விடுதலை அல்லது வீரச்சாவு என்ற
தாரக மந்திரத்தை உச்சரித்தபடி ஒவ்வொரு போராளிகளும் ,பொறுப்பாளர்களும், தளபதிகளும் அக்களத்தில் சாதனை படைத்தனர். பல நூற்றுக்கணக்கான இராணுவத்தைக் கொன்று குவித்தனர்.
இவ்வாறான வரலாற்று முற்றுகைச்சமரின் நினைவை முன்னைநாள் பெண்போராளியொருவர் வாக்குமூலமாக நடைபெற்ற முக்கிய விடயங்களை மையப்படுத்தி வெளிக்கொண்டுவந்துள்ளார். அந்த பதிவை உங்களுக்காக இணைக்கின்றோம்.


உண்ண உணவு இல்லை, குடிக்க தண்ணீர் கூட இல்லை அனைத்து உதவிகளும் தடை செய்யப்பட்ட நிலையில் தமக்கேற்பட்ட சோர்வைக் கூட மறந்த நிலையில் தம்மிடம் இருந்த வளங்களை வைத்து சாவின் உச்சகட்டத்தில் கூட தர்மயுத்தம் நடத்தினார்கள். அக்களத்தில் போரிட்ட ஒவ்வொரு வீரர்களுடைய அழிக்க முடியாத வரலாறுகளும் அவர்களுடைய செங்குருதிகளால் அந்த மண்ணில் பதியப்பட்டது.
ஆனந்தபுரம் மண்ணில் எமது தேசியத்தலைமையினை பாதுகாத்து மாவீரர்களான போராளிகள், பொறுப்பாளர்கள், தளபதிகள், பிரிகேடியர்களை நாங்கள் நினைவிற்கொள்கின்றோம்.இந்நிலையில் அன்று சிறீலங்காப்படையினரின் கொத்துக்குண்டு, நச்சுக்குண்டு, இரசாயன குண்டு மழைக்குள் நின்று களமாடி மாவீரர்களான வீரர்களையும் அன்றைய காலகட்டபகுதியில் உயிர்நீத்த பொதுமக்களையும் நினைவிற்கொண்டு இம்மாவீரர்களின் ஈகைக்களுக்கு மதிப்பளித்து தொடர்ந்தும் ஈழவிடுதலை பணியினை மேற்கொள்வோம்.

தலைவரின் மறு உருவமே எங்கள் தீபன் அண்ணா


தமழீழத்தின் தேவதையாக வந்து பிறந்தவள் எங்கள் துர்க்கா அக்கா…


பெண் தெய்வத்தின் மறு உருவமே எங்கள் விதுசா அக்கா…

 


தமிழீழத்தின் காவல் தெய்வம் எங்கள் கடாபி அண்ணா


போர்க்களங்களில் புயலாக நின்ற வீரன் பிரிகேடியர் மணிவண்ணன்


ஆனந்தபுர வரலாற்று சமர்களத்தில் இறுதி வரை போராடிய போராளிகள்


சித்திரை மாதம் , 05ம் திகதி மட்டும் நடந்த இந்தச் சமரில் இறுதிவரை எதிரியோடு சமரிட்டு காவியமாகிய 450க்கு மேற்பட்ட மாவீரர்களையும் இந்நாளில் நெஞ்சிருத்தி நினைவு கூறுகிறோம்.
ஆண்டுகள் பல ஆனாலும் அழியாது உங்கள் நினைவுகள் என்றென்றும் உங்கள் நினைவுடன்
“புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”
மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் மிகச்சிறப்பாக நடாத்தப்பட்டுள்ளது, இவ்விளையாட்டுவிழாவில் 600ற்கு மேற்ப்பட்ட போட்டியாளர்கள் பங்கெடுத்துள்ளனர்.
மாவீரர் நினைவாக நடாத்தப்படும் தமிழர் விளையாட்டு விழாவானது நோர்வே வாழ் தமிழ் மக்களை ஒன்றிணைப்பதோடு எங்கள் எதிர்கால சந்ததிகளின் விளையாட்டு திறனை அதிகரிப்பதோடு எதிர்காலத்தில் நோர்வேயின் தேசிய விளையாட்டுகளிலும் சர்வதேச விளையாட்டுக்களிலும் விளையாடி தமிழர்களுக்கு பெருமைசேர்ப்பதற்கு களமாகவும் அமைகின்றது.
இந்த விளையாட்டுக்களை முன்னெடுப்பவர்கள் நடத்துபவர்கள் மக்களின் நலன் சார்ந்து சமூகத்தின் வளர்ச்சி சார்ந்து நெடுங்காலமாக அளப்பரிய பணிகளை செய்து வருகின்றார்கள் இதற்கு மக்களின் பூரண ஆதரவு ஒவ்வொரு ஆண்டும் கிடைத்து வருகின்றது. இதனால்தான் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
இதேபோன்று இம்முறையும் முழு ஆதரவுடன் இளையவர்களின் புதிய திட்டமிடலுடன் மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது.
மாவீரர் நினைவாக நடைபெற்ற தமிழர் விளையாட்டுவிழாவில் எட்டுக்கு மேற்ப்பட்ட விளையாட்டுக்கழகங்கள் பங்குகொண்டு விளையாட்டு விழாவை சிறப்பித்துள்ளனர் இதேவேளை இவ்வாண்டு சிறார்பிரிவிலும் பெரியோர் பிரிவிலும் stovner தமிழ் விளையாட்டுக்கழத்தினர் வெற்றிக்கிண்ணத்தை தட்டிச்சென்றுள்ளார்கள்.











தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இம் மாதம் வீரச்சாவடைந்த மாவீர்களை நினைவுகூர்ந்து, மாதாந்த நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியாவின் ஒக்ஸ்பேட் மாநகரில் அமைக்கப்பட்டுள்ள தமிழீழ மாவீரர் நினைவாலையத்தில் உணர்வுபூர்வமாக (25-06-2016 சனிக்கிழம ) நடைபெற்றது.

இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான, தமிழீழ விடுதலைப் போராட்டம் மிக நீண்டது. அந்த உன்னத இலட்சிய பயணத்தில் சாதனைகளும், அற்புதங்களும், தியாகங்களும் கொண்டு ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டம் வியத்தகு வண்ணம் இன்று உலகின் முன் நிமிர்ந்து நிற்கிறது.
தமிழீழ விடுதலைப் போராட்டம் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களினதும், இரண்டு இலச்சம் வரையிலான கொல்லப்பட்ட மக்களதும் உன்னதமான குருதியால் எழுதப்பட்டிருக்கிறது.
தமிழீழ மண்ணின் விடுதலைக்கு காப்பரணாக நின்று களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களையும், விடுதலைப் போராட்டத்திற்கு தோளோடு தோள் நின்று பல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கி மண்மீட்புப் போரில் சொல்லொனா இன்னல்களையும், வேதனைகளையும், வடுக்களையும் சுமந்து போரில் சாவடைந்த மக்களையும் நினைவுகொள்ள வேண்டியது ஒவ்வொரு தமிழனதும் கடமையாகிறது.
பிரித்தானியாவில் உருவாக்கம் பெற்று, மக்களின் ஏகோபித்த ஆதரவோடு வளர்ந்துவரும் உலகத் தமிழர் வரலாற்று மையம் ஒவ்வொரு மாதமும், மண்மீட்புப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களையும், அம் மாதத்தில் போரில் சாவடைந்த மக்களையும் நினைவுகொள்ளும் வகையில் மாதாந்த வணக்க நிகழ்வை ஒழுங்கமைந்து உலகமே உறைந்து போன மிகப்பெரும் இனப்படுகொலையை சந்தித்த தமிழரின் துயரம் சுமந்த மாதமான “மே” மாதம் முதல் நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அதற்கமைவாக (யூன்) ஆனி மாதத்திற்குரிய நினைவு வணக்க நிகழ்வு 25-06-2016 சனிக்கிழமை  மாலை 5:30 மணிக்கு ஒக்ஸ்பேட் பகுதியில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் உணர்வுபூர்வமான முறையில் நடைபெற்றது (மாவீரர் நினைவாலையம்) (World Tamils Historical Society, OX17 3NX)
இன்று நடைபெற்ற வணக்க நிகழ்வில் இம் மாதத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களதும், போரில் கொல்லப்பட்ட மக்களதும் குடும்பத்தினர், மற்றும் உறவினர்கள் அவர்களின் திருவுருவப்படங்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி, மலர் தூவி வணக்கம் செலுத்தி நினைவுகூர்ந்தனர்.
இன்று நடைபெற்ற நினைவு வணக்க நிகழ்வு பொதுச் சுடர் ஏற்றவுடன் ஆரம்பமாகியது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதன்மை போராளிகளில் ஒருவரும், தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் நெருங்கிய நண்பருமான திரு.சத்தியசீலன் அவர்கள் தமிழீழ தேசியக் கொடியை ஏற்றிவைத்திருந்தார். பிரித்தானிய தமிழர் பேரவையின் நிறுவுணர்களில் ஒருவரும், பிரித்தானிய தொழில்க் கட்சி உறுப்பினருமான சென்.கந்தையா அவர்கள் பிரித்தானிய தேசியக் கொடியை ஏற்றிவைத்திருந்தார்.
நிகழ்வில் மாவீரர்களுக்கான நினைவுரையினை போராளி திரு. வெற்றி அவர்கள் நிகழ்த்தியிருந்தார். மாவீரர் நினைவுசுமந்த பாடல்களும் இளையோர்களால் பாடப்பட்டது உணர்வுபூர்வமாக அமைந்தது.
மாதாந்த நினைவு வணக்க நிகழ்வு எதிர்வரும் மாதங்களில் இறுதி ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது, மாதாந்தம் நடைபெறவுள்ள மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும், உணர்வோடும், உரிமையோடும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இறுதியாக உறுதி ஏற்புடன், தேசியக் கொடிகள் இறக்கப்பட்டு நிகழ்வு நிறைவுபெற்றது.
நன்றி.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.


ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயிர்ப்புடன் இருக்க தங்களையே அர்ப்பணித்து விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நினைவுகள் சுமந்த எழுச்சிப் பாடற்போட்டி நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு!

அடிமேல் அடிபட்டும்
அடிமையாய் வா‌ழ்வோ‌மோ....?
ஈழத்தமிழா....
கொடிய
அரக்கன்கொள்கைமாறுமோ....?.சொல்நேசத்தமிழா.....

அடித்திட சிங்களம்
அடங்கிட எம்மினம்
விழித்தலை தந்தது
தலைவனின் 
தரிசனம்
 அதை நீ மறந்தாயோ...சொல்...?
நாம்  அடி கொடுத்திட கொடுத்திட
தன் நிலைவிட்டு ஓடியே
சிங்களம் சென்றதை மறந்தா
யோ..?
அங்கு எம்மவர் செத்துத்தான் மாய்வேன்
என்று பயந்தாரோ சொல்....?


முள்ளியில் கொள்ளியை வைத்ததாய்
எண்ணி நீ
தாய் அவள் நினைவதை
மறந்தாயோ..--?
அண்ணன் சொல்லியே நின்ற
தாரக மந்திரம் தன்னை நீ என்றுமே மறந்தாயோ...?
வீசிடும்காற்றில் சுதந்திரம் இல்லை
 வீணர்கள் வார்த்தை நிரந்திரம் இல்லை
சாவதுமேலே
சத்தியம்,கால்களை செய்த--வீரர் இலட்சியம் மறந்திட்டல்
நீ..தமிழ் இனமில்லை
ஈழ...சத்தியத்தாயின் பிள்ளையு
மில்லை...


கொட்டிய குருதியில்
கால்களைபதிக்கையில்- அங்கே
கொதித்திடவில்லையா உன் குருதி
சத்திய வேள்வியில் சாய்திட்டோர்
எண்ணமே
 தாெட்டிடவில்லையா உன் நினைவில்-?
முள்ளியில் கொள்ளியில்
மூடிந்ததா எம்கொள்கை..?
மூடனே நீ எண்ணிப்பார்
அண்ணன் சொல்லையே நீ
மறப்பாயோ..?
ஆதிக்க வெறியரின் செயல் மறந்தாயோ  ?
இலட்சியம் மறந்திட்டல்
நீ..தமிழ் இனமில்லை
ஈழ...சத்தியத்தாயின் பிள்ளையு
மில்லை...

 
 ஆக்கம்  இசைக்கவிஞனின் எஸ். தேவராசா  



இலட்சியம் எம் பாதை
பகையே வழி விடு
கரும்படை நாம்
கருத்தரித்துள்ளோம்
உனை அழிக்க
அக்கினியில் நடை போட்டு
வெந்தனல் உடல்
வடித்து
காவியத்தில் முகமறியா
பெயர் எழுதி
அக்கினி சிறகாய்
தலைவனின் குழந்தைகள்
வந்துள்ளோம்
பகையே தூர ஒடி விடு
இரத்தம் உறைய
உடல் கனக்க
மரணத்தை எழுதி
வைத்தே வந்துள்ளோம்
பயம் எமக்கல்ல
உமக்கடா கொடு இனமே
செங்கடலும் எமதடா
அழகிய ஈழத்தீவும் எமதடா
வந்தோட்டி நீயடா
நிலையான இனம் எமதடா
பாசறையும்
பகர்கிறது உறுதி மொழி
மாவீரனின் கனவும்
மலர்கிறது எமது
களத்தில்
போலியாய் சத்தமிடும்
பீரங்கிகள் நமல்ல
உறுமி விரட்டி விடும்
புலியின் வடிவமே நாங்கள்
விரித்து விட்டோம்
அக்கினி சிறகுகளை
மடிந்து போ
பகையே நீ

ஆக்கம் பவித்ரா நந்தகுமார்

பொன். சிவகுமாரன்.
ஜூன் 5 தாயக விடுதலை போராட்டத்தில் முதன்முதல் நஞ்சருந்தி வீரகாவியமாகி விடுதலை போராட்ட வளர்ச்சிக்கு வித்திட்ட மாவீரன் நினைவு நாள் இவன் யார்? ஈழ விடுதலை போராட்டத்துக்கும் இந்த புனிதனுக்கும் என்ன தொடர்பு? இதை பற்றி எழுத வேண்டும் என்ற தேவையில்லாது தமிழ் மனங்களில் ஒன்றிக் கிடக்கும் உன்னத நாமம்
தமிழ் மாணவர்களது கனவுகளில் சிங்களம் கை வைத்த அந்த நேரம் கல்வி தரப்படுத்தல் சட்டம் என்ற சட்டங்கள் மூலம் எமது கல்வி உரிமைகள் இரும்பு கரங்கள் கொண்டு நசுக்கப்பட்ட நேரத்தில் 1967,1971 காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட தமிழர்களுக்கு முற்றிலும் பாதகமாகவும் சிங்களத்துக்கு மிகவும் சாதகமானதாகவும் அமைந்த கல்வி சீர்திருத்த சட்டத்தின் அமுலாக்கத்துக்கு எதிராக மாணவர்கள் சார்பாக ஓங்கி ஒலித்த குரல்களில் முக்கிய குரலுக்கு சொந்தமானவன். பொன்.சிவகுமாரன்
"ஏன் அம்மா அக்கா இப்படி கண்ணீர் வடித்த படி இங்கு வர நேர்ந்தது? சிங்களவர்கள் அடித்தால் இப்படி அடிவாங்கிக் கொண்டு நாம் ஓடி வரவேண்டுமா? இது வெட்கம் இல்லையா? நாமும் திருப்பி அடித்தால் என்ன?? "இது அவரது எட்டாவது வயதில் பருத்தித்துறை இறங்குதளத்தில் சிங்களத்தால் கொழும்பில் இருந்து அடித்து துரத்தப்பட்டு வந்திறங்கிய சகோதரியின் அவலத்தை பார்த்து தாயிடம் கேட்ட வினா. இப்படித்தான் சிவகுமாரனின் மனதில் போராட்ட சிந்தனைகள் முளைவிட தொடங்கின.
ஒரு மாணவனாக விடுதலை வீரனாக ஈழத்தமிழர் போராட்டத்தில் 17 வயதான சிவகுமாரன் 1974-ம் ஆண்டு ஜுன் 5-ந்தேதி நஞ்சருந்தி சாவடைந்தார் . ஈழப் போராட்டத்தில் நஞ்சு உண்டு உயிர் துறந்த முதல் போராளி இவர்தான். தனது சாவின் மூலம் அன்றைய உலகிற்கும் சிங்களத்துக்கும் பல உண்மைகளை உரக்க கூறி சென்றவன் இலங்கையின் இளம் தமிழர் தலைமுறையை – தமிழ் சமூகத்தை ஒரு உலுக்கு உலுக்கிய சிங்களத்துக்கு ஈழத்தமிழ் இளைஞர்களின் வீரத்தை பிரதியிட்டு காட்டியவன்.
சிவகுமாரன், 1957-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி பிறந்தார். இவருடைய தந்தை பொன்னுசாமி, தமிழ் பற்று மிகுந்தவர். தன் குழந்தைகளை சிறப்பான முறையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் அதீத கவனமும் சிரத்தையும் கொண்டவர் அதே போல் தான் சிவகுமாரனும் அவரது எண்ணங்களுக்கேற்ப வளர்ச்சிப்பாதையில் பயணித்து கொண்டிருந்தான் தாய் அன்னலட்சுமி. சிவகுமாரன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார்.
சிறு வயதில் இருந்து தந்தையின் அரசியல் கதைகளை கேட்டு கேட்டு வளர்ந்த சிவகுமாரன் இளமையில் இருந்து விடுதலை வேட்கை உடையவராகத் திகழ்ந்து, தமிழுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்று எண்ணியே வளர்ந்து வந்தான். நாட்டில் நடந்து கொண்டிருந்த வன்முறைகளும் தமிழர்க்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளும் அவனது மனதில் ஆறாத உறுதியை உருவாக்கி இருந்தது தமிழரின் உரிமைகளை இல்லது செய்பவர்களுக்கு எதிரான குரல்களை எழுப்ப தொடங்கினார்.
தனது சாத்வீக வடிவ போராட்ட முன்னெடுப்புக்களோடு ஆயுத வடிவ போராட்டத்தை கல்வித் தரப்படுத்தலை அமுல்படுத்திய சிறிமா அரசின் துணை அமைச்சராகவிருந்த சோமவீர சந்திரசிறியை தாக்கி அழிக்க முனைந்த நிகழ்வோடு ஆரம்பிக்கிறார். அமைச்சர் பயணம் செய்த வாகனத்திற்கு நேரக்கணிய வெடி வைக்கப்பட்டிருந்த போதும் அமைச்சர் உயிர்தப்பி இருந்தாலும் ஆயுதப் போராட்டத்திக்கான அடித்தளம் விதைக்கப்பட்டதை சிங்களம் உணரத்்தொடங்கி இருந்தது. அதனால் அதை தடுக்க சிவகுமாரன் கைதாகி சிறையில் கடுமையான சித்திரவதைகளுடன் தனது போராட்டத்துக்கான உறுதியை மெருகேற்றி கொள்கிறார்.
சிறையில் இருந்து வெளிவந்திருந்த சில நாட்களில் அடுத்த இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.
அப்போதைய யாழ் மேயராக பொறுப்பெடுத்து சிறீமா அரசின் துரோகத்தனத்துக்கும் தமிழர்களின் உரிமைகளை பறித்தெடுப்பதற்கும் வழிசெய்திருந்த துரையப்பாவை சாகடிப்பதே தற்போதைய நிலையில் தமிழர் உரிமைகளை பாதுகாப்பதற்கான வழியாக இருக்கும் என்பதை உணர்ந்த சிவகுமாரன் துரையப்பாவின் வாகனத்திற்கு கைக்குண்டை வீசி தாக்குதலை மேற்கொள்கின்றார். அந்த வாகனம் வெடித்து சிதறுகிறது ஆனாலும் அந்த வாகனத்தில் துரையப்பா இல்லாத காரணத்தால் உயிர் பிழைத்து கொள்கிறார்.
இதன் பின் இந்த தாக்குதலுக்கான காரணகர்த்தா யார் என்பதை அப்போதைய காவல்துறை கண்டுபிடித்து சிவகுமாரனை சிறையில் அடைத்தது. இருப்பினும் உறுதி செய்ய முடியாத நிலையிலையே அந்த தாக்குதல் இருந்த காரணத்தால் சிறு காலத்திலியே வெளிவந்த சிவகுமாரன் தனது எதிர்ப்பு நடவடிக்கைகளை மீண்டும் முழுவீச்சுடன் தொடங்கினார்.
இந்த கைது நடவடிக்கையின் பின்பே தனது கழுத்தில் நஞ்சை கட்டி கொண்டு திரிய தொடங்கினார் ஏனெனில் அவர் காவல்துறை கண்காணிப்பில் இருக்கும் போது கடுமையான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு இருந்தார். வதைகளும் மிரட்டல்களும் ஒரு சிறந்த போராளியை ஒன்றும் செய்துவிடாது என்பதை உணர்ந்தவன் தனது நடவடிக்கைகளில் தீவிரம் காட்டினான். எந்த சந்தர்ப்பத்திலும் தான் உயிருடன் பிடிபடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த சிவகுமாரன் கூட இருந்தவர்களிடம் "இது எனக்கு மட்டும்தான் உங்களுக்குத் தேவையில்லை, தற்செயலாக நீங்கள் பிடிபட நேர்ந்தால் முழு குற்றத்தையும் என் மீது சுமத்தி விடுங்கள். என்று சிவகுமாரன் கட்டளையிட்டதும் கூட இருந்தவர்களுக்கு அவர்மீதும் போராட்டம் மீதும் உறுதியான நம்பிக்கையை விதைத்திருந்தது.
1974 யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத்தமிழர் மாநாட்டுக்கான ஏற்பாட்டாளர்களில் முக்கியமானவராக செயற்பட்டு கொண்டிருந்தார், அந்த மாநாட்டில் அமைச்சர் குமாரசூரியர் மற்றும் துரையப்பா ஆகியோரது வழிகாட்டலில் காவல்துறையின் குறுக்கீடுகள் இருந்த போதும் மிகசிறப்பாக மாநாடு நடந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் திடீர் என்று உட்புகுந்த காவலர்களது துப்பாக்கி வெட்டுக்களுக்கு பலியான 9 ஈழ தமிழர்களது சாவுக்கும் ஒரு பதிலை தான் கொடுக்க வேண்டும் என்று உறுதி கொண்டவர் துறையப்பாவையும் குமாரசூரியரையும் காவல்துறை அதிகாரி சந்திரசேகரவையும் சாகடிப்பதற்கான திட்டங்களை தீட்ட தொடங்கி இருந்தார்,சந்திரசேகரா, யாழ்ப்பாணம் கைலாசப்பிள்ளையார் கோவிலுக்கு அருகே குடியிருந்தார். அந்தக் கோவிலைக் கடந்துதான் அவர் பணிக்கு செல்வது வழக்கம். இதைக் கவனித்த சிவகுமாரன், நண்பர்களுடன் கோவில் அருகே காத்திருந்தார். வாகனத்தை ஒட்டி கொண்டு வந்த சந்திரசேகரவை இடை மறித்து கதவை திறந்து அவரை நோக்கி துப்பாக்கியை இயக்கினார் அது இயங்க மறுத்தது அதனால் கத்தியை பயன்படுத்தி சாகடிக்க .முயன்றார் ஆனாலும் அவருடன் கூடி வந்த நண்பர்களது உதவி கிடைக்காது போகவே தன்னந்தனியாக அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை இதனால் தப்பி ஓடுவதை தவிர வேறு எதுவும் வழி இல்லை என்று ஓடத்தொடங்கிய சிவகுமாரன் இடையில் கண்ட துரையப்பாவையும் நோக்கி துப்பாக்கியால் சுட்டார் அப்போதும் துப்பாக்கி இயங்க மறுத்தது. அன்று துப்பாக்கி இயங்குநிலை தடைப்பட்டதால் இரண்டு முக்கிய நபர்கள் உயிர் தப்பிய சந்தர்ப்பம் நடந்தது.
இந்த சகடிப்பு முயற்சியை தொடர்ந்து சிங்கள அரசு பதறதொடங்கியது. உடனடியாக ஒரு அறிவிப்பு ஒன்றை சிங்கள அரசு வெளியிட்டது. “காட்டி தருபவருக்கு 100000 ரூபாய்கள்” சன்மானம். இந்த அறிவிப்புக்கு பின் பணத்துக்கு ஆசைப்பட்ட சில தமிழர்கள் சிவகுமாரனை காட்டி கொடுக்க முனைந்தனர், ஆண்டாண்டு காலமாக தமிழினத்துக்காக போராடிவரும் போராளிகளை துரோகத்தனத்துக்கு பலியாக்கும் இந்த தமிழினம் அன்றும் அதே தப்பை செய்ய முனைந்தது. இதனால் சிவகுமாரனால் வெளிப்படையாக எங்கும் நடமாட முடியவில்லை. இதனால் மறைவு வாழ்க்கை வாழவேண்டி இருந்தது. இதற்காக இந்தியா சென்றால் நல்லது என்ற நண்பர்கள் கருத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான பணத்தை திரட்ட முடியவில்லை கேட்பவர்கள் எல்லோரும் கைவிரித்தனர். மிக நெருக்கமாக இவர்களுக்கான பல உதவிகள் புரிந்த உறவுகள் கூட கைவிரித்தன.
இதற்கான மாற்று ஏற்பாடு திட்டமிடப்படுகிறது.
பணத்தை ஒழுங்கு செய்வதற்காக நண்பர்களுடன் கோப்பாயில் இருந்த அரச வங்கி ஒன்றை களவாடலாம் என்று தீர்மானித்து வாடகை வாகனம் ஒன்றில் புறப்பட்டனர் வங்கிக்குள் சென்று பணத்தை எடுக்கும் முன் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர் எமது தமிழின துரோகிகள். இதை அறிந்த இவர்கள் தப்பி ஓட வாகனத்துக்கு வந்த போது அங்கும் துரோகத்தனம் மீண்டும் அரங்கேறி இருந்தது. காருடன் வந்திருந்த சாரதி வண்டி சாவியுடன் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடி இருந்தார், இதனால் தப்ப வழி அற்று நண்பர்கள் வெவ்வேறு திசைகளில் ஓடினர்.
இருப்பினும் காவல்துறை முற்றுகையை உடைத்து வெளி செல்ல முடியாத அளவுக்கு காலில் காயமடைந்திருந்த சிவகுமாரன் புகையிலை செடிகளுக்கு நடுவிலே தந்து தான் எப்போதும் வைத்திருக்கும் நஞ்சை அருந்தி வீர காவியம் ஆகின்றார்.
என் உடலில் உயிர் இருக்கும் ஒவ்வொரு சொட்டு இரத்தமும் இந்த தமிழ் மண்ணிற்கே சொந்தமாகும் என்று இவர் தாயிடம் அடிக்கடி கூறுவராம் ?அம்மா உள்ள உயிர் ஒன்றுதான். அது போகப் போவதும் ஒரு தடவைதான். அப்படிப் போகும் இந்த உயிரை. ஒரு புனித இலட்சியத்திற்காக கொடுப்பதில் என்ன தவறு? சாவை கண்டு அஞ்சாத வீரன் தன்னை பெற்றவளிடமே சாவுக்கும் தனக்குமான இடைவெளியை கூறியதால் தாய் மனம் வருந்தினாலும் மகன் சாக்கூடாது என்ற வேண்டுதல்கள் வலுப்பெற்றது.
இது தான் சிவகுமாரன் என்று உணர்ந்துகொள்ள சிங்களத்தாலும் எங்கள் மக்களாலும் நீண்ட காலம் எடுக்கவில்லை. அவன் தன் கடமையை இளையவர்களிடம் விட்டு சென்ற போது தமிழினமே உறைந்து கிடக்காது விழித்துக்கொண்டது.
தமிழனது துரோகத்தனத்தின் வெளிப்பாடாக ஈழ விடுதலைக்காக பிள்ளை ஒருவன் நஞ்சருந்தி முதன் முதலாக வீரச்சாவடைய அந்த வீரவித்துடல் மீது தமது குருதியால் திலகமிட்டு சபதம் எடுக்கின்றார்கள் பல இளைஞர்கள். “ஈழ உரிமை மீட்போம் உன் கனவை நனவாக்குவோம்” என்று அந்த இளைஞர்களில் ஒருவராக தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரனும் தேத்தின் விடியல் தேட தொடங்கினார்.
கவிமகன்.இ
தினம் உன் அதிகாலையின்
எழுகையில் ஒரு கணம் உன்
மனம் விரித்து எங்கள் உயிர்
மண்ணையும் மக்களையும்
நினைந்துருகு! கசிந்து கண்ணில்
நீர் சொரியும் வரை கலங்கு.!

விலங்கு போல் ஏதும்
விளங்காமலே திறந்த
வெளிச் சிறையில் சிதையும்
அவர் வாழ்வுக்கு வழி சமை.
வலி சூழ்ந்த வாழ்வில்
வரைந்திட முடியாத
வாக்கியங்களின் கண்ணீர்
தொகுப்பு தோப்பாகும்.

அழுகையில் ஒரு துளி
துடைத்து நிமிர்ந்திட
ஏது வழியெனத் தேடு.
கூடு உன் நட்புக்குள் நாடு.
பாடு அவர்கள் பாடுகளை
நம்பிக்கை வை! நம்பிக்கை கொடு!

சிறு துளியை பெரு வெள்ளமாக்கு.
எங்கள் நிலப்பரப்பினை
தக்க வைக்கும் உன்னதர்களை
தலை நிமிர வை.! உண்மைக்கு
உரமிடு.! கரம் கொடு!. தொண்டனாய்
நீ மாறு.! மாற்றங்களை உண்டாக்கு.
ஏற்றங்களுக்கு வழி சமை
சாமி தொழுகைக்கு மேலான
பணியிது! பயன் படுத்து.!

சுற்றங்களை சுகமாக்கு
பெற்றவர் இல்லாப் பிள்ளைக்கு
கல்வி கற்றிட கை கொடு
ஆளுக்கொரு பிள்ளையை
பாரமெடு!. தர்மம் உன்
தலை காக்கும்!. ஆடிக்
கலவரத்தை முன் நிறுத்து.!

நினைவுகள் கருகிடாதிருக்க
உயிர் கொடு! உண்மையாய்
நீ எழு..!ஊமையாய் இருந்திடாதே.!
 
 ஆக்கம்  கவிஞர் எழுத்தாளர் தயாநிதி



 
வரித் தொப்பி
செம்படை வீரர் தரித்த
வரியும்
தமிழன் ஏற்றிய
புலியின் மகுடமும்
மங்கா புகழ் பாடும்
தரணியில்
தமிழன் உள்ள வரை
சல்லடை போட்டு
நீ குண்டுகளால் துளைத்த
போதும்
சங்கடம் இன்றி
ஆயுதங்கள் தரித்திடுவர்
வரிப்புலிகள்
உறுமிடும் சிறுத்தை
போல்
வரியுடை கண்டால்
பகையும் கிலி கொள்ளும்
வெகு தூரத்திலும்
கழுத்தில் நஞ்சணிந்து
வீர தலைக்கவசம்
அணிந்து
விரைந்திடும்
புலி வேங்கைகளின்
காலடியில் நீ
மண்ணாய் இருக்க
தகுதியற்றவன்
கோழைகள் போல
பல உலக கோழைகள்
சேர்ந்து அழித்த
மமதையில்
நீயிரு
உன்னையறியாமல்
உன் கதை முடிக்க
பதுங்கி இருக்கிறது
புலிப்படை
ஈழம் விரியும்
உன் தேசம் அடிமை
சாசனம் ஆகும்
சிங்கள தேசம்
அடையாளம் அற்றே
போகும்
இயற்கை உனை அழிக்கும்
பகை முடிப்போம்
விரைவில்
ஆக்கம் பவித்ரா நந்தகுமார்
தமிழ் மக்களுக்கு வரவேண்டிய, வரக்கூடிய
பல திட்ட அமைவுகளையும் சூறையாட நடவடிக்கைகள் திரை மறைவுகளில் நடக்கின்றன” என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடுமையாக எச்சரித்துள்ளார். “கடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்கு நான் சென்றதால்தான் வட மாகாணம் சம்பந்தமாக அங்கு ஒரு சதி நடைபெற இருந்தது என்பது தெரிந்தது. நான் சென்றதால் சதி அம்பலமானது” எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
‘உயர்த்தும் கரங்கள்’ செயற்திட்டத்தினூடாக ‘ராஜா பிளாசா’ மாதிரிக் கிராமம் 15 வீட்டுத்திட்ட திறப்புவிழா இன்று வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் மஸ்கன் வீதி, புத்தூர் தெற்கு, நவக்கிரியில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்தார்.
முதலமைச்சர் இங்கு தனது உரையில் தெரிவித்திருப்பதாவது:
“இன்று ஒரு இனிய நாள். பதினான்கு குடும்பங்களைச் சேர்ந்த குடும்ப அங்கத்தவர்களின் வாழ்வில் அதிஸ்டம் அவர்களை அணைத்துக் கொள்ளும் நாள். அழகிய இந்த வீடுகள் அவர்களுக்குக் கொடையாக வழங்கப்பட்டிருக்கின்ற நாள். இந்த நல்ல கைங்கரியத்தில் இணைந்து கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். கோண்டாவில் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அற்புத நர்த்தன விநாயகர் சனசமூக நிலையம் மற்றும் குமரன் விளையாட்டுக்கழகம் ஆகியன இணைந்து கொண்டு ‘வறுமையை ஒழிப்போம் கல்வியைக் கொடுப்போம்’ என்ற தொனிப் பொருளில் 2014ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட “உயர்த்தும் கரங்கள்” என்ற செயற்திட்டத்தின் ஓர் அங்கமாகவே இன்றைய இந்த வீடுகள் அமைக்குந் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வறுமையை ஒழிப்போம் என்ற இச் செயற்திட்டத்தினூடாக பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் பயன் பெறுவது மட்டுமன்றி இப் பிரதேசத்தின் நலன் விரும்பிகளுக்கான உதவிகள், மற்றும் திருமண நிகழ்வுகளுக்கான உதவிகள், முதியோர் இல்லங்களுக்கான விசே~ உணவுகள், வெள்ள நிவாரணம் என இன்னோரன்ன பல பணிகளை இச் சனசமூக நிலையத்தினர் நிறைவேற்றி வருகின்றமை பாராட்டப்பட வேண்டியவை.
இவ்வாறான சமூகப் பணிகள் அனைத்திற்கும் மகுடம் சூட்டியது போன்று அமையும் இந்த 15 வீடுகள் அமைக்கின்ற பணிக்கு கோண்டாவில் பிரதேசத்தைச் சேர்ந்த கொடையாளர் இராசையா குவேந்திரநாதன் அவர்களே முழுமையான நிதிப் பங்களிப்பை வழங்கியுள்ளார். இவ் அழகிய வீடுகளை உருவாக்கி இச் சனசமூக நிலையத் தெரிவினூடாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவற்றை வழங்கியிருப்பது போற்றப்பட வேண்டியதொன்று. சுமார் 3 ½ கோடி ரூபா செலவில் இந்த வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என அறிகின்றேன். அதாவது ஒவ்வொரு வீடும் 23 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. இவற்றை அமைத்துக் கொடுத்த பெரு வள்ளல் இராசையா குவேந்திரநாதன் அவர்கள் தொடர்பாக அறிய முற்பட்ட வேளையில் அவரின் அயரா உழைப்;பு, பரோபகார சிந்தை, தூர நோக்கு ஆகிய அவரின் பல நற்பண்புகள் எமக்குத் தெரிய வந்தன.
முன்னேற்றகரமான திட்டங்கள்
குவேந்திரநாதன் அவர்கள் இந்த வீட்டுத்திட்டம் மட்டுமல்ல இன்னும் பல முன்னேற்றகரமான பொதுப் பணிகளுக்கு உதவி வந்துள்ளார். கோண்டாவில் உப தபால் அலுவலகத்திற்கு சுமார் 60 இலட்சம் பெறுமதியான ஒரு அழகிய கட்டடத்தை அமைத்துக் கொடுத்துள்ளார். யாழ் கோண்டாவில் ராமகிரு~;ண மகா வித்தியாலயத்திற்கு 120 இலட்சம் ரூபா செலவில் 4 பரப்புக் காணியையும் அதனுள் 2 மாடிகளைக் கொண்ட 4 வகுப்பறை கட்டடத்தையுந் தமது பெற்றோரின் ஞாபகார்த்தமாக அன்பளிப்புச் செய்துள்ளார். 100 இலட்சம் ரூபா செலவில் கோண்டாவில் சனசமூக நிலைய முன்பள்ளியை விருத்தி செய்யும் நோக்குடன் 2 ½ பரப்பு காணி, முன்பள்ளி, பகல் நேர குழந்தைகள் காப்பகம் ஆகியவற்றை அமைத்துக் கொடுத்துள்ளார். இவ்வாறான பணிகளில் ஈடுபட்டிருப்பது எமக்கு மட்டுமல்ல வடபகுதியைச் சார்ந்த அனைத்து மக்களையும் மகிழ்வூட்டி வருகின்றன.
இவ்வளவு தொகைப் பணத்தை எவ்வாறு செலவழிக்க முன்வந்தார் என அறிய வந்த போது கட்டடத் தொழிலில் ஒரு ஒப்பந்தக்காரராக, புதிய வீடுகளை அமைத்து விற்பனை செய்பவராகத் தமது தொழிலை ஆரம்பித்த குவேந்திரநாதன் மூன்று பிள்ளைகளின் தந்தையாராக இருப்பதையும் முதலாவது மகன் கொழும்பில் டாக்டராகவும், இரண்டாவது மகள் விவசாயப் பீட விரிவுரையாளராகவும், மூன்றாவது மகள் மக்கள் வங்கி உத்தியோகத்தராகவும் இருப்பது தெரியவந்தது. பிள்ளைகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுத்த பின்னர் இனி அவர்கள் பங்கிற்கு அவர்கள் உழைத்துக் கொள்ள வேண்டும் என்ற மனப்பாங்குடன் தனக்கு இப்போது கிடைக்கின்ற வருமானம் முழுவதையும் பொதுப் பணிகளுக்கு செலவிடுவதாக அவர் தீர்மானம் எடுத்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது. அதற்கு அவர் பிள்ளைகளும் மனமுவந்து பச்சைக்கொடி காட்டியுள்ளார்கள். தந்தையாரின் அறப்பணிகளுக்குத் தாமும் இணைந்து பணியாற்றுவது மட்டுமன்றி புதிய புதிய அறப்பணிகளில் அவர்களும் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்களின் குடும்பமே பரோபகார சிந்தனை உடையவர்கள் என்பதை இவை எடுத்துக்காட்டுகின்றன.
சில தினங்களுக்கு முன்னர் நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நடைபெற்ற ஒரு நடன நிகழ்வில் உரையாற்றும் போது ஆறு திருமுருகன் அவர்கள் ஆற்றிய உரை ஒன்றைப் பற்றி அறிய நேர்ந்தது. அதில் அவர் யாழ்ப்பாணத்தவரும் சிங்கப்பூரில் வசித்தவருமாகிய எஸ்ரேட் கார்த்திகேசு அவர்களின் அறக்கொடை நிதியில் சுமார் 90 மில்லியன் ரூபா பணம் வடபகுதியில் உள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் நூல் நிலையத்தை விருத்தி செய்வதற்கும் நுண்கலைப் பீடத்தை விருத்தி செய்வதற்கும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தத் தொகையில் இருந்து இதுவரை 25 ஆயிரம் ரூபா மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளதாகவுந் தெரிவித்திருந்தார்.

முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை
அதாவது நொந்து போன எம்மக்களைத் தாங்குவதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல பரோபகாரிகள் தயாராக இருக்கின்ற போதும் அவர்களின் பரோபகார சிந்தனைகள் தாராள மனப்பான்மைகள் ஆகியவற்றை நாம் முறையாக ஒழுங்கு செய்ய முடியாது முழுமையாகப் பயன்படுத்த முடியாது இருக்கின்றோம். இந்த நிலை மாற வேண்டும். கொடையாளர்களையும் வறுமையில் வாடும் எமது பயனாளிகளையும் ஒன்றிணைக்க நாம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதனால்த்தான் இன்று பல பிரச்சனைகள் மத்தியிலும் நான் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன். கொடுக்கும் மனமுள்ளவர்களை மனங்கோணாமல் நாம் வாழ வழி அமைக்க வேண்டும். எங்கள் அன்பும் பாராட்டும் அவர்களுக்கு என்றும் இருக்கும் என்று இத்தருணத்தில் கூறி வைக்கின்றேன்.
முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிப்பதற்கு தயார் செய்யப்பட்ட நியதிச் சட்டம் நிறைவுறும் நிலையில் உள்ளது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டால் வெளிநாட்டில் இருந்தும் உள்நாட்டில் இருந்தும் நிதி வழங்குபவர்கள் இந்த நிதியத்தினூடாகத் தாம் விரும்பியவாறு விரும்பிய வேலைத்திட்டங்களை நிறைவேற்ற முடியும். ஆளுநர் குழாமொன்றே அந்நிதியத்தைப் பரிபாலிக்கும். உரிய கணக்காய்வு போன்றவை காலத்திற்குக் காலம் நடைபெறும். அரசாங்க அனுசரணையுடனேயே அதை வழிநடத்த எண்ணியுள்ளோம்.
இந்த புதிய வீடுகள் அமைத்து அதற்கான பயனாளிகளை தெரிவு செய்யும் நடவடிக்கைகளின் போது பயனாளிகள் தெரிவில் கோண்டாவில் பகுதியில் இருந்து 4 பயனாளிகளைத் தெரிவு செய்வதாகத் தீர்மானிக்கப்பட்டதாகவும், ஆனால் எதிர்பார்த்த அந்தப் பயனாளிகளில் ஓரிருவர் இந்த இடம் தூரம், வசதிகள் போதுமானதாக இல்லை என்ற காரணங்களைக் காட்டி ஏற்கவில்லை எனத் தெரிய வந்துள்ளது. இவ்வாறானவர்களுக்கு 23 இலட்சம் ரூபா சிலவேளைகளில் சில்லறைக்காசாக இருக்கலாம். ஆனால் 23 ரூபாவிற்கு வழியில்லாத பலர் வன்னிப் பகுதியில் ஒரு நேர உணவுக்கே வழியின்றி, இருக்க இடமின்றி, தகரக் கொட்டில்களிலும், ஓலைக் கீற்றுகளிலும,; மலசலகூட வசதிகள், குடி தண்ணீர் வசதிகள் ஆகிய எந்தவித வசதிகளும் இன்றி வாடுகின்றார்கள். சிலர் பல்வேறு பாதிப்புக்களுடன் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு, உடல் உறுப்புக்களை இழந்து, கண்பார்வையற்று தினமும் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அம் மக்களுக்கு இவ்வாறான உதவிகள் கிடைக்கப் பெறின் அவர்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றியுடையவர்களாக இருப்பார்கள் என்று எண்ணுகின்றேன்.

வன்னியில் தொடரும் அவலம்
அன்பான கொடையாளர் குவேந்திரநாதன் அவர்களே! பல தேவைகளையுடைய மக்கள் வன்னிப் பகுதியில் திண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். உங்களுக்கு இவ்வாறான அறக்கொடைகளை மேற்கொள்வதற்கு இன்னோர் சந்தர்ப்பம் கிடைக்கும் என்றால் அதனூடாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபா 10 இலட்சம் மட்டும் என்ற கணக்கில் சிலருக்கு உதவி செய்ய முன்வாருங்கள். உண்மையான வறிய குடும்ப அங்கத்தவர்களை எமது உதவி வழங்கும் வங்கியில் இருந்து அவர்களின் விபரங்களை உங்களுக்கு தருகின்றோம். உங்கள் உதவிக் கரங்கள் வன்னி வரை நீளட்டும்.
அன்பான என் சகோதர சகோதரிகளே! வன்னியை வாழ வைக்குங் கடப்பாடு எங்களுக்குண்டு என்பதை மறவாதீர்கள். யாழ்ப்பாணக் குடாநாட்டு இளைஞர் யுவதிகள் வெளிநாடுகளுக்கு ஓடவே கண்ணுங் கருத்துமாக உள்ளார்கள். எமது மக்கள் யாவரும் வெளிநாடுகளுக்குச் செல்ல உத்தேசித்தால் நாம் ஏன் இத்தனை போராட்டங்களில் இறங்க வேண்டும்? பேசாமல் அரசாங்கம் செய்வதைச் செய்யட்டும் என்று விட்டு விடலாமே? வன்னி மக்கள் போரின் உக்கிரத்திற்கு முகங் கொடுத்தவர்கள். போர் வடுக்களைச் சுமப்பவர்கள் அவர்கள். எனவே எங்கள் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் உரியவர்கள் அவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
இன்று இந்த புதிய வீடுகளைப் பெற்றுக் கொண்ட பயனாளிகள் இந்த வீடுகளை முறையாகப் பேணி பாதுகாப்பதுடன் அயலில் வாடும் மக்களுடன் நெருங்கிய உறவையும், புரிந்துணர்வையும் பேணிக் கொண்டு எந்தவித கருத்து வேறுபாடுகளோ அல்லது போட்டி பொறாமைகளோ இன்றி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கத்தக்க வகையில் உங்கள் வாழ்க்கை முறைமையை அமைத்துக் கொள்ள முன்வரவேண்டும். புதிய வீடு கிடைத்துவிட்டது தானே என வாழாதிருக்காது உங்களாலான முயற்சிகளையும் உடல் உழைப்புக்களையும் பொருள் தேடலுக்காகப் பயன்படுத்த வேண்டும். அதன்பின் உங்கள் உழைப்பைப் பாவித்து நீங்கள் மற்றவர்களுக்கு உதவ முன்வர வேண்டும். அவ்வாறு உதவினால் உங்கள் மீதுள்ள பொறாமையும் காழ்ப்புணர்ச்சியும் கரைந்து போய் விடுவன. இவ்வாறான நடவடிக்கைகளால் சமூக மறுமலர்ச்சி ஏற்படுவது திண்ணம். அப்போது தான் இவ்வாறான கொடையாளர்கள் தமது இலட்சியம் நூறு வீத வெற்றி அடைந்துள்ளதெனக் கண்டு மனம் மகிழ்வார்கள்.
கொஸ்கம முகாம் வெடி விபத்து
அண்மையில் கொஸ்கம சாலாவ பகுதியில் ஏற்பட்ட வெடி விபத்துக்கள் அப்பாவி சிங்கள மக்களை கதிகலங்க வைத்தது. அது போன்ற எத்தனை வெடி விபத்துக்களைத் தமிழ் மக்கள் அனுபவித்து அல்லல்பட்டிருப்பார்கள் என்பதனை அனுபவ வாயிலாகவே இப்போது சிங்கள மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள். அதற்காகச் சாதாரண சிங்கள மக்கள் தமது வருத்தங்களைத் தெரிவிக்கவும் பின்நிற்கவில்லை. நன்றாக வாழ்ந்த பல குடும்பங்கள் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்து 27 வருடங்களாக அகதி முகாம்களில் தரித்து நிற்கின்றார்கள். தமது சொந்த மண்ணில் சொந்த வீட்டில் வாழக் கூடிய சூழ்நிலை எப்போது வரும், எப்போது வரும் எனக் காத்துத் தவம் கிடக்கின்றார்கள். இந்தக் காத்துக் கிடத்தலானது தெற்கின் மக்களைத் தற்பொழுது தாக்கியுள்ளது. எம் மக்களின் பரிதாபகரமான நிலை பற்றி எமது அதிமேதகு ஜனாதிபதி அவர்களும் பல மேடைகளில் சிங்கள மக்கள் முன்நிலையிலும் வெளிநாடுகளிலும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் எமது மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவதற்கான காலம் நெருங்கி வரவில்லை என்றே குறிப்பிட வேண்டும்.
இந்த ஈவினைப் பகுதி ஒரு காலத்தில் மஸ்கன் நிறுவனத்தின் மிகப் பெரிய தொழிற்சாலையைக் கொண்ட ஓர் இடமாக விளங்கியது. இங்கே மஸ்கன் நிறுவனத்தினால் நிறுவப்பட்டிருந்த கூரைத்தகடு தயாரிக்கப்படும் மிகப் பெரிய தொழிற்சாலை இப் பகுதியில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைகள் காரணமாக மூடப்பட்டு கொழும்புப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தமது பகுதியைச் சேர்ந்த தமிழர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வாறான தொழிற்சாலைகள்; பல மூடப்பட்டு நாட்டின் பல பகுதிகளுக்கும் நகர்த்தப்பட்டுள்ளன. இதனால் நட்டமடைந்தவர்கள் எம்மக்களே. வீடுகளைக் கட்ட முன்வந்திருக்கும் எமது கொடையாளர்கள் தொழில் வாய்ப்புக்களை மக்களுக்கு உண்டாக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கவும் பின்னிற்கக் கூடாது. சிறிய சிறிய கைத்தொழில்களைச் செய்ய முன்வருவோர் ஆரம்ப முதலைப் பெற முடியாமல் வருந்திக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு சுழல் நிதியத்தை அமைத்து மக்களைக் குடிசைக் கைத்தொழில்களில் ஈடுபட வைக்கும் அதே நேரம் சிறிய வட்டியில் முதல் பெற்று சிறுகைத்தொழில்களில் அவர்களை ஈடுபடவைக்கலாம். எடுத்த கடனைத் திரும்பப் பெறும் வகையில் நாம் நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம். அதனால் சுழல் நிதியம் தொடர்ந்து மக்களுக்கு உதவி பயக்கும். நம்மை நாமே பார்த்தக் கொள்ளும், பராமரிக்கும் காலம் வந்துள்ளது. சூழலை அறிந்து நாம் செயற்பட முன்வர வேண்டும்.

வடமாகாணம் தொடர்பான சதி
சென்ற திங்கட் கிழமை மத்திய அமைச்சர் அவை அமைச்சர்களுடன் மற்றைய முதலமைச்சர்களுடன் அதிமேதகு ஜனாதிபதி முன்னிலையில் ஒரு கூட்டத்தில் பங்குபற்றும் வாய்ப்பு கிடைத்தது. பல சவால்களை எதிர் கொண்டு முதல் நாளிரவு நான் கொழும்புக்கு இரயிலில் சென்றேன். கூட்டத்திற்குச் சென்றதுந் தான் தெரிந்தது வட மாகாணம் சம்பந்தமாக அங்கு ஒரு சதி நடைபெற இருந்தது என்பது. நான் சென்றதால் சதி அம்பலமானது.
வடமாகாணம் நோக்கி எமக்கு பொருளாதார மையமொன்றைத் தருவது போல் இது காறும் பெரிதாகக் கூறி வந்த கிராமிய பொருளாதார அமைச்சர் தன் உள்ளக் கிடக்கையை அன்று வெளியிட்டுவிட்டார். நான் அன்று வருகை தர இருந்ததை அவர் எதிர் பார்க்கவில்லை. அதாவது வடமாகாண மக்களால் பொருளாதார மையத்தை எங்கு நிறுவலாம் என்பதில் ஸ்திரமான நிலைப்பாடு ஒன்று இல்லாததால் அதனை மதவாச்சியில் அமைக்க வேண்டும் என்று கேட்டு நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் “வேறு விடயங்கள்” என்று தலைப்பின் கீழ் தமது கருத்தைத் தெரிவித்தார். இதற்கு அமைச்சர் ரிஷாட் பதியுடீனும் ஒத்துப் போனார் போல் தெரிந்தது.
நான் விளக்கமளிக்கையில் பொருளாதார மையம் வவுனியாவில் நிறுவுவது சம்பந்தமாக எமக்கு அறிவிக்கப்பட்டதும் ஐந்து இடங்களை அடையாளம் கண்டு அவற்றில் எது சிறந்தது என்று நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்துக் கேட்டோம். அவர்கள் தாண்டிக்குளத்திலும் மற்றைய மூன்று இடங்களிலும் அமைப்பது கூடாது என்றும் ஓமந்தையில் அமைப்பதே சிறந்தது என்றும் கருத்து வெளியிட்டார்கள். தாண்டிக்குளத்தில் அமைத்தால் எமது விவசாய கல்லூரியும் விவசாயப் பண்ணையும் பாதிக்கப்படுவன என்று கூறினார்கள். வேறு பல காரணங்களையும் முன்வைத்தார்கள். எனவே நான் ஓமந்தையில் நிறுவுமாறு அமைச்சரிடம் கேட்டிருந்தேன். அதன் பின் நான் பங்குபற்றாமல் நடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கௌரவ ரிஷாட் பதியுதீன் தாண்டிக் குளத்தில் நிறுவ வேண்டும் என்று கூறி முடிவு எடுக்க வைத்தார். இந்தப் பிரச்சினையைத் தொடக்கி விட்டவரே அவர் தான்.
இது பிரச்சினையாகியவுடன் பொருளாதார மையத்தை இழக்கக் கூடாதென்ற காரணத்தினால் நான் அமைச்சர் ஹரிசனைப் போய் நேரில் சந்தித்தேன். அவர் தாண்டிக்குளமும் ஓமந்தையும் தூரமாய்ப் போய்விட்டன. வவுனியா நகரத்தினுள் ஒரு இடந் தரவேண்டும் என்று கேட்டார். வடக்கு நோக்கி அமைதலே உசிதம் இது வடக்குக்குக் கிடைக்க வேண்டிய மையம். எனவே மாங்குளத்தில் அமைப்பதே சிறந்தது. அப்படி இல்லை என்றால் வவுனியாவின் வடக்கில் இருக்கும் ஓமந்தையே சிறந்தது என்று கூறிப்பார்த்தேன். அமைச்சர் ஒரேயடியாக நகரத்தினுள் இடந் தாருங்கள் என்று விடாப்பிடியாகக் கேட்டார். எனவே ஒரு வாரத்தினுள் நான் அவர் கேட்டவாறு யு9 பாதையில் ஊவுடீ பஸ்நிலையத்திற்குப் பின்புறமாக மதவுவைத்த குளத்தில் ஐந்து ஏக்கர் காணிகளை அடையாளங் காட்டினேன். அது திரு.ரிஷாட் பதியுடீன் அமைச்சராக இருந்த காலத்தில் அவரின் கோரிக்கைக்கு அமைய ஒரு கம்பனிக்குக் குத்தகைக்கு விடப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

மதவாச்சிக்கு கொண்டு செல்ல திட்டம்
நான் விசாரித்துப் பார்த்து அப்படியல்ல, குத்தகைக்கு எடுப்பதாக இருந்த கம்பனி கூறப்பட்ட பூர்வாங்க நடவடிக்கைகளில் இறங்காமையால் இரண்டு வருடங்கள் சென்ற நிலையில் காணியைத் திரும்பப் பெறுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதை அவருக்கு எடுத்துரைத்தேன். இது பற்றிய காணி ஆணையாளரின் கடிதமும் கையளிக்கப்பட்டது. அப்படியிருந்தும் அன்று காலை அமைச்சர் கூட்டத்திற்கு முன்னர் அவர் என்னைச் சந்தித்து அவ்விடம் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார். எந்தவித குத்தகையும் கைச்சாத்திடப்படவில்லை என்று கூறினேன். அதை அவர் ஏற்கவில்லை. பின்னர் கூட்டத்தில் அவரின் கூற்றின் போது பதில் அளிக்கையில் எம்மைப் பயப்படுத்திக் காரியம் சாதிக்கப் பார்க்கின்றார் அமைச்சர் என்று கூறி வடமாகாணத்திற்கு எப்படி என்றாலும் பொருளாதார மையத்தைத் தர வேண்டும் என்று கூறி நிபுணர்கள் கூடாது என்று கூறியிருப்பினும் கட்டாயத்தின் பேரில் வேண்டுமானால் தாண்டிக் குளத்தில் அமையுங்கள் என்றேன். முழு அமைச்சர் குழாமிற்குங் கேட்கும் படியாக பொருளாதார மையம் வடமாகாணத்திற்கு அவசியம் என்பதை எல்லோரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றேன்.
மத்திய அமைச்சர் மதவாச்சிக்குக் கொண்டு போக ஆவணம் சமர்ப்பித்துள்ளார் என்பதை அமைச்சர் ரிஷாட் அறிந்து கூட மதவாச்சிக்கு எடுத்துச் செல்லும் திரு.ஹரிசனை விமர்சிக்காமல் தாண்டிக்குளத்திற்கு எடுத்துச் செல்ல முதலமைச்சர் இணங்கியுள்ளார் என்று ஜனாதிபதிக்குக் கூறினார். தாண்டிக்குளத்தில் அமைக்கத் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார். ஜனாதிபதியோ சிரித்துக் கொண்டு இல்லை! இதை பிரதம மந்திரியுடன் பேசி சுமூகமான ஒரு முடிவுக்கு வாருங்கள் என்றார். அமைச்சர் ரிஷாட்டுக்கு தாண்டிக்குளத்தில் அமைப்பதால் எமக்கு ஏற்படப் போகும் பாதிப்புக்கள் பெரிதாகப்படவில்லை. விவசாகக்கல்லூரி, விவசாய நிலம், விவசாய நடவடிக்கைகளுக்கு ஏற்படப்போகும் பாதிப்புக்கள் பெரிதாகப்படவில்லை. ஆகவே தமிழ் மக்களுக்கு வரவேண்டிய, வரக்கூடிய பல திட்ட அமைவுகளையும் சூறையாட நடவடிக்கைகள் திரை மறைவுகளில் நடக்கின்றன என்பதை உங்கள் கூட்டத்தை மையமாக வைத்து இங்கு வெளிப்படுத்துகின்றேன். இந்தச் சூழ்நிலையில் எமது கொடையாளர்களின் பரோபகாரம் உச்ச முக்கியத்துவத்தை அடைகின்றது. “எமக்கு நாமே” என்ற ஸ்லோகம் இவற்றினால் வலுவடைகின்றது.
எனவே எமது மாகாண முதலீட்டாளர்களும், தொழில் உரிமையாளர்களும் கூடுதலான தொழில்வளங்களை இப் பகுதிகளில் உருவாக்க முன்வரவேண்டும். அதன்மூலம் வடபகுதியைச் சேர்ந்த மக்கள் தொழில் வளங்களைப் பெற்று உழைப்பால் உயர்ந்தவர்கள் என்ற பெருமையை தேடிக்கொள்ளவேண்டும் என வாழ்த்தி விடைபெறுகின்றேன்.”
எழுச்சிக்குயில் 2016
தமிழீழ எழுச்சிப்பாடற்போட்டி!
25.06.2016; சனி காலை 09:30 மணி
Biberena, Emmenstr 3, 4562 Biberist SO
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயிர்ப்புடன் இருக்க தங்களையே அர்ப்பணித்து விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நினைவுகள் சுமந்த எழுச்சிப் பாடற்போட்டி நிகழ்விற்கு கலைஞர்கள், தமிழ் உறவுகள் அனைவரையும் அழைக்கின்றார்கள் சுவிஸ் தமிழர் நினைவேந்தல் அகவத்தினர்.
இந்நிகழ்வில் வெற்றி பெறுபவருக்கு எழுச்சிக்குயில் 2016 விருதோடு தஞ்சையில் அமைந்திருக்கும் "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்" தரிசிப்பதற்கான ஏற்பாடுகளுடன் விமானச்சீட்டும் வழங்கி மதிப்பளிக்கப்படும்.

'தென்றல் படைப்பாக்கம்' ரூபன் சிவராஜாவின்
‘ஈழக் காற்று’ - எமது புதிய பாடல் இன்று வெளியிடுகிறோம்!
பாடியோர்: வாணி ஜெயராம் - நிரோஜன்
இசை: இசைப்பிரியன்
உருவாக்க ஒருங்கிணைப்பு & காட்சித் தொகுப்பு: நிரோஜன்
நிறத் திருத்தம் & பாடல் வரிகள் காட்சியில் இணைப்பு: றொபேட் திரு
பாடல் வரிகள் & தயாரிப்பு: ரூபன் சிவராஜா
Thendral Creations Presents
‘Eezha Katru’
Singers: Vani Jeyaram – S.Nirojan நிரோஜன் தமிழீழ பாடகன்.
Music: Isai Priyan
Production Coordination & Editing: S.Nirojan
Color Correction and Lyric Video: Robert Thiru
Lyrics: Rooban Sivarajah
Production: Thendral Creations

வியாழன், ஜூன் 23, 2016 - ஈழத் தமிழர்களின் இறைமையை பாதுகாப்பதற்கு, சமஷ்ட்டி தேவை என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றிடம் அவர் இதனைக் கூறியுள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை சிங்கள அடிப்படைவாதிகள் பார்க்கும் கோணத்திலேயே அரசாங்கமும் பார்க்கக்கூடாது.

தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியது கட்டாயமாகும்.
இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு வடக்கு கிழக்கை இணைத்து, சமஷ்ட்டி அடிப்படையில் தீர்வினை முன்வைப்பதே ஒரே வழி என்று அவர் தெரிவித்துள்ளார்.

நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை ஜெனீவா ஏற்றுக்கொண்டுள்ளது இதனால் சிங்கள பேரினவாத அரசு பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்..
இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ இராச்சியம் தமிழர் அமைப்பொன்றை ஐக்கிய நாடுகள் அமைப்பின் அரசியல் அலுவலகமும் மனித உரிமைப் பேரவையும் ஏற்றுக்கொண்டுள்ளது.
தேசியத்தலைவரின் சட்ட ஆலோசகரான வீ.ருத்ரகுமாரனின் தலைமையின் கீழான நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின், ஐக்கிய நாடுகள் அமைப்புப் பிரதிநிதியாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த முருகையா சுகிந்தன் மனித உரிமைப் பேரவையை பிரதிநிதித்துவம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விவகாரம் தொடர்பில் கலப்பு நீதிமன்றமொன்று உருவாக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி நேற்று ஜெனீவாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் சுகிந்தன் பங்கேற்றுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அலுவலகத்தின் 4ம் இலக்க அறையில் இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஆறு சட்ட வல்லுனர்கள் பங்கேற்றிருந்தனர்.
இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய நிச்சயமாக சர்வதேச நீதவான்களைக் கொண்ட கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டுமென அவர்கள் கோரியுள்ளனர்.
நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை ஏற்றுக்கொள்வது தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை அரசாங்கத்திடம் எதுவும் கோரவில்லை என சிங்களம் கூறியுள்ளது..
எமக்கு நாடு கிடைக்கும் வரை போராட வேண்டும் இது எமது கடமை..
EeLam MPK BoYs !
கடந்த காலங்களில் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட அநீதிக்கு நீதி வேண்டி புலம்பெயர் தமிழர்கள் ஜெனீவா முன்றலில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.. இதில் மக்கள் ஜ.நா க்கு முன்பு திரண்ட மக்கள் பல கோஷங்கள் எழுப்பி நீதியை கேட்ட்னர்..
அத்துடன் அங்கு மக்களால் இலங்கை தேசியக்கொடி எரிக்கப்பட்ட்து..
ஐ.நாவில் தற்போது 32ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், பலத்த எதிர்பார்ப்பினை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்த நிலையில், மிகவும் அமைதியான போக்கு ஐ.நா சபையின் உள்ளகத்தில் இடம்பெற்று வருவதாக அறியமுடிகின்றது. இதற்காக எமக்கு நீதி கிடைப்பதற்காக.. ஜெனீவா முன்றலில் பேரெழுச்சியுடன் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்ட்து..
இவற்றுக்கு முழுமையான நீதி வெகு விரையில் கிடைக்கவேண்டும் எனவும், இலங்கையில் இடம்பெற்ற அநீதிக்கு சர்வதேச விசாரணையே தீர்வு என்று முழக்கமிட்டவாறு ஐ.நா முன்றலில் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள்.
இதில் பல அரசியல் தலைவர்கள் தாயகத்தில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..
தேசியத்தலைவர் சிந்தனையில் இருந்து சில :-
அறப்போரிலும் சரி ஆயுதப்போரிலும் சரி எமது விடுதலைப் போர் உலக சிகரத்தை எட்டியிருக்கின்றது.
எமக்கு ஒரு நாடு வேண்டும், எமது மக்களுக்கும் விடுதலை வேண்டும், எமது இனம் சுதந்திரமாக வாழ வேண்டும், என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் விழுகிறார்கள். எனவே எனது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீர சுதந்திரப் பிரகடனமாகவே சம்பவிக்கின்றது.
ஓரு விடுதலை இயக்கம் தனித்து நின்று போராடி விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கத்தின் பின்னால் மக்கள் சக்தி அணிதிரண்டு எழுச்சி கொள்ளும் பொழுதுதான், அது மக்கள் போரட்டமாக் தேசியப் போரட்டமாக முழுமையும் முதிர்ச்சியும் பெறுகின்றது. அப்பொழுதுதான் விடுதலையும் சாத்தியமாகின்றது.
ஒடுக்கப்படும் மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட வேண்டும், அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துத்துக் கட்ட முன்வர வேண்டும்.
EeLam MPK BoYs !!
காற்றில் பறக்கும் சிறிலங்காவின் வாக்குறுதிகள் : ஐ.நாவில் பன்னாட்டு நிபுணர் குழு Monitoring Accountability Panel (MAP) தெரிவிப்பு !
ஐ.நா மனித உரிமைச்சபைக்கு வழங்கியிருந்த வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றவில்லை என பன்னாட்டு நிபுணர் குழு ஐ.நா மனித உரிமைச்சபையில் குற்றஞ்சாட்டியுள்ளது.
சிறீலங்காவின் நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளையும், நடைமுறைப்படுத்தலைக் கண்காணிக்கும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட பன்னாட்டு நிபுணர்களை குழுவே Monitoring Accountability Panel (MAP) க்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
சர்வதேச நீதிபதியாகவும், விசாரணை மற்றும் மேல்முறையீட்டு வழக்கறிஞராகவும் இருக்கின்ற ஜெப்றி ரொபர்ட்சன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றிருந்த உப மாநட்டில், கம்போடியாவின் கலப்பு தீர்பாயத்தின் பொறிமுறையில் நீதிமன்றகளின் சிறப்பு விசாரணை மன்றங்களில் பொதுச் சமுதாய நீதி முன்முயற்சிக்கான ஆலோசகராக இருக்கின்ற ஹீதர் ரியான் அவர்களும் பங்கெடுத்திருந்தார்.
சிறிலங்கா தொடர்பிலான தனது வாய்மொழி அறிக்கையினை எதிர்வரும் 29ம் நாளன்று மனித உரிமைச்சபை ஆணையாளர் செயிட் ராட் அல்ஹசேன் அவர்கள் சபையில் முன்வைக்க இருக்கின்ற நிலையில், இந்த பன்னாட்டு நிபுணர் குழுவின் கூட்டம் இடம்பெற்றிருந்தது.
ஐ.நா மனித உரிமைச்சபைக்கு சிறிலங்கா வழங்கியிருந்த நீதிவழங்யிருந்த வாக்குறுதிகளில் காத்திரமான எதனையும் சிறிலங்கா செய்யவில்லை என குற்றஞ்சாட்டியிருந்த இந்த நிபுணர் குழு, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி என்பது அனைத்துலக நீதிப்பொறிமுறை ஒன்றின் ஊடாகவே பெற முடியும் எனவும் தெரிவித்திருந்தது.
சிங்களவன் கடந்த 30 வருடங்கள் எங்கள் தமிழ் மக்களை கொன்று குவித்தும் இன்னும்
அவன் கொடூரம் அமைதியான முறையில் தனது வெறியை நடத்தியும், நடித்து கொண்டும் இருக்கின்றான்.தமிழீழ விடுதலை புலிகள் இல்லை என்ற ஒரு ஆணவமும், இனி ஸ்ரீலங்காவில் சிங்களவன் மட்டுமே
ஆள முடியும் என்ற ஆர்பரிப்பும் அவனிடம் இருந்து கொண்டே இருக்கிறது. தற்போது ஸ்ரீலங்காவில்
வாழும் எஞ்சிய தமிழரும் சிங்களவனுக்கு வால்பிடிக்கும் தமிழரும், உயிருக்கு பயந்து வேறு வழியில்லை என்ற நிலையில்
நடைப்பிண வாழ்க்கை வாழும் தமிழரும் அங்கு உள்ளனர். இதில் ஒரு பகுதி தமிழரை அவன் தனது விவேகத்தால்
அவர்களுக்கு பணம் கொடுத்து ''இசை' என்ற ஒரு ஆயுதம் அவனுக்கு ஒரு பெரும் புள்ளியாக உள்ளது.
இதை வைத்து இப்போது ஆரம்பித்து விட்டான் தமிழர்களின் -தமிழீழம்- என்ற தீயை அழிப்பதற்கு!புலம்பெயர் நாடுகளில் ஆரம்பித்து 4 வருடங்கள் மேலே ஆகிவிட்ட்து. குறிப்பாக வெளிநாட்டில் 2-3 கலைஞர்களை வைத்து ஆரம்பித்த அவன் இன்று 10கும் மேற்ப்பட்ட தமிழரை உருவாக்கி விட்டான்.
அண்மைக் காலங்கள் நீங்கள் லண்டன்,
ஜெர்மனி, கனடா போன்ற நாடுகளில் கழியாட்டங்கள் கிழமைக்கு ஒன்று என்று பிரமாண்ட முறையில் வந்து கொண்டே இருக்கின்றது.
ஒரு சில நகைசுவை நடிகர்கள், பாடகர்கள் என்று இந்த பிரபல்யம் தேடும் தமிழர்கள் விலைக்கு போய்க்கொண்டே இருக்கின்றனர்.
ஐரோப்பாவில் '' I am a srilankan ' என்று கூறும் தமிழரை அவன் உருவாக்கியதும் அவனுக்கு பெருமை தேடிக் கொண்டே போகிறது.
இங்கே பிறந்த பிள்ளைகளில் பலருக்கு தமிழீழம் என்றால் என்ன என்று கூட தெரியாத வாழ்க்கையை இந்த புலம்பெயர் மக்கள் உருவாக்கியதும்
எமக்கு ஒரு சாபக்கேடு என்றே கூற வேண்டும். சிங்களவன் போன்ற தீய சக்திகள் எங்கள் மொழி, கலை ,பண்பாடு யாவிலும் கைவைத்து
எம்மை அழிப்பதே அவன் திட்டமாகும். லண்டன் மாநகரில் இப்போது புதிதாக வடிவம் கொள்கிறது 'கழியாட்ட விடுதிகள். இங்கே போகும் பெண்கள் ஆடைகள்
கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்பது அவர்களது கட்டாய விதிமுறையாகும்.
ஒன்றை மட்டும் சொல்லி கொள்ள விரும்புகின்றேன் . இவர்களை நாம் வெகு விரைவில் வெளிச்சத்துக்கு கொண்டு வருவோம்.
தலைவரின் வழியில் ஆயிரம் ஆயிரம் பிள்ளைகள் இங்கே தேசிய வழியில் பயணித்து கொண்டு உள்ளனர்.
எமக்காய் பகையோடு போராடி எம்மை நினைத்து மண்மடியில் விழுந்த மாவீரர்களின் கனவுகளை ஒரு காலமும் நாம் புதைக்க மாட்டோம்.
தலைவர் எங்களுக்காக விட்டுச்சென்ற பணிகளை தொடரவே இது போன்ற கேள்விகளை உங்கள் முன் வைக்கின்றோம்.
‘’ஆதங்கம்’’ என்ற புதிய வடிவம் தாங்கும் இந்த நிகழ்ச்சி புலம்பெயர் நாட்டில் இருக்கும்
உண்மையின் தரிசனமாக வடிவம் கொள்ளும்.
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.