அற்புத மாமனிதர்கள் கரும்புலிகளின் வரலாறு !!


விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் தற்கொடைப் போராளி கப்டன் மில்லர் வீரச்சாவடைந்த நாள் தான் July 05 கரும்புலிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது.
கரும்புலி கப்டன் மில்லர் !!
“விடுதலை நடவடிக்கை” ( Operation Liberation ) என்ற பெயரில் சிங்கள இராணுவம் யாழ்ப்பாணத்தின் ஒருபகுதியான வடமராட்சியைக் கைப்பற்ற 1987 இன் நடுப்பகுதியில் நடவடிக்கையொன்றை மேற்கொண்டு சில இடங்களையும் கைப்பற்றியிருந்தது.
நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம் என்ற பாடசாலையில் முகாமிட்டிருந்த இராணுவத்தினரை அழிக்கும் நோக்கில் வெடிமருந்து நிரப்பிய வாகனத்தோடு சென்று தாக்குதல் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்குத் தன்னைத் தயார் செய்தவன்தான் கப்டன் மில்லர்.
திட்டமிட்டதைவிட இன்னும் உள்ளே சென்று இரு கட்டடங்களுக்கிடையில் வாகனத்தை நிறுத்தி வெடிக்க வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதிகாரபூர்வ செய்தியின்படி 39 இராணுவத்தினர் அத்தாக்குதலிற் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அத்தொகை மேலும் அதிகமென்றே கருதப்பட்டது. இரு கட்டடங்களும் இடிந்து தரைமட்டமாகியிருந்தன.
அத்தாக்குதல் மிகப்பெரும் அதிர்ச்சியைச் சிங்களத்தரப்பில் ஏற்படுத்தியிருந்தது. அதுவரை அப்பெருந்தொகையில் இராணுவம் கொல்லப்பட்டதில்லை. மேலும் இனிமேலும் இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்படும் என்ற சூழ்நிலையில் இராணுவம் மிக அதிகமாகவே வெருண்டிருந்தது. ஆக்கிரமிப்பு நடவடிக்கையும் நிறுத்தப்பட்டது. அடுத்தடுத்த மாதங்களிலேயே இந்திய ராணுவம் வந்துவிட்டது.
அதன் பின் இரண்டாம் கட்ட ஈழப்போர் (1990 ஆனி) தொடங்கிய கையோடு சில இராணுவ முகாம்கள் விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டன. முதலில் கொக்காவில், பின் மாங்குளம். இரண்டுமே கண்டிவீதியை மறித்து நின்ற முகாம்கள். (கண்டிவீதியின் இருப்பானது போராட்டத்தில் எவ்வளவு முக்கியம் என்பது அன்றுமுதலே நிறுவப்பட்டு வந்திருக்கிறது) இதில் மாங்குளம் மீதான தாக்குதலின்போது மில்லர் பாணியிலேயே வாகனக் கரும்புலித்தாக்குதல் ஒன்று நிகழ்த்த திட்டமிடப்பட்டது.
ஆள் தேர்வுக்கு முன்னமேயே அந்நேரத்தில் வன்னியின் துணைத் தளபதியாயிருந்த போர்க் அப்பணியை ஏற்பதாகச் சொன்னார். அது மறுக்கப்பட்டபோதும் அடம்பிடித்து அச்சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொண்டார். 3 நாள் கடும் சமரின்பின் கரும்புலி லெப்.கேணல். போர்க்கின் வெடிமருந்து நிரப்பிய வாகனத் தாக்குதலோடு முகாம் கைப்பற்றப்பட்டது. (இன்று கண்டி வீதியாற் செல்பவர்கள் போர்க் வெடித்த அவ்விடத்தைப் பார்க்கலாம்.
லெப்.கேணல் போர்க்
அதே நேரம் கடலிலும் இத்தாக்குதல் வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேஜர் காந்தரூபன், மேஜர் வினோத், கப்டன் கொலின்ஸ் ஆகியோர் வெடிமருந்து நிரப்பிய படகொன்றினால் கட்டளைக் கப்பலொன்றின்மீது மோதி முதலாவது கடற்கரும்புலித் தாக்குதலைச் செய்தனர்.
அது தாக்கிச் சேதமாக்கப்பட்டது. பின் கடலில் நிறையத் தற்கொடைத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுவிட்டன. ஏராளமான டோரா ரக வேகப்படகுகள் தாக்கியழிக்கபட்டுவிட்டன. கடற்புலிகளின் பெரும்பலம் இந்தக் கரும்புலிப்படகுகள் தான் என்பது குறிப்பிடத் தக்கது.
மேஜர் டாம்போ
வெடிமருந்து வாகனத்தோடு சென்று வெடிக்கும் வடிவம் சிலாவத்துறை முகாம் மீதான மேஜர் டாம்போவின் தாக்குதலோடு மாற்றமடைந்தது. தரையில் அவ்வடிவம் மாற்றம் பெற்று தாக்குதலணியாகச் சென்று தாக்கியழிக்கும் வடிவுக்கு மாற்றமடைந்தது.
1993 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் நடத்தப்பட்ட பலாலி விமானத்தளத்தின் மீதான தாக்குதல் தொடக்கம் இன்றுவரை பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுவிட்டன. ஆண்கள், பெண்கள் என முன்னூறுக்குமதிகமான வீரர் வீராங்கனைகள் தற்கொடைத்தாக்குதல் மூலம் வீரச்சாவடைந்துள்ளார்கள். இவற்றைவிட வெளிவிடப்படாத தாக்குதல்கள் நிறையவுள்ளன.
பெண்களின் பங்களிப்பு இத்தாக்குதல்களில் சரிசமமாயுள்ளது. (பெண்களைக் குறித்துத் தனியே, சிறப்பாகச் சொல்ல வேண்டுமா என்ற கேள்வி எனக்குள்ளுண்டு. ஆனால் போராட்டத்தில் பெண்களின் பங்கு பற்றி அப்படிச் சொல்லப்படவேண்டிய தேவை வன்னியில் இல்லையென்றாலும் பிற இடங்களில் உண்டென்றே கருதுகிறேன்.)
முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி. முதற் பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி.
கப்டன் அங்கயற்கன்னி
பல வல்லரசுகளின் துணையோடு போரிடும் ஒரு நாட்டுப் படைக்கு எதிராக தன் மக்களை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு விடுதலை இயக்கம் போராடும்போது அது சில அதீதமான செயல்களைச் செய்ய வேண்டியிருக்கிறது.
மனஉறுதியும் தியாகமுமே அவ்விரு படைகளுக்குமிடையிலான வித்தியாசமாகும். தற்கொடைத்தாக்குதல் வடிவம் ஓரளவுக்கு இராணுவச் சமநிலையைப் பேணியது என்றுதான் சொல்ல வேண்டும்.
“பலவீனமான என் இனத்தின் பலம் மிக்க ஆயுதமாகவே நான் கரும்புலிகளைத் தேர்ந்தெடுத்தேன்” - தலைவர் பிரபாகரன்
போராட்டம் இக்கட்டுக்குள்ளான பல நேரங்களில் இவ்வாறான தாக்குதல்கள்தாம் போர்க்களத்திலும் அரசியலிலும் வெற்றியைத் தேடித்தந்தன. இன்றுவரை சிங்களக் கடற்படையின் போக்குவரத்துக்களைக் குலைத்து அவர்களின் மேல் பெரும் அழுத்தத்தைப் பிரயோகித்து வருகிறது கடற்புலிகள் அணி. இதைவிட முக்கியமாக போராட்டத்துக்கான முழு வினியோகமும் கடல்வழி மூலந்தான் நடைபெறுகிறது. அதைச் சரியாகச் செய்துவந்ததும் கடற்புலிகள் அணியேதான். சிறிலங்கா அரசின் பல கடற்கலங்களை மூழ்கடித்து பெரும் பொருளாதார இழப்பைக் கொடுத்ததும் இந்தக் கடற்புலிகள் அணிதான்.
மீனவரின் கடற்றொழிலுக்குப் பாதுகாப்பளித்ததும், மக்களின் போக்குவரத்துக்குப் பாதுகாப்பளித்ததும் கடற்புலிகள் அணிதான். இவையெல்லாவற்றிலும் கடற்கரும்புலிகளின் பங்கு நீக்கமற நிறைந்திருக்கிறது. கடற்புலிகள் பலம் பெற்ற பின், முல்லைத்தீவைத் தாண்டிச் செல்லும் எந்தக் கப்பல் தொடரணியும் (ஆம் தனியே எந்தக் கலமும் செல்வதில்லை.
பெரும் அணியாகத்தான் செல்வார்கள். அப்படியிருக்க பல தடவை இந்த அணிகள் தாக்கியழிக்கட்டிருக்கின்றன.) 90 கடல் மைல்களுக்குள் -கிட்டத்தட்ட 160 கிலோ மீற்றருக்குமதிகம்- சென்றது கிடையாது. அவ்வளவு பயம். ஆனால் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின்பின் ஒரு கடல்மைல் வரை வந்து மீனவரை வெருட்டி படகுகளை இடித்து சேட்டை செய்தது சிங்களக் கடற்படை. )
சின்னப் பெடியன்களால் என்ன செய்ய முடியுமென்ற புத்தஜீவிகளின் கேள்விக்கு விடை கூறப்பட்டது முதலாவது தற்கொடைத்தாக்குதல் மூலம். இன்று சிங்களத்தின் பொருளாதாரம் முதல் அனைத்தும் தீர்மானிக்கப்படுவது இத்தற்கொடைத்தாக்குதல் மூலம்தான். முக்கியமான பல தருணங்களில் அவ்வப்போது நடத்தப்பட்ட சில உரிமை கோராத தாக்குதல்கள் தாம் சிங்களத்தின் அத்திவாரத்தை அசைத்தன.
பொருளாதாரமென்றாலும் சரி, சில முக்கிய தலைகளை உருட்டுவதென்றாலும் சரி இத்தாக்குதல்கள் தாம் போராட்டப்பாதையை செப்பனிட்டன. “தடை நீக்கிகள்” என்று இவர்களைச் சொல்வது சாலப்பொருத்தம். கட்டுநாயக்க விமானப் படைத்தளம் மீதான தாக்குதல் தான் சிங்களம் ஓரளவாவது இறங்கிவரக் காரணமாயமைந்தது என்பதை யாரும் மறக்க முடியாது.
எதிரியின் குகைக்குள்ளேயே திரிந்து, கொள்கையிலிருந்தும் கட்டுப்பாடுகளிலிருந்தும் வழுவத் தூண்டும் அத்தனை ஆடம்பர, ஆபாசப் புறச்சூழலுக்குள்ளும் வருடக்கணக்கில் இருந்து திட்டத்தைச் சரிவரச் செய்து உயிர்நீத்துப்போன அந்த மனிதர்கள் வித்தியாசமானவர்கள்.
யாருக்கும் புகழ் மீது ஒரு மயக்கமிருக்கும். களத்தில் போராடிச் சாகும் ஒருவருக்குக்கூட கல்லறையும் மாவீரர் பட்டியலில் அவர் பெயரும் இருக்கும். நினைவு தினங்கள் அனுட்டிக்கப்டும். இறந்தபின்னும் புகழ் இருக்கும். ஆனால் முகமே தெரியாமல், இறந்த செய்திகூட யாருக்கும் தெரியாமல், கல்லறையுமில்லாமல், போராளியாயிருந்தான் என்ற அடையாளங்கூட இல்லாமல் சுயமே அழிந்து போகும் இவர்கள் வித்தியாசமானவர்கள்தாம். < எதிரியாற்கூட இவர்களை இன்னார் என்று அடையாளப்படுத்த முடியாதபடிதான் தம்மையும் தம் சுயத்தையும் அழித்துக் கொள்கிறார்கள். மிகமிகச் சில சந்தர்ப்பங்களிலேயே இவர்கள் அடையாளங் காணப்பட்டனர். அப்படியே தம் சுயத்தை அழித்துச் சென்ற அந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கும் எம் இதய அஞ்சலிகள்.
"நாற்றங்கள் நடுவே வாழ்ந்திட்ட முல்லைகள்
சேற்றுக்குட் சிக்காத தாமரை மொட்டுக்கள்."
பல சந்தர்ப்பங்களில் கரும்புலி அணியைக் கலைத்துவிடும்படி உலக நாடுகளும் சிங்கள அரசும் வற்புறுத்துவதிலேயே தெரிகிறது இப்போர்முறை வடிவத்தின் வெற்றி. இன்றும் தமிழர் தரப்பின் சக்தி மிக்க ஆயுதமாகப் பார்க்கப்படுவது இந்த உயிராயுதம் தான்.
21 கரும்புலிகள் அணியினர் அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத்தளம் மீது மேற்கொண்ட வெற்றிகரமான 'எல்லாளன் நடவடிக்கை" அதிரடித் தாக்குதல்களின் அதிர்ச்சியில் இருந்து இன்னமும் சிங்கள அரசோ அல்லது சிங்களப் படைத்தரப்போ மீளமுடியாமல் இருக்கின்றது.
'தலைவர் நினைச்சதை நாங்கள் செய்து முடிச்சிட்டம். நீங்களும் தலைவரின் திட்டத்தை சரியாகச் செய்யுங்கோ. தலைவர்தான் கவனம். அவர கவனமாகப் பாதுகாத்துக்கொள்ளுங்கோ. நான் மூண்டாவது தரமும் காயம் பட்டிட்டன். நான் தொடர்பைத் துண்டிக்கிறன்....."
என்ற வார்த்தைகளோடு இளங்கோவின் குரல் அடங்கிப்போகின்றது.
எல்லாளன் நடவடிக்கை
இந்த கரும்புலிகளின் உயரிய அர்ப்பணிப்பு, தற்கொடை, தமிழ் மக்களின் மீதும் தேசியத் தலைவரின் மீதும் அவர்கள் வைத்திருந்த பாசம், அன்பு எல்லாமே போற்றுதற்குரியது.
வான்கரும்புலிகள்
“தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்” என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் தாக்குதல் நடத்திய வான் கரும்புலிகளில் ஒருவரான கேணல் ரூபன் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தமிழக மக்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தின் முழு விவரம் !!
15.02.2009
தமிழீழம்.
அன்புள்ள எனது தமிழீழ மக்களே குறிப்பாக வன்னியில் வாழும் மக்களே,
நீங்கள் அனுபவிக்கும் கொடும் வலி கண்டு எனது மனம் குமுறுகிறது, கலங்குகின்றது. எமது மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்றுதான் எமது தேசியத் தலைவர் போராட்டத்தைத் தொடங்கினார்.
அவ்வேளை நீங்கள் தான் அவரிற்கு உத்வேகம் கொடுத்து ஆதரித்து போராட்டத்திற்கு வலுச்சேர்த்து உங்கள் பிள்ளைகளை போராட்டத்தில் இணைத்து எமது அமைப்பை வளரச் செய்தீர்கள். நாம் காலங்காலமாக வாழ்ந்த மண்ணில் சுதந்திரமாக வாழத்தான் ஆசைப்பட்டோம். அது தவறா?
உலகத்தில் வாழும் மக்களில் எமது தமிழ் இன மக்களின் உயிர் உயிரில்லையா? எவ்வளவோ நாடுகள் சுதந்திரம் அடைந்ததற்கு காரணமாக இருந்த உலக நாடுகள் எமது தமிழினத்தை மட்டும் சிங்கள தேசம் அழிக்கவிட்டு வேடிக்கை பார்ப்பதன் காரணம் தான் எனக்குப் புரியவில்லை.
அன்புக்குரிய மக்களே!
எமக்காக தமிழகத்தில் இருக்கும் மக்களும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் இருக்கும் மக்களும் உங்களின் விடிவிற்காக தீக்குளிப்புக்களிலும் பல வகையான அகிம்சைப் போராட்டங்களையும் நடத்தி வருவது உங்களிற்கு தெரிந்ததே. அவர்களால் வெளியே இருந்து செய்யக் கூடியதை செய்கின்றார்கள்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்களை போராட்டத்தில் இணைத்து உங்கள் விடிவிற்கான இறுதிப்போரில் போராட வேண்டும். தேசியத் தலைவரின் கைகளைப் பலப்படுத்த வேண்டும்.
அன்புக்குரிய மக்களே!
எதிரியானவன் பல்வேறு சூழ்ச்சிகள் செய்து அதாவது படிப்படியாக உங்களை உங்களது இடங்களில் இருந்து இடம்பெயர வைத்து உணவுத்தடை, மருந்துத்தடை போட்டு உங்களின் மேல் குண்டுமழை பொழிந்து தினம் சாவுக்குள் வாழவைத்து, பாதுகாப்பு வலயம் என அறிவித்து அதற்குள் உங்களை விட்டு குண்டுமழை பொழிந்து உங்கள் உறவுகளை கொன்று உங்களை தனது திறந்த சிறைச்சாலைக்கு வரச்செய்கின்றான். ஏன் தெரியுமா?
யூத இனத்தை கிட்லர் பல வதைமுகாம்களை அமைத்து யூத இனத்தை அழித்ததுபோல் மகிந்தவும் உங்களை அழிக்கப்போகின்றான். அது தெரியாமல் நீங்கள் அதற்குள் அகப்படக்கூடாது. கோத்தபாய இராணுவத்திற்கு கூறியிருப்பது தெரியுமா? தமிழரில் பெண்கள் உங்களுக்கு ஆண்கள் கடலிற்கு என்று. அதனடிப்படையில் இங்கிருந்த எத்தனை பெண்கள் கற்பழிக்கப்பட்டு இராணுவ மருத்துவமனைகளில் இராணுவத்தை பராமரிப்பதற்கு விடப்பட்டுள்ளர்கள் என்று தெரியுமா. இதைவிட எவ்வளவோ கொடும் செயல்கள் வெளியே தெரியாவண்ணம் உள்ளது.
அன்புக்குரிய மக்களே!
எமக்கு இந்த இழிவுநிலை தேவையா? நிச்சயமாக இதை நீங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள். ஏனென்றால் அதற்காக தான் நீங்கள் போராடி வருகின்றீர்கள்.
அதற்காக 24,000 மேற்பட்ட மாவீரர்களை அர்ப்பணித்திருக்கின்றீர்கள் இவர்கள் யார் போராளிகளாக பிறந்தவர்களா இல்லை. காலம் தான் போராளிகளாக்கியது. போராளிகள் பிறப்பதில்லை அவர்கள் உருவாக்கப்படுகின்றார்கள். யார் உருவாக்கியது.
சிங்கள தேசம் எமக்குரியதை தந்திருந்தால் எமது தேசியத்தலைவர் ஆயுதமேந்த தேவை ஏற்பட்டிருக்காது.
அன்புக்குரிய மக்களே!
நாம் விரும்பியோ விரும்பாமலோ எம்மை போராட சிங்களதேசம் பணித்து விட்டது. 30 வருடங்களாக போராடி உங்களது இறுதி இலட்சியமாம் தமிழீழத்தை அடையும் நேரம் வந்திருக்கும் வேளை நீங்கள் போராட்டத்தை விடப்போகின்றீர்களா? உங்கள் விடிவிற்காக நீங்கள்தான் போராட வேண்டும்.
நீங்கள் போராடாவிட்டால் உங்களுக்காக யார் போராடுவது? If we don’t fight for our freedom who else will? வன்னியில் இருக்கும் 250,000 பேரில் 50,000 பேர் போராட வலுவில்லாமலா இருக்கிறீர்கள்? சிந்தித்து பாருங்கள் 50,000 இளைஞர் யுவதிகள் போராட்டத்தில் இணைந்து போராடினால் சிங்கள இராணுவம் வந்த இடம் தெரியாமல் பறந்திடும்.
அன்புக்குரிய தம்பி, தங்கை அக்கா அண்ணா உறவுகளே!
போராட்டத்திற்கு வயதெல்லை கிடையாது வயது பார்த்தா இராணுவம் உங்களை கொல்கின்றது. 1990 ஆம் ஆண்டு 14 வயதில் நான் போராட புறப்பட்டேன். காரணம் இடப்பெயர்வு பாடசாலை இல்லை. நாம் நிம்மதியாக வாழ எமக்கென்று ஒரு தேசம் வேண்டுமென்பதால் நீங்களும் அதேபோல்தான் நினைப்பீர்கள்.
உங்களது வலியை நேரில் தினம் தினம் கண்டு மனம் வெதும்பி குமுறுவதுபோல் இன்னொன்றையும் நினைத்து குமுறுகிறது. நீங்கள் தாங்குகின்ற வலியை உங்களது வயதில் நான் தாங்கவில்லை அப்படியிருந்தும் என்னைப் போராட உந்தியது.
ஆனால் நீங்கள் எவ்வளவோ வலியை ஏற்படுத்திய சிங்கள இராணுவத்திற்கு எதிராக போராட ஏன் இன்னும் கிளர்ந்தெழாமல் இருக்கின்றீர்கள் என்பதை நினைக்க நினைக்க மனம் வெதும்புகின்றது.
சிங்கள இராணுவம் ஏற்படுத்திய வலி காணாதா? இன்னும் வலியை ஏற்படுத்தினால் தான் நீங்கள் போராடுவீங்களா?
அன்புக்குரிய மக்களே!
எமது தேசியத் தலைவர் காலத்தில் நீங்கள் சுதந்திரம் அடையாவிட்டால் ஒரு காலமும் நீங்கள் சுதந்திரமாக வாழமாட்டீர்கள் என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். தமிழீழ தேசியத் தலைவர் கூறியது போல் ‘ஒரு விடுதலை இயக்கம் தனித்து நின்று போராடி விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கத்தின் பின்னால் மக்கள் சக்தி அணிதிரண்டு எழுச்சி கொள்ளும் பொழுதுதான் அது மக்கள் போராட்டமாக- தேசியப் போராட்டமாக முழுமையும் முதிர்ச்சியும் பெறுகின்றது. அப்பொழுதுதான் விடுதலையும் சாத்தியமாகின்றது.’
‘கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்’ கேட்டோம் தந்தார்களா? இல்லை என்னத்தை தந்தார்கள் தாங்கொணா வலியை தந்தார்கள். அதன்பின்னர் என்னசெய்ய வேண்டும் தட்டுங்கள் நிச்சியமாக திறக்கப்படும்.
அன்புக்குரிய மக்களே!
எல்லோரும் சேர்ந்து ஆயுதம் ஏந்தி விசைவில்லை தட்டுங்கள் நிச்சியமாக சுதந்திரம் கிடைக்கும்.
அன்புக்குரிய மக்களே!
தமிழரிற்கு இருந்த போர்க்குணம் குன்றிவிட்டதா இல்லை. அதை நீங்கள் இன்னும் வெளிக்காட்டவில்லை. அந்தத் தருணம் வந்துவிட்டது. நான் யார்? நாங்கள் யார்? உங்களது பிள்ளைகள் நீங்கள் வளர்த்துவிட்டவர்கள் நாங்கள் வெளிநாடுகளில் இருந்து வந்து போராடவில்லை.
எனவே அன்புக்குரிய தாய்மாரே! தந்தைமாரே!
எனது குடும்பத்தில் ஒரு மாவீரர் எனது குடும்பத்தில் இரு மாவீரர் என பார்க்காதீர்கள். போராட வலுவுள்ள உங்களது பிள்ளைகளை நீங்கள்தான் அனுப்பி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் இளம் சந்ததிக்கு சுதந்திரமான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கலாம். எமக்கென்று ஒரு தேசிய இராணுவத்தை கட்டி எழுப்புங்கள். இந்தப் பூமிப்பந்திலே இருப்பை, பலம் தான் தீர்மானிக்கின்றது.
வலிந்தவன் பிழைப்பான் என்ற தத்துவத்திற்கேற்ப எல்லோரும் சேர்ந்து தேசியத் தலைவரின் கையை பலப்படுத்துங்கள். எம்மிடம் தேவையான ஆயுதம் உள்ளது. மிகுதி எதிரியிடம் உள்ளது. எமக்கு தேவையானது எல்லாம் ஆளணி ஒன்றுதான்.
பல மடங்கு கொண்ட ஆளணியையும் உலக நாடுகள் வழங்கும் இராணுவ தளபாடங்களையும் கொண்டுள்ள சிங்கள இராணுவத்திற்கு எதிராக குறைந்த ஆளணியை வைத்து இரண்டு வருடத்திற்கு மேலாக நாம் போராடுகின்றோம் என்றால் யாரிற்கு வெற்றி நீங்கள் நினைத்துப்பார்த்தீர்களா?
நாங்கள் அழிவது போல் சிங்கள தேசமும் அழிந்துகொண்டுதான் இருக்கின்றது பொருளாதாரத்தில், இந்தத் தருணம் நீங்கள் திரண்டெழுந்து ஓங்கி ஒரு அடி அடித்தால் எழும்ப முடியாமல் சிங்களம் நொருங்கும்.
அன்புக்குரிய இளைஞர் யுவதிகளே!
உங்களிற்கு உங்களது பெற்றோரை பார்க்கும் பொறுப்பு இருக்கு என்பது தெரியும் தாய் தந்தைமாரை காப்பாற்ற வேண்டும் என்றால் தாய்நாட்டை காப்பாற்றினால் தான் முடியும். இது கற்பனையல்ல இதுதான் நிஜம். நாம் எவ்வளவு காலம் சாவிற்குள் வாழ்வது? தினம் தினம் செய்தியில் சிங்கள இராணுவத்தின் எறிகணை வீச்சில் வான் தாக்குதலில் இத்தனைபேர் படுகொலை செய்யப்பட்டு காயப்பட்டுள்ளனர் என்பதை தான் கேட்கின்றோம், பார்க்கின்றோம்.
இவர்களில் அரைவாசிப்பேர் போராட வலுவுள்ளவர்களாகத்தான் இருக்கின்றார்கள் அந்த வயதில் இவர்கள் ஏன் அநியாயமாக சாகவேண்டும். செத்தவர்கள் வீதியோரங்களிலும் காணிகளிலும் புதைக்கப்படுகின்றார்கள். ஏன் இந்த அவலம். இவர்கள் எல்லாம் எமது அமைப்பில் இணைந்து ஆயுதம் ஏந்தி இராணுவத்தை கொன்று வீரச்சாவு அடைந்தால் தமிழன் வீரத்தோடு வாழ்ந்தான் அல்லது வீரத்தோடு மடிந்தான் என்று வரலாறு சொல்லும்.
அன்புக்குரிய மக்களே!
சுதந்திரத்திற்கான காலம் கனிந்துகொண்டிருக்கின்றது. வெண்ணை திரண்டுவரும்பொழுது பானையை போட்டு உடைத்துவிடாதீர்கள். ஒவ்வொருவரும் தன்நம்பிக்கையாக இருங்கள். உங்களது இன்னல்கள் வலியை கண்டுதான் தலைவர் போராட்டத்தை தொடங்கினார். உங்களிற்கு ஏற்படும் வலியைக் கண்டு அவரது மனம் அப்பொழுதிலிருந்து இப்பொழுதுவரை குமுறிக்கொண்டுதான் இருக்கிறது. அதில் எள்ளளவும் குறையவில்லை. நாங்கள் (மாவீரர்கள்) திரும்பத் திரும்ப உங்களிடம் கேட்பது எல்லாம் தலைவரை பாதுகாக்குங்கள். அவரின் கையை பலப்படுத்துங்கள். உங்கள் பிள்ளைகளை போராட விடுங்கள். தலைவர் நிச்சியமாக உங்களிற்கு சுதந்திரம் பெற்றுத்தருவார்.
எமக்கும் சிங்கள இராணுவத்திற்கும் தான் யுத்தம் சிங்கள மக்களுக்கல்ல. ஆனால் இராணுவமோ எமது மக்களை குண்டு வீசி கொல்கின்றது. எமக்கும் சிங்கள மக்களை கொல்ல முடியும். சிங்கள மக்கள் இதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.
ஆனால், நாம் அப்படிச் செய்யவில்லை. நாம் தலைவரை சந்தித்து குண்டு போடப்போகும் பொழுது திரும்பத் திரும்ப வலியுறுத்துவது மக்கள் மீதோ மருத்துவமனைகள் மீதோ தவறியும் குண்டு போடாதீர்கள் என்று. ஆனால் சிங்கள வான் கழுகுகள் எமது மக்களையும் மருத்துவமனைகளையும் தேடித் தேடி குண்டு போடுகின்றது.
நாம் சிங்கள தேச மக்களுக்கு ஒன்றை தெளிவாக சொல்ல விரும்புகின்றோம். தமிழினத்தை அழித்துவிட்டு நீங்கள் நிம்மதியாக வாழலாம் என்று கனவு காணாதீர்கள். எமது தலைவிதியை நாமே தீர்மானித்து உங்களுடன் ஒற்றுமையாக வாழத்தான் நாங்கள் விரும்புகின்றோம். இதைத்தான் நாங்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றோம். நாம் எமது மண்ணில் சுதந்திரமாக வாழத்தான் ஆசைப்படுகின்றோம்.
அன்புக்குரிய வன்னிவாழ் மக்களே!
நாம் சிங்கத்தின் குகைக்குள் வெடி சுமந்து போகின்றோம். நாம் யார், தமிழன் யார் எனக் காட்டுவோம். நான் எப்பொழுதும் அநியாயமாக சாவதை விரும்பியதில்லை. அந்த வகையில் நான் மாவீரனாக அதிலும் கரும்புலி வீரனாக எனது தாய்நாட்டிற்கும், மக்களிற்கும் பெருமை சேர்ப்பதை நினைத்து நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.
திலீபன் அண்ணை கூறியது போல்
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் அமையும்”
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் தமிழரின் தாகமும் அதுதான்”
இப்படிக்கு,
தம்பி, அண்ணா, மகன், போராளி
இ.ரூபன்
அந்த வீரர்களின் உயரிய விருப்பமான தமிழீழம் என்ற இலட்சியத்தினை அடைவதற்கு நாம் எல்லோரும் தலைவரின் பின்னால் அணிதிரண்டு சிங்கள படைகளுக்கு எதிராகப் போராடி சுதந்திர தமிழீழத்தினை விரைவில் அமைக்கவேண்டும்.
இதுவே இந்த மண்ணுக்காக தமது இன்னுயிர்களை ஈந்த அந்த கரும்புலி மாவீரர்களின் தியாகங்களுக்கும் அர்ப்பணிப்புக்களுக்கும் நாம் செய்யும் மரியாதையாக அமையும்.
தம்மையே தந்த தற்கொடையாளர்கள் கரும்புலிகள் !!
உலகப் போரியல் சரித்திரத்தில் அர்ப்பணிப்பையும், தியாகத்தின் உச்சத்தையும், தனிமனித, கூட்டு போரியல் திறமையின் மொத்த வெளிப்பாடாகவும் விளங்குபவர்கள் கரும்புலிகள். தமிழீழ தேசியத் தலைலவர் எதை உருவாக்கினாலும் அதில் ஓரு நேர்த்தி, தூய்மை உன்னதம், புனிதம், அதியுச்ச செயல்திறன் இயல்பாகவே அமைந்திருக்கும். அவ்வாறே கரும்புலிகளும்
“பலவீனமான எம் இனத்தின் பலமான ஆயுதமாகவே கரும்புலிகளை உருவாக்கினேன்” என்று அதன் உருவாக்கம் தொடர்பாக தேசியத்தலைவர் கூறியிருக்கின்றார். அப்போது வடமராட்சி பெருநிலப்பரப்பில் சிங்கள இராணுவம் ஆக்கிரமிப்பை மேற்கொண்டிருந்த காலம். நெல்லியடிப் பாடசாலையை இராணுவமுகாமாக்கி அங்கிருந்து பல கொடுமைகளை தமிழ் மக்களுக்கு அது செய்து கொண்டிருந்தது. அன்று யூலை 05 1987 காலை 07 மணி யாழ்ப்பாணம் பாரிய வெடிச்சத்தத்தால் அதிர்கிறது. சிறிலங்கா அச்சத்தால் அதிர்கிறது. உலகம் வியப்பால் அதிர்ந்தது. கரும்புலி கப்டன் மில்லர் வெடிமருந்து நிரப்பப்பட்ட வாகனத்தில் இராணுவ முகாமுக்குள் சென்று வெடித்து வீரகாவியமாகிறார். அன்றுடன் கரும்புலிகளின் வீரவரலாறு தொடக்கம் பெறுகின்றது.
கரும்புலிகள் பிரிவில் இணைந்து கொள்வது மிகவும் சுலபமான காரியமல்ல. இதற்கு தலமையின் நேரடி அனுமதி அவசியம். தலைவரே அந்த அனுமதியை வழங்குகிறார். இதற்கு உதாரணமாக முதலாவது தரை பெண் கரும்புலி யாழினி கரும்புலிகளின் பிரிவில் சேர பத்துத் தடவைகள் தலைவருக்கு கடிதம் வரைகிறாள். அவளுடைய மூத்த சகோதரி மாவீரர் என்பதால் அந்தவேண்டுகொளை தலமை நிராகரிக்கின்றது. பின் உண்ணா நோன்பிருக்கின்றாள் தான் கரும்புலியாக வேண்டும் என்று. இப்படி நீண்ட போராட்டத்தின் மத்தியிலே தலைவர் அவளை கரும்புலிப்பிரிவில் சேர்த்துக் கொள்கின்றார். பின்னாளில் தாண்டிக்குளம் ஆயதக்களஞ்சியத் தாக்குதலை வெற்றிகரமாக நடாத்தி மேஜர் யாழினியாக மாவீரராகிறாள். இப்படி அந்தப் பிரிவில் இணைவது இலகுவான விடயமல்ல.
முடியாது என்பதை முடியும் என்றாக்கி வருகின்ற தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து வெற்றிவாகை சூடிய நாயகர்கள் கரும்புலிகள். ஈழப்போரிலே எதிரிகளுக்கு சிம்மசொற்பனமாக அமைந்து ஈழப் போர் வெற்றிகளுக்கு முதல் சுழிபோட்டவர்கள் இவர்கள். முகமறியாது, முகவரியறியாது இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் தம் உயிரையே ஆயதமாக்கி தம்மையே தந்தவர்கள் இவர்கள். ஆன்பின் உச்சத்தின் வெளிப்பாடாகவும், வீரத்தின் முழுவடிவமாகவும் இவர்கள் இருக்கின்றார்கள். சாவிற்கான நேரம் குறித்து வெடிமருந்தினைச் சுமந்து தாயக விடுதலையை மூச்சாக்கி நெருப்பில் நீராடிய வீரமறவர்கள் இவர்கள்.
உலகினை வியக்கும் வரையிலான அதிஉச்ச திட்டமிடலுடன் கூடிய தாக்குதல்களை அவர்கள் நடார்த்தியிருந்தார்கள். அனுராதபுரம் வான்படைத்தளம் மீதான தாக்குதல் என்பது உலகப்போர் வரலாற்றில் தமிழினத்தின் வீரத்தையும் விடுதலைப்புலிகளின் போர் யுத்தியையும் கரும்புலிகளின் அதியுச்ச போர்த்திறமையையும் உலகிற்கு எடுத்துக்காட்டியது.
கரும்புலிகளின் இலக்கு என்பது எப்பொழுதும் விடுதலைக்காக எதிரிகளை தாக்கியழிப்பதாக இருந்ததே தவிர பொதுமக்களையோ, அப்பாவிகளையோ இலக்காகக் கொண்டதில்லை. கட்டுநாயக்கா சர்வதேச விமானத்தள தாக்குதல் என்பது அது ஓர் சர்வதேச விமானத்தளமாக இருந்த போதிலும் எந்தவொரு பொதுமகனுக்கும் எந்தப் பாதிப்பும் இன்றி நிகழ்த்தப்பட்டமை இன்றும் நினைவுகூரத்தக்கது. கரும்புலிகளின் இலக்கு சர்வதேசத்தை அச்சுறுத்துவதோ, ஒர் இனத்தை அழிப்பதாகவோ இருக்கவில்லை. அவர்கள் தம் இனத்தின் இருப்புக்காக, தேசத்தின் விடுதலைக்காக, சந்ததியின் சுதந்திரத்திற்காக, தாய்நாட்டுக்காக வீரகாவியமானார்கள். முகமறியாத அந்த வீரர்கள் உலகம் வியக்கும் தாக்குதல்களையும் நடாத்தியிருக்கின்றார்கள்.
ஹபரணை தாக்குதல் என்பது இதுவரை உலகம் போரியலில் கண்டிராத ஒரு தாக்குதல் குறித்த ஒரு தாக்குதலில் ஒரு போர் வீரன் குறித்த ஸ்தலத்தில் 193 எதிரிப் படையினரைக் கொன்று குவித்து 700க்கு மேற்பட்டோரை விழுப்புன் அடையச்செய்து உலக சாதனையான ஒரு வெற்றித் தாக்குதலை அந்த வீரன் நடாத்தியிருந்தான். முகமறியாக் கரும்புலியின் தாக்குதல் என்பதால் சாதனையை எழுத்தில் பதியப்படாமலே போயிற்று. என்றோ ஒரு நாள் இந்த உலகம் எம் தேசத்தை அங்கீகரிக்கும். அப்போது உங்கள் சாதனைக்கு அங்கீகாரம் நிச்சயம் உண்டு.
கரும்புலிகளோடு அவர்களுக்கு உதவியாக இருக்கும் முகவர்களும் போற்றுதற்குரியவர்கள். சில சந்தர்ப்பங்களில் முகவர்களும் கரும்புலிகளாகியிருக்கின்றார்கள். ஹபரணை தாக்குதல் இலக்கு நெருங்கிவிட்டது. முகவர் வெடிபொருள் சுமந்த வாகனத்தை ஓட்டி வருகிறார் கரும்புலி வீரன் வருவதற்கு சற்று தாமதம் ஏற்படுகின்றது. வேறுவழியின்றி முகவர் தானே அந்தத் தாக்குதலைச் செய்ய முடிவெடுத்து இலக்கை நோக்கி விரைகிறார். இறுதிக் கணங்களின் அந்தக் கரும்புலி மாவீரன் வாகனத்தைப் பொறுப்பேற்கிறான். தாக்குதல் நடந்தேறுகிறது. சிறிது நேரம் வரை தாக்குதலில் மாவீரனானது யாரென்று தெரியவில்லை. பின்னர் முகவரின் தொடர்பினூடாக உறுதிசெய்யப்படுகின்றது. இப்போது கூட உச்சரிக்க முடியவில்லை அந்தத் தற்கொலையாளனின் பெயரை. அதே போல் வவுனியாவில் நடந்த தாக்குதல் ஒன்றில் இலக்கு நெருங்கிய காரணத்தால் முகவரே அதை செய்து வீர காவியமானார்.
இப்படி எண்ணற்ற தியாகங்களைச் செய்து ஆக்கிரமிப்பின் ஒவ்வொரு கணங்களிலும் எதிரியின் இதயப்பகுதிகளை தகர்த்தெறிந்து, அவனை நிலைகுலையச் செய்து, ஈடிணையற்ற வெற்றிகளைப் பெற்றுத் தந்த அந்த விலையற்ற செல்வங்களின் தூய்மையான அர்ப்பணிப்பு எமக்குப் பல விடயங்களை இன்றும் சொல்லித்தருகின்றது.
பதவிக்காகவும், அதிகாரத்திற்காகவும் வல்லாதிக்க அரசுகளிடம் விலைபோயும் அரசியல் பகடற்காய்களாக இருக்கும் ஒவ்வொரு தமிழனும் இந்தப் புனிதர்களின் தியாகத்தை சிந்தித்துப் பார்க்க வேண்டும். எமது முதல் பலவீனமே ஒற்றுமையின்மை தான். அதை எப்போது நீக்குகின்றோமோ அப்போது நிச்சயம் இந்த வீரர்களின் தாகத்தை தீர்க்கலாம்.
பலரும் இன்று பேசுபவர்களாக முன்னாள் போராளிகள் இருக்கின்றார்கள். பேசுவதற்கு வாய் இருக்கு என்பதற்காக, எழுதுவதற்கு எழுதுகோல் இருக்கிறது என்பதற்காக அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றார்கள், கலாசாரச் சீர்கேட்டில் ஈடுபடுகின்றார்கள் என்று பலவாறு எழுதுகிறார்கள். ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையில் அவர்கள் எம் தேசத்தின் விடுதலைக்காக தம்மை முழமையாகக் கொடுத்தவர்கள், எதையும் தமக்காக அவர்கள் சேமிக்கவில்லை. ஆக அவர்களின் வாழ்வாதாரத்திற்காக நாம் இதுவரையில் என்ன செய்திருக்கின்றோம், இப்படிச்சொல்வது பாலியல் தொழிலில் ஈடுபடுவது சரியென்று அர்த்தம் அல்ல. மாறாக அவர்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய தார்மீக, சமூகப் பொறுப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு என்பதே விடயம்.
அப்படி ஒன்றை செய்துவிட்டுக் கதைப்பது தான் நாகரிகம். செய்யமுடியாத சூழல் உள்ளது என்று எவரும் சாட்டுச் சொல்லமுடியாது. அது கோழைத்தனம். தமிழ்த்தேசியம் பேசுபவர்கள் இனியாவது முன்வரவேண்டும். சமுத்தின் பிரச்சனை எழுதப்படும் போது அதற்கான காரணத்தோடு எழுதப்பட வேண்டும். ஒரு பிரச்சினைக்கான காரணத்திற்கு தீர்வுகாணப்படும் போது பிரச்சனை இல்லாமலேயே போய்விடும்.
மீள்எழுச்சி, மீள் ஒருங்கிணைப்பு என்ற சொல்லாடல்கள் எஞ்சியிருக்கும் தமிழனையும் கொன்றுவிடுவதாக அமைகின்றது இதனால் விடுதலை செய்யப்பட்ட பல போராளிகள் மீள சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். பல ஆயிரக்கணக்கான சிறையில் உள்ளவர்களின் நிலை அதோகதியாக இருக்கின்றது.
தேசியத்தலைவரைப் பொறுத்த வரை சொல்லைவிட செயலுக்கு முக்கியம் கொடுப்பவர். நூம் செயலில் காட்டிய பின்பே பேச முற்பட வேண்டும் என்று சொல்பவர். அதைவிட இரகசியத்தின் உறைவிடமாக தேசியத்தலைவரையும் விடுதலைப்புலிகள் அமைப்பையும் சொல்லலாம்.
இந்தியாவில் தலைவரும் புலிகளும் இருந்த காலத்தில் இரண்டு வருடம் பழநெடுமாறன் ஐயா அவர்களின் வீட்டில் பேபி அண்ணை உள்ளிட்டோரோடு தலைவரும் தங்கியிருக்கிறார். ஆப்போது பழநெடுமாறன் ஐயா அடிக்கடி கேட்பாராம் பேபி அண்ணாவிடம் நான் உங்கள் தலைவரை, தம்பி பிரபாகரனைப் பார்க்க வேண்டும் என்று அவரும் காட்டுகிறோம் என்று பதிலளிப்பாராம். ஒரு நாள் மதுரையில் வைத்து தலைவர் உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறை கைது செய்கிறது. அப்போது அவர்களை பிணையில் எடுக்கப் பழநெடுமாறன் ஐயா செல்கிறார். பிணையில் எடுத்த மூன்று பேரையும் சந்திக்கும் போது தலைவர் அண்ணா நான் தான் பிரபாகரன். இவ்வளவு காலமும் சொல்லாததற்கு வருந்துகிறேன் என்கிறார் சரியாக இரண்டு வருடம் அவரின் வீட்டில் தங்கியிருந்தார். அதுவரை காலமும் நெடுமாறன் ஐயாவுக்குத் தெரியாது இவர் தான் பிரபாகரன் என்று. இது தான் தலைவர், விடுதலைப்புலிகள் அமைப்பு.
ஸ்ரீலங்கா அரசினூடாக இந்த சொல் அதிகமாக பரப்பப்பட்டாலும் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியது தமிழர் தரப்பின் பலவீனமே ஏனெனில் தற்போதுள்ள சூழலில் இச்சொல்லாடல் ஊடாக அதிகம் நன்மை பெறுவது சிங்களமே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஒவ்வொரு கரும்புலிகளும் அவர்கள் இறுதியாக உச்சரித்த வார்த்தைகள் ”இதை பார்க்கும் போது நான் உங்களை விட்டு நீண்ட தூரம் போய்யிருப்பன் ” ”அன்னேட கைய பலப்படுத்துங்கோ ” ” நாளை நிச்சயம் தமிழீழம் உருவாகும் ” ” நீங்கள் தமிழீழத்தில சந்தோசமா இருக்கோணும் எண்டுறதுக்காக தான் நான் இந்த தாக்குதலை செய்றன்” இப்படி அவர்கள் தேசத்தின் விடுதலையை மூச்சாக்கி அந்த விடுதலை உயிர் பெற தம் மூச்சை கொடுத்தவர்கள் இந்த தெய்வங்கள். உயிரைக்கொடுத்து தியாகம் செய்த உன்னதமான அந்த இலச்சியத்தை ஒற்றுமையோடு வென்றெடுப்பதே அந்த தெய்வங்களுக்கு நாம் செய்யும் உள்ளார்த்தமான ஆராதனையாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக