தியாக தீபம் லெப்ரினன்ட் கேணல் திலீபனின் நினைவு தினம் ஜேர்மனியில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
செப்ரெம்பர் 15 ஆம் திகதியை தமிழர்கள் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. அகிம்சைத் தேசவல்லரசுக்கே காந்தியம் என்றால் என்னவென்று பாடம் புகட்டிய அறத்தின் தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பைத் தொடங்கிய நாள்
நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் வடக்கு வீதியில், பட்டினிப்போர் தொடுத்த பார்த்தீபன், மெழுகுதிரியாக தன்னை உருக்கி, தமிழினத்தின் ஒளி விளக்காக மாறிய நாள்.
பன்னிரு நாட்கள் தன்னையே ஆகுதியாக்கி, கடைசியில் மக்களுக்காகவே பசித்த வயிற்றோடு உயிரைத் துறந்த திலீபனை தமிழினம் அவ்வளவு எளிதில் மறந்து போகாது. தங்கள் கண்களுக்கு முன்னே தங்களுக்காக ஒருவன் தன்னுயிரை அணு அணுவாக மாய்த்ததை எவராலும் மறக்க முடியுமா ? இல்லையே !








                                            
இதனைதொடர்ந்து இரண்டாவது தடவையாக கடந்த 25ஆம் திகதி Morden park, London road, SM4 5HE எனும் இடத்தில் விளையாட்டு விழாவினை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

இதில் துடுப்பாட்டம், உதைப்பந்தாட்டம், கிளித்தட்டு மற்றும் சில கலாசார விளையாட்டுகளும் இடம்பெற்றுள்ளன. சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொண்டு இந்த விளையாட்டு போட்டியை சிறப்பித்துள்ளனர்.


நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை மற்றும் சமூக நல உதவிஅமைச்சர் திருசொக்கலிங்கம் யோகலிங்கம் தலைமையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏனைய அமைச்சர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்களினதும் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடந்தன.

அத்துடன், இதில் செயற்பாட்டாளர் mayuran thamotharampillai ஆகியோருடன், தமிழரின் பண்பாட்டு இசையான பறை இசையை Ramesh Annalingam Vakeesan ஆகியோரும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஞாபகார்த்தமாக ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் விளையாட்டு விழா ஒன்றினை நடாத்த திட்டமிட்டு, கடந்த வருடம் முதன்முறையாக வெற்றிகரமாக நடாத்தியமை அனைவரும் அறிந்ததே.
தியாக தீபம் திலீபன் அவர்களின் 29 ஆம் ஆண்டு நினைவுதினமான நேற்று 26.09.2016 திங்கட்கிழமை பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பினரால் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது திரு உருவப்படம்,
தமிழீழம் பொறிக்கப்பட்ட நினைவுப் பதக்கம் வெளியிட்டுவைக்கப்பட்டது. பிரான்சில் இருந்து ஜெனிவா சென்ற தொடருந்தில் வைத்தே குறித்த பதக்கம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது. குறித்த தொடருந்தில் வைத்து நாம் இதழ் மீள்வருகையாக வெளியிட்டுவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. குறித்த பதக்கத்தை மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாங்கி அணிந்தமையைக் காணமுடிந்தது.
தமிழின அழிப்புக்கு நீதிகோரி ஜெனிவாவில் இடம்பெற்ற எழுச்சிப்பேரணியில் கலந்துகொள்ள பாரிசிலிருந்து நேற்றுக் காலை புறப்பட்டு நண்பகல் ஜெனிவா சென்றடைந்த தமிழ் மக்களுக்கான தொடருந்து தனது பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றிரவு பாரிஸ் வந்தடைந்தது.
தமிழீழத் தேசியக்கொடிகளைத் தாங்கியவாறு மிகவும் உணர்வெழுச்சியோடு பிரான்சு வாழ் தமிழ் மக்கள் கலந்துகொண்டதுடன், பிரான்சு வாழ் வெளிநாட்டு பிரமுகர்களையும் தம்முடன் அழைத்துச்சென்றிருந்தனர்.
வழமைபோன்று இம்முறையும் மக்களுக்கு வேண்டிய உணவு வசதிகள் தொடருந்தில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
தமிழ்மொழியிலான விசேட அறிவித்தல்கள், தமிழீழ தேசிய கானங்கள் ஒலிக்க தமிழ் மக்களின் தொடருந்து வெற்றிகரமாகத் தனது பயணத்தை முடித்துத் திரும்பியமை குறிப்பிடத்தக்கது.


தமிழன் அழிப்புக்கு நீதிகோரி ( 26-09-2016) ஐ.நா முன்றலில் பாரிய ஆர்ப்பாட்டம்ஆரம்பம்..
புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழர்கள் ஜெனீவாவில் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டத்தின் போது இளைஞர்கள் ரோம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் நடைபெற்று முடிந்த இறுதி யுத்தத்தின்போது, ஈழத் தமிழர்களுக்கு நீதி வேண்டி புலம்பெயர் தமிழர்களால் பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.இதன்போதே போராட்டத்தில் ஈடுபட்ட குறித்த இளைஞர்கள் ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி வீதிமறியலில் ஈடுபட்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர்.






















தமிழ் மக்கள் பேரவையினால் இன்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ள “எழுக தமிழ்” எழுச்சி நிகழ்விற்கு நாம் எமது பூரண ஆதரவை வழங்குவதோடு நாம் எமது தோழமை உணர்வையும் வெளிப்படுத்தி நிற்கின்றோம் என நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர் வி.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தமிழ் செயற்பாட்டு கவுன்சில், உலக தமிழ் அமைப்பு, அமெரிக்க தமிழ்ச்சங்க ஆகியன இது தொடர்பில் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“எழுக தமிழ்” தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளையும் தாயகப் பாதுகாப்பையும், வாழ்வாதார உரிமைகளையும் வலியுறுத்தும் கோரிக்கைகளை முன் வைத்து இந்த பேரணி அமையவுள்ளது.
தமிழ் மக்களின் முழுமையான சுயநிர்ணய உரிமையினை வலியுறுத்துவதற்குப் போதுமான அரசியல் தீர்வு இல்லாத காரணத்தினால் பேரணியின் அரசியல் தீர்வு தொடர்பான கோரிக்கை சமஷ்டி வடிவில் முன் வைக்கப்படுவதை நாம் புரிந்து கொள்கின்றோம்.
தமிழ் மக்களின் முழுமையான சுதந்திர உணர்வை வெளிப்படுத்துவதற்கு தேவையான அரசியல் தீர்வினை உருவாக்குவதற்கு “எழுக தமிழ்” போன்ற மக்கள் எழுச்சி வழிவகை செய்யும் என நாம் நம்புகின்றோம்.
“எழுக தமிழ்” உரிமை வேண்டி நிற்கும் ஈழத் தமிழ் மக்களது உணர்வின் வெளிப்பாடு. தமிழீழ மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதாக கூறப்படும் இக்கால கட்டத்தில் தாயகத்தில் எமது மக்களுக்கு கிடைக்கும் வரையறுக்கப்பட்ட அரசியல் தீர்வுக்குள் அவர்கள் வெளிப்படுத்தும் உரிமைக்குரல் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காக 1987ஆம் ஆண்டு அகிம்சை வழியில் போராடித் தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாகி திலீபனின் 29 ஆவது ஆண்டு நினைவு அஞ்சலிகள் தாயகத்தில் பல இடங்களில் இடம் பெற்றது.
முக்கியமாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மிகவும் உணருப்பூர்வமாக தமது அஞ்சலிகளை செய்தனர்..
தமிழினத்தின் வாழ்வுக்காக ஊண் உறக்கம் மறந்து தன்னுயிரை ஆகுதியாக்கிய ஒரு தியாகியின் எண்ணங்கள், சிந்தனைகள், நோக்கங்கள் ஒருபோதும் வீண்போகாது என்பது சர்வநிச்சயம்.
ஒரு காலத்தில் இந்திய தேசத்தின் விடுதலைக்காக மகாத்மா காந்தி உண்ணா நோன்பு இருந்தார். அந்தத் தியாகம் பாரத தேசத்துக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்தது.
பிரித்தானியக் காலனித்துவத்துக்கு எதிராக சத்தியவழியில் போராடிய காந்தியின் சிலை இன்று பிரித்தானிய மண்ணில் நிறுவப்பட்டுள்ளது.
எந்த நாட்டுக்கு எதிராக மகாத்மா காந்தி நாற்பது நாட்கள் உண்ணாவிரதம் இருந்தாரோ அந்த நாடு இன்று காந்தியின் உருவச் சிலையை தன் நாட்டில் நிறுவி காந்தியத்துக்கு - அகிம்சைக்கு மதிப்பளித்துள்ளது.
மகாத்மா காந்திக்கு இப்போது பிரித்தானியா வழங்கிய கெளரவத்தை அன்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.ஆனால் இன்று மகாத்மா காந்தியின் உருவச் சிலை லண்டனில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாயின் அதற்குள் இருக்கக் கூடிய ஆன்மிக தத்துவங்கள், தியாகத்தின் பெறுமதிகள் என்பவற்றை நாம் உணர்ந்தாக வேண்டும்.
இதே போன்றுதான் தியாகி திலீபனின் தியாகமும் இந்த இலங்கை மண்ணில் என்றோ ஒரு காலத்தில் போற்றப்படும். இந்த நாட்டின் தென்பகுதியில் கூட தியாகி திலீபனின் சிலை நிறுவப்படும்.
பாடப் புத்தகங்களில் திலீபன் என்ற தியாகியின் வரலாறு இந்த நாட்டின் மாணவர்களால் படிக்கப்படும்.இதை நாம் இப்போது கூறும் போது இது நடக்கக் கூடிய விடயமா? என்று பலரும் கேட்கலாம்.
ஆனால் என்றோ ஒரு காலத்தில் நாம் கூறிய மேற்போந்த விடயங்கள் நடந்தேயாகும்.
இதைச் சொல்லும் போது இதற்கு ஏதேனும் சான்றாதாரங்கள் உண்டா? என்று கேள்வி எழுப்பப்படலாம். இதற்கான பதில் மெளனமாகவே இருக்கும்.
ஆனால் உலகில் எந்தத் தியாகமும் வீண்போனதாகச் சரித்திரம் இல்லை.அதேபோல எந்த நடிப்புகளும், போலித்தனங்களும் நீண்ட காலம் நிலைத்ததான வரலாறுகளும் இல்லை.
தியாகி திலீபனின் தியாகத்தை இந்த நாட்டின் அனைத்து மாணவர்களும் கற்கின்ற காலம் வருகின்ற போது இப்படியொரு தியாகி இருந்தாரா? என்று கேள்வி எழுப்பும் அந்த மாணவர்கள், அந்தத் தியாகியின் தியாகத்தை இலங்கை ஆட்சியாளர்கள் போற்றத் தவறியது மகா தவறு என்றும் குற்றம் சாட்டும்.
ஆக, தியாகி திலீபன் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற பெருமை எமக்குரியது. எவராலும் நினைக்க முடியாத தியாகம்.
அதிலும் தன் தமிழ் மக்கள் வாழ வேண்டும். அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்காக தன்னுயிரை ஆகுதியாக்க வேண்டும் என்ற நினைப்பும் அந்த நினைப்பை நினைவுபடுத்துவது என்பதும் சாதாரணமானவர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத விடயமாகும்.
அந்தளவிற்கு திலீபனின் தியாகம் போற்றுதலுக்குரியது. எதிர்காலத்து சந்ததி இப்படியொரு தியாகத்தை யாரும் செய்ய முடியுமா? என்று கேட் கின்ற அளவில் தியாகி திலீபனின் தியாகம் போற்றப்படும், வழிபடப்படும். இது உண்மை.
ஒட்டுமொத்தத்தில் தூய சிந்தனையுடன் கூடிய தியாகங்கள் ஒருபோதும் தோற்றுப் போவதில்லை.
அவை உயிர்ப்புப் பெற்று நீடூழி வாழ்பவை. அந்த உயிர்ப்புக்கு முற்பட்ட காலம் உயிர்ப்புக்கான உறங்கு நிலையாகவே இருக்கும்.














தியாகதீபம் திலீபன் உட்பட புரட்டாதி மாதத்தில் வீரச்சாவைத்தழுவிக்கொண்ட மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் நடைபெற்றது.
பிரித்தானியாவின் வரலாற்று புகழ் பெற்ற ஒக்ஸ்பேட் நகரில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் நேற்று முன்தினம் (25-09-2016) ஞாயிற்றுக் கிழமை மாலை 4:30 மணி முதல் 7:30 மணிவரை இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பொதுச்சுடரினை சவுத்ஹோல் தமிழ் கல்விக்கூடத்தின் அதிபர் திரு. செல்லத்துரை அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியை திரு.பாஸ்கரன் (உ.த.வ.மை) அவர்கள் ஏற்றிவைத்தார்.
மாவீரர்கள் நினைவுத் தூபிக்கு மாவீரர் லெப்.கரன் (03-09-2000 அன்று யாழ் அரியாலை நோக்கி முன்னேறிய ரிவிகரண இராணுவ நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவைத் தழுவியவர்) அவர்களின் சகோதரி திருமதி. லதா சதா அவர்கள் ஏற்றிவைக்க, மலர்மாலையினை மாவீரர் லெப். கேணல் சுபன் (25-09-1992 அன்று பூநகரி பள்ளிக்குடா பகுதியில் இராணுவ மினி முகாம் மற்றும் 62 காவலரண்கள் மீதான தாக்குதலில் வீரச்சாவை தழுவியவர்) அவர்களின் சகோதரி திருமதி. புஸ்பராணி கந்தசாமி அவர்கள் அணிவித்தார்.
தொடர்ந்து போரில் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கான நினைவு தூபிக்கு மாவீரர் கரும்புலி மேஜர் செழியன் அவர்களின் தந்தை திரு.மோகன் அவர்கள் ஈகைச் சுடரினை ஏற்றிவைக்க, மாவீரர் கேணல் சங்கர் அவர்களின் உறவினர் மலர்மாலை அணிவித்தார்.
அதைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர்வணக்கம் இடம்பெற்றது.
அரங்க நிகழ்வுகளாக கவிதைகள் திருமதி.ஜெயலக்சுமி சிவானந்தராஜா (மில்ரன்கீன்ஸ் தமிழ் ஆசிரியர் ), ஆர்த்தி ரவீந்திரநாதன், மிதுரன் ரவீந்திரநாதன்.
நினைவுரை – போராளி புரட்சி, நினைவுரை – திரு.மயில்வாகனம் (உ.த.வ.மை), நினைவுரை – திரு.ராஜன் (முன்னாள் யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளரும் மூத்த போராளியும்) என்பன இடம்பெற்றது.
இறுதியாக உறுதியேற்புடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
கடந்த காலங்களில் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட அநீதிக்கு நீதி வேண்டி புலம்பெயர் தமிழர்கள் ஜெனீவா முன்றலில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள்.
ஐ.நாவில் தற்போது 33ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், பலத்த எதிர்பார்ப்பினை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்த நிலையில், மிகவும் அமைதியான போக்கு ஐ.நா சபையின் உள்ளகத்தில் இடம்பெற்று வருவதாக அறியமுடிகின்றது.
இவற்றுக்கு முழுமையான நீதி வெகு விரைவில் கிடைக்க வேண்டும் எனவும், இலங்கையில் இடம்பெற்ற அநீதிக்கு சர்வதேச விசாரணையே தீர்வு என்றும் முழக்கமிட்டவாறு ஐ.நா முன்றலில் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள்.
நா வறண்டு நீ சுருங்கி
ஏற்றிய விடுதலை நெருப்பு
எரிந்துகொண்டே
இருக்கிறது

வல்லாதிக்கங்களின்
மனச்சாட்சிக் கதவு
மூடப்பட்டாலும்
இந்த வான்வெளி எங்கும்
ஒலிக்கிறது
உன் விடுதலை முழக்கம்

முப்பது ஆண்டுகளாக
முணுமுணுத்துக்கொண்டிருக்கும் விடுதலைக் கீதம்
உலக அரங்கிலே
உரத்துப் பாட வேண்டும் திலீபா
உன் கனவு மெய்ப்பட வேண்டும் ......

 ஆக்கம்  சுபாரஞ்சன்
பசி வந்தால்
பத்தும் பறந்திடுமெனும்
பழமொழியை
பார்த்தீபன் பொய்யாக்கினான்.

தேசம் பசித்திருக்கலாகாதென‌
உந்தன் தேகம் பசித்திருந்தது.

பல்கலையில் மருத்துவம்
படித்த உனக்கு
நாளொன்றுக்கு பருகும் நீரளவு
நன்றே தெரியுமே.
அது தெரிந்துதானே
பன்னிரெண்டு நாட்களும்
நீரும் ஆகாரமும்
நிராகரிப்புச் செய்தாய்.

திருவிழா காணும் நல்லூர்
தியாக விழா கண்டதே.
ஆலய பூசை மறந்து உறவுகள்
அண்ணா உன்முன் திரண்டதே.

காந்தி அன்று இருந்திருந்தால் உன்
காலடிக்கே வந்திருப்பார்.
திலீபன் உன் செய்கை கண்டு
கிரீடம் தந்திருப்பார்.

தியாகத்தை பருகியதால்தானா
சிறுதுளி நீரும் பருகவில்லை.
மெழுகாய் உருகியதால்தானே
உணவு கேட்டு உருகவில்லை.

மரணத்துக்கு போகையில்
யாரும் மாலை சூடுவரோ..
இறக்கப் போகுமுன்
எனக்குப் பொட்டிடுங்கள் என்பரோ.
அன்புத் தாயொருத்தி
பொட்டிட்டு மாலையிட‌
புன்னலையோடு போய்
உன்னணையில் இருந்தீரே..
மன்னவனுன்னுயிர் போகும்வரை
மானம் காத்தீரே.

ஒவ்வொரு கணத்திலும்
உயிர்த்துளிகள் போய்க்கொண்டிருக்க‌
உணர்வுத்துளிகள்
போய்விடாமல் இருந்தீரே.

தேசத்தாகம் உமக்குள் இருந்ததால்
தேநீர்த்தாகம் வரவில்லை.
கொள்கைப்பசி உம்மைச் சூழ்ந்ததால்
கொடும்பசி மூடவில்லை.

இந்தியாவே..
உன் தேசமெலாம் ஓடிய நீர்
இதயத்தில் ஓடாமல் விட்டதென்ன?
அகிம்சையை சுட்ட உனக்கு
அகிம்சையை சாக விடுதல் பெரிதோ?

திலீபன் சாகவில்லை.
திலீபம் சாவதில்லை.
 
 
 ஆக்கம் :யோ.புரட்சி