மீரா எழுதிய தன்னலமற்ற தியாகம்

தன் கருவில் சுமக்கும் சேயின் நலனுக்காக
தாய் பத்து மாதம் காட்டும் பொறுமை, அது ஒரு தியாகம்

குடும்ப உயர்வுக்காய் தன்னையே ஓடாய் தேயித்து
குடும்பம் முன்னேற பாடுபடும் தந்தை, அதுவும் ஒரு தியாகம்

பள்ளி தேர்வில் சிறப்பு சித்தி பெற்று மேன்மையடைய
படிப்புக்காக தன் விளையாட்டை துறக்கும் மாணவனின் தியாகம்

நட்பின் உயர்வில் நலன் பெற எண்ணி
நண்பனுக்காக விட்டு தரும் நியாயத்தின் தியாகம்

உறவுகள் உரம் பெற்று உற்றவர் நலமாக
உடன்பிறந்தோர் ஒருவருக்கு ஒருவராக வாழ்வதும் ஒரு தியாகம்

தாம்பத்திய வாழ்வின் உசிதம் சிறக்க
தகராறுகளை தவிர்த்து விட்டுகொடுக்கும் தன்மையின் தியாகம்

தன்னை உருக்கி மெழுகாய் எரித்து தமிழர் வாழ
தன்னை ஈந்த தீலீபனின் தியாகம், அது தான் தன்னலமற்ற தியாகம்

தலைவணங்குகிறோம் தீலீபா , உன்
பெருமையினால் தமிழராய் தலைநிமிர்கிறோம்

ஆக்கம் - மீரா ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக