பிரித்தானியாவில் நடைபெற்ற “புரட்டாதி மாதத்தில் வீரச்சாவைத்தழுவிக்கொண்ட மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வு”

தியாகதீபம் திலீபன் உட்பட புரட்டாதி மாதத்தில் வீரச்சாவைத்தழுவிக்கொண்ட மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் நடைபெற்றது.
பிரித்தானியாவின் வரலாற்று புகழ் பெற்ற ஒக்ஸ்பேட் நகரில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் நேற்று முன்தினம் (25-09-2016) ஞாயிற்றுக் கிழமை மாலை 4:30 மணி முதல் 7:30 மணிவரை இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பொதுச்சுடரினை சவுத்ஹோல் தமிழ் கல்விக்கூடத்தின் அதிபர் திரு. செல்லத்துரை அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியை திரு.பாஸ்கரன் (உ.த.வ.மை) அவர்கள் ஏற்றிவைத்தார்.
மாவீரர்கள் நினைவுத் தூபிக்கு மாவீரர் லெப்.கரன் (03-09-2000 அன்று யாழ் அரியாலை நோக்கி முன்னேறிய ரிவிகரண இராணுவ நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவைத் தழுவியவர்) அவர்களின் சகோதரி திருமதி. லதா சதா அவர்கள் ஏற்றிவைக்க, மலர்மாலையினை மாவீரர் லெப். கேணல் சுபன் (25-09-1992 அன்று பூநகரி பள்ளிக்குடா பகுதியில் இராணுவ மினி முகாம் மற்றும் 62 காவலரண்கள் மீதான தாக்குதலில் வீரச்சாவை தழுவியவர்) அவர்களின் சகோதரி திருமதி. புஸ்பராணி கந்தசாமி அவர்கள் அணிவித்தார்.
தொடர்ந்து போரில் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கான நினைவு தூபிக்கு மாவீரர் கரும்புலி மேஜர் செழியன் அவர்களின் தந்தை திரு.மோகன் அவர்கள் ஈகைச் சுடரினை ஏற்றிவைக்க, மாவீரர் கேணல் சங்கர் அவர்களின் உறவினர் மலர்மாலை அணிவித்தார்.
அதைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர்வணக்கம் இடம்பெற்றது.
அரங்க நிகழ்வுகளாக கவிதைகள் திருமதி.ஜெயலக்சுமி சிவானந்தராஜா (மில்ரன்கீன்ஸ் தமிழ் ஆசிரியர் ), ஆர்த்தி ரவீந்திரநாதன், மிதுரன் ரவீந்திரநாதன்.
நினைவுரை – போராளி புரட்சி, நினைவுரை – திரு.மயில்வாகனம் (உ.த.வ.மை), நினைவுரை – திரு.ராஜன் (முன்னாள் யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளரும் மூத்த போராளியும்) என்பன இடம்பெற்றது.
இறுதியாக உறுதியேற்புடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக