யாழில் வைத்து "ஒரே நேரத்தில் இரண்டு
இலக்குகளை தாக்கிய "பெண் கரும்புலி ...!!
தமிழர் போராட்ட வரலாற்றில், சூரியக்கதிர் இராணுவநடவடிக்கையின் தாக்கம் இல்லாது எந்த பதிவையும் எழுதமுடியாத நிலை உள்ளது. ஏனெனில் அதன் தாக்கம் தமிழர் வாழ்வியலில், வார்த்தைகளில் சொல்லமுடியாத துயரத்தை தமிழர் நெஞ்சில் விதைத்து விட்டிருந்தது.
அந்த வரலாற்று இடப்பெயர்வின் வடு, தமிழர் நெஞ்சங்களை விட்டு என்றும் அழியப் போவதில்லை. எல்லோரும் எனது நாட்டு மக்கள் என்னும் பசப்பு வார்த்தைகளை சர்வதேசத்துக்கும், தமிழருக்கும் கூறிக்கொண்டு வெண்புறா வேடமிட்டு ஆட்சிக்கு வந்தார் சந்திரிக்கா.
வந்ததும், அரச பயங்கரவாதத்தை ஏவி, நாகர்கோவில் சிறுவர் பாடசாலை மீது விமானத்தாக்குதல் மூலம் அறுபதற்கு மேட்பட்ட பிஞ்சுக் குழந்தைகளை கொன்று குவித்தார். அடுத்ததாக நாவாலி தேவாலையத்தில் தஞ்சம் அடைந்திருந்த மக்கள் 200க்கு மேற்பட்ட மக்களை, விமானத் தாக்குதல் மூலம் சதைக்குவியல்களாக அள்ளியெடுக்க வைத்திருந்தார். இப்படி தமிழர் மீது அவர் விதைத்த துன்பப்பட்டியல் மிக நீளமானது.
அதன் தொடர்ச்சியாக, யாழ் மக்களை பெரும் குண்டுமழையின் மூலம், யாழை விட்டே துரத்தி இருந்தார். 1996ம் ஆண்டு நான்காம் மாதம் 21ம் திகதி, புலிகள் கட்டம், கட்டமாக வன்னிக்கு பின்வாங்கிச் செல்ல, தனது கவசப்படைப்பிரிவை களத்தில் இறக்கி, மக்களில் ஒரே போக்குவரத்து பாதையான கிளாலி நீரேரியை எதிரி ஆக்கிரமித்திருந்தான்.
அன்றைய நாளை எதிரி கொண்டாடினான். முத்தவெளியில், சந்திரிக்காவின் மாமனும் பாதுகாப்பு அமைச்சருமான ரத்வத்தை சிங்கக்கொடியை ஏற்றி தமது இராணுவவெற்றியை கொண்டாடினர்.
ஆனால், புலிகளை வன்னிக்கு துரத்தி விட்டதாக சிங்களம் கனவில் மூழ்கி இருக்கும் போது, விசேட பயிற்சி பெற்ற ஆண்,பெண் போராளிகள் ஊரியான் பாதை ஊடாக யாழின் வடமராச்சி கிழக்கில், உள் நுழைந்தனர்.
மரபுவழி இராணுவமாக பின் வாங்கிய புலிகள், கெரிலா போராளிகளாக மீண்டும் உள்நுழைந்தனர். இராணுவத்தின் நின்மதியான உறக்கத்தை இந்த புலிகள் இல்லாது செய்திருந்தனர். இதே நேரம் இந்த போராளிகளுக்கும் தெரியாது, இதே போல ஆண், பெண் புலனாய்வுப் போராளிகளும், சில கரும்புலிப் போராளிகளும் உள் நுழைந்தனர்.
இந்த பெண் கரும்புலிப் போராளிகளை விடுதலைப்புலிகளின், மகளீர் புலனாய்வுத் தளபதி கேணல்.மணிமேகலை அவர்கள் வழிநடத்தினார். ஒரு இலக்கை அழிக்கும் நோக்கில், பெண் கரும்புலி ஒருவர் அனுப்பப்பட்டிருந்தார். அவரை மிகவும் சாதுரியமான, அடையாளப் பதிவுகள் மூலம் மறைப்பினூடே, அந்த பெண் கரும்புலி பாதுகாக்கப் பட்டார். அவரும் சாதாரண மக்கள் போல யாழில் உலவித்திரிந்தார்.
அந்த நேரத்தில் வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் பிரச்சர நோக்கத்திலான யாழ் பயணம் அடிக்கடி நடந்து கொண்டிருந்தது. அவர் யாழ் வரும் போதெல்லாம் அப்போதைய யாழ்ப்பாணத்தின் 512 Brigade இராணுவத்தளபதியும் அவருடன் சேர்ந்து பயணிப்பதும், தமிழர் பிரதிநிதிகள் என்று, யாழில் இருந்த தமிழர்களையும் சந்தித்து " இருவரும், தமிழரின் மண்டையை கழுவிக்கொண்டிருந்தனர்.
இதனால் இவர்கள் இருவரும் ஆண்,பெண் புலிகளால் இலக்கு வைக்கப் பட்டனர். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அரசாங்கத்தின் கட்டிட திறப்புவிழா ஒன்றுக்கான வருகையை அறிந்த பின்னர், சில புலனாய்வுத்தகவல்கள் ஊடாக, அவரது அன்றைய செயல்பாட்டு விபரங்களும் புலிகளால் திரட்டப்பட்டிருந்தது.
அதன்படி 02/07/1996 அன்று பாலாலி இராணுவத்தளத்துக்கு வந்து, அங்கிருந்து அச்சுவேலி கன்னியாஸ்த்திரிகள் மடத்திற்கு, பின்னால் அமைந்திருந்த யாழ்மாவட்ட கட்டளைப்பீடத்திற்கு இராணுவப்பாதுகாப்புடன் வந்திருந்தார்.
அங்கு மேஜர்.ஜெனரல்.ஜனகபெறேராவுடன் ஒரு சந்திப்பின் பின்னர். பகல் 12மணிபோல் அதே வாகனரோந்தில் யாழ் நோக்கி பயணமானார். இவர் புத்தூர் சந்தியை தாண்டும் போது, இவர்களது வரவுக்காக 10kg நிறையுடைய கிளைமோர் குண்டு ஒன்றை மரத்தில் கட்டிவிட்டு, இன்னொரு அணியான ஆண் போராளிகள் காத்திருந்தனர்.
இவர்கள் தொடரணி கிளைமோரை நெருங்கிய போது, இவர்களால் குண்டு வெடிக்க வைக்கப்பட்டது. ஆனால், டிக்னேற்றர் (பிரதான வெடிமருந்தை வெடிக்க வைக்கும், ஊக்கி மருந்து) வெடித்தது, கிளைமோர் குண்டு வெடிக்கவில்லை.!
அந்த போராளிகளுக்கு பெரும் அதிர்ச்சியும், வருத்தமும் குடிகொண்டது. பின் அந்த குண்டை ஆராய்ந்த போது, அதை பாதுகாத்து வைத்திருந்த இடத்தில், அந்த குண்டின் "கோடெக்ஸ் வயர்" தண்ணீரில் நனைந்திருந்தமையால் தான், வெடிக்கவில்லை என்பது தெரியவந்தது. இரவில் அந்த குண்டை பொருத்தியமையால், அந்த போராளிகள் அதைக் கவனிக்கவில்லை.
ஆனாலும், இவர்கள் வரவுக்காக பெண் புலிகளும் காத்திருந்தனர். ஆம், அந்த நாளும் வந்தது. 04/07/1996 அன்று காலையே அந்த பெண் கரும்புலி ஆயத்தமானாள். அன்று அமைச்சரும்,இராணுவத்தளபதியும், யாழ்பாணம் ஸ்டான்லி வீதியில், தனது பரிவாளங்கள் சகிதம் புது கட்டிடத் திறப்புவிழாவில் கலந்து கொண்டிருந்தார்.
அந்த பெண் போராளியின் இலக்கு. அமைச்சரும், மேஜர்.ஜெனரல்.ஆனந்த காமன்கொடவுமே. பெண் போராளிகள், ஆண்போராளிகளைவிட ஒரு படி மேலே சென்று ஒரே நேரத்தில் இரண்டு இலக்கை தெரிவு செய்திருந்தார்கள். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
பெண்கள் புலனாய்வுத்தளபதி கேணல்.மணிமேகலையின் நேரடி வழிநடத்தலில், அந்த பெண்கரும்புலி சுயமாகவே அந்த தாக்குதலுக்கு தயாராகி விட்டிருந்தாள். இந்த நாளுக்காக பலநாட்கள் அவள் காத்திருந்தாள்.
ஆம், இதோ இலக்கு நெருங்கி விட்டது. பெண்புலி நின்ற இடத்தை இவர்கள் நெருங்கும் போது பெரும் ஓசையுடன் குண்டு வெடித்தது. அந்த தாக்குதலில் நிமல் சிறிபால டி சில்வா காயங்களுடன் தப்பினார். ஆனால் முக்கிய இலக்கான மேஜர்.ஜெனரல்.ஆனந்த காமன்கொட அவ்விடத்திலேயே கொல்லப்பட்டார்.
இந்த சாதனையை செய்த அந்த பெண் கரும்புலி, தான் பிறந்த மண்ணிலேயே காற்றோடு, காற்றாக கலந்து விட்டிருந்தால். அன்று சிங்களம் அதிர்ந்து போனது. அந்த தாக்குதலின் மூலம், யாழில் இருந்து புலிகளை துரத்திவிட்டதாக,சர்வதேசத்தை நம்பவைத்திருந்த, சிங்களத்தின் பொய் முகமூடியும் சிதைந்து போனது..!


பிரபல சமூகத் தொண்டரும் தேசப்பற்றாளருமான திரு இராசையா நவநாயகம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் 27/12/2016
பிரபல சமூகத் தொண்டரும் தேசப்பற்றாளருமான திரு இராசையா நவநாயகம் அவர்கள் 27.12.2012 அன்று அதிகாலை காலமானார்.
நவா அண்ணா என்று அன்போடு அழைக்கப்படும் இவர்இ தமிழ்த் தேசியத்தின் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்ததோடுஇ பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுடன் இணைந்து தமிழீழ விடுதலைப் போராட்டதின் அனைத்துச் செயற்பாடுகலிலும் முன்னின்று உழைத்து இன்று வரையும் உறுதியோடு குரல் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
1986 முதல் 1992 வரை தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். டாக்டர் ஜெயகுலராஜா அவர்கள் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்து தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் வேலைப்பாடுகளை விரிவுபடுத்திய காலகட்டத்தில் பிரித்தானியாவில் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் திரு நவநாயகம் அவர்களின் தலைமைல் மிகச் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
தாயகதில் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்த காலத்தில் சிறி லங்கா அரசின் இராணுவ அடக்கு முறையில் இருந்து தப்பி வெளி நாடுகளுக்கு தஞ்சம் புகுந்தவர்களில் கணிசமானோர் பிரித்தானியாவுக்கு வந்தார்கள். அக்காலத்தில் தமிழர் அகதிகள் நடவடிக்கைக் குழுஇ அவர்களின் அரசியல் தஞ்சக் கோரிக்கைகளை முதன்மைப்படுத்தி அவர்களது செயற்பாடுகள் ஒய்வுபெற்ற காலத்தில் திரு நவநாயகம் அவர்களும் அவ்வமைப்பிற் கூடாக சிறந்த சேவையை வழங்குவதற்குப் பெரிதும் துணை நின்றார்.
1985ல் இடம் பெயர்ந்து வந்தவர்களின் எதிர் கால வாழ்வுக்காகவும் அவர்களின் கலை கலாச்சார மேம்பாடுகளை வளர்ப்பதற்கும்இ தாயக விடுதலையை புலம்பெயர் மக்களின் ஆதரவைத் திரட்டும் நோக்குடனும் வோல்தம் பொறஸ்ட் தமிழ்ச்சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார்.
1986ம் ஆண்டு ஆரம்பித்த இத்தமிழ்ச்சங்கம் தனது வெள்ளி விழாவின் போது மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வோல்தம்ஸ்ரோ தமிழ் மக்களின் தந்தை என்று கௌரவிக்கப்பட்டார். இளையோர்கள் மத்தியில் நாட்டுப்பற்றை வளர்ப்பதற்காகவும் அவர்களை தமிழ்ச் சங்க ஒழுங்கிற்குள் கொண்டு வருவதற்காகவும் வோல்தம் பொறஸ்ட் தமிழ்ச்சங்கத்தின் கலை – பண்பாடு மற்றும் விளையாட்டுத் துறைகளை உருவாக்கிஇ இவற்ரின் வளர்ச்சிக்காகவும் முன்னின்று உழைத்தார். லண்டனில் ராகாஸ் இசைக்குழுவை உருவாக்கி அதனையும் தேசப்பற்றோடு பயணிக்க வைத்தவர் என்பதும் குறிப்பிடத்தது.
வோல்தம் பொறஸ்ட் பகுதி வாழ் தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைக்கு தான் சார்ந்த அமைப்பிற் கூடாகவும்இ தனிப்பட்ட முறையிலும் உதவிகளை வழங்கி அவர்களின் ஏகோபித்த பாராட்டுதலைப் பெற்றுள்ளார்.
கடந்த 25 வருட காலமாக பிரித்தானியாவில் இயங்கி வந்த போன்ற சமூக அமைப்புக்களுடன் தொடர்ச்சியாக தன் மறைவு வரை இயங்கி வந்தார். இவர் ஓர் தேசப்பற்றாளரும் சமூக தொண்டர் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
தேசிய விடுதலைப் போராட்டத்தில் வீ ரச்சாவைத்தழுவிய எமது போராளிகளை நினைவு கூர்ந்து மலர் வணக்கம் செய்யும் மாவீ ரர் நாள் நவம்பர் 27இ 1990ம் ஆண்டு வோல்தம்ஸ்ரோ நகர மண்டபத்தில் முதன்முறையாக சிறப்பாக நடப்பதற்கு உறுதுணையாக இருந்தார்.
1985இல் கலை பண்பாட்டுக்கழக ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டு பல வருடங்களாக அதனை தாயக விடுதலையை நோக்கி நெறிப்படுத்தி வந்துள்ளார்.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வேலைப்பாடுகளை விரிவுபடுத்திய காலகட்டத்தில் பிரித்தானியாவில் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் திரு.நவநாயகம் அவர்களின் தலைமைல் மிகச் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
தாயகதில் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்த காலத்ïல் சிறி லங்கா அரசின் இராணுவ அடக்கு முறையில் இருந்து தப்பி வெளி நாடுகளுக்கு தஞ்சம் புகுந்தவர்களில் கணிசமானோர் பிரித்தானியாவுக்கு வந்தார்கள். அக்காலத்தில் தமிழர் அகதிகள் நடவடிக்கைக் குழுஇ அவர்களின் அரசியல் தஞ்சக்
கோரிக்கைகளை முதன்மைப்படுத்தி அவர்களது செயற்பாடுகள் ஒய்வுபெற்ற காலத்தில் திரு நவநாயகம் அவர்களும் அவ்வமைப்பிற் கூடாக சிறந்த சேவையை வழங்குவதற்குப் பெரிதும் துணை நின்றார்.
தாயக விடுதலை நோக்கி அயராது உழைத்து இன்று உறங்கிப் போயிருக்கும் நவா அண்ணாவின் கனவை நனவாக்க நாம் அயராது உழைப்போம்.
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் "
அன்புச் செல்வன் (த-வி-பு)
தமிழீழ விடுதலைப் புலிகள்.
தமிழீழம்.
27/12/2013
பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஆரம்பகாலச் செயற்பாட்டாளர்களில் ஒருவராயிருந்து, எமது போராட்டத்தை வளர்த்தெடுக்க அரும்பணியாற்றிய திரு.இராசையா நவநாயகம் அவர்களை நாம் இழந்துவிட்டோம்.
பிரித்தானியாவில் 1984ஆம் ஆண்டிற் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளராகப் பணி செய்ய ஆரம்பித்த திரு. இராசையா நவநாயகம் அவர்கள் 1985ஆம் ஆண்டிலிருந்து 1992ஆம் ஆண்டு வரை பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருந்தார். தனது பணிக்காலத்தில் 1990ஆம் ஆண்டு பிரித்தானியாவில் முதன்முதலாக மாவீரர்நாள் நிகழ்வை ஒழுங்குபடுத்தி உணர்வெழுச்சியுடன் அதை நடாத்துவித்தார்.
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் 1986ஆம் ஆண்டு பிரித்தானியாவிற் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து 1992ஆம் ஆண்டு வரை அதன் பொறுப்பாளராக இருந்து அதன் பணிகளை மேம்படுத்தக் கடுமையாக உழைத்தார்.
திரு.இராசையா நவநாயகம் அவர்கள் 1986இல் வோல்தம்ஸ்ரோ தமிழ்ச்சங்கத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவராவார். வோல்தம்ஸ்ரோ தமிழ்ச்சங்கத்தில் தலைவர் உட்படப் பல்வேறு பொறுப்புக்களை ஏற்று அதன் வளர்ச்சிக்காக உழைத்த இவரை வோல்தம்ஸ்ரோ தமிழ்ச்சங்கம் தனது வெள்ளிவிழாவின் போது 'வோல்தம்ஸ்ரோ தமிழ் மக்களின் தந்தை' என்று மதிப்பளித்துச் சிறப்பித்தது.
இவர் தமிழ் அகதிகள் நடவடிக்கைக் குழுவில் ஒரு பணியாளனாகப் பல்லாண்டு காலம் சேவை மனப்பாங்குடன் பணி செய்தார்.
தன் குடும்பத்தை விடவும் தான் பிறந்த இனத்துக்காகவே தன் வாழ்நாளைச் செலவிட்டவரும்; தமிழ்த்தேசியத்தையும் தேசியத்தலைவர் அவர்களையும் விழிமூடும் வரை பெருவிருப்போடு நேசித்த ஒரு சமூகசேவையாளனாகத் தமிழ்த் தேசியப்பணியில் அயராது உழைத்தவருமான திரு.இராசையா நவநாயகம் அவர்களுக்கு "நாட்டுப்பற்றாளர்" என மதிப்பளிப்பதில் நாம் பெருமை கொள்கின்றோம்.
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
தளபதி பால்ராச்சின் அண்ணாவின் சாதனைகள்….

இந்தியப் படைகளுக்கு எதிரான போர் உக்கிரமடைந்திருந்த காலம். தலைவர் இந்தியப் படைகளுடனான போரை வழி நடாத்திக் கொண்டிருக்க நாங்கள் வடமராட்சியிலிருந்து செயற்பட்டுக் கொண்டிருந்தோம். ஆளெண்ணிக்கையை அதிகமாக்கி, நகரும் அணிகளைப் பெருமளவில் ஈடுபடுத்தித் தமது ரோந்து நடவடிக்கைகளை எல்லா இடமும் இந்தியர்கள் தீவிரப்படுத்தினர். இந்தியர்களின் இந்த நகர்வு எமக்கு தாக்குதல்களுக்குச் சந்தர்ப்பங்களை வழங்கியிருந்தாலும், எமது நகர்வுகளுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுக்கத்தான் செய்தது.

இந்த நிலையில் தலைவர் அவர்களைச் சந்திப்பதற்காக நாம் வடமராட்சியிலிருந்து மணலாறு நோக்கிய ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது.வடமராட்சியின் கரையோரமாக கால்நடையாக நகர்ந்து கொம்படி, சுண்டிக்குளம் வழியாக நாம் மணலாற்றுப்பகுதியை நோக்கிச் செல்ல வேண்டும். தலைவர் அவர்கள் மணலாற்றுக் காட்டுக்குள்லிருந்து போரை வழிநடாத்திக் கொண்டிருக்கிறார் என்பதைக் கண்டுகொண்ட இந்தியர்கள் மணலாற்றைச் சுற்றி இறுக்கமான இராணுவ முற்றுகையிட்டு தலைவரை அழிக்கும் நோக்குடன் ‘செக்மேற்” இராணுவ நடவடிக்கையைத் தொடக்கியிருந்தனர்.

பெருந்தொகையில் ஆளணியையும், ஆயுதங்களையும் ஒன்று குவித்து மணலாற்றுக்காட்டுக்குள் புலி வேட்டையாட இந்தியர்கள் முயன்றனர். முல்லைத்தீவிலும் அதற்கப்பால் பதினைந்தாம் கட்டையிலும் பாரிய படை முகாமை அமைத்து மணலாற்றுக் காட்டை வளைத்து அவர்கள் நின்றனர். இதனால் மணலாறு, முல்லைத்தீவு மாவட்டங்கள் ஏனைய மாவட்டங்களைப் போலல்லாது இந்தியர்களின் தீவிரமான கண்காணிப்புக்குள் உட்;பட்டிருந்தது. அத்துடன் அங்கு நெருக்கமான இராணுவக் காவலரண்களையும், படை முகாம்களையும் நிறுவி இந்திய-புலிகள் போரின் முதன்மையான போரரங்கை திறந்திருந்தனர்.

இத்தனை கண்காணிப்பு வலைக்குள்ளும் அகப்படாது நெளிந்து சுளிந்து நாம் காட்டுவெளிப்புறம் ஒன்றை சென்றடைய வேண்டியிருந்தது. இத்தனை படை முகாம்களையும் இந்தியர்களின் ரோந்து அணிகளையும் கடந்து நாம் மணலாற்றை சென்றடைவது இலகுவான காரியமல்ல ஆயினும் நாம் சென்றடைந்தோம். இனி மணலாற்றின் வெளிப்புறத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு களத்தினூடாக அதாவது அடர் காட்டினூடாக நாம் பயணத்தை மேற்கொண்டு தலைவரின் தளத்தை அடைய வேண்டும்.

எங்களைப் பொறுத்த வரையில் காட்டுப் பயணம் என்பது அவ்வளவு இலகுவானதல்ல. எங்களுக்கு முன்னமே அனுபவமானதுமல்ல. காடு நாம் அறியாத ஒரு புதிராக விரிந்து கிடந்தது. அது அனுபவசாலிகளுக்கு மட்டுமே வழிவிடும். இல்லாதவர்களை அது வழிமாற்றி விடும் கடலைப் போல. இந்தியர்களின் முற்றுகைக்குள்ளால் தொடரவேண்டிய பயணம். இரவு முல்லைத்தீவு கரையோரக்காட்டை அடைந்து எம்மை அழைத்துச் செல்ல தலைவரின் இடத்திலிருந்து ஒரு அணி வந்திருந்தது. அந்த அணிக்கு ஒருவர் பொறுப்பாக வந்திருந்தார். அவ்வாறு வந்தது வேறு யாருமல்ல அவர் தான் பால்ராச்.

நான் முதன் முதலில் சந்தித்த பால்ராச்.

******

அந்த இரவின் கரிய பொழுதில் பால்ராச் எங்களோடு கதைக்கத் தொடங்கினார்…… எல்லா இடமும் ஆமி இறங்கிட்டான்….. நாங்கள் காடு முறிச்சுத்தான் போகவேணும். அவங்கள் எந்த இடத்திலயும் எங்களுக்கு அடிக்கலாம். ஆனால், ஒருத்தரும் எந்தச் சந்தர்ப்பத்திலும் அணியிலிருந்து விலகவோ சிதைஞ்சு இடம் மாறவோ வேண்டாம்… என்ற அறிவுறுத்தலோடு பயணத்தை ஆரம்பித்து வைத்தார்.

எதிரி உள்ளே நிற்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டே மேற்கொள்ளும் ஒரு துணிவுப் பயணம். காட்டை ஊடறுத்து கால்கள் தூரத்தை மிதித்து மிதித்து பின்தள்ள காட்டின் ஆழமான உற்பகுதியை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தோம். சில மணிநேர நடைப் பயணத்திற்குப் பின்னே அணியின் முன்னே சென்று கொண்டிருந்த போராளி, காற்றில் கலந்து கிடந்த இந்தியர்களுக்கேயுரிய அந்த அந்நிய நாற்றத்தை மூக்குத் துவாரத்தின் வழியே நாசி வரை உள்ளிழுத்துவிட்டு அவங்கள் கிடக்கிறாங்கள்… என எச்சரிக்க…. இந்தியர்கள் எம்மை நோக்கித் தாக்கத் தொடங்கி விட்டார்கள்.

கடுமையான சண்டை… காட்டு மரங்களுக்கிடையே பாதுகாப்பாக நிலையெடுத்துக் கிடந்த இந்தியர்கள் காப்பு எதுவுமின்றி நகர்ந்து வந்து கொண்டிருந்த எம்மை நோக்கித் தாக்கினர். அந்தக் காட்டிற்குப் பழக்கப்பட்ட பல போராளிகள் அணியிலிருந்த போதும் பழக்கப்படாதவர்களும் இருக்கத்தான் செய்தனர். அவர்கள் அணியின் ஒழுங்கிலிருந்து விடுபடுவார்களானால் மீண்டும் ஒன்றிணைப்பது கடினம். இந்தியர்கள் எந்த வேளையும் தாக்கலாம் என்ற எதிர்பார்க்கையை முன்னமே அறிவுறுத்திய பால்ராச் எதிரி தாக்குதலைத் தொடுத்த அதே வேகத்தில் எதிரியின் மீது ஒரு பதில் தாக்குதலைத் தொடுத்துக்கொண்டே அணியை எதிரியின் கொலை வலயத்திலிருந்து சற்றுப் பின்னகர்த்தி உடனடியாகவே அணியை மீள் ஒழுங்குபடுத்தினார்.

அது சண்டை பிடிக்கும் களமல்ல. நாம் சண்டையொன்றைப் பிடிப்பதற்காகச் சென்று கொண்டிருக்கவுமில்லை. எமது பயணமும் நோக்கமும் வேறு. அணி நகர்ந்து கொண்டிருக்கும் வேளை நான் பால்ராச்சிற்கு அருகாகவே நடந்துசென்று கொண்டிருந்தேன். அவ்வேளை எதிரி தொடுத்த தாக்குதலில் ரவையொன்று எனக்குக் காயத்தை ஏற்படுத்தியதால் குருதி அதிகமாக வெளியேற எனக்கு உடல் குளிர்ந்து கொண்டு வருவதை உணரக்கூடியதாக இருந்தது. என்னுடைய உடல் நிலையை அறிந்து கொண்ட பால்ராச் அந்த இடத்திலேயே சாக்கு ஒழுங்குபடுத்தி காட்டுத்தடி வெட்டி ‘ஸ்ரெச்சர்” உருவாக்கி என்னைப் பாதுகாப்பாகச் சுமந்து செல்ல ஆட்களை ஏற்பாடு செய்தார்.

அதன்பின் காடு முறித்துப் புதிய பாதையெடுத்து நாம் தலைவர் அவர்களின் இடத்தையடைந்தோம். அங்கு எனக்குச் சிகிச்சையளித்த போதும் மேலதிகச் சிகிச்சை பெறவேண்டியிருந்தது. தலைவர் என்னுடைய தலைமாட்டில் அமர்ந்திருந்தபடி அந்தப் பொறுப்பை நம்பிக்கையோடு பால்ராச்சிடம் ஒப்படைக்கப் பால்ராச்சின் கால்கள் மீண்டும் அந்தக் காட்டினூடே ஓய்வின்றிய அந்தப் பயணத்தைத் தொடக்கியது.

அளம்பிலில் படகு எடுத்து என்னை அனுப்பி வைக்க வேண்டிய பொறுப்பு பால்ராச்சிடம். நாயாற்றுச் சிறுகடலைத் தவிர்த்து இந்தியர்களின் கண்களுக்குள் முட்டுப்படாது பயணிக்க வேண்டும். செம்மலைக்கும் அளம்பிலுக்கும் இடையில் முழுக்காலளவுக்குப் புதையும் அந்தச் சேற்று வெளிக்கால் என்னைச் சுமந்து வந்து படகில் ஏற்றிவிட விடைபெற்றேன் பால்ராச்சிடமிருந்து முதல் பிரிவாக. மீண்டும் சந்திக்கும் வரை.

******

1989 க்குப் பின் வன்னிப் பிராந்தியத்தின் சிறப்புத் தளபதியாக பால்ராச் தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டிருந்தார். இந்தியப் படைகளின் வெளியேற்றமும் இரண்டாம் கட்ட ஈழப்போரின் தொடக்கமும் நிகழ பால்ராச்சின் சுறுசுறுப்பால் வன்னி சூடு பிடிக்கத் தொடங்கியது. 1990 களில் கொக்காவில் இராணுவ முகாம் பால்ராச்சின் தலைமையில் வெற்றிகொள்ளப்பட்டு; சிறிது காலத்திலேயே மாங்குளம் இராணுவ முகாமைக் குறிவைத்து பால்ராச்சும் போராளிகளும் செயற்படத் தொடங்கியிருந்தனர்.

அப்போது போராளிகளுக்கும், மக்களுக்கும் மகிழ்ச்சியை ஊட்டத்தக்க வகையில் மாங்குளம் இராணுவ முகாமை வெற்றிகொள்வதில் பால்ராச் சிறந்ததொரு ஒருங்கிணைப்புத் தளபதியாகச் செயற்பட்டார் எம்மவரிடம் அந்த இராணுவ முகாம் வீழ்ந்து பெரியதொரு இராணுவ வெற்றியைப் பெற்றபோதும் எதிரியிடமிருந்து பெருந்தொகையான ஆயுத தளபாடங்களைக் கைப்பற்றுவதில் எம்மவருக்கு சிக்கல் ஏற்பட்டது. தப்பியோடிய படையினர் தம்வசமிருந்த பெருந்தொகையான ஆயுத தளபாடங்களை மாங்குளம் இராணுவ முகாமைச் சூழவிருந்த ஆழமான கிணறுகளினுள் எறிந்துவிட்டு எஞ்சியவர்கள் தப்பிச் சென்றிருந்தனர்.

நீருக்கடியில் அமிழ்ந்து கிடக்கும் இந்த ஆயுத தளபாடங்களை மீட்பதில் நெருக்கடி நிலை காணப்பட தலைவர் அவர்கள் என்னை அழைத்து சுழியோடியைக் கொண்டு அந்த ஆயுத தளபாடங்களை மீட்டெடுக்குமாறு பணித்தார். வடமராட்சியில் நின்ற வைரப்பாவையும்; அழைத்துக்கொண்டு வன்னியில் பால்ராச்சோடு இணைந்து செயற்பட மீண்டும் இனிமையான எங்களின் சந்திப்பு நிகழ்ந்தது. கடமை முடிய மீண்டும் நாம் பிரிந்தோம்….. மீண்டும் ஒரு களத்தில் சந்திக்கும் வரை.

******

1991 ஆனையிறவுப் பெருந்தளத்தை வீழ்த்துவதற்கான முயற்சியில் நாம் ஈடுபட்டுக்கொண்டிருந்தோம். ஆனையிறவின் தென்பகுதிய+டான படை நடவடிக்கைகளுக்கு தளபதியாக பால்ராச் தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டிருந்தார். பால்ராச்சின் தலைமையில் அந்தத் தாக்குதலில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. வடமராட்சியிலிருந்து வந்த எம்மை ஒன்றிணைத்து ஆகாயக் கடல் வெளி நடவடிக்கையில் அவர் ஈடுபடுத்தினார்.

அது ஒரு தொடர் தாக்குதல் பல முகாம்களையும் வீழ்த்தி ஆனையிறவைக் கைப்பற்ற எடுத்த பாரிய முயற்சி இதற்காக நாம் பல சிறு முகாம்களையும் படைநிலைத் தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டியிருந்தது. பால்ராச் ஓய்வின்றி உழைத்தார். சுற்றுலா விடுதி மீதான தாக்குதல் முதல் அந்த உப்புவெளிக்குள் நீண்டு கிடந்த ஒவ்வொரு காவலரண்களையும் காட்டி அதை வீழ்த்தும் வழி வகைகளை உரைத்து தாக்குதலை மேற்கொள்ள முழுச் சுதந்திரமும் தந்து செயற்பட்ட ஒரு தளபதிக்கேயுரிய அந்தவிதம் பால்ராச்சின்; மீதான நட்பை மரியாதையை அதிகம் உயர்த்திவிட்டது.

ஆகாயக் கடல்வெளி இராணுவ நடவடிக்கையைப் பொறுத்த வரையில் எமது இயக்கம் மேற்கொண்ட முதலாவது மரபு வழிப்போர் நடவடிக்கை. முற்றிலும் எதிரிக்குச் சார்பான அந்தக் களத்தில் பால்ராச் தனக்குக் கீழான படைகளை மிக நேர்த்தியாகக் கையாண்டார். எங்கள் இருவருக்கும் இடையேயான நட்பும் புரிந்துணர்வும் அந்த உப்புவெளிப் பகை முற்றத்தில் தான் வலுப்பெற்றது. சுற்றுலா விடுதி இராணுவ முகாம் மீதான தாக்குதலிலும், சின்ன உப்பளம் மீதான தாக்குதலிலும் பால்ராச்சின் நேரடிக் கட்டளையின் கீழ் கள நடவடிக்கைகள் ஈடுபட்ட அந்த அனுபவம் வித்தியாசமானது.

பால்ராச்சின் ஓய்வின்றிய அயராத அந்த உழைப்பு இரவு-பகலாக நடந்து திரிந்து அவர் காட்டும் அந்தக் கடமையுணர்ச்சியும்; அது உன்னதமான ஒரு தளபதியின் நாட்டுப்பற்றின் உயர் வெளிப்பாடு என்பது மிகையில்லை. அந்த ஆகாயக் கடல் வெளிச் சமரின் பின் தலைவர் அவர்களின் பணிப்பின் பிரகாரம் கடற்புலிகளின் உருவாக்கப் பணியில் நான் ஈடுபட அந்த உப்பு வெளியிலிருந்து நாம் மீண்டும் பிரிந்தோம், அடுத்த சந்திப்பில் மீண்டும் சந்திக்கும் வரை…..

******

பின்னர் போராட்டம் வளர வளர எங்களுடைய சண்டைக் களங்களும் சமர் முனைகளும் விரியத் தொடங்கியது. பல்வேறு சமர்களிலும் பால்ராச் திறம்படச் செயலாற்றத் தொடங்கியிருந்தார். அக்காலங்களில் தளபதி பால்ராச்; பங்கெடுத்து வழிநடத்திய போர்க்களங்கள் ஏராளமானவை. அவை சரித்திரத்தில் என்றும் அழியாப் புகழ் பெற்றவை.

பின்னர் 1995 இல் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமிக்க சிங்களப் படைகள் தமது முழுப் பலத்தையும் வளத்தையும் ஒன்று திரட்டி மூர்க்கமுடன் மோத நாம் தந்திரோபாய ரீதியாக யாழ்ப்பாணத்திலிருந்து விலகினோம். யாழ்ப்பாணத்தில் நிலைபெற்றிருந்த போராட்டத்தளம் வன்னிக்கு இடம் மாறியிருந்தது. அந்தக் காலம் இயக்கத்தின் ஆளணி – ஆயுதவளம் மற்றும் இதர வளங்களை எமது புதிய தளத்தை நோக்கி நகர்த்தும் பெரும் பணி எம்மீது சுமத்தப்பட்டிருந்தது.

அத்தோடு யாழ்ப்பாணத்தில் சிங்களப் படைகளோடு இறுதி வரை ஒரு யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த எமது வீரர்களை வன்னி நோக்கிக் கொண்டுவரும் கடமையும் எம்மிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. சிங்களப்படைகள் யாழ்ப்பாணத்தில் போரிட்டுக் கொண்டிருக்கும் புலிகளை தப்பிச் செல்ல முடியாதவாறு தமது முற்றுகைக்குள் இறுக்கி விட்டோம் என இறுமாந்திருந்தனர். யாழ்ப்பாணத்தில் நின்ற பால்ராச் சிங்களப்படைகளுக்கு எதிரான அந்தச் சமரை அவர் எதிர்கொண்டு விட்டு சாதாரண படகு மூலம் எந்தப் பதற்றமும் இன்றி எதிரியின் கடும் தாக்குதலுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணக் கடல் நீரேரியூடாக வன்னி திரும்ப அந்தக் கடற்கரையில் நாம் சந்தித்து பிரிந்தோம் மீண்டும் சந்திக்கும் வரை…..

******

அதன் பின் பால்ராச்சிடம்; முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான ஓயாத அலைகள் ஒன்று இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் பொறுப்பை தலைவர் ஒப்படைத்தார். அந்தத் தாக்குதலை வெற்றிகரமாக மேற்கொள்ள வேண்டுமென்பதில் அவர் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். முல்லைத்தீவு கடலோரமாக அமைந்திருந்த அந்த இராணுவ முகாமை வீழ்த்துவதற்கான வியூகத்தில் கடல் சார்ந்த பெரும் பணியை என்னிடம் தலைவர் அவர்கள் ஒப்படைத்திருந்தார்.

முல்லைத்தளம் பெருங்கடலின் கரையோரம் விஸ்தரிக்கப்பட்டிருந்த காலம். அத்துடன் அந்தத் தளத்தை போராளிகள் சுற்றிவளைத்து. தாக்குதலை மேற்கொள்ளும் அந்தவேளை தளத்திற்கான கடல்வழி விநியோகத்தை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். அத்துடன் தளத்திற்கு மேலதிகமாக எந்த ஆதரவும் கிட்டாது தடுக்க வேண்டும். அந்தக் கடினப் பணியை நாம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. மிக முக்கியமான கால கட்டம் ஒன்றில் வெற்றி கொள்ளப்பட்டேயாக வேண்டிய ஒரு படைத்தளம் மீதான தாக்குதல் அது.

ஓயாத அலைகள் ஒன்றின் ஒருங்கிணைப்புத் தளபதியாக பால்ராச் செயற்படக் கடலிலும் தரையிலுமாக எமக்கிடையே மீண்டும் ஒரு இணைவு. நம்பிக்கையை வெற்றியாக்கி படையினரைக் கொன்று பெருந்தொகையில் படைய வளங்களை கைப்பற்றிய அந்தச் சமரில் நாம் பல நாட்கள் இணைந்து பணியாற்றினோம். நித்திரையைத் தொலைத்துவிட்டு வரைபடத்தின் மேலேயே குந்தியிருந்து சின்னச்சின்ன உறுத்தல்களை அகற்றி வெற்றியை எமதாக்கிய அந்தச் சமரின் முடிவில் நாம் மீண்டும் பிரிந்தோம் கடமைகளுக்காகக் கடலிலும் தரையிலுமாக… அடுத்தமுறை சந்திக்கும் வரை….

******

அதற்குப் பின் எத்தனையோ சண்டைகள்…. சமர்கள்…. நீள…. நீள…. நாங்கள் குடாநாட்டில் நிலைகொண்டிருந்த சிங்களப்படை பெரு முயற்சி செய்தது. பலாலியில் இருந்த எறிகணைக் கையிருப்புகள் முடிந்து போகுமளவுக்கு அந்தப் பெட்டிக்குள்ளே குண்டுகளை வாரியிறைத்தன சிங்களப் படைகள். குடாநாட்டுப்படையிடமிருந்த டாங்கிகள் அனைத்தும் தூணளவு நீளக்குண்டுகளுடன் பெட்டியைத் துவம்சம் செய்யப் படாதபாடுபட்டன. நாற்பதாயிரம் சிங்கங்கள் நடுவே ஆயிரத்து இருநூறு புலிகளைச் சீறவைத்து – தமிழரின் வீரத்தை உலகிற்கு வெளிப்படுத்திக் காட்டினார் மாவீரன் பால்ராச்.

34 நாட்கள் இரவும் – பகலுமாகத் தொடர்ந்து நடந்த அந்தப் பெட்டிச் சண்டையின் முடிவில், ஆனையிறவுத் தளம் இடம்பெயர்ந்தோட வேண்டிய நிலை எழுந்தது. ஓடிய படையினர் வேட்டையாடப்பட்டனர். ஆனையிறவுத் தளத்தில் நிலைகொண்டிருந்த சிங்களத்தின் 57 ஆவது டிவிசன் படையணி சிதைந்து – அழிந்து செயற்பட முடியாத நிலைக்குள் செல்லுமளவுக்கு வேட்டையாடப்பட்டது. ஆனையிறவுப் படையினர் தளத்தைக் கைவிட்டோடிய பின்னர்; அந்த வழியே திரும்பி வந்த பால்ராச்சைப் பெருமிதம் பொங்க இரு கைகளையும் பிடித்து – கைகுலுக்கி வரவேற்றார் தலைவர்.

குடாரப்பில் இறங்கி நடக்கமுடியாத கால்களுடன் சதுப்பு நிலத்திற்குள்ளால் பால்ராச் அவர்கள் நடந்து சென்றபோது பிடித்த ஒளிப்படம் ஒன்றைத் தலைவர் தன் பணிமனையின் சுவரில் மாட்டி இந்த மாவீரனை, அவன் உயிருடன் இருந்தபோதே கௌரவித்துவிட்டார். பால்ராச் அவர்களின் இதயம் வீரத்தாலும் – ஓர்மத்தாலும் இறுகிக் கிடந்தது. ஒவ்வொரு களத்திலும் அதை நாங்கள் கண்டோம். கண்டு மெய்சிலிர்த்தோம். அந்த வீர இதயத்தில் போதியளவுக்கு ஈரமும் இருந்தது. மக்களை அவர் உணர்வுபூர்வமாக நேசித்தார். இவருக்காக உயிர் கொடுக்கும் அளவுக்குப் போராளிகளின் அன்பைச் சம்பாதித்தார். தலைவரின் நேசத்தையும் வென்றெடுத்தார்.

இவ்விதம் தமிழினம் பெருமையடையும் வீரத்தையும் – போராளிகள் – மக்களின் பாசத்தையும் சம்பாதிக்கத் தெரிந்த அந்த இதயத்திற்குத் தனது துடிப்பைத் தொடரத் தெரியாமற் போய்விட்டது. அவருக்கு வந்த இதய நோயை நம்பவே முடியவில்லை. கற்கால மனிதன் போல பகல் முழுவதும் ஓடியோடி காடு மேடெல்லாம் நடந்து திரிந்த அந்த ஓய்வற்ற உழைப்பிற்கு இடமளித்த அந்த வலிமையான இதயம், இடைநடுவில் திடீரென இயங்க மறுத்த கதை ஏமாற்றமும் – சோகமும் நிறைந்தது. இதயம் பலவீனப்பட்ட போதும்; இந்த மாவீரனின் வீரம் பாதிக்கப்படவில்லை. களச் செயற்பாடுகள் சோர்வு நிலையை அடையவில்லை. ஓய்வெடுக்கச் சொல்லித் தலைவர் ஆலோசனை கூறியும் அதை அவர் கேட்கவில்லை.

20 வருடப் போராட்ட வாழ்வில் தலைவர் சொல்லியும் செய்யாத ஒரேயொரு விடயமாக அதுவே இருந்தது. என்னோடு தோளோடு தோள் நின்று களமாடிய போராளிகளில், எனது வழிநடத்தலில் களமாடிய போராளிகளில் பல நூற்றுக்கணக்கானோர் வீரச்சாவடைந்து விட்டனர். இவர்களில் கணிசமானோரின் வித்துடலை நான் பார்த்து இறுதி வணக்கம் செலுத்தியிருக்கின்றேன், அப்போதெல்லாம் நான் கண் கலங்கியதில்லை. சோகத்தை நான் எனது தொண்டைக்குள்ளே அடைத்துக்கொள்வேன். எனது கூடப்பிறந்த தம்பி வீரச்சாவடைந்த போதும் நான் வெளித்தெரிய அழவில்லை.

ஆனால், பால்ராச் அவர்களின் வீரவணக்க நிகழ்வில் அவரின் வித்துடலைப் பார்த்தபடி அவருக்கு இறுதிப் பிரியாவிடை கொடுக்கச் சில வார்த்தைகளை உச்சரித்தபோது, நான் அழுது விட்டேன். பால்ராச் என்ற மாவீரனை இழந்த சோகம் மட்டுமல்ல அந்த அழுகைக்குக் காரணம், நான் என் கண்களால் கண்டு இரசித்த ஒரு வீரத்தின் சின்னத்தை இழந்த துயரமும் சேர்ந்துகொண்டது. என்னை ஒரு தளபதியாகக் களத்தில் அருகிருந்து வளர்த்துவிட்ட நன்றி உணர்வு எனது மனதில் கொப்பளித்தது. அவர் வளர்த்துவிட்ட வீரத் தளபதிகள் அவரது வித்துடலைப் பார்த்துக் கண்ணீர் சொரிந்ததையும் என்னால் சகிக்க முடியவில்லை. எல்லாம் சேர்ந்து என்னை நிலைகுலைய வைத்துவிட்டன. அதன் வெளிப்பாடாக அழுகையும் வந்தது.

பால்ராச் என்ற சொல் வீரத்திற்கு ஒத்த சொல்லாக எங்களது போராட்ட அகராதியில் இடம்பிடித்து விட்டது. அந்தளவுக்கு எமது போர் வரலாற்றில் ஒரு வீர அத்தியாயத்தைப் பதிவாக்கி விட்டுச் சென்றுள்ளார் பிரிகேடியர் பால்ராச். அவர் காட்டிய வீரத்தையும் – அர்ப்பணிப்பையும் – ஆளுமையையும் – உழைப்பையும் எங்களுடைய செயற்பாட்டிற்குள் எடுத்துக்கொள்வதே; பிரிகேடியர் பால்ராச்சிற்கு நாங்கள் செலுத்தும் பொருத்தமான அஞ்சலியாக இருக்கும்.

-கேணல் சூசை
ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 12ம் ஆண்டு நினைநாள் இன்றாகும்
ஆழிப்பேரலை காவுகொண்ட அனைத்து உறவுகளையும் நாம் என்றும் மறவோம். இக்கொடூர பேரலையில் உயிர் நீத்த எமது அனைத்து உறவுகளையும் நினைவு கூருவதுடன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.
கடலை நம்பி வாழ்ந்த மக்களை கடலே கொன்றொழித்த சுனாமிப் பேரலை 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் நாள் இந்தோனேசியாவின் சுமாத்திராதீவில் பெரும் குமுறலாக எழுந்து இந்தோனேசியா தமிழீழம், சிறிலங்கா, தமிழ்நாடு உட்பட்ட சில நாடுகளை தாக்கி மிக நீண்ட கடற்கரையோர நிலங்களை அழிவுசெய்து சில மணிநேரத்திலேயே அடங்கிப்போனது. தமிழீழத்தில் முல்லைத்தீவு அம்பாறை மட்டக்களப்பு யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் கரையோரப்பிரதேசங்கள் சுனாமிப்பேரலையால் தாக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் கடலால் அள்ளுண்டு போயினர்.இதில் முல்லைத்தீவில் அதிகளவிலான மக்கள் கொல்லப்பட்டனர். தமிழீழத்தில் பலிகொள்ளப்பட்ட மக்களின் தொகை இருபதாயிரம் ஆகும்.
உலகின் கண்துடைப்பிற்காக சிறி லங்கா இனவெறி அரசு சில உதவிகளை அனுமதித்தது. ஆனால், முழுமையான மீள்கட்டுமானத்திற்கான வேலைகளைத் தடுத்தே வந்தது.ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களை மனித நேயத்தைப் புதைத்துவிட்டு நோக்கிய சிறி லங்காவைப் பற்றி எடுத்துக் கூறினால் அதுவே ஒரு பெரும் தொடராகி விடும். சிறி லங்கா அரசாங்கமோ “மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிக்க, மாடேறி மிதித்தவன் மேல் மரத்தைத் தறித்து வீழ்த்துவதற்கு” ஒப்பான காழ்ப்புணர்வு கொண்ட வேலைகளையே செய்தது.
ஆனால் ஆழிப் பேரலையின் அழிவிற்குப் பின்னர் தனிநாட்டிற்குரிய பண்போடு அன்று எப்படித் தமிழீழ விடுதலைப் புலிகள் மீட்புப்பணியில் ஈடுபட்டார்களோ அதேபோன்று அர்ப்பணிப்பு உணர்வுடன் தமிழரிற்காக வேறு யாரால் செயற்பட முடியும்? 2004 ஆம் ஆண்டு மீட்புப் பணியில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் பணிகளை வெளிநாடுகளில் உள்ள பல ஊடகங்களும் பாராட்டின. முல்லைத்தீவிற்கு 03 சன. 2005 அன்று அழிவுகளைப் பார்வையிட சென்ற அன்றைய யுனிசெப் தலைமை இயக்குநர் கரோல் பெலாமி தமிழீழ விடுதலைப் புலிகளின் மீட்புப் பணியையும் நிவாரண வழங்கலில் உள்ள திட்டமிடலையும் வெகுவாகப் பாராட்டினார்.அமெரிக்காவில் ~சிக்காக்கோ றைபியூன|; பத்திரிகை 07.01.05 அன்று தமிழீழ நிர்வாகத் திறமையைப் பட்டியலிட்டதுடன் தனிநாட்டிற்குரிய செயற்பாடுகளைக் கொண்டதெனவும் விபரித்தது இங்கு சுட்டிக்காட்ட வேண்டியது .
தமிழீழ விடுதலையை , தமிழ் மக்களின் சுதந்திரத்தை வென்றெடுக்க தமிழீழ விடுதலைப் புலிகள் தமது உயிர்களை அர்ப்பணித்து போரிட்டினர் . சிங்கள இனவெறி அரசின் கண்மூடித்தனமான எறிகணைகளால் , நச்சுக் குண்டுகளால் தமது உயிர்களை மட்டும் காவி கடலோரம் ஓடிச் சென்ற தமிழ் மக்கள் நீர் நிறைய மலை போல அவர்களின் உடல்கள் குவிந்தன . அதுவே 2009 இல் சிங்கள அரசு மற்றும் சில வல்லரசு நாடுகள் தமிழர்களை அழிக்க உருவாக்கிய செயற்கை சுனாமி .
நிச்சயமாக சுனாமியால் ஏற்பட்ட காயம், வடு இன்னும் மாறாமல் மக்கள் மனதை விட்டு நீங்காமல் பதிந்துவிட்டது. நம்மால் சொத்தை இழந்தவர்களுக்கு பண உதவி புரியலாம். ஆனால் தன் சொந்தத்தை இழந்து உயிருடன் ஜடமாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் நம் மக்களுக்கு, இறந்து மண்ணுக்குள் மறைந்து போன நம் உறவுகளுக்கு நம்முடைய பிரார்த்தனைகளை தவிர வேறென்ன அதற்கு ஈடாக கொடுக்க முடியும்.

ஆழிப்பேரலை
ஆணவம்கொண்டே
அசுரத்தனமாக
கரையோர மக்களையெல்லாம்
காவுகொண்டாயே...!

ஆண்டுகள் பலகடந்தாலும்
எண்ணும் போது உள்ளம்
இன்னும் பதைபதைக்கிறது
துயரம் தாங்காது
கண்கள் பனிக்கிறது...!

இன்னுமொரு இன்னிலை
வராதிருக்க வழிபடுகிறோம்
ஆழித்தாயே.
சினம்கொண்ட சீற்றம் வேண்டாமே
சீரான மக்கள் வாழ்வை
சிதைத்திடாது
அமைதிகாத்திருந்திடவே...!

எத்தனை எத்தனை உயிரிகள்
இரவோடு இரவாய்
கண்முன்னே காவுகொண்டாய்
அத்தனை உயிர்களுக்குமாய்
ஆண்டவனை வேண்டுகிறேன்
ஆத்மசாந்தியடையட்டும்...
சாந்தி சாந்தி....!!

ஆக்கம் ஜெசுதா யோ

மார்கழித் திங்கள் 25 ஆம் நாள் உலகப்பெருநாள். அந்த உன்னதத் திருநாளன்று தான் இந்த உத்தமன் தன்னினத்திற்காக உயிர் நீத்து தியாகியாகினார். புனிதனை நினைந்து உருகிய வேளையில் புனிதம் நிறைந்த இடத்தில் தன் இன்னுயிரை ஈகம் செய்து ஜோசப் பரராஜசிங்கம் மாமனிதரானார்.
தன் வாழ்வு துறந்து பிறர்க்கென வாழும் பெருந்தகைகளால் வாழும் இவ்வுலகென்பார்கள். எத்தனை அழிவுகளைச் சந்தித்தபோதும் இந்த மண்வாழ்கிறதென்றால் அமரர் ஜோசப்பரராஜசிங்கம் போன்ற மாமனிதர்களது தியாகத்தாலேதான் என்றால் மிகையாகாது.
“தமக்கென முயலா தோன்தான்… பிறர்க்கென முயலுநர் உண்மையானே”
மேற்படி கூற்றுக்கு இப் புறநாநூற்றுப் பாடல் சான்று பகிர்கின்றது.
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்
தமிழீழம் ( மட்டக்களப்பு மாவட்டம் )
தாய் மண்ணில் : 26-11-1934
தாயக மண்ணில் : 25-12-2005
அவரோர் அரச ஊழியர். சினிமாத் துறை வாணிபத்தில் சிறப்புற்று விளங்கியவர். இவ்வளவோடு நின்றிருந்தால் கோடீஸ்வரராக வாழ்ந்திருப்பார்.
கொள்கை கோட்பாடுகள் நிறைந்த இலட்சியம் கொண்டது தமிழ்த் தேசிய அரசியல். இது மலர்ப்படுக்கை அரசியல் அல்ல. மாறாக இது வோர் முட்படுக்கை. முட்படுக்கை அரசியலை முழுமனதோடு ஏற்றுக்கொண்டே நெருப்பாற்றைக் கடக்க முன்வந்தவர்.
1934 ஆம் ஆண்டு கார்த்திகைத் திங்கள் 26 ஆம்நாள் இந்த மண்ணில் தோற்றம் பெற்றவர் 1952 களில் தன்னுடைய 18 ஆவது அகவையில் தந்தை செல்வாவின் அரசியல் பாசறையில் இணைந்து கொண்டார்.
தனிச் சிங்களமொழிச் சட்டத்தை எதிர்த்து 1956 ஆம் ஆண்டு தந்தையவர்கள் தமிழ்த் தேசம் தழுவிய மிகப்பெரிய அறவழிப்போரை ஆரம்பித்தார். அன்றைய நாள் அமரர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் திருமண தினமாக விருந்தபோதும் அந்த அறப்போரில் களமாடி மகிழ்ந்தாரென்றால் அவர் கொண்டிருந்த இனப்பற்றை என்னவென்று சொல்வது.
அமரர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் பாரிய சவால்களை இவ்வரசியல் வாழ்வில் எதிர்கொண்டார்.
1972 ஆம் ஆண்டு இலங்கையைக் குடியரசாக்கியது ஈழத்தமிழினத்தை அரசியல் அனாதையாக்கியது. அறப்போர் தீவிரமடைந்தது. அறப்போரின் வெக்கை தாங்கமுடியாது அப்போதிருந்த சிறிமாவோ அவர்களின் அரசாங்கத்தின் மட்டக்களப்பு அரசியல் அதிகாரி ஜோசப் அவர்களை நுவரெலியா மாவட்டத்திற்குத் தூக்கியெறிந்தார். ஆனால் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களோ அரசாங்கப் பதவியை உதறித் தள்ளி முழுநேர அரசியலுக்குள்காலூன்றினார்.
இந்திய அமைதிப்படை நிலைகொண்டிருந்தகாலத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டார் என்ற காரணத்திற்காக ஜோசப்பரராஜசிங்கம் அவர்களை விடுதலைப் புலிகள் அழைத்துச் சென்றனர்.
தங்களது தவறுக்காக வருந்தி அவரை விடுவித்தனர்.அப்போது சொந்தங்களெல்லாம் “வேண்டாம் இந்த விபரீத அரசியல்அதிலிருந்து ஒதுங்குங்கள்” என்று அவரை வற்புறுத்தினார்கள். ஆனால் அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார்.
2004 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களையெல்லாம் விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்த கருணா அணியினர் தங்கள் பகுதிக்கு அழைத்தனர்.
“வடகிழக்கென்ற தமிழ்த்தேசிய அரசியல் இனி எமக்கு வேண்டாம். மட்டக்களப்பென்ற அளவோடு இனி அரசியல் அமைய வேண்டும்” என்று கட்டளை பிறப்பித்தார்கள்.
“இயக்கங்கள் உருவாகும் முன்பே தந்தை செல்வாவின் தலைமையையேற்று அரசியலுக்குள் வந்தவன். வட கிழக்கு என்ற தமிழ்த் தேசிய அரசியலிலிருந்து இம்மியளவும் என்னால் விலக முடியாது” என்று ஜோசப்பரராஜசிங்கம் அவர்கள் பதிலுரைத்தார். அன்றிலிருந்து பாரிய கொலை அச்சுறுத்தல்களுக்கு ஆளானார். இதற்கெல்லாம் சற்றும் மசியாதவராகத் தேர்தலில் போட்டியிட்டார்.
தங்கத்தை உரசித் தரம் பார்ப்பதுபோல் அவரது இலட்சிய வேட்கைக்கு ஏற்பட்ட சோதனைகள் இவையாகும்.
இவை எதற்குமே அஞ்சாத நெஞ்சினனாக அரசியல் புனிதம் காத்தார். தானேற்ற இலட்சியத்திற்கும் தலைமைக்கும் விசுவாசமாக வாழ்ந்ததனால் தந்தை செல்வாவால் ஏற்படுத்தப்பட்ட ஒற்றுமை அணியான தமிழர் விடுதலைக் கூட்டணியின்சிரேஷ்ட தலைவரானார். தான் மட்டுமல்லாது தனது மனைவி சகிதம் அறப்போர் அரசியல் கண்ட பெருமைக்குரியவர்.
சர்வதேச மனிதவுரிமை அமைப்புகளோடு நெருக்கமான உறவுகளைப்பேணி அவ்வப்போது நடைபெற்ற மனிதவுரிமை மீறல்களையெல்லாம் சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தவர். பல படுகொலை அத்தியாயங்களைக்கண்டது தமிழர் விடுதலைப்போராட்ட வரலாறு. அத்தனை படுகொலைகளையும் சர்வதேச மனிதவுரிமை அமைப்புகளில் பதிவு செய்தவர் அவர்.
கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள் நடந்தபோது அவர் ஓயாது சற்றும் தளராது மேற்கொண்ட அழுத்தத்தினால் அப்போதிருந்த பிரேமதாச அரசாங்கம் அந்தப் படுகொலைகளை விசாரிக்க விசாரணைக்குழுவை அமைத்தது.
தமிழினம் சந்தித்த அனர்த்தங்களிலிருந்து மக்களுக்குச்சற்று ஆறுதலளிக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை வரவழைத்தவர். அவ்வமைப்பின் முதலாவது கூட்டம் அவரது இல்லத்திலேயே நடைபெற்றது.
மத்திய முகாம் பகுதியிலே கோணேஸ்வரி என்ற தமிழ்ப் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு அவரது பெண்ணுறுப்பிலே குண்டு வைத்துத் சிதைக்கப்பட்ட கொடூரமறிந்து சீற்றம் கொண்டவர் உலகரங்கிலே மட்டுமல்லாது இங்கும் மிகவும் காரசாரமாகக் கண்டித்துக் குரலெழுப்பிக் கொண்டிருந்தார். அதன் நிமித்தம் அந்த விசாரணை நடைபெற்ற கல்முனை நீதிமன்றச் சாட்சிக் கூண்டில் மண்ணுக்கு விடை கொடுக்கும் வரை ஏறி இறங்கிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடக்கூடிய அம்சமாகும்.
ஐ.நா.ச.இன் மனிதவுரிமை ஆணைக்குழு ஈழத்தில் போர்க்குற்ற விசாரணை வேண்டி நிற்கும் இந்தக்காலகட்டத்தில் ஈழத்தமிழர்களின் மனிதவுரிமைக் காவலன் அமரர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் இல்லாதிருப்பது தமிழர்களுக்கெல்லாம் பெரும் கவலையாகும்.
பாராளுமன்றப்பிரவேசம்
1989 இல் நடைபெற்றபொதுத் தேர்தலில் தோல்வியடைந்தபோதும் இடையிலே ஏற்பட்ட ஒரு வெற்றிடத்தினால் அவர் பாராளுமன்றப் பிரதிநிதியானார்.
அவர் ஆற்றிய அளப்பரிய சேவையினால் 1994 ஆம்ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் 48000 வாக்குகளுக்கு மேல் பெற்று மட்டக்களப்பின் முதலாவது பாராளுமன்றப் பிரதிநிதியாக அவரை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்.
மூன்று மொழிகளிலும் விற்பன்னர். மொழி ஆளுமை மிக்கவர். பாராளுமன்றத்தில் அவரது கட்சியின் பிரதம கொறடாவாகப் பணியாற்றினார். அவரது பேச்சுக்கள் அனைத்தும் மக்களது வரவேற்பைப்பெற்றன. பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றல்லாமல் அமைச்சர்கள் பிரதமர் ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரதும் நல்லெண்ணத்தைப் பெற்றவர். அவரது இறுதி நிகழ்வில் பங்குகொண்ட அனைவரும் அவரை அவ்வாறே புகழ்ந்துரைத்தார்கள்.
இயல்பாகவே தன்னிடமிருந்த எழுத்து வல்லமையோடு பத்திரிகைத் துறையினுள்ளும் தன்னைச் சேர்த்துக்கொண்டு இதழியல் சேவையைத் தொடர்ந்தார். “சுகுணம் ஜோசப்” என்ற பெயரில் அப்போது பிரபல்யமாக விளங்கிய தினபதி சிந்தாமணி போன்ற பத்திரிகைகளில் பத்திகள் புனையத் தொடங்கினார். ஆய்வுகள் நிறைந்த பத்திகள் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.
எழுதுவதோடு விட்டுவிடாமல் கிழக்கிலங்கைப் பத்திரிகையாளர் சங்கம் கண்டு அதன் தலைவராகப் பணிபுரிந்து இதழியல் சேவையின் உயர்வு கண்டவர் 71 ஆண்டுகள் இம்மண்ணிலே தமிழர்க்காக வாழ்ந்து தமிழ் மண்ணிலே வித்தாகிய மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் பல்லாளுமை கொண்ட மக்கள் தலைவன். இப்பேற்பட்ட விசுவாசம்மிக்க தலைமையைப் பறிகொடுத்த தேனாடு அப்படியொரு தலைவன் வருகைக்காகக் காத்திருக்கிறது!
நத்தார் தினத்தன்று இரவுத் திருப்பலியிற் கலந்துகொண்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஜோசப் பரராசசிங்கம் அவர்கள் திருப்பலியில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் மனைவியுட்பட மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.
இவர் தீவிர விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்று அறியப்படுபவர். இக்கொலைக்குக் காரணமானவர்கள், சிறிலங்காவின் இராணுவப் புலனாய்வுத் துறையினரும் அவர்களின் கைக்குகூலிகளாக இயங்கிவருபவர்களுமே. குறிப்பாக ஒட்டுகுழு அமைச்சர் கருணா.
தன் நண்பர்களுக்காகத் தன் உயிரையும் தருபவனிடமுள்ளதை விடவும் மகத்தான அன்பு வேறெவரிடமும் இருக்க முடியாது.
பைபிளின் மிகவும் அழகிய இந்த வாசகத்திற்கு மிகப் பொருத்தமான ஒரு மனிதர் மறைந்த திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள். அதனாற் தான் தேசியத்தலைவரால் மாமனிதர் என்ற விருதும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
மண்ணையும் மக்களையும் நேசித்த ,குறிப்பாக ஆக்கிரமிப்பாளரின் கொடுமைகள் மிகுந்த தென்தமிழீழத்தின் வாழ்விலும் தாழ்விலும் பங்கெடுத்த ஒரு நல்ல ஆன்மாவின் துடிப்பு ஆயுதமுனையில் அடக்கப்பட்டிருக்கிறது.தேசத்தை நேசிப்பவர்களுக்கு மரணத்தைப் பரிசாகக் கொடுப்பது காலகாலமாக இங்கே நடந்துவருகின்றதெனினும் ஜோசப் பரராஜசிங்கத்தின் பலியெடுப்பிற்கு ஆக்கிரமிப்பாளர்கள்; குறித்த நாள், மக்களின் ஈடேற்றத்திற்காகத் தன்னைச் சிலுவையில் ஒப்புக் கொடுத்ததாகச் சொல்லப்படும் யேசுபாலன் பிறந்த நாள்.
அவரின் பலியெடுப்பிற்கு அவர்கள் குறித்த இடம் தேவனின் திருச்சபை. தமிழினத்தின் அழிவொன்றையே நித்தம் உருப்போடுவதைத் தவிர வேறெந்த சிந்தனையும் அற்றவர்களால் தான் இந்த ஈனச்செயலை அதுவும் இவ்வாறான ஒரு நாளிற்; செய்யமுடியும். விடுதலைப்புலிகளின் முக்கிய பிரமுகர் க.வே. பாலகுமாரன் சொன்னது போல் இத்தகைய ‘விழி திறக்காதவர்களுக்காக திரு. ஜோசப் தன் விழிகளை மூடியிருக்கிறார்’.
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்பத்திரிகையாளனாகத் தொடங்கி தமிழபிமானத்தால் அரசியல்வாதியாகி, வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெறுகின்ற மனிதஉரிமை மீறல்களை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் என்ற வகையில் அரசின் கவனிப்பைப் பெற்றவர் திரு.ஜோசப் பரராஜசிங்கம்.
தமிழரசுக்கட்சி,தமிழர் விடுதலைக்கூட்டணி என்று தனது அரசியற்பணியை ஆரம்பித்து ஆயதப்போராட்டம் முனைப்புப் பெற்ற இன்றைய காலம்வரை பல தசாப்தங்களைக் கண்டவர். இன்றைய நெருக்கடியான சூழலில் ஆங்கிலப் புலமை வாய்ந்த திரு.ஜோசப்பின் குரலை நிறுத்துவது சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகமிக அவசியமானதொன்றாக இல்லாவிடின் கிறிஸ்துமஸ் தினத்தையும் புனித மரியாள் தேவாலயத்தையும் கொலைக்காகத் தேர்வு செய்திருக்கமாட்டார்கள். ஒரு பாராளுமன்ற ஜனநாயக வாதியாகவும் மனித உரிமைகள்வாதியாகவும் பார்க்கப்பட்ட திரு.ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உலக நாடுகளோ, சர்வதேச அமைப்புகளோ நாம் அறிந்த வரையில் அனுதாபமோ கவலையோ வெளியிடவில்லை.
கதிர்காமர் கொலையையடுத்து வெறும் அனுமானங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விடுதலைப்புலிகளுக்கெதிராகத் தடைகளைக் கொண்டுவர முயற்சித்த சர்வதேச அபிப்பிராயம், கருணை வழியவேண்டிய நாளொன்றில் காவு கொள்ளப்பட்ட உயிரை ஏன் கண்டுகொள்ளவில்லை?
ஜனநாயகப் பண்புகளுக்கமைய நாடாளுமன்றம் சென்று அடிவாங்கிய வரலாறு தமிழினத்திற்கு நிறையவே உண்டு.காலிமுகத்திடலில் அமைதியாகக் கூடிய சத்தியாக்கிரகிகள் மீது தடியடிப்பிரயோகம் செய்ததிலிருந்து மாமனிதர் குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்டது வரை நடந்தேறிய அட்டூழியங்களையெல்லாம் மேற்குலகம் காணவில்லையா?
ஜனநாயகஆட்சியின் பண்புகளில் ஒன்றென மேற்குலகம் கூறும் கருத்துச் சுதந்திர உரிமை தமக்கும் உண்டென நம்பி உண்மைகளை வெளிக் கொணரப் பாடுபட்ட நடேசன், நிமலராஜன்,மாமனிதர் சிவராம் போன்றோரின் படுகொலைகளை மேற்குலகம் அறியவில்லையா?
குறிப்பாக தராக்கி சிவராம், குமார் பொன்னம்பலம் போன்றோர் மேற்குலகின் பார்வைப்பரப்புள் வரும் கொழும்பைத் தளமாகக் கொண்டது மேற்குலகின் மீது கொண்ட நம்பிக்கையாலல்லவா?
ஆந்த நம்பிக்கை மீது மண்விழவில்லையா ? இவை யாவற்றிலிருந்தும் புலப்படும் உண்மை: விடுதலை கோரிப் போராடும் இனம் தனிமைப்படுத்தப்படும்;;உலகின் அக்கறை கோரி அவர்கள் எழுப்பும் குரல் யாருமற்ற வனாந்தரத்தில் ஒலிக்கும் தீனக்குரலாகி ஓயும் என்பதே.
மீண்டும் மீண்டும் உணர்த்தப்படும் இந்த உண்மைகள் திரு. ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை மூலம் மீள அரங்கேறியுள்ளன.
மணலுள் தலை புதைத்த தீக்கோழிகளாய் உண்மையான களநிலையைக் காணமறுக்கும் அல்லது மறக்கும் சர்வதேச அபிப்பிராயம் குறித்த கவலைகளை ஒதுக்கிவிட்டு மண்ணுக்காய் மரித்தவர்களின் அபிலாசைகளைக் கணக்கிலெடுத்து முன்னகர்வதே நாம் அவர்களுக்குச் செய்யும்
வயகரா அவ பார்வை பட்டு - உடலை
நயாகராவா மாத்திப் புட்டா சின்னச்சிட்டு
அரோகரா நான் பாடிக் கிட்டு
அவ நினப்புல அலைகிறேனே
காதல் நோயில் மாட்டிக்கிட்டு

கரகரன்னு கத்துதென்தன் இதயம் உள்ள
குறு குறுன்னு பார்த்து - என்னை
கதற வைச்ச பாதகிய நான் என்ன சொல்ல..
சர மழையா பொழியுது கண்ணீர் மெல்ல
சாகடிக்கப் பாக்கிறாளே கன்னிப் புள்ள

சிலை வடித்தேன் நித்தமும் - நான்
சித்திரமே நித்திரையில்
சிறை பிடித்து - என்னை
வதைக்கிறியே இத்தரையில்

கருங் கூந்தல் கலைத்து
கருத்தெரிக்கிறது இரு கண்கள்
காதல் கவியேந்தி வந்தேன்
கண்ணே நானுந்தன் 
உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் புனித அஸ்தி!
"தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளான கடந்த 14-12-2016 அன்று உலகத் தமிழர் வரலாற்று மையத்திற்கு அவரது புனித அஸ்தி கொண்டுவரப்பட்டுள்ளது.
தாயகத்திற்கு கொண்டு செல்வதற்கு என 2006 இல் எடுத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களின் புனித அஸ்தியின் ஒரு பகுதியே தற்போது தமிழீழ மாவீரர் பணிமனையிடம் (ஐக்கிய இராச்சியம்) கையளிக்கப்பட்டுள்ளது.
மாவீரர்களுக்கான நிலம் பிரித்தானியாவில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் பங்களிப்புடன் சொந்தமாக வாங்கப்பட்டுள்ள நிலையில், தமிழீழ மாவீரர் பணிமனையின் ஒழுங்கமைப்பில் அங்கு மாவீரர்களுக்கான துயிலும் இல்லம் அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் அறிவீர்கள்.
கடந்த 2016 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து உணர்வோடு கலகந்துகொண்டிருந்தமையும், மாவீரர்களுக்கு துயிலும் இல்லம் அமைய வேண்டும் என்பதில் அவர்கள் கொண்டிருந்த உறுதியும், அதற்காக அவர்கள் எமக்கு அளித்த ஒத்துழைப்பும், உதவிகளும் அளப்பரியது.
உலகத் தமிழர்களின் வரலாற்றை பறைசாற்றுகின்ற ஒரு தளமாகவும், ஈழத் தமிழர்களின் போரியல் வாழ்வையும், வரலாற்று தொன்மைகளையும் எடுத்தியம்பும் அருங்காட்சியகமாகவும் எதிர்காலத்தில் திகழவுள்ள "உலகத் தமிழர் வரலாற்று மையத்தில்" மாவீரர் துயிலும் இல்லத்திற்கான பகுதியில் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கும் சிறந்ததோர் வரலாற்று பதிவை ஏற்படுத்தக்கூடிய வகையில் நிகழ்ச்சி ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், அவரது புநித அஸ்தி இங்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. பொருத்தமான ஒரு நாளில் முன்னறிவித்தலுடன் ஓர் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், உரிய மரியாதையுடன் பாலா அண்ணாவின் புனித அஸ்தி விதைக்கப்படும் நிகழ்வு பிரமாண்டமாக இங்கு இடம்பெறும் என்பதை உலகத் தமிழர்களுக்கு தமிழீழ மாவீரர் பணிமனை அறியத் தருகின்றது.
பிரித்தானியாவில் இடம்பெற்ற "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் உட்பட இம்மாத மாவீரர்கள், மற்றும் பொதுமக்களுக்கான நினைவு வணக்க நிகழ்வு!
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் உட்பட்ட இம்மாத (மார்கழி) மாவீரர்களுக்கும், மாமனிதர் யோசப் பரராஜசிங்கம் உட்பட அன்னிய சிறீலங்கா படைகளால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்குமான நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் இடம்பெற்றது.
தமிழீழ மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரித்தானியாவில் அமைந்துள்ள (oxford) உலகத் தமிழர் வரலாற்று மைய மாவீரர் மண்டபத்தில் இந்த நிகழ்வு நேற்று (18-12-2016) ஞாயிறு மாலை 4:00 மணிக்கு இடம்பெற்றது.
திரு. வேணுகோபால் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுச் சுடரினை கிலிங்டன் தமிழ் பாடசாலை நிர்வாகி (தமிழ் கல்விக்கூடம்)
திருமதி. சசிகலா நிரூபன் அவர்கள் ஏற்றிவைக்க நிகழ்வுகள் ஆரம்பமானது.
அடுத்து, பிரித்தானியத் தேசியக் கொடியை தொழில்கட்சி உறுப்பினரும், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளருமான திரு. ஜீவா அவர்கள் ஏற்றி வைக்க, தமிழீழத் தேசியக் கொடியை தமிழீழ மாவீரர் பணிமனையைச் சேர்ந்த திரு. சதா அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து மாவீரர்களுக்கான பொது நினைவுத் தூபிக்கான ஈகச்சுடரினை திரு. கிளி அவர்கள் ஏற்றிவைக்க, மலர்மாலையினை மாவீரர் மலரவனின் தாயார் திருமதி. இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம் அவர்கள் அணிவித்தார்.
"தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை ஏற்றிவைக்க, மலர்மாலையினை உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் முக்கிய உறுப்பினரும், நீண்டகால தேசிய செயற்பாட்டாளருமான திரு. மயில்வாகனம் அவர்கள் அணிவித்தார்.
மக்களுக்கான பொது நினைவுத் தூபிக்கான ஈகச்சுடரினை திரு. பவா அவர்கள் ஏற்றிவைக்க, மலர்மாலையினை மாமனிதர் யோசப் பரராஜசிங்கம் அவர்களின் மகன் திரு. டேவிட் பரராஜசிங்கம் அவர்கள் அணிவித்ததைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அரங்க நிகழ்வுகளாக, மாவீரர் வணக்க நடனத்தை
1992-12-08 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரன் மேஜர் இசைக்கோன் அவர்களின் மருமகளும், மாவீரர்களான லெப்.கேணல் பாமா, லெப்.கேணல் மாதவி, லெப்ரினன் வெங்கடேஸ் ஆகியோரின் பேத்தியுமான செல்வி. கலைநிலா இராகுலன் வழங்க, கவிதைகளை செல்வி. பிரவீனா விஜயகுமார், திருமதி. ஜெசிந்தா சுரேஸ், திரு. ஜெகதீஸ்வரன் நவரட்ணம் ஆகியோற் வழங்கினர்.
தலைமை உரையினை திரு. வேணுகோபால் ஆசிரியர் வழங்க, திருமதி. சாந்தி சத்தியேந்திரன், திரு. இன்பன் மாஸ்ரர், திரு. அகிலன் (நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியாவிற்கான இளையோர் விவகார அமைச்சர்) ஆகியோர் நினைவுரைகளை வழங்கினர்.
எழுச்சி கானங்களை திரு. மைக்கல், திரு. சுரேஸ் ஆகியோர் வழங்க இன்றைய நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அமைந்திருந்தது. குறிப்பாக பலர் தமது குடும்பங்களோடு வந்து கலகந்துகொண்டிருந்தமையும், அதிகமான சிறுவர்கள் கலந்து சிறப்பித்திருந்தமை மகிழ்வையும், நம்பிக்கையை ஏற்படுத்தியோடு தமிழீழ விடுதலை நோகிய எதிர்காலத்தை குறித்துக்காட்டுவதாகவும் அமைந்திருந்தது.
மண்டபம் நிறைந்த மக்களோடு நடைபெற்ற இந்த நிகழ்வில் உறுதியேற்போடு கொடிகள் இறக்கப்பட்டு நிகழ்வுகள் யாவும் மாலை 6:30 மணிக்கு நிறைவு பெற்றது.
ஈழத்தின்விடுதலை உயிரெனக்கொண்டு
உயர்ந்தஎண்ணத்தின் பேரொழியாய் நின்று
தேசியத்தலைவனின் கருத்தினில் கலந்து
உலகஅரங்கில் விடுதலைக்குரலாய்
எம்தேசத்தின்குரலாய் இனத்துக்காய்
குரல்கொடுத்த மதிநுட்ப ஒளியே
கூரான சிந்தனை நேரான பாதை
கருத்தானபேச்சு சுவையான உரை
களமெல்லாம் உலாவிய விடுதலை நெருப்பு
என்றும் கரையாது உங்கள் சிறப்பு
காலம்கடந்தாலும் அழியாது விடுதலை உணர்வு
அண்ணன் ஆண்டன் பாலசிங்கம் அவர்களை நான் சந்தித்ததில்லை. 2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழீழத்தில் என்னுடைய ”புயலின் நிறங்கள்” ஈழப் போராட்ட வரலாறு- ஓவியக் காட்சி நடைபெற்ற போது என் ஓவியங்கள் மற்றும் அதற்கான கவி வரிகளை வைத்து ஒரு பெண் போராளியால் தயாரிக்கப்பட்டு தமிழீழத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஆவணப் படத்தை அண்ணன் பாலா அவர்களுக்கும் அண்ணி அடேல் அவர்களுக்கும் அவர்கள் தமிழீழம் வந்த போது போட்டுக் காட்டியதாகவும், இருவருக்கும் ஓவியங்கள் மிகவும் பிடித்து விட்டதாகவும், குறிப்பாக அடேல் மிகவும் பாராட்டியதாகவும், அதை என்னிடம் கூறசொன்னதாகவும் புலித்தேவன் அவர்கள், நான் மீண்டும் தமிழீழம் சென்ற போது தெரிவித்தார். நான் மிகவும் மகிழ்ந்தேன்.
அன்று மாலை என்னைச் சந்தித்த “அறிவமுது” புத்தகச் சாலையின் பொறுப்பாளர் இளங்கோவன் (ரமேஷ்) அவர்கள், “பாலா அண்ணா எழுதிய ‘விடுதலை’ நூலில் விடுதலைப் போராட்டம் குறித்தக் கட்டுரைகளும் தத்துவஞானிகள் குறித்தக் கட்டுரைகளும் தொகுக்கப் பட்டிருக்கிறது அதைப் பிரித்து விடுதலைப் போராட்டம் குறித்தக் கட்டுரைகளைத் தனியாகவும் தத்துவஞானிகள் குறித்தக் கட்டுரைகளைத் தனியாகவும் வெளியிட அவர் சொல்லியிருக்கிறார். அதற்கான அட்டை வடிவமைப்பை உங்களைச் செய்ய சொல்லியிருக்கிறார்.” என்றார். நான் 2002 ஆம் ஆண்டு அமெரிக்க, கனடா, ஐரோப்பியப் பயணத்தின் போது, கனடாவில் அந் நூலை எனக்குத் தந்தார்கள். பலமுறை அந் நூலைப் படித்துவிட்டேன், எம்.ஜி.ஆர் செய்த உதவிகள் குறித்தும், தலைவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே உள்ள நெருக்கம் குறித்தும் அதில் எழுதியிருக்கிறார். என்றேன்.
இரண்டு நூலுக்கும் நான் முகப்பு வடிவமைப்பு செய்வதற்கு முன்பு ஒருநாள் ரமேஷ், “பாலா அண்ணா கதைத்தார். நீங்கள் இங்கு நிற்கும் செய்தியை அவரிடம் சொன்னேன். உங்களுடன் கதைக்க வேண்டும் என்றார். நாளை கதைக்கலாமா” என்றுக் கேட்டார். மறுநாள் மாலைப் பொழுதில் சில நிமிடங்கள் அவரோடுக் கதைத்தேன். பலநாள் பழகியதுபோல் இருந்தது அவருடைய பேச்சு. மறக்க இயலாத நிமிடங்கள் அவை….அட்டையை என் விருப்பதிற்கே செய்யலாம் என்றார். அவ்வாறே செய்து கொடுத்துவிட்டும் வந்தேன்.

ஓவியர் புகழேந்தி.


வள்ளலே உன்னை
வாவென்று அழைத்து
வழியெங்கும்
செங்கம்பளம் விரித்து
காத்திருந்த வன்னி நிலம்
இன்று வெறும் காடாய்
கிடக்கிறதே.....
தம்பியுடன் நீயும்
சட்டத்தை
நம்பித்தானே
சரித்திரத்தில்
மாற்றம் வரவழைக்க
காலமெல்லாம்
காத்திருந்தாய்
வரலாற்றில்
உன் பெயரெழுதி
வடம்பிடித்து நீ
வன்னிக்கு
வந்த பொழுதெல்லாம்
உன் பாதங்களில்
எங்கள் ஊர்புழுதி
ஐயா
ஆழுமையில்
சிங்கமே
எங்கே போனீரய்யா
எமக்கு
வாய் இருந்தும்
போகும்
வழி தெரிந்தும்
தாய் மொழியினாலா
நாம்
தோற்றுப்போனோம்
வாய்கிழியக் கதறினாலும்
வந்தொரு ஆறுதல் சொல்ல
அரசியலில்
யாருமில்லை
ஆலமர
வேருமில்லை
தாய் நிலமேயின்று அழுகிறது
பாய் விரித்து உன்னை
விருந்துக்கு
அழைக்கிறது
தேசத்தின் குரலே
தேம்பித் தேம்பி
அழுகின்றோம்
தலை சாய்ந்து
தொழுகின்றோம்
திசைபார்த்து வாரும்
எமக்கொரு
ஆறுதலைத் தாரும்
வழியெல்லாம்
தீபங்கள்
உமக்காக
எரிகிறது
விழித்தெழு தமிழ் மக்களே எங்கள் விடுதலைப் பயணத்தில் எம்மை காத்து வந்த காவலர்கள்இன்று இல்லை
இதனால் எமது மூதாதையர் கட்டி காத்த வளங்களை இன்றைய இளையோர் தம் சுய இலாபத்திற்காய்விற்று பிழைக்கிறார்கள். நாளைய எமது சமுதாயதிதிற்கு, எம் பிள்ளைகளுக்கு நாம் எதை வழங்கப்போகின்றோம்? மக்களே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் என்னவெனில் நாம் விழித்துக் கொண்டிருக்கும் போதே எம் வளங்கள் திருடப்படுகின்றது. #கடவுளினால் எமக்கு அருளப்பட்ட எமது இயற்கை வளங்கள் இலாபத்திற்காக இன்று அடுத்தவர்களுக்கு விற்க்கப்படுகின்றது.

நீங்கள் எமது வளங்களை விற்றால் எமது பிரதேசம் நீரில் மூழ்கின்ற நேரம் நாம் எங்கு சென்று எம் வழங்களை காக்கப்போகின்றோம்.

#அடுத்து எமது பிரதேசம் வியசாயத்தை ஆதாரமாகக் கொண்ட பாமரமக்களிற்காக ஒதுக்கப்பட்ட பிரதேசம். இப்பிரதேசசத்தில் உள்ள வளங்களை எம் பிரதேச மண்ணை சுரண்டுகிறார்கள

இந்த மண்ணிற்காக எத்தனை உயிர்திதியாகங்கள் செய்திருக்கின்றார்கள் என்று உங்களுக்கு தெரியுமல்லவா?
இருந்தும் எங்கள் மண் இயந்திரங்கள் மூலமாக விற்கப்படுகின்றது ஒரு நாளில் எத்தனை தடவைகள் இந்த இயந்திரங்கள் சென்று வருகின்றன என்று நீங்கள் எண்ணியதுண்டா?
அத்தனையும் எம் வளங்கள் களவாடப்படுவதை என்பதை நீங்கள் உணர்ந்ததுண்டா?
நாம் விழித்துக்கொண்டிருக்கும் போது எம் வளங்கள் களவாடப்படுவது போன்று நாளை எமது உடல் உறுப்புக்கள் திருடப்படும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

இதை நாம் தடுக்கா விட்டால் நம் கையால் நம் கண்ணை குத்துவது போல் எம் இனம் முற்று முழுதாக அழியும்
இவற்றை கவனத்திற் கொண்டு நடவடிக்கை எடக்க வேண்டிய அதிகாரிகள் பிரதேசசேயலாளர்,மாவட்ட அதிகாரி, பிரதேச காவலர்கள், மற்றும் எம்மால் தெரிவுசெய்யப்பட்ட பாரளமன்ற உறுப்பினர்கள், உங்கள் மேடை பேச்சு மற்றும் போதாது உங்களுக்கு தெரிந்தும்; இந்த வளங்கள் களவாடப்படுகின்றது  நீங்கள் எவ்வாறாயினும் இச்செயலை முற்றுமுழுதாக தடுத்து நிறுத்த வேண்டும் இல்லையெனில் நாளை உங்களுக்கு வாக்களிப்பதுற்கு மக்கள் இருக்க மாட்டார்கள்.

இதை கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும் இதை நாங்கள் கையாலாகதவர்களாக இச்செயலை செய்கின்றொம் என்று மட்டும் எண்ண வேண்டாம். எம்மால் முன் வர முடியவில்லை மற்றும் எம் மண்ணை,சமுகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற அக்கரையும் எம் மண் மீதுள்ள பற்றும் மாவீரர்களின் கனவுகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காகவும் நாம் முன் வருகின்றோம் இது எந்த இயக்கத்தையோ,குழுவையோ சார்ந்ததோ இல்லை. இதை ஒரு தனி மனித கருத்தாக அல்லாது சமுகம் நலனுக்காக ஏற்றுக் கொள்ள வேண்டும். இதை எந்தவித அரசியல் நோக்கத்திற்காகவோ அல்லது இலாபத்திற்காகவோ முறையிடவில்லை. தயவுசெய்து அன்பான மக்களே நீங்கள் விழித்துக் கொள்ள வேண்டும் நாளைய சமுதாயத்திற்காக நாம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வரும் வளங்கள் முழுமையாக திருடப்படுகின்றத

படுவான்கரையில் உள்ள வளங்களை திருடி எழுவான்கரையை உயர்த்தினால் படுவான்கரையில் வெள்ளம் வந்தால் நாம் எங்கு செல்வது. எழுவான்கலையில் வாழ்வதும் எம் மக்கள்தான் ஆனால் எங்களது வளங்கள் எம் கண்முன்னால் திருடப்படுவதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.
இது எமக்கு அருளப்பட்ட வளங்கள் இதை நாம் விற்போமானால் எழுவான்கரையில் இருந்து ஒரு பிடி மண் கிடைக்குமா.

இதை உண்மையான தமிழர்களெனின் இதை தடுப்பதுற்கு முற்பட வேண்டும் மக்கள் மட்டுமல்ல இப் பிரதேச அதிகாரிகள் இலஞ்சம் வாங்கி விட்டு உங்கள் சுய இலாபத்திற்காக செய்கின்றனர்
இச்செயலை அணுணமதிக்க கூடாது.
எம் மண்ணில் இருந்து விட்டு எழுவான்கரையில் பகட்டுக்காக வாழுகின்ற மக்களும் இதை கருத்தில் கொள்ள வேண்டும்.

இங்கிருக்கின்ற எம் விவசாயமக்களின் வளங்களையும் மண்ணையும் எடுத்துச் சென்றீர்கள் என்றால் நாங்கள் எவ்வாறு வாழ்வது?....
எங்கள் அடையாளங்கள், எங்கள் பண்பாடுகள் அழிக்கப்படுது போன்று எங்கள் வழங்கள் சதியால் திருடப்படுகின்றது எவ்வாறாயினும் தடுக்க முயற்சி செய்ய வேண்டியது எமது கட்டாய கடமையாகும் உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் ஒண்றிணைந்து எஞ்சியுள்ள வளங்களையாவது காப்பாற்ற முன் வருவீர்கள் என்று பெரும் நம்பிக்கையோடு இந்த துண்டுபிரசுரம் செய்யப்படுகின்றது.

இவ்வழிவை தடுத்து நிறுத்தாவிடின் பெரும் நாசம் எம்மை தொடரும் என்பது நிதர்சனமான உண்மையாகும். துமிழ் தேசிய வாதம் பேசும் பொய்யானவர்களே இந்த திருட்டு வேலைகளை செய்கின்றார்கள்.
அன்பான எம் இனிய மக்களே அழிவை தடுத்து நிறுத்த முன்வாருங்கள்……


செஞ்சோலைப்பூக்கள்
படுவான்கரை

  • மட்டக்களப்பு.


பதினாறு வயதில் பல ஆசை வருமே,
இனம் மேலொரு ஆசை எவருக்கும் வருமா?

பதினாறு வயதில் பல ஆசை வருமே,
இனம் மேலொரு ஆசை எவருக்கும் வருமா?
திசைக் கொன்றாய் பறக்கும் சிட்டுக்குருவி
வெடிகுண்டை தன் மடியில்- காவி
வீணா தன்னை கொல்ல நினைக்குமா?
எப்படி ஆச்சு?
ஆலயத்தில் போய் அழுவதில்-பயனில்லை
ஆட்லறிதான் இனி எங்கள் பேச்சு!
இப்படி நினைத்தாரே ஒருவர்!
உன்னால்-என்னால்-எவரால் எண்ணி
பார்த்திருக்க முடியும்? ஆகியிருந்ததை!!
இப்படி இப்படி பாருங்களேன்!
எவர் நினைத்திருப்பார்-இந்த
இரும்பு மகன் எங்களை ஆள்வான் என்று?
ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு ஆசை வரும்.
மனிதன் மாறுவான்;அப்படிதான் என்கிறார்!
பத்துக்களில் இருந்து ஐம்பதுகள் வரை நீர்
அசைந்ததே இல்லையே எப்படி எப்படி?
எப்படி எப்படி உம் பாட்டன்
வயசுள்ளவரைக்கும் தலைவரென்றானீர் எப்படி எப்படி?
மூச்சடைத்து கிடந்த இனத்துக்கு-கதவுடைத்து
பிராணவாயு தந்த கரிகாலரே
எங்கள் தேசத்து பிரவாகமே
பிரபாகரனே!தலைவா
பட்டமும் பதவியும் பத்து காசும் வருது என்றால் என்னவும் செய்வார்.
கொஞ்சம் சக்தி வந்தாலே
அடுத்தவனை அடிச்சுக் கொன்று வாழ நினைக்கிறார் அற்பர்!
புரிய முடியவில்லை
உதாரணம் உமக்கு நிகர் இவ் உலகில் யாரும் இருந்தால் தானே
ஒப்பிட்டு உம்மை நாம் அறிந்து கொள்வோம்.
வேலுப்பிள்ளையின் மகவென்று நீர் ஆகலாம்.
இந்த வேதனையில் கிடந்து உழலும்
ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் நீர் தான் தாய்!!

சிறிலங்கா தூதரகத்தின் எச்சரிக்கை கடிதம் வரலாம் ! நாடுகடந்த தமிழீழ அரசாங்க அமர்வின் எதிரொலி !!
நாடுகடந்த தமிழிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வினை நடாத்த Le Blanc Menil (93) நகரசபை அனுமதிதித்ததற்கு சிறிலங்கா தூரதரகத்தின் எச்சரிக்கை கடிதம் வரலாம் என நகரபிதா அவர்கள் தெரிவித்துள்ளார்.
பாரிசின் புறநகர் பகுதியான நகரசபையின் முறையான அங்கீகாரத்துடன் நகரசபை மண்டபத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வு வெள்ளியன்று பிரான்சில் தொடங்கியுள்ளது.
இந்த அமர்வின் அங்குராப்பண நிகழ்வில் உரையாற்றும் பொழுதே நகரபிதா Thierry Meignen அவர்கள் இக்கருத்தினை தெரிவித்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வினை நகரசபையில் நடாத்துவதற்கு தாங்கள் அனுமதித்திருப்பது தொடர்பில், பிரென்சு மத்திய அரசாங்கம் மாற்றுக்கருத்தொன்றினையும் தெரிவிக்கவில்லை என்றும் நகரபிதா அவர்கள் தெரிவித்தார்.
இதேவேளை, இவ்விடயத்தில் கடந்தமுறை போல் இம்முறையும், சிறிலங்காவின் பிரான்ஸ் தூதரகத்தின் கடிதம் வரலாம் எனவும் நகரபிதா மேலும் தெரிவித்தார்.
மூன்று நாள் கூட்டத் தொடராக இடம்பெறுகின்ற இந்த அரசவை அமர்வில்கலாநிதி சுதா நடராஜா( University of London), தகைநிலைப் பேராசிரியர் பீற்றர் சால்க்( Uppsala University - Sweden), திரு.கென்டல் நெசான் (குருதீஸ் மக்கள் நிறுவனம் - பிரான்ஸ் ) , திரு. பீற்றர் குஜோ (சுடான் மக்கள் விடுதலைய இயக்கம்) ஆகியோர் வளப்பிரதிநிதிகள் பங்கெடுத்துள்ளனர்.
புலோ மினில் நகரபிதா தியோ மெயினன், நகரசபை உறுப்பினர் செல்வி சுரேந்திரன் ஸ்ரெபனி ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்குகின்றனர்.
புலம்பெயர் தேங்களில் இருந்து நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்கள், மேற்சபைப் பிரதிநிதிகள் இந்த அமர்வில் கூடியுள்ளனர்.
தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என ஈழத்தமிழ் மக்களின் அரசியற் பெருவிருப்பின் சனநாயக வடிவமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் திகழ்கின்றமை இங்கு குறிப்பிடதக்கது.








பிரித்தானியா உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி வணக்க நிகழ்வு நடைபெற்ற போது..
பொதுச்சுடரினை தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன் சங்கர் அண்ணாவின் அப்பா ஏற்றிவைத்தார்.
- See more at: http://www.asrilanka.com/2016/11/29/36628#sthash.J6wEY3Ei.dpuf
பிரித்தானியா உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி வணக்க நிகழ்வு நடைபெற்ற போது..

பொதுச்சுடரினை தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன் சங்கர் அண்ணாவின் அப்பா ஏற்றிவைத்தார்.
பிரித்தானியா உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி வணக்க நிகழ்வு நடைபெற்ற போது..
பொதுச்சுடரினை தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன் சங்கர் அண்ணாவின் அப்பா ஏற்றிவைத்தார்.
- See more at: http://www.asrilanka.com/2016/11/29/36628#sthash.J6wEY3Ei.dpuf

விண்ணிலும் மண்ணிலும் போராடி கடலிலும் கரையிலும் களமாடி, விளைநிலத்துக்காக வித்தாகிப் போன புனிதர்களை நினைவுகூர்ந்து ஒன்றாக அவர்களுக்கு வணக்கம் செலுத்தும் நாள் நவம்பர் 27.தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணம் செய்த மாவீரர்களுக்கான உயரிய நாள் இது.

தேசிய மாவீரர் நாள் 2016 யேர்மனியில் Dortmund நகரில் சிறப்பாக நடைபெற்றது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு , தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வுகளை தொடர்ந்து மாவீரர்களின் வணக்க நிகழ்வுகள் தொடர்ந்தன.பொதுச்சுடரினை முனைவர் சார்னி அவர்கள் ஏற்றிவைத்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ தேசிய மாவீரர்நாள் அறிக்கை ஒலி பரப்பப்பட்டதுடன் தாயக நேரம் 18:05 மணியளவில் மணியோசையுடன் தமிழீழத்தின் விடிவிற்காகவும் உயிரைத் தற்கொடையாக ஈகம் செய்து இந்த மண்ணிற்கே உரமாகி விட்டவர்களுக்கான ஈகைச்சுடர் மாவீரரின் சகோதரியால் ஏற்றப்பட்டது. சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்த மாதிரி மாவீரர் துயிலும் இல்லமும் தூபிகளும் சுடர்களால் ஒளியூட்டப்பட்டு உத்தமர்களின் உறைவிடம் ஒளிப்பிரகாசமானது.சுடர் ஏந்தி மாவீரர் குடும்பத்தவர் வரிசையாக நிற்க தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப் பேழைகளே என்கின்ற கல்லறைப்பாடல் மக்களின் மனங்களையெல்லாம் ஆக்கிரமித்துக்கொண்டது. மாவீரர்களது குடும்ப உறவினரால் சுடர்வணக்கமும் தேசிய மலராம் கார்த்திகைப்பூக்கொண்டு மாவீரர்களுக்கான மலர்வணக்கமும் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைக்காய் தம்மை விதையாக்கி சென்ற மாவீரர்களின் குடும்ப உறவுகளுக்கான மதிப்பளிப்பு இயக்க மரபின் அடிப்படையில் மாவீரர் நிகழ்வு மண்டபத்தில் காலை 11 மணியளவில் நடைபெற்றது.இந்நிகழ்வில் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட யேர்மன் வாழ் உறவுகள் கலந்துகொண்டு தமது காவல்தெய்வங்களை வணங்கினார்கள்.
மண்டபத்தில் மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வுகள் நடைபெற்ற சமநேரத்தில் Essen நகரத்தில் அமையப்பெற்றுள்ள மாவீரர் தூபிக்கு முன்னாலும் தாயக நேரம் 18:05 மணியளவில் மணியோசையுடன் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அக்காட்சியை மண்டபத்தில் நேரடியாக அகன்ற வெண்திரையில் ஒளிபரப்பப்பட்டமையானது உணர்வுபூர்வமாக காட்சியளிகப்பட்டது.
எமக்காய் வாழ்ந்து எமக்காய் மடிந்த ஈகைச் செல்வங்களே உங்களைப் போற்றுவதால் நாம் புனிதமடைகின்றோம்! உங்கள் கல்லறை மீதுமே சத்தியம் செய்து எம் பணி தொடர்வோம் என்று வரிசையாக மக்கள் துயிலுமில்லம் நோக்கி அணிவகுத்து மலர் தூவி சுடர் ஏற்றி தமது வணக்கத்தைச் செலுத்தினர்.
எங்கிருந்து என்பது புரியாது. எவர் பிள்ளைகள் என்று பாராது. என்பிள்ளைதான் நீயோ என்று எல்லோரும் தமது பிள்ளைகளாய் எண்ணி மாவீர்களை பூசித்த காட்சியானது தமிழினத்தையும் ஈழவிடுதலையையும் எந்தத் துரோகமும் எந்த சதித் தந்திரங்களுக்கும் வென்றுவிடமுடியாது அவை தூர விரட்டியடிக்கப்படும் என்பதை உணர்த்திநின்றது.
மாவீரர்களுக்கான இசைவணக்கத்தை இளம் சூரியன் இசைக்குழுவினர் வழங்கியதோடு, எழுச்சி நடனங்கள், கவிதைகள், நாடகம் மற்றும் தமிழீழ போராட்டத்தில் அழியாத சுடர்களாக விளங்கும் மில்லர் முதல் அனந்தபுரச் சமரில் வீர காவியம் கொண்ட வீரத்தளபதிகளின் வீரம் செறிந்த வரலாற்றையும் எங்கள் முன் இருக்கும் கடமையையும் எடுத்துரைக்கும் விதமாக 120 க்கும் மேலான நாட்டிய நடன மாணவச் செல்வங்கள் கலந்துகொண்டு அமையப்பெற்ற “மண் காக்கும் தெய்வங்கள்” நாட்டிய நாடகமும் எமது போராட்டத்தின் வீரத்தை பறைசாற்றியது. தமிழீழ பாேராட்ட வரலாற்றின் அர்ப்பணிப்பை தத்துரூபமாக எடுத்துக் காட்டி மண்டபத்தில் மக்களை உருக வைத்தது.. உணர்வு பூர்வமாக சிந்திக்க செய்யும் பாடல் வரிகள், அதற்கு உருவம் காெடுத்து உத்வேகப்படுத்திய இசைமபை்பு, அதற்கேற்ப அற்புதமாக பாடியாேர் குரல்கள் என அனைவரையும் உணர்வேற்றி உருக வைத்தது.
தேசிய மாவீரர் நாளில் பிரித்தானியாவில் இருந்து வருகை தந்திருந்த ஊடகவியாளரும் ,ஒரு பேப்பர் பத்திரிகையின் பொறுப்பாசிரியரும் திரு கோபி ரத்தினம் அவர்கள் இன்றைய சமகால அரசியல் நிலைமையை தெளிவாக எடுத்துரைத்து உரையை ஆற்றி இருந்தது மண்டபத்தில் உணர்வோடு சங்கமித்து இருந்த மக்களின் மனதில் நம்பிக்கையையும் தெளிவையும் உருவாக்கியது.
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவையும் மற்றும் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பும் இணைந்து பல்லின மக்களிடம் தமிழின அழிப்பை அங்கீகரிக்க வைப்பதற்கான அரசியல் வேலைத்திட்டம் ” Anerkennung des eelamtamilischen Völkermordes ” மாவீரர்களின் ஆசியுடன் ஆரம்பிக்கப்பட்டது. இச் சிறப்பு நிகழ்வுக்கு யேர்மனியில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயத்தில் நீதிபதியாக கலந்துகொண்டவர்களில் ஒருவரான முனைவர் சார்னி அவர்களும் , மதகுரு ஆல்பர்ட் கோலன் அவர்களும், ஊடகவியாளர் கோபி ரத்தினம் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தினர். தமிழ் மக்களுக்கு நடந்தது இன அழிப்பே என உறுதியாக தமது கருத்துக்களை வெளிப்படுத்தி கையெழுத்திட்டனர்.
தாயகத்தில் தொடர்ச்சியாக உதவித்திட்டங்களை மேற்கொண்டுவரும் ஹெல்ப் போர் ஸ்மைல் நிறுவனம் தாயக மக்களின் வாழ்வாதார நலனை மேலும் மேம்படுத்த தமது புதிய சேமிப்புப்பேழையை அறிமுகப்படுத்தியது.
நிகழ்வில் மாவீரர் நினைவு சுமந்த சிறப்பு வெளியீடுகள் வெளியிட்டு வைக்கப்பட்டதோடு, மாவீரர் நினைவு சுமந்து நடாத்தப்பட்ட மாவீரர் மெய்வல்லுனர் போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழாலயம் அனைத்துக்கும் வெற்றிக்கேடயங்களும் வழங்கப்பட்டதுடன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனியின் தயாரிப்பில் வெளியிடப்பட்ட “மண் காக்கும் தெய்வங்கள்” என்ற இறுவெட்டு மற்றும் ” கார்த்திகை தீபம் ” இதழ் 3 மக்களிடம் அறிமுகம் செய்யப்பட்டது.அத்தோடு இம்மாத எழுகதிர் சஞ்சிகையின் பதிப்பும் மக்களிடம் சென்றடைந்தது.
தமிழீழ விடுதலையை வென்றெடுக்க தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது வழிநடாத்துதலில் அவர்களால் உருவாக்கப்பட்ட அனைத்துக் கட்டுமானங்களையும் பலப்படுத்தி தொடர்ந்து போராடுவோம் என்றும் இப்பணிகளை உறுதியுடனும் ஒற்றமையுடனும் முன்நின்று நாம் முன்னெடுத்துச் செல்வோம் என்றும் உறுதிகூறப்பட்டது.
நிகழ்வின் நிறைவாக ‘நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்’ என்ற பாடலை அனைவரும் இணைந்து பாடியதோடு, தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, ‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’ என்ற தாரக மந்திரத்தை உரத்து உச்சரித்ததோடு நிகழ்வுகள் யாவும் மாவீரம் நிறைந்த மனதுடன் நிறைவுபெற்றன.