிமண்
வரையும் புது யுகவரலாறு எம்மினத்தால்
அப்போது பொளுதும் புலரும் எம்மினத்துக்காய்
மலரு தமிழ்ழீழம்  புலரின் பொளுதின் பூபாளமாய்
சுதந்திரக்காற்றை எம்மினம் சுவாசிக்க சுதந்திரக்காற்றை
எமது உயிரால் உதிரத்தால்
எழுதுவோம் புதுச்சபதம்
விடிவின் வீச்சோடு
எம்மீழக் கொடியின் உயர்வோடு

ஒலிக்கும் அன்று தேசியகீதம் எமக்காய்
எம்மக்கள் சுதந்திரத்துக்காய்
உலகம் வியக்க உதயமாகும் புலர்பொளுதில் பூபாளகீதம்

ஆக்கம் இசைக்கவிஞன்எஸ்.தேவராசா

ஈழம் எனும் அழகிய தீவில் பிறந்த நாம் கருவிலே வீரம் சுமந்தோம். தாயவள் ஊட்டாமல் பரிசளித்த சேய் நம் ஈழம். காலம் வரலாறு கூறலாம். அதில் திரிபுகள் ஏராளம் இருக்கலாம். அது வருங்கால சந்ததி பல்வேறு கோணங்களில் பார்க்கலாம். அனைத்து உண்மைகளையும் அறிந்த சந்ததி நம் சந்ததியே. திரிபுகள் இன்றி அனைத்தும் உண்மையாக உரைக்கப்படவேண்டும்.
வருங்கால விருட்சங்களின் உணர்வுகளில் பதிக்கப்பட வேண்டும். அதுவே எம் உணர்வுகளை, உடமைகளை, உயிர்களை இழந்த வலியை எதிர்கால குழந்தைகள் மனதில் பதிய வைக்கும். காத்திருந்தோம் பல காலம். செத்து மடிந்தாலும் வீர மறவர்களாகவே மடிந்தோம். கொத்து கொத்தாக குண்டு மழை பொழியும் போதெல்லாம் பல்லாயிரம் வீரர்கள் களம் கண்டார்கள். உண்ணத தலைவனின் காலத்தில் வாழ்கிறோம். வருங்காம் நம் தலைவனின் பாதையிலேயே பயணிக்க வேண்டும்.
ஆயுதமோ, அகிம்சையோ தர்மத்தின் பாதையிலேயே நகர்த்தி இருக்கிறோம். எதிரியால் ஆபத்தை உணர்ந்தே தாக்கியிருக்கிறோம். ஆனாலும் பகைவன் அப்பாவி மக்களையும் கொத்தாக கொன்று குவித்தான். அப்போதும் எம் தலைவன் நிதானமாக எதிரி படைகளையே பந்தாடினார். மாறாக சிங்கள மக்களை சீண்டவில்லை. அவர்கள் ஆபத்துக்கள் பலவற்றில் இருந்து காப்பாற்றியும் விட்டிருக்கிறோம். இப்போதும் எம் இலக்கு எதிரியே அன்றி மக்கள் அல்ல. எமது போராட்டம் சீரானது. ஆயுதம் மௌனித்மாலும் அகிம்சை தொடரும். அதில் விதி விலக்கல்ல. எமக்கான பாதையே நாமே உருவாக்க ஆயுதங்கள் ஏந்தினாலும் சரி அகிம்சையானாலும் சரி எப்போதும் எம் தலைவனின் பாதையிலேயே பயணிப்போம்.
நன்றி
ஆக்கம் பவித்ரா நந்தகுமார்

பேராதனை பல்கலைக்கழக முதலாம் வருட விஞ்ஞான பீட தமிழ் மாணவர்களை 2 ம் வருட சிங்கள மாணவர்கள் வழி மறித்து தாக்கிய சம்பவம் ஒன்று நேற்று இரவு 7.00 மணியளவில் நடந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது..
குறிஞ்சி குமரன் கோவிலுக்கு சென்று வரும் வழியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த முதலாம் வருட விஞ்ஞான பீட புகுமுக மாணவர்களை 2 ம் வருட சிங்கள மாணவர்கள் வழி மறித்து தாக்கியுள்ளனர்..
இச் சம்பவத்தில் காயமடைந்த தமிழ் மாணவர்கள் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது .10 மாணவர்கள் தாக்கப்பட்டதாகவும் 2 மாணவர்கள் பலத்த காயங்களுக்கு ஆளானதாகவும் அறிய முடிகின்றது.
திருப்ப அடிக்கும் காலம் விரைவில்..
பௌத்தர்களே வாழாத இடத்தில் பல்வேறு காரணங்களைக் கூறி விகாரைகள் அமைக்கமுடியுமாயின் ஏன் மாவீரர் துயிலுமில்லங்களை அமைக்கமுடியாது என வடக்கு மாகாணசபை உறுப்பினர் மயூரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இரணைமடுவில் விகாரை அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு மாகாணசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, இரணைமடு தமிழ் மக்களின் பிரதேசம் இல்லை எனவும், வடக்கு மாகாண முதலமைச்சரின் தேவைக்கேற்ப ஆடமுடியாது எனவும் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் வடக்கு மாகாகாண சபை உறுப்பினர் மயூரனால் இன்று அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“வடக்கு கிழக்கில் சிங்கள பௌத்தர்களை மேற்கோள்காட்டி புத்தர் சிலைகளை ஆங்காங்கே நிறுவி வருகின்றர். தமிழ் மக்கள் புத்தபகவானுக்கு எதிரானவர்கள் அல்லர். அதேபோன்று இன்றும் பௌத்தர்கள் இந்துக் கடவுளர்களை வணங்கி வருகின்றனர்.

எனவே மதம் சார்ந்து எந்த முரண்பாடுகளும் இல்லாத இந் நாட்டில், சில பேரினவாதிகள் மக்கள் மத்தியில் மதவாதத்தை தூண்டும் விதமாக செயற்படுகின்றனர். புத்தபெருமானை வணக்கத்திற்குரிய கடவுளாக அன்றி வடக்கு கிழக்கின் ஆக்கிரமிப்பு சின்னங்களாக மக்கள் மத்தியில் தோற்றுவிக்கின்றனர். இதனை பேரினவாதிகள் நிறுத்திக்கொள்ளவேண்டும்.
இவ்வாறான ஒரு நிலையில், ரஞ்சன் ராமநாயக்க தனது சிங்கள மேலதிக்க எண்ணத்துடன் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களை முன்வைத்து வருகின்றார். இதற்கு அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும்.

பௌத்தர்களே இல்லாத இடங்களில் விஹாரைகளை
 அமைக்க முடியுமாயின், மாவீரர்களுக்கு ஏன் வடக்கு கிழக்கில் தூபிகளை அமைக்க முடியாது? எனவே தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுமாயின் தமிழ் மக்களின் மனங்களில் உள்ள ஆதங்கத்தின் வெளிப்பாடாக, மாவீரர் நினைவுத்தூபிகள் உருப்பெறும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலை வாழ்விற்காய்
விழி மூடிய உயிர்கள்
வித்துடல் ஆனது
எம் தேச புயல்கள்

தமிழீழ கனவினை
நெஞ்சினில் சுமந்தவர்
தடைகள் யாவையும்
உடைத்தெறிந்தவர்கள்

உடனிருந்த உறவுகள்
கண்ணீரில் நனைய
களமதில் உயிரினை
விடுதைக்காய்
விலையாக கொடுத்தார்கள்

மரணத்தின் மடியினில்
ஈழ தாயின் அரவணைப்பில்
ஈழ கனவோடு இன்றுவரை
உறங்குகின்றார்கள்
விதை குழியினுள் விடுதலை கனவோடு
விழிகளில் கண்ணீரோடு

  ஆக்கம் சிவா TE
 நடைபெற இருக்கும் ஐநா மனிதவுரிமை சபையின் 33 வது அமர்வை முன்னிட்டு தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா நோக்கி மனிதநேய ஈருருளிப் பயணம் எதிர்வரும் 14.09.2016 புதன்கிழமை புருசல் நகரத்தில்  ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்னராகவிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது .


ஐரோப்பிய ஒன்றியத்துக்கு  முன்னராக ஆரம்பித்து, ஐரோப்பிய பாராளுமன்றத்தை ( ஸ்ரார்ஸ்புக்) நோக்கி பயணித்து தொடர்ந்து யேர்மன் நாட்டை கடந்து சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேய ஈருருளிப் பயணம் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலகம் நோக்கி செல்ல இருக்கின்றது.

ஈருருளிப் பயணம் செல்லும் வழிகளில் முக்கிய அரசியல் சந்திப்புகள் இடம்பெறுவதோடு , தமிழின அழிப்பை பல்லின மக்களுக்கு எடுத்துரைக்கும் துண்டுப்பிரசுரங்களும் , விளக்கங்களும் கொடுக்கப்படும் . எமக்கான நீதியை நாம் பெறும் வரை ஐநா நோக்கிய பயணம் என்றும் ஓயாது என்பதின் குறியீடாக இம் முறையின் மனிதநேய ஈருருளிப் பயணம் அமைகின்றது.

தாயகத்தில் எங்கள் உறவுகள் எதிரியின் ஆக்கிரமிப்புக்குள் அடிமைப்பட்டு வாழ்ந்து வருகிறார்கள். எங்களை அழித்தவன், எங்கள் பாரம்பரியத்தை, கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை, எங்கள் தொன்மையான தூய தமிழ்மொழியை படிப்படியாக நுட்பமாகத் திட்டமிட்டு தொடர்ந்து அழித்து வருவதோடு, எங்கள் நிலத்தையும் நிரந்தரமாக வன்கவர்ந்து தன்னகப்படுத்தி வருகிறான்.

பத்து அல்லது இருபது ஆண்டிற்குள் தமிழரின் பூர்வீக தாயக நிலத்தில் தமிழர்கள் உரிமைகூற ஏதுமற்ற நிலை உருவாகக்கூடிய ஓர் இரகசிய செயற்றிட்டத்தில் சிங்கள பௌத்த பேரினவாத அரசு தீவிர முனைப்புக்காட்டி வருகிறது. இவ்வாறான ஒரு பாரிய திட்டமிட்ட மென்தீவிர இனவழிப்பு எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

இவ்வாறு திட்டமிடப்பட்ட ஒரு மென்தீவிர இனவழிப்பிலிருந்து எமது உறவுகளை, எமது தாய்நிலத்தை, மொழியை, தமிழரின் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை பாதுகாக்க நாம் என்ன செய்யப்போகிறோம்?

உலகெங்கும் தமிழர்கள் வாழ்கின்ற நாடுகளில் தமிழர்கள் ஓரணியாக எழுச்சிபெற்று சக்தி வாய்ந்த போராட்டங்களைச் செய்யவேண்டும். நீதியின் கதவுகள் திறக்கப்படும்வரை நாம் ஓய்ந்துவிடாது தொடர்ந்து எங்கள் உரிமைக்காக ஓங்கிக் குரலெழுப்ப வேண்டும். இளைஞர்கள் போராட்டத்தில் குதிக்கவேண்டும். தமிழ் எங்கள் உயிருக்கு நிகர், எங்கள் மொழி, எங்கள் இனம், எங்கள் பண்பாடு – உலகிலேயே மிகவும் தொன்மையானது, வீரமானது, தனித்துவமானது!

ஆகவே, எமது உரிமைகளை மீட்டெடுக்கும் வரை நாம் தொடர்ந்து முனைப்போடு போராடுவோம்!

செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள். உலகின் முதன்முதல் சாத்வீகப்போராட்டத்தில் உச்சக்கட்டமான நீராகாரம் கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டு உயிர் துறந்த  தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவு நாள். ஐரோப்பா எங்கும் வாழ்கின்ற தமிழர்கள் யாவரும் 26. 09. 2016 அன்று ஐ.நா. வாசல் நோக்கி அணிதிரள்வோமாக! ஒன்றுபட்ட தமிழரின் எழுச்சியாக,

 எங்கள் பூர்வீக நிலம், இனம், மொழி, கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை பாதுகாப்பதற்காக, எம்மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள மென்தீவிர இனப்படுகொலையிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக ஐரோப்பா எங்கும் வாழ்கின்ற தமிழர்கள் நாம் அணிதிரண்டு, ஓரணியாக நின்று எமக்காக நீதி கோரும் ஒரு சக்திவாய்ந்த போராட்டமாக மாற்றுவோமாக! 65 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் எமது உரிமைப் போராட்டத்தில் தமிழீழ தேசத்தை வென்றெடுக்க தமது உயிர்களை ஈகம்   செய்த மாவீரச் செல்வங்களின் நினைவோடு தமிழீழமே எமது இறுதித் தீர்வு என ஒன்றுகூடுவோம்.

காலத்தின் கட்டாய வரலாற்றுக் கடமையை உணர்ந்து சுவிஸ் எங்கும் வாழ்கின்ற தமிழ் உறவுகள் அனைவரும் பேரணியாக ஒன்றுகூடுமாறு மிகவும் பணிவன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறோம்.

ஐந்து அம்சக் கோரிக்கைகள்:

1. பல தசாப்தங்களாக, இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப் படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011ல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக சமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

2. ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் முதற்கட்டமாக அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படை வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.

3. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.

4. பேச்சு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

5. மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.


அரசியல்வாதிகள் தங்களது சுய லாபங்களை
நோக்குடன் கொண்டு தமிழ் மக்களுக்காக நாங்கள் இருக்கின்றோம் என்று கூறுவதை தவிர தமிழ் மக்களின் பிரச்சனையை யாரும் கவனிப்பதில்லை . என இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் அமர்வு வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (17.08.2016) நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கும் போதே முன்னாள் போராளி ஒருவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

முன்னாள் போராளிகள் 107 நபர்கள் மரணித்துள்ளனர். விஷ ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக பல கருத்துக்கள் வருகின்றன. நாங்கள் தடுப்பு முகாங்களில் இருந்த சமயத்தில் எமக்கு உணவுகள் வழங்கப்பட்டது, தடுப்பூசிகள் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட உணவுகளை,தடுப்பூசிகளை பரீட்சித்து பார்த்து சாப்பிடும் நிலையில் அன்று நாங்கள் இருக்கவில்லை.
அதனால் அதன் உண்மைத்தன்மை முன்னாள் போராளிகளுக்கு தெரியவில்லை . தற்போது நாங்கள் உள்ள நிலையில் அனைவரும் மன அளவில் பாதிப்படைந்துள்ளோம். 95 வீதம் முன்னாள் போராளிகள் தமக்கு என்ன நடந்திருக்கும் என்ற அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.


தேர்தல் காலங்களில் மாத்திரம் அரசியல்வாதிகள் நாங்கள் தமிழர்களுக்காக இருக்கின்றோம், விடுதலைக்காக இருக்கின்றோம். எமக்கு தீர்வுத்திட்டம் வேண்டுமேன பேசும் அவர்கள் முன்னாள் போராளிகளுக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி யாரும் கதைப்பதில்லை.
முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைக்கப்பட்டது யாவரும் அறிந்த விடயம். ஆனால் சமூகத்துடன் இணைப்பட்ட எந்த அத்தாட்சியும் வெளிப்படவில்லை முன்னாள் போராளி என்பதால் எனது உறவினர்கள் கூட என்னுடன் கதைப்பதில்லை அந்த அளவிற்கு எம்மை இந்த சமூகம் பின்தள்ளியுள்ளது.
நாங்கள் போராடியது எமது தமிழ் பேசும் மக்களுக்காக இன்று தமிழ் மக்கள் இந்த நிலையில் இருப்பதுக்கு காரணம் எமது போராட்டம் இந்த அளவிற்கு வலுப்பெற்றது. நங்கள் போராடாமல் இருந்திருந்தால் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகியிருக்கும்.
நாங்கள் போராடியது தமிழ் மக்களுக்காக, போராடிய முன்னாள் போராளிகள் மாவீரர்கள் அவர்கள் ஒன்றும் அறியதாவர்கள் எங்களுக்கு தனிநாடு எங்களுக்கு ஒரு தீர்வுத்திட்டம் , தமிழர் தனித்துவமாக நிம்மதியாக வாழ ஒரு வழி வேண்டுமேன்று போராடி மரணித்தவர்கள் . அவர்களை நாங்கள் நினைவு கூறுவதற்கு கூட தற்போது எதுவும் இல்லை.
என்னுடன் ஒன்றாக பயிற்சி எடுத்த 140போராளிகளில் நாங்கள் 4 பேர் தற்போது உயிருடன் இருக்கின்றோம்.136 பேர் மரணித்துள்ளனர். அவர்களை நாங்கள் நினைவு கூறு முடியாதா? அவ்வாறு நினைவு கூர்வது தவறா? யுத்தத்தில் இறந்த இராணுவ வீரர்களுக்கு வடக்கில் நினைவுத் தூபிகள் தமிழ் மக்களுக்காக போராடிய போராளிகளுக்கு தூபிகள் எங்கே என்றும் கேள்வி எழுப்பினார்?
உண்மையிலேயே விஷ ஊசி ஏற்றப்படாவிட்டாலும் மனதளவில் முன்னாள் போராளிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண ஒரு நோய் ஏற்ப்பட்டால் கூட ஊசி ஏற்றப்பட்டதால் வந்த நோயாக இருக்குமோ என்ற பயம் அனைத்து முன்னாள் போராளிகளிடமும் தற்போது காணப்படுகின்றது. 
முன்னாள் போராளியான நாங்கள் ஒரு கூட்டத்திற்கு சென்றால் கூட புலனாய்வு பிரிவினர் எம்மை பின்தொடர்கின்றனர். அப்படியிருந்தும் எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை ஆணைக்குழு முன் எனது கருத்துக்களை கூற வேண்டும் என வந்துள்ளேன் என தெரிவித்தார்.
இலங்கையில் தமிழர் தாயகத்தில் படையெடுக்கும் புத்தர் சிலைகள் இன அழிப்பின் கூறுகளே.
புத்தருக்கோ புத்த மதத்துக்கோ தமிழர்கள் நாங்கள் எதிரிகள் அல்லர்.
இங்கு சிக்கல் புத்தர் அல்ல. புத்தரின் பெயரால் சத்தமின்றி அபகரிக்கப்படும் தமிழர் நிலங்களும் சத்தமின்றி திணிக்கப்படும் பௌத்த சிங்கள பேரினவாதமும், சத்தமின்றி அழிக்கப்படும் தமிழர் கலை, கலாச்சார, பண்பாட்டு, வாழ்வியல் உரிமைகளும், தமிழ் மக்களின் இயல்பு வாழ்வும், அடிப்படை உரிமைகளும் ஆகும்.
இந்த புத்த சிலைகளை தமிழர் நிலங்களில் "நல்லாட்சி" அரசில் கட்டி எழுப்பி கொண்டு இருப்பவர்கள் வேறு யாருமல்ல. பௌத்த வெறிகொண்ட இலங்கை இராணுவத்தினர். எங்கேனும் ஒரு இராணுவம் கோவில் கட்டும் பணியாற்றுமா? இது தான் தேசத்தை காக்கும் இராணுவ வீரர்களின் பணியா?
மக்களை காக்க வேண்டிய இராணுவம் தமிழ் மக்களை மிரட்டி தமிழர் நிலங்களை அபகரித்து சிங்கள பௌத்த விகாரைகளை கட்டி, சிங்கள குடியேற்றங்களை ஊக்குவித்து, மக்கள் நிலங்களில் இராணுவ தளங்களை கட்டி கொண்டு இருக்கின்றது.
இதை எங்கள் தமிழர் தலைவர்களும் தட்டி கேட்பதில்லை. தமிழர் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த மைத்திரி அரசும் கேட்பதில்லை. சிரித்தபடி கொல்லும் நயவஞ்சனை தலைவர்கள் எங்கள் தமிழினத்தை இருந்த சுவடு தெரியாமல் அழித்து வருகின்றார்கள்.
இந்த அநீதிகளை தட்டிக் கேட்கும் தமிழர்களை மதப் பீரங்கிகளாக எதிர்க்க இப்போ முக நூலிலும் சிலர் ஏவப்படுகின்றார்கள் என்பது வேதனையே.
எம் விழிகளை குற்ற கருவியாக்கி எமது விரல்களை அனுப்புகிறார்கள்.
புத்த மதம் சில நூறு ஆண்டு வரலாறு கொண்டது. தமிழர் வரலாறு பல்லாயிரம் வரலாறு கொண்டது.
இலங்கை தீவு தமிழர்க்கானது என்பதையும் பண்டை தமிழர்கள் மதங்கள் சாதிகள் பிரிவினைகள் இல்லா அறிவியல் சமூகமாக நாகரீகத்தின் உச்ச வடிவினைக்காக அங்கே இருந்தார்கள் என்பதையும் முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
தயவு செய்து மத பிரச்சாரத்திற்காக சிங்கள பௌத்த அரசின் அநீதியை நிலை நாட்ட தமிழர் வரலாற்றை சிதைக்காதீர்கள். பொய்களை புனையாதீர்கள்.
உங்கள் சிக்கல் மத திணிப்பாக இருந்தால் தமிழர் அதற்கு பலியாக முடியாது.
தமிழினத்தின் அடையாளம் மதம் அல்ல. மொழி. உயர் பண்பாடு. அறிவியல்...தமிழரின் பெருமைகளை படித்து விட்டு தமிழினத்தின் வரலாற்றை எழுதுங்கள் உறவுகளே!
நாம் எந்த இனத்திற்கும் எதிரிகள் அல்லர். ஆனால் எவரும் எம்மை அழிக்க பார்த்து கொண்டு இருக்கும் இழிவான சுரணை இல்லா இனமும் அல்ல என்பதில் விழித்துக் கொள்ளுங்கள் என் தமிழ்
- பேசிப் பேசியே
பேசாப் பொருளானோம் !
பேசிய பேச்சில் - நாம்
வெற்றுச் சொல்லானோம் !

- ஏவல் கூட்டச்
செயலியானோம் - எடுப்பார்
கைப் பிள்ளையானோம் !

- உணர்ச்சிக் கட்டை
நாவில் ஏந்தி
புரட்டி எடுத்தோம் !

- உண்மை சொன்னவர்
கழுத்தில் எல்லாம்
துரோகத்துண்டு போட்டோம் !

- அவனை எதிர்த்து
இவனை எதிர்த்து
தனித் தீவு ஆனோம் !

- அவர் வருவார்
இவர் வருவார்
என்று சொல்லி
கேட்பாரற்றுப் போனோம் !
 
 
ஆக்கம்   சுதன்ராஐ்

இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 31 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது.அன்றிலிருந்து இன்றுவரை பல்லாயிரம் பெண்கள் தம்மைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளதோடு வீரச்சாவடைந்துமுள்ளனர்.மன்னார் அடம்பனில் சிங்கள இராணுவத்தின் மீதான தாக்குதலோடு பெண்புலிகளின் தாக்குதல் வரலாறு தொடங்குகிறது.
அன்றிலிருந்து தீச்சுவாலை வரை பெரும்பாலும் எல்லாக் களங்களிலும் பெண் புலிகளின் பங்களிப்பு நீக்கமற நிறைந்திருக்கிறது.

இந்திய இராணுவத்துடன் புலிகளுக்கு மோதல் ஏற்பட்டபோது பெண்புலிகளின் முதலாவது உயிர்ப்பலி நிகழ்ந்தது.கோப்பாய்க்கும் நாவற்குழிக்குமிடையில் நடந்த சண்டையில் லெப்.மாலதி வீரச்சாவடைந்தார்.அன்றிலிருந்து இன்றுவரை ஆயிரக்கணக்கான பெண் புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகள் மகளிர் பிரிவு விடுதலைப்புலிகளின் சகல வேலைத்திட்டங்களிலும் படையணிகளிலும் பெண்களும் இடம்பெற்றுள்ளனர். கடல் மற்றும் தரைக் கரும்புலிகளாகவும் பெண்புலிகள் பலர் வீரச்சாவடைந்துள்ளனர்.






தமிழினத் தலைவன் பிரபாகரன்.

தமிழன் யார் என்பதை அகிலமே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஒரு நாட்டின் வரலாற்றை மாத்தரமல்ல உலகின் பெரும் பகுதி வரலாற்றையே தலைகீழாக புரட்டிப் போட்ட ஈழப் போராட்டத்தின் நாயகன் பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உலகத் தமிழினத்தின் எண்ணம், சொல், செயல், மாற்றமடையக் காரணமானவர் பிரபாகரன்.
தமிழர்களுக்கு தமிழுணர்வை ஊட்டியவர். சோம்பிக் கிடந்த இனத்தைத் தட்டியெழுப்பினவர் என்பதோடு நிறுத்த முடியாது. பூமிப் பரப்பெல்லாம் தமிழின் விதை விதைக்கக் காரணமானவர் அவர்தான.;
சென்ற இடத்தில் மறைந்து வாழ்ந்த தமிழர்களை நான் தமிழன் என்று துணிந்து சொல்ல வைத்தவர் பிரபாகரன் தான் .

இனித் தமிழர் வரலாறு தூக்க நிலைக்குத் திரும்ப வாய்ப்பில்லை அவர் அடியெடுத்த போராட்ட மரபு தொடரும். கூலிகள் என்றும் வந்தேறு குடிகள் என்றும் நாதியற்றவர்கள் என்றும் தூற்றப்பட்ட உலகத் தமிழர்களை வலிமை பெற்று உரிமை கோர வைத்தவர் தலைவர் பிரபாகரன்.
இணையத்தில் தமிழ் உலகின் முக்கிய மொழிகளில் ஒன்றாகத் திகழக் காரணமானவர் தமிழியலுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் ஊக்கு கருவியாகத் திகழ்பவர் தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, தமிழன் தோற்றம், வளர்ச்சி பற்றிய ஆய்வுக்குத் தோன்றாத் துணையாக நிற்பவர்.
பலரை வரலாறு படைக்கின்றது ஒரு சிலர் வரலாற்றைப் படைக்கிறார்கள் அந்தச் சிலரில் ஒருவர் பிரபாகரன். மிக விரைவில் பிரபாகரன் யுகம் தோன்றும் அப்போது உலகம் நினைத்துப் பார்க்காத உயரத்திற்க்குத் தமிழினத்தைப் பிரபாகரன் தூக்கிச் சென்று நிறுத்தியதைத் தமிழினம் உணரும்
..
அன்று தொட்டு இன்று வரை தமிழரின் போரட்டம் அற வழியைத் தழுவி நிற்கின்றது அகிம்சை வழியிலும் சரி, ஆயுத வழியிலும் சரி தமிழர் வரித்துக் கொண்ட போராட்டம் தர்மத்தின் நியமத்தில் நெறிப்பட்டு நிற்கின்றது அவர் நடத்திய ஈழவிடுதலைப் போர் தார்மீக அடிப்படையிலானது. அது தமிழர்களின் ஆன்மபலமாகவம் இருந்து வருகிறது.
சிங்களவர்கள் உண்மையான புத்த மதத்தினராக இருந்தால் தமிழீழ விடுதலைப் போருக்கான அவசியம் இராது சமாதானப் பேச்சென்றாலும் சரி, போர் என்றாலும் சரி, சிங்களவர்கள் நேர்மை, நிதானம், காருண்யம் அற்றவர்களாக வெளிப்படுகிறார்கள் சிங்களப் பயங்கரவாதம் ஈழத் தமிழர்களின் தேசிய ஆன்மாவில் விழுத்திய வடுக்கள் என்றுமே மாறப்போவதில்லை.
விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியல் பாதை’ என்று பிரபாகரன் மிகச் சுருக்கமாகக் கூறியிருக்கிறார். அவர் தொடர்ந்து பேசுகிறார் விடுதலை என்ற இலட்சியத்தை நாம் இலகுவாகத் தேர்ந்தெடுக்கவில்லை. வரலாறுதான் அதை எம்மிடம் வலுக்கட்டாயமாகக் கையளித்துள்ளது சுதந்திரம் வேண்டுவதைத் தவிர வேறு வழி எதையும் வரலாறு எமக்கு விட்டு வைக்கவில்லை.
..
✍ தலைவர்
வே பிரபாகரன்
ஜெர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக கவனியீர்ப்பு நிகழ்வு !!
சிங்கள பேரினவாத அரசிடம் சரணடைந்து மற்றும் கைது செய்யப்படட எமது போராளிகளின் மர்ம மரணங்களை கண்டித்தும்.. பன்னாட்டு விசாரணையையே கோரியும்.. ஜெர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக கவனியீர்ப்பு நிகழ்வு !!
மௌனமாக அரங்கேறிவரும் இனப்படுகொலை இதுவாகும்.. இதனை உணர்ந்து அணைத்து மக்களும் இந்த போராடடத்தில் பங்கெடுக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம் !!


பிரான்ஸ் இல் உணர்வுபூர்வமாக நடைபெற்ற செஞ்சோலை படுகொலை மற்றும் செங்கொடியின் நினைவேந்தல் !!
செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு பிரான்ஸ் சுதந்திர சதுக்கத்தில் உணர்வுபூர்வமாக இன்று நடைபெற்றது.
கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் வளாகத்தின் மீது இலங்கை வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 61 பாடசாலை மாணவிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
அவர்களை நினைவு கூரும் நினைவேந்தல் நிகழ்வு பிரான்ஸ் சுதந்திர சதுக்கத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக இன்று நடைபெற்றது.







யேர்மனியில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் !!
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், 61 அப்பாவி சிறுமிகள் கொல்லப்பட்டதோடு, 129 பேர் படுகாயமடைந்தனர்.குறித்த தாக்குதலில் காயமடைந்த பலர் தமது அவயவங்களை இழந்த நிலையில் வாழ்க்கையில் இன்றும் போராடிக்கொண்டிருக்கின்றனர்.
செஞ்சோலை படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளான நேற்றைய தினம் மாலை நான்கு மணிக்கு யேர்மனி தலைநகரம் பேர்லினில் கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது.சமநேரத்தில் Essen நகரத்திலும் மாவீரர் தூபி அமைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றது.இவ் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் கொல்லப்பட்ட செஞ்சோலை சிறுமிகளை நினைவில் ஏந்தி மலர் தூவி சுடர் ஏற்றி வணங்கினர்.
பேர்லின் நகரத்தில் பிரசித்திபெற்ற Brandenburger Tor மற்றும் யேர்மன் பாராளுமன்றம் ,அமெரிக்கா,பிரித்தானியா , பிரான்ஸ் நாடுகளின் தூதரகங்கள் அமைந்திருக்கும் மையத்தில் செஞ்சோலையில் கொல்லப்பட்ட சிறுமிகளை நினைவில் நிறுத்தி மாதிரி கல்லறைகள் வைக்கப்பட்டு , ஈன இரக்கமற்ற சிங்கள பேரினவாத அரசின் படுகொலையை வெளிப்படுத்தும் முகமாக பதாதையை ஏந்தியவாறு இளையோர்களால் ஆங்கில மற்றும் யேர்மன் மொழியில் துண்டுப்பிரசுரம் பல்லின மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
அத்தோடு செஞ்சோலை படுகொலையை பற்றிய சிறிய தொகுப்பு யேர்மன் மொழியில் ஒலிபரப்பப்பட்டது.











மறத்தமிழன் படையமைத்து தனிப்பெரும் கோட்டை
கட்டி சுதந்திர தீவிலே தமிழுக்கோர் அடையாளமாய் சீறும்
வேங்கைகளாக சினம் கொண்டு எழுந்த இளையோர்
கூட்டத்தோடு தானைத் தலைவன் பாதையமைக்க கிழக்கு
வெளித்தது ஈழம் எனும் தேசத்தில்.

இதமான தென்றல் காற்றும், குளிர் நீரும் அருவிகளும்
ஓடைகளும் புடை சூழ அழகிய வண்ணமாய் பனைமரக்
காடுகளும், வயல் வெளிகளும் கண் குளிர இளைப்பாறி போகும்
தேசமாய் தமிழ் விருந்தோடு வரவேற்றது எம் தேசம்.

முற்றத்து செவ்வரத்தையும், பந்தலில் கொடி மல்லிகையும்,
மாமரத்து பூவின் வாசமும், ஒருங்கே தாலாட்டும் முற்றத்தில்
வீட்டின் அறையை மறந்து.

வரி உடை தரித்து நிரை நிரையாய் புலி மறவர்களின் அணி வகுப்பும்,
தமிழீழ கானமும் ஒருங்கே சேர்ந்து ஊட்டும் இன விடுதலையின் உணர்வை.

கனவோடுதான் நிற்கிறோம் இன்று வரை நிஜத்தில் அழிந்தவர்களாக!

ஆக்கம் பவித்ரா நந்தகுமார்