திலீபனின் தியாக பெரு யாகத்தை நினைவு கூறுகை!

1987 செப்டம்பர் 14- இன்றைய நாள் ஈழத்தமிழர் வரலாற்றில் இந்திய வல்லரசு ஈழ தமிழினத்திடம் தோற்றுப் போன வரலாறு எழுதப்பட காரணமாக இருந்த தனி மனித போர் பீரங்கியாக தியாக தீபம் திலீபனின் நீராகாரம் கூட அருந்தாத உண்ணா விரத போராட்டம் தேசிய தலைவரிடம் அனுமதி பெற்று முன்நகர்த்த முடிவெடுக்கப்பட்ட நாள்!
செத்துப் போன இந்தியம் தன்னை சாகடிக்கும் அநியாயமாக என தெரிந்தும் தான் செத்தேனும் ஈழத்தில் இருந்து இந்தியத்தை விரட்டி தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும், இந்தியத்தின் கோர முகம் உலகம் அறிய வேண்டும் என சிரித்தபடி சாவோடு கை குலுக்கிய நாள்.
இந்தியம் மிக கேவலமாக இழிவாக ஈழத்தமிழர்களிடம் அகிம்சை முகம் கிழிந்து தோற்றது எங்கள் அண்ணன் திலீபன் முன்னால்.
இந்திய ஓநாய்களின் அகிம்சை முகத்திரையை ஒற்றை மனிதனால் கிழித்தெறியப்பட களம் இறங்கும் முடிவை ஒப்பற்ற தியாகி திலீபன் அண்ணா ஒப்பற்ற தலைவன் முன்னிலையில் உறுதி எடுத்த உன்னதமான நாள்.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் விழிகள் பெருக்கெடுக்கும் எங்கள் அண்ணன் திலீபனின் தியாக பெரு யாகத்தை நினைவு கூறுகையில்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக