முட்கம்பி
வேலிக்குள்ளே
முடங்கினோம்
சில காலம்.!

மூச்சிழந்து
பேச்சிழந்து
முடிவுகள் ஏதுமின்றி
ஏதிலிகளானோம்...!

சத்தமில்லாத
இன அழிப்புக்குள்
அடிக்கடி
பலிகளானோம்...!

பாதுகாப்பு
வலயமின்றி
குவலயத்தில்
குற்றுயிரானோம்..!

கண்டம் விட்டு
கண்டம் தாண்டி
தடையமிழந்தோம்
துண்டங்களானோம்..!

நட்புக்குள்
உறவுக்குள்
நமக்குள் நாமே
துப்பாக்கி வேட்டும்
துயர் பகிர்வுமானோம்..

கேட்டிட அங்கு
யாருமில்லை
பட்டப் பகலில்
பள்ளி மாணவரை
சுட்டுத் தள்ளும்
காவல் நாய்கள்..!

ஏவல் பேய்களின்
ஆட்சியில் நீதிக்கு
தராசில்லை
நாதியில்லாத்
தலைவர்களோடு
சாவுக்கு தேதியிட்டு
நாவுக்கு நங்கூரம்.
இட்ட படி.....நம்மவர்.....

ஆக்கம்  கவிஞர் எழுத்தாளர் தயாநிதி
தாயின் மடியில்
தவழ்ந்த குழந்தை
ஈழம் என்றே எழுந்தது
புன்னகை பூத்த பூ முகம்
பேச்சாற்றலில் மிகுந்த
மாமலையே
போராற்றல் கொண்ட
புலியின் குணமே
தலைவனின் கனவை
நெஞ்சினில் தாங்கி
நடந்த நெடுமலையே
பேச்சு வார்த்தை
மேசையில் நீ அமர
விழி பிதுங்க முழித்தது
எதிரி படையே
உன் மக்கள் வாழ
உலகெங்கும் நீ திரிந்தாய்
ஒற்றை புன்னகையால்
உலகத்து தலமைகளை
நீ அசைத்தாய்
எம் மக்கள் துயர் தீர
ஓங்கி ஒலித்தது
உன் குரல் உலக நாடுகளின்
பேச்சுவார்த்தை மேசைகளில்
கூவிய குயிலொன்று
குரலோசை எங்கே
இனவாத அரசின் குண்டுக்கு
இரையானதால் விழி மூடி
வித்துடலாய் போனதுவே 

ஆக்கம்  சிவா TE
காலம் காலமாய்
அடிமைப்பட்ட ஓர் இனத்தை
தன் காலத்திலேயாவது
தலை நிமிர்ந்து வாழவைத்த
தன்மானத் தமிழன்
தரணியில் மலர்ந்த மாதம் !!!

தலைவனின் பெருங்கனவுக்காய்
தன்னுயிர்களைத் தியாகம் செய்த
மாவீரச் செல்வங்களை
மனதில் ஏந்தும் மாதம் !!!

காட்டிக் கொடுத்தவனெல்லாம்
கண்ணியவானாக வலம்வர
கடைசிவரை களத்தில் நின்றவர்
சோற்றுக்கு வழியின்றியிருக்க !!!

மாற்று அரசியல் எனும் பெயரில்
மடையர்களாய் தமிழர்களை பார்க்கும்
கூட்டுக் குள்ளநரிகளின் கும்மாளம் கண்டு
கொதித்துப் போனவரின் ஆறுதல் மாதம் !!!

மறியலில் இருந்து வருகின்ற தமிழர்கள்
மாதக் கணக்கில் மாய்ந்து போகின்றனர்
சமகளமாடினர் சகோதரிகள் அன்று -சதைப்
பிசாசுகளுக்கு இரையாகின்றனர் இன்று !!!

அங்கு தொட்டு இங்கு தொட்டு
ஆட்டம் போட்ட காடையர் கூட்டம்
அத்துமீறி ஆக்கிரமித்து விட்டார்கள்-யாழ்
பல்கலைக்கழக வளாகத்தையும் இன்று !!!

வானத்தை நோக்கிச் சுட்ட தோட்டா
வளைந்து வந்தா உயிர் பறித்தது ?
கேட்கின்றவன் இல்லாத காரணத்தால்
கேள்விக்குறியாய் ஈழமாணவர் வாழ்வும் !!!

இன்று வரும் நாளை வரும் விடிவென்று
எதிர்பார்ப்புடனேயே ஏழு வருடங்கள்.....
இந்த வருடமும் கார்த்திகை வந்தாச்சு -இனி
கண்ணீரில் இம்மாதம் கரைந்து மறையும் !!!

இயலாமை, மற்றும்
இன ஒற்றுமையின்மை
முடியாத தொடர்கதையாய்
முண்டியடிப்பது குறைச்சலில்லை !!!
 
ஆக்கம் -ஐங்கரன்-
ஈழத்தமிழர்களின் துன்ப வரலாற்றில் ஒன்றாக கருதப்படும் யாழ் இடப்பெயர்வின் நினைவு நாள் ( 30/10/1995 ) !!
1995ஆம் ஆண்டு ஒக்டோபர் 30ஆம் நாள் யாழ் குடாநாட்டு மக்களின் வாழ்வில் மறக்க முடியாத பெரும் துன்ப சுமையாக அமைந்த நாளாகும்.எறிகணைத்தாக்குதல், விமான குண்டு வீச்சுக்கள் இராணுவ நகர்வுகள், என இடப்பெயர்வுகளை சந்தித்து வந்த யாழ் குடாநாட்டு மக்கள் ஒரே இரவில் ஒன்றாய்க் கூடி வாழ்ந்த மண்ணைவிட்டு தூக்கியெறியப்படுவோம் என எவரும் நினைத்திருக்க மாட்டார்கள்.வேரோடும் வேரடி மண்ணோடும் நகர்ந்து சென்ற பெரும் துயரம் அன்றுதான் நிகழ்ந்தது.
யாழ்ப்பாணத்தை கைப்பற்றி பாரிய இன அழிப்பு நடவடிக்கையை இராணுவம் மேற்கொள்ள இருப்பதால் உடனடியாக பாதுகாப்பான பிரதேசங்களான தென்மராட்சி வன்னிப் பகுதிகளுக்கு சனத்தை இடம்பெயருமாறு விடுதலைப்புலிகள் ஒலிபெருக்கியில் அறிவித்ததை கேட்டு அதிர்ச்சியடைந்தவர்களாக அத்தனைபேரும் தங்கள் வேர்களைப் பிடுங்கி நடந்தார்கள். எங்கே போவது, என்ன செய்வது என்னும் எந்தச் சிந்தனையும் இன்றி உயிர் பிழைக்க வேண்டும் என்ற நோக்கோடு மட்டும் நடந்தார்கள்.யாழ் குடாநாட்டினை வடபகுதியின் மற்றைய பிரதேசங்களுடன் இணைத்திருந்த வெறும் இரண்டு வீதிகளினூடாக 5 லட்சம் மக்கள் ஓர் இரவு விடிவதற்குள் கடந்து செல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்ட அந்த அவலத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
இடைவழியில் நடந்த மரணங்களும், பேரவலங்களும் சந்தித்த 5 இலட்சம் மக்கள் தென்மராட்சியையும் கிளாலி ஊடாக வன்னியையும் அடைந்தனர். இடைவழியில் விமான குண்டு வீச்சுக்களால் இறந்து போனவர்கள் பலர் 24மணிநேரமாக நடந்து நடந்து களைத்து போன மக்கள் அனுபவித்த பேரவலம் ஈழவிடுதலைப்போராட்ட வரலாற்றில் மக்கள் அனுபவித்த பெருந்துன்பங்களில் ஒன்றாகும்.
சூர சங்காரமும் மாபெரும் இடப்பெயர்வும்..
வருடாவருடம் எமது முருகன் கோயில்களில் சூரசங்கார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆறுநாள்கள் கந்தஷஷ்டி விரதம் அனுஷ்டித்து ஆறாம் நாள் மாலையில் முருகன் ஆலயங்களில் இடம்பெறும்
சூரன்போரைத் தரிசித்து ஏழாம் நாள் பாரணை செய்து விரதத்தை முடித்துக் கொள்வதுண்டு.
அசுரர்கள் தேவர்களை அடிமைப்படுத்திக் கொடுமை செய்ததாகவும் தேவர்கள் சிவனிடம் போய் முறையிட்டதாகவும் சிவன் நெற்றிக் கண்ணைத் திறக்க அதிலிருந்து ஆறு பொறிகள் வெளியேறி சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது விழ அவை ஆறு குழந்தைகளாக மாறியதாகவும் அவற்றைக் கார்த்திகைப் பெண்கள் அள்ளியெடுத்து உமாதேவியார் கையில் கொடுக்க அவை ஆறுமுகம் கொண்ட ஒரு குழந்தையாக மாறியதாகவும் எமது இந்துசமய புராணங்கள் கூறுகின்றன.
அந்தக் குழந்தையையே நாம் ஆறுமுகன், சரவணன், கார்த்திகேயன் போன்ற பெயர்களில் வணங்கி வருகின்றோம். பின்பு உமாதேவியார் முருகனிடம் வேலைக் கொடுத்து அசுரரை அழித்து வரும்படி கட்டளையிட அவன் அசுரருடன் போரிட்டு அவர்களை அழித்ததையே நாம் சூரன் போராகக் கொண்டாடுகிறோம்.
பானுகோபன், தாரகாசூரன் என இரு அசுர தலைவர்களும் அழிக்கப்பட முருகன் பத்மாசுரனை வெற்றிகொண்டு அடிமையாக்கி மயில் வடிவத்தைத் தனது வாகனமாகவும் சேவல் வடிவத்தில் தனது கொடியாகவும் ஏற்றுக் கொண்டதாகப் புராண வரலாறு. எப்படியிருந்தபோதிலும் தேவ அசுர யுத்தத்தில் தேவர்கள் பெற்ற வெற்றியை நினைவுகூரும் ஒரு சடங்காகவே இது கருதப்படுகிறது.
ஆனால் வட இந்தியாவில் வாழும் இந்துக்கள் முருகனைக் கடவுளாக ஏற்பதோ, ஆலயம் அமைத்து வழிபடுவதோ கிடையாது. அதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட போதும் எம் மத்தியில் முருகவழிபாடு மிகவும் மேன்மையுடன் பேணப்பட்டு வருகிறது. அதுமட்டுமன்றி வேல் வணக்கம் ஒரு வீர வழிபாட்டு முறையிலிருந்து தோன்றியதாகவும் பல தொல்லியல் ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.
ஆதிதிராவிட நாகரிகம் மேலோங்கியிருந்த காலத்தில் போரில் மடிந்த வீரர்களின் புதைகுழிகள் மேல் வேல் நட்டுப் படையல் செய்து பூசை மேற்கொண்டு வந்ததாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்றும் முருகன் குறிஞ்சி நில மக்களின் தெய்வமாக வழிபடப்பட்டு வருவதை நாம் அவதானிக்கலாம். அதேவேளையில் முல்லை நில மக்களும் (வேடர் கதிர்காமம்) நெய்தல் நில மக்களும் (மீனவர்கள் செல்வச்சந்நிதி) வாய்கட்டிப் பூசை செய்து வேல் வணக்கம் செய்து வருகின்றனர்.
எனவே தான் எமது மக்கள் கந்தஷஷ்டி விரதத்தை மிகவும் புனிதமாகவும் பக்தி சிரத்தையுடனும் அனுஷ்டித்து வருகின்றனர். குறிப்பாக ஒருவர் விரதம் அனுஷ்டித்து அவர் அதைக் கைவிடும்போது அவரின் பிள்ளைகளில் ஒருவர் அதைத் தொடர்வது ஒரு முக்கிய மரபாகப் பேணப்பட்டு வருகிறது.
தலைமுறை தலைமுறையாக கந்தஷஷ்டியும் சூரன்போரும் அனுஷ்டிக்கப்பட்டு வந்தபோதிலும் 1995 ஆம் ஆண்டு சூரன்போர் நாள்களில் துயரக் கதை படிந்த வரலாற்றை நாம் மறந்துவிட முடியாது. நாம் இறைவழிபாடு செய்து விரதம் மேற்கொண்ட அந்த நாள்களில் தான் இலங்கை இராணுவம் வடபகுதி மீது ஒரு பெரும் ஆக்கிரமிப்புப் போரைக் கட்டவிழ்த்துவிட்டது.
விமானத்தாக்குதல்கள், டாங்கிகள், எறிகணைகள் என்பன மழையாகப் பொழிய இராணுவம் முன்னேறப் பெரும் முயற்சியை மேற்கொண்டது. எங்கள் ஆலயங்களில் விரத பூசைகள் நடந்து கொண்டிருக்க விடுதலைப் புலிகள் நெருப்பு மழைக்குள் நின்று படையினரைத் தடுத்து நிறுத்தப் போராடிக் கொண்டிருந்தனர்.
நல்லூரில் ஆறாம் நாள் சூரன்போர் நடக்க நீர்வேலியில் பெரும் போர் நடந்தது. அடுத்தநாள் பாரணை. விமானக் குண்டுகள் விழுந்து கொண்டிருக்க எமது மக்கள் பாரணையை அதிகாலையில் முடிக்கிறார்கள். அந்தப் பாரணைப் பூசையின் பின் எமது ஆலயங்களில் பல மாதங்கள் பூசைகள் நடக்கவுமில்லை, மணிகள் ஒலிக்கவுமில்லை.
இராணுவம் விமானக் குண்டு வீச்சுக்களையும் எறிகணைப் பொழிவையும் மேற்கொண்டவாறே கோப்பாயை நோக்கி முன்னேறிய நிலையில் வேறு வழியின்றி 5 லட்சம் மக்கள் இரவோடிரவாக அந்தக் குறுகிய செம்மணி வீதியால் வலிகாமத்தை விட்டு வெளியேறினர்.
5 லட்சம் மக்கள், குழந்தைகள், முதியோர், பெண்கள், நோயாளர்கள் ஒரு குறுகிய பாதையில், குறுகிய பாலத்தினூடாக வெளியேற வேண்டிய அவலம். தலைக்கு மேல் சுற்றும் விமானங்களும் நெருங்கி வரும் வெடியோசைகளும் மக்களை ஓட ஓட விரட்டுகின்றன.
கால் வைத்து நடக்க இடமின்றி மக்கள் அங்குலமங்குலமாக நகர்ந்து கொண்டிருந்த வேளையில் விமானம் ஒன்று தாழப் பறந்து இரண்டு குண்டுகளைத் தள்ளிவிடுகின்றது. சில உயிர்கள் பறிக்கப்பட மனிதக் குருதி செம்மணி நீரில் கலக்கிறது. எங்கும் ஒரே அவல ஓலம். எமது மக்களின் நிலை கண்டு வானம் விம்மி வெடித்து மழையாகப் பொழிகிறது.
ஆனாலும் உப்பு நீர் வாவியில் குடிக்க நீரின்றி குழந்தைகள் தாகத்தில் கத்த ஒரு தாய் குடையில் வழிந்த நீரை ஏந்திக் குழந்தைக்குக் கொடுக்கிறாள். மழையில் நடுங்கிய முதியவர்கள் மரங்களின் கீழ் ஒதுங்குகின்றனர். நாவற்குழி, கைதடி, நுணாவில், சாவகச்சேரி பகுதிகளின் பாடசாலைகளும் பொது மண்டபங்களும் எமது மக்களுக்கு அடைக்கலம் கொடுக்கின்றன.
1995 ஆம் ஆண்டின் சூரன்போர் சாவுகளாலும், காயங்களாலும் பசி, பட்டினியாலும் இடப்பெயர்வாலும் எழுதிய சோக வரலாறு இது. கந்தஷஷ்டிப் பாரணையன்று தொடங்கிய அந்த வரலாறு இன்று வரை தொடர்கிறது.
எமது மக்கள் தென்மராட்சியின் பல பகுதிகளிலும் வீட்டு விறாந்தைகள், தாவாரங்கள், ஒத்தாப்புக்கள், ஓலைக்குடில்கள் என எவ்வித வசதியுமின்றி வாடிக் கொண்டிருக்க முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுரத்த ரத்வத்த யாழ்ப்பாணம் கச்சேரியில் சிங்கக் கொடியேற்றித் தன் வெற்றியைப் பிரகடனம் செய்துவிட்டு அந்தச் செய்தியை அன்றைய ஜனாதிபதி சந்திரிகா விஜயகுமாரணதுங்கவுக்கு அனுப்பி வைத்தார்.
சில மாதங்களின் பின்பு மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பினர். எங்கும் இராணுவ முகாம்களும், காவலரண்களும் பரவிக் கிடக்கின்றன. எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று தெரியாத பயங்கர நிலை. பல வீடுகளில் தொலைக்காட்சி, வீட்டுத் தளபாடங்கள் உட்படப் பல பொருள்கள் களவாடப்பட்டுக் கப்பலில் ஏற்றப்பட்டு விட்டன.
ஆடு, மாடுகள் வெட்டப்பட்டு இறைச்சியாகிச் சமிபாடு அடைந்துவிட்டன. எனினும் மீண்டும் வாழ்வைத் தொடங்கும் நோக்குடன் ஒரு பகுதியினர் சொந்த இடங்களுக்குத் திரும்பினர். மறுபகுதியினர் வன்னியை நோக்கி நகர்ந்தனர். ஆனால் வலிகாமத்தில் குடியேறிய மக்கள் முற்றாகவே தங்கள் நிம்மதியை இழந்தனர்.
வெள்ளை வான்களின் சாம்ராஜ்யம் உருவாக்கப்பட்டது. இரவிரவாக வாலிபர்கள், இளம் பெண்கள் கடத்தப்பட்டனர். இளம் குடும்பஸ்தர்கள் காணாமற் போயினர். விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் எனக் கருதப்பட்டவர்கள் வீதிகளிலும் வீட்டு முற்றங்களிலும் சுடப்பட்டும் வெட்டப்பட்டும் வீசப்பட்டனர்.
ஆயிரக் கணக்கானோர் காணாமல் போயினர். 1995 ஆம் ஆண்டு சூரன் போர் நிறைவுபெற்ற பின்பு தொடரப்படும் தமிழ் மக்கள் மீதான அழிவுப் போர் யாழ். குடாநாட்டை இனவெறியர்களினதும் ஆயுதக்குழுக்களதும் வேட்டைக் காடாக்கியது.
ஆனால் பாடசாலை மாணவி படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பல விடயங்களை அம்பலத்துக்குக் கொண்டு வந்தது.
கொலைக் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி ராஜபக்ஷ செம்மணிப் படுகொலைகள் பற்றியும் புதைகுழிகள் பற்றியும் வெளிக் கொண்டு வந்தான். பல சடலங்களின் எச்சங்கள் தோண்டியெடுக்கப்பட்டன. ஆனால் இன்றுவரை இவை தொடர்பாக எவரும் தண்டிக்கப்படவில்லை. ஆனால் கொலைகள் மட்டும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
அன்று இந்த நரபலி வேட்டையைத் தலைமையேற்று நடத்திய ஜெனரல் அனுரத்த ரத்வத்த பதவியிலிருந்து தூக்கி வீசப்பட்டார். ஊழல் மோசடி, முறையற்ற விதத்தில் சொத்துச் சேர்த்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் சிறைவாசம் அனுபவித்தார். இறுதியில் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார்.
அன்று சிங்கள மக்களின் ஒப்பற்ற வீரபுருஷனாகத் தன்னைக் காட்டிக் கொண்ட இவரின் இறப்பு சிங்கள மக்களாலோ, ஆட்சியாளர்களாலோ கௌரவிக்கப்படவுமில்லை பெரிதாகப் பொருட்படுத்தப்படவுமில்லை. ஆனால் அவரால் தலைமையேற்று நடத்தப்பட்ட ஆக்கிரமிப்புப் போரும் இன அழிப்புக் கொடூரங்களும் தொடர்ந்து பின்பற்றப்பட்டு மேலும் விரிவுபடுத்தப்பட்டு விஸ்வரூபமெடுத்து நிற்கிறது.
அதேவகையான கொடூர வீரபுருஷர்களாகப் பலர் முன்வந்து செயற்பட்டு வருகின்றனர். பத்மாசுரன் தன் வீரத்தளபதிகளான தம்பியர் பானுகோபன், தாரகாசுரன் ஆகியோர் போரில் இறந்தபின்பு, படையினர் அனைவரையும் இழந்த பின்பு ஓடித் தலைமறைவாக முயன்றும் முடியாத நிலையிலேயே அவன் சேவலும் மயிலுமாக்கப்பட்டு அடிமையானான்.
ஆனால் தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் தூக்கிய சில குழுக்கள் எதிரிகளின் கொடிகளில் சேவல்களாகவும் அவர்களை சுமக்கும் மயில்களாகவும் முற்கூட்டியே மாறி தமிழ் மக்களை அழிப்பதில் ஆட்சியாளர்களுக்குத் துணை நிற்கின்றனர். வெள்ளை வான்களில் திரிந்து வேட்டை நடத்தினர்.
இன்று இன அழிப்பாளர்களைச் சுமப்பது மட்டுமன்றி அவர்களின் கொடிகளில் பறந்து கொக்கரித்து வருகின்றனர். தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தைத் தோற்கடிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
1990 இல் விடுதலைப் புலிகள் வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது தொடர்பாக அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஒரு நிகழ்வு இடம்பெற்றது. அதில் பல தமிழ், முஸ்லிம், சிங்கள அரசியல்வாதிகள் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்டு சில தமிழ் அரசியல்வாதிகளும் கண்ணீர்விட்டனர்.
அதைத் தவறு என்று எவரும் சொல்லிவிட முடியாது. ஆனால் அவர்களுக்கு 1995 இல் 5 லட்சம் தமிழ் மக்கள் வலிகாமத்தை விட்டு வெளியேற்றப்பட்டமை ஏன் நினைவுக்கு வரவில்லை. ஏன் அன்றைய அவலத்துக்காவும் இன்றுவரை அது தொடர்வதற்காகவும் அவர்கள் கண்ணீர் விடவில்லை.
எப்படியிருந்த போதிலும் ஒவ்வொரு சூரன்போரின் போதும் பாரணை விரதம் சோற்றை அள்ளி வாயில் வைக்கும்போதும் எமது 1995 ஆம் ஆண்டின் அவலமும் அதைத் தொடர்ந்த படுகொலைகள், காணாமற் போதலும் நினைவில் வந்துபெரும் நெருப்பாய் எரியும். இன்று எம்மீது தொடரும் அடக்குமுறைகள் அந்த நெருப்புக்கு எண்ணெய் ஊற்றி மேலும் கொழுந்துவிட்டு எரிய வைக்கும்.
போரில் வெற்றிபெற்ற முருகன் தேவனாகவும் தோல்வியடைந்த சூரன் அசுரனாகவும் சித்திரிக்கப்பட்டிருக்கலாம். பத்மாசுரன் வெற்றிபெற்றிருந்தால் அவனே தெய்வமாக்கவும் பட்டிருக்கலாம். இன்றும் அதேநிலைதான். போரில் வெற்றி பெற்ற ஆட்சியாளர்கள் மீட்பர்களாகவும் தோல்வியடைந்த விடுதலைப் போராளிகள் பயங்கரவாதிகளாகவும் சித்திரிக்கப்படுகின்றனர். ஆனால் நியாயத்தின் முன் எல்லாத் தீமைகளும் எரிந்து சாம்பலாகிவிடும்.
சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையும், மக்களுக்காக யாழ்ப்பாணத்தை கைவிட்ட புலிகளும்.!!
1990ம் ஆண்டு சிங்களத்தின் அன்றைய ஜனாதிபதி பிரேமதாசாவுடனான பேச்சுவார்த்தை முறிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானது. அன்றைய நேரத்தில் தனது இராணுவ இயந்திரத்தை வலுப்படுத்தி இருந்த சிங்கள அரசு மிகப் பெருமெடுப்பிலான இராணுவ நடவடிக்கையை பலாலியிலிருந்து ஆரம்பித்திருந்தது.
அதுவரைக்கும் குறைந்த எண்ணிக்கையிலான போராளிகளை கொண்டு கெரிலா பாணியிலான தாக்குதலைத் தொடுத்து பழக்கப்பட்டிருந்த புலிகளமைப்பு, முதல் முதலாக மரபுவழி இராணுவமாக வளர்ச்சி பெற்றிருந்த போராளிகளை கொண்டு எதிர் தாக்குதலை மேற்கொண்டனர். அது ஒரு பட்டறிவுக் காலம் என்று தான் கூற வேண்டும்.
போராளிகள் மத்தியில் போர் ஓர்மம் ஓங்கி இருந்த போதும் மரபு வழி சண்டைகளின் பட்டறிவு இன்மையாலும், போதிய ஆயுத கையிருப்பு இன்மையாலும் (அந்த நேரத்தில் பலமுனைத் தாக்குதல் காரணமாக AK47 ரவைக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது) சில இடங்களை கைவிட வேண்டிய நிலை வந்திருந்தது. அந்த நேரத்தில் மாவிட்டபுரம் வரை எதிரி முன்னேறி இருந்தான்.
அதன் பின் மரபுவழிப் போரில் ஏற்பட்ட அனுபவங்களின் மூலம் எதிரியை முன்னேறவிடாது தடுக்கப்பட்டிருந்தது. சமகாலத்தில் புதிய போராளிகளின் எண்ணிக்கையும் கூடி, புலிகள் அமைப்பு பெரும் வளர்ச்சி பெற்று இருந்தது. மறுவளத்தால் பால்ராஜ் அவர்களின் தலைமையில் பல முகாங்கள் அழிக்கப்பட்டன.
அவரது மரபுவழி அனுபவத்தை கொண்டு அவரது தலைமையில் புலிகளமைப்பு மிகப்பெரும் இராணுவத்தை கட்டியமைக்கும் நோக்கில் முதலாவது மரபுவழிப் படையணியான சார்ள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி தலைவரால் உருவாக்கப்பட்டது. அந்த படையணியானது சிங்கள இராணுவத்தை தொடர் தாக்குதல் மூலம் திணரடித்தது. அதனைத் தொடர்ந்தே பல படையணிகள் உருவாக்கப்பட்டது.
இந்தக் கால கட்டத்தில்தான் 1994ம் ஆண்டு புலிகளின் இராணுவ உளவுத்துறையில் இருந்த ஒப்பிலாமணி என்பவர் தனி ஒழுக்க தண்டனைக்கு பயந்து தப்பி ஓடி இராணுவத்திடம் சரணடைந்தார்.
அவனது சரணடைவைத் தொடர்ந்து புலிகளமைப்பின் அன்றைய நேரத்தின் பலம், பலவீனம், ஆயுத வளம் என்பன அறியப்பட்டு எதிரியால் அவனது ஆலோசனையின் பெயரில் “முன்னேறிப் பாய்ச்சல்” என்னும் இராணுவ நடவடிக்கை மூலம் எதிரி சண்டிலிப்பாய் வரை முன்னேறி வலிகாமத்தின் அரைவாசிப் பகுதியை கைப்பற்றி இருந்தான்.
ஆனால் புலிகள், பொட்டம்மான் தலமையிலான வலிந்த தாக்குதல் ஒன்றை மேற்கொண்டு பலநூறு இராணுவத்தை கொன்று பழைய நிலைகளுக்கே எதிரியை விரட்டி அடித்தனர். அதன் பின் மீண்டும் மிகப்பெரும் இராணுவ தளபாட கொள்முதல் மூலம் தமது இராணுவ இயந்திரத்தை மீளவும் சீர் செய்த எதிரி, அதன் தொடர்ச்சியாக 1995 அக்டோர் 17 அன்று வசாவிளான், அச்சுவேலி, புத்தூர் பகுதி ஊடாக பெரும் எடுப்பிலான கள முனையினையை எதிரி திறந்தான்.
சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையென பெயர் சூட்டி மிகப் பெரும் வல் வளைப்பை எதிரி மேற்கொண்டான். அதை எதிர்த்து புலிகளின் படையணிகளும் களத்தில் இறங்கினர். மிகப் பெரும் போர் வெடித்தது. அந்த நேரத்தில் புலிகளிடம் ஆட்லறிகள் இல்லாத காலம். பூநகரியில் கைப்பற்றிய சில 120mm மோட்டர்களே நல்ல நிலையில் இருந்தன. ஆனால், அதற்கு தேவையான எறிகணைகளும் கையிருப்பு இல்லாது இருந்தது.
ஆனால், அவைகள் எதிரியிடம் தாராளமாக இருந்தது. கண்மூடித் தனமான ஆட்லறி, 120 mm மோட்டர், மற்றும் விமானத்தாக்குதல் மூலம் யாழ் குடாநாடு அதிர்ந்தது. இதில் பொது மக்களுக்கே அதிக சேதம் ஏற்பட்டது. இந்தக் குண்டு வீச்சிக்கு மத்தியில் போராளிகளும் கடும் போரை தொடுத்து எதிரியை கொன்றவண்ணம் இருந்தனர். அன்றைய முன்னேற்றம் அங்குலம் அங்குலமாகவே எதிரி முன்னேறினான்.
பல ஆயிரம் இராணுவத்தை பலி இட்டு எதிரி வலிகாமத்தை அன்று கைப்பற்றி இருந்தான். புலிகள் பின்வாங்கும் போது மக்களும் ஒரே ஒரு பாதையான நாவற்குழி பாலத்தின் ஊடாக தென்மராட்சி நோக்கி இடம் பெயர்ந்தனர். ஒரே நாளில் ஐந்து லட்சம் மக்கள் வெளியேறி மக்களும் புலிகளும் வேறல்ல என்பதை உலகுக்கு நிரூபித்து அந்த வரலாற்றை பதிவு செய்தனர்.
மக்கள் வெளியேறியதும், உடனே புலிகள் தொண்டைமானாற்றில் இருந்து வல்லைவெளி ஊடாக வாதரவத்தை நாவற்குழி வெளியை சூனியப் பிரதேசமாக விட்டு, அரியாலை வரை, மிகப்பெரும் மண்ணணையை உருவாக்கி இராணுவத்தை முன்னேறவிடாமல் தடுத்து வைத்திருந்தனர். அந்த நேரத்தில் புலிகளின் ஆயுதக் கையிருப்பும் கணிசமாக குறைந்திருந்தது.
அப்போது எமது மோட்டார் பலத்தை அதிகரிக்கும் நோக்கில் 120mm மோட்டர்கள் மற்றும் அதற்கான எறிகணைகளும் எமது பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அதற்கான பயிற்சிகள் ஒரு பக்கத்தால் நடந்து கொண்டிருக்க, மறு பக்கத்தால் மீண்டும் வலிகாமத்தை கைப்பற்றும் நோக்கில் அவசர அவசரமாக தாக்குதல் திட்டம் ஒன்று போடப்பட்டு நாகர்கோவில், பளை, அரியாலை போன்ற பகுதிகளில் பயிற்சி வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.
தாக்குதலுக்கான நாளும் குறிக்கப்பட்டு ஆயத்தமான போது 1996ம் ஆண்டு நான்காம் மாதம் ஆரம்பத்தில் வாதரவத்தைக்கும், நாவற்குழிக்கும் இடைப்பட்ட நீர்ப்பகுதி ஒன்றின் ஊடாக இரவோடு இரவாக எதிரி முன்னேறி கைதடிப் பகுதியை சுற்றி வளைத்து மக்களைப் பிடித்திருந்தான். அது மட்டுமல்லாது மக்களை கேடயமாக பயன்படுத்தி சிறிது சிறிதாக முன்னேறிக் கொண்டிருந்தான்.
எதிரிக்கு தாக்குதலை மேற்கொள்ளும் நிலையில் புலிகள் இருந்த போதும் எமது மக்கள் கொல்லப்படுவார்கள் என்னும் ஒரே காரணத்திற்காக புலிகள் படையணிகளை பின்வாங்கும் படி தலைவர் கட்டளையிட்டார். அன்று தாக்குதலை மேற்கொண்டிருந்தால் சில நூறு மக்கள் கொல்லப்பட்டிருப்பார்கள். ஆனால், யாழ் குடாநாடு எம் கைகளில் வந்திருக்கும்.
மக்கள் உயிரை புலிகள் பெரிதாக மதித்தபடியால்தான் யாழ் எம் கையை விட்டுப்போனது. அன்றைய நேரத்தில் போராட்டத்தில் இருந்த போராளிகளுக்கு இந்த உண்மை தெரியும்.
தலைவர் அவர்கள் புலிகளின் கட்டமைப்பை எதிரி கைப்பற்ற விடாமல் வன்னி நோக்கி நகர்த்தும் பொறுப்பை பொட்டம்மானிடம் கொடுத்திருந்தார்.
அதன்படி புலிகளின் பின் வாங்கும் நடவடிக்கை கட்டம் கட்டமாக நகர்த்தப்பட்டது. மக்களுக்கு உயிர்ச்சேதம் ஏற்படாது மறிப்புச் சண்டையில் ஈடுபட்டபடி போராளிகள் ஆயுதங்கள் உட்பட எந்தவொரு பொருளும் எதிரி கைப்பற்ற விடாது, போராளிகளுக்கும், மக்களுக்கும் எந்தவித சேதமும் இல்லாதும் வன்னிக்கு பிவாங்கி இருந்தனர் புலிகள். அந்தக் கோபத்தின் வெளிப்பாடே மூன்று மாதத்தின் பின் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முல்லைத்தீவு முகாம் தகர்ப்பு ஆகும்.
ஆனபோதும், சில நூறு மக்களுக்காகவே அன்று புலிகள் யாழை கை விட்டனர் என்பது புலிகள் சொல்லாத வரலாறு. இது எதிரிக்கும் நன்கு தெரியும்..!!
எமது விடுதலைப்போராட்டத்துக்கு நாம் கொடுத்த விலை எண்ணிலடங்காது.. இதற்க்கு தகுந்த பலன் கிடைக்கும் எம் தேசியத்தலைவர் தலைமையில் !!

யாழ்ப்பாண மாவட்டத்திற்குள் சிங்களவரால் இப்போதைக்கு அவ்வளவு விரைவாக குடியேறி இனப்பரம்பலை மாற்றமுடியாது. 
காரணம் அங்கு எல்லாமே துண்டாடப்பட்ட தனிநபர் நிலங்கள் என்பதுடன் சாராசரிக்கும் கீழான பொருளாதார நிலையுள்ள சிங்களவர்களால் அந்த விலைக்கு நிலங்களை வாங்கிக் குடியேற முடியாது.
ஆனால் வன்னி பெருநிலப்பரப்பு அப்படியல்ல, அரசாங்கப் பத்திரங்களை உடைய நிலங்களும், குளங்களும் அங்கு இருப்பதால் காடுகளை அழித்து சேனைப்பயிற் செய்கை செய்து பிழைக்க சிங்களவர்களால் முடியும். அவர்கள் குடியமர்த்தப்படும்இடத்துக்கருகில் ஒரு பெளத்தகோயில், வைத்தியசாலை, பள்ளிக்கூடம் கட்டினால் போதுமானது.
வன்னிப்பெருநிலப்பரப்பின் எல்லைகளை ஊடறுத்து ஆர்ப்பாட்டமின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிங்களக் குடியேற்றங்களை விரைவுபடுத்தும் நோக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட விரைவான போக்குவரத்துத் திட்டத்தின் ஓர் அம்சம் தான் ஆளில்லா ஊரில் மீள அமைக்கப்பட்டுள்ள #ஆனையிறவுபுகையிரத நிலையம், அத்துடன் எதிர்காலத்தில் மேலும் விஸ்தரிக்கப்பட உள்ள உப்பளம் மற்றும் கடல் சார்ந்த தொழில் வாய்ப்பையும் குறிவைத்தே இந்த புகையிரதநிலையம் அமைக்கப்படுகிறது.
தமிழர்கள் செறிந்து வாழ்ந்த ஈழத்தின் வரைபடத்தைப் பார்த்தீர்களென்றால் வடக்கிலிருந்து கிழக்கிற்கு எந்தவொரு சிங்களக் கிராமங்களையும் ஊடறுக்காமல் செல்லக் கூடிய கடற்கரைவழி நான்கு வழி போக்குவரத்துப் பாதையுண்டு. 
ஆனால் அதன் தாற்பரியத்தை உணர்ந்து அந்தப்பாதையை அமைப்பதற்கு எந்தவொரு தமிழ் அரசியல்வாதியும் குரல் எழுப்பியதில்லை. சிங்கள அரசும் அப்படி ஓர் போக்குவரத்துப் பாதையை அமைக்காமல் வடக்கிலிருந்து கிழக்கிற்கு செல்லும் எந்தவொரு பாதையும் சிங்களக் கிராமமொன்றை ஊடறுத்துச் சுற்றிச் செல்லுமாறே அமைத்தார்கள். இப்போது எல்லைகள் தாண்டி உள்ளே பெருமளவில் சிங்களவர்கள் குடியேறிவிட்டதால் கடற்கரைச்சாலை போக்குவரத்துப் பாதை அமைப்பதில் இனி அவர்களுக்கு சிரமொன்றுமில்லை. தேவையும் இருக்கிறது.
எங்களிடம் கொஞ்சமாய் மீந்திருக்கும் பெரிய நிலப்பகுதியான வன்னியை எப்படி இந்த வேகமான, விவேகமான ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றப் போகிறோம்..?
இனத்தின்
இன்னல் களைய
இளமை தொலைத்து
இரக்கம் சுரக்க
களம் இறங்கிய
கோதைகள்...

அல்லும் பகலும்
அனுவரதமும்
மண்ணும் மக்களும்
என மாய்ந்தவர்.
முள்ளி வாய்க்கால்
வரை மூச்சு பிடித்து
முயன்றவர்....

காட்டிக் கொடுப்பும்
சர்வத்தின் நய
வஞ்சகமும்
இவர்களை இரை
கொண்டது....
எல்லைக் காவல்
கட்டுடைந்தது..!

இன்று பழைய
குருடி கதவைத்
திறந்த கதையாகி
சிங்களம் கொடூர
கம்பளம் விரிக்குது
இத்தனைக்கும்
இருப்பவர்கள்
இருந்திருந்தால்......?


 ஆக்கம்  கவிஞர் எழுத்தாளர் தயாநிதி
26/10/2016 லெப்.கேணல் நாதன் மற்றும் கப்டன் கஜன் ஆகியோரின் 20ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு. பிரான்சில் இன்று மாலை நடைபெற்றது. இதில் மக்கள் கலந்து கொண்டு மலர் வணக்கம் செலுத்தினார்கள். ......சிறீலங்கா அரச
கைக்கூலீகளினால் 26/10/1996
அன்று பாரீசில் படுகொலை செய்யப்பட்டார்கள்.!!
இறுதி யுத்தத்தின் பின் இன்னமும முள்ளிவாய்க்கால் மக்கள் மீள்குடியேறாமல்தமது வாழ்விடங்களைத் தொலைத்து வேறு இடங்களில் வாழும் நிலை தொடர்கின்றது.
2008ம் ஆண்டு இராணுவத்தினர் பெருமெடுப்பில் முல்லைத்தீவைக் கைப்பற்றினர். அப்போது கிளிநொச்சி மாவட்டம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.
முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்தை தாண்டி ஒரு அடியும் நகர முடியாதவாறுவிடுதலைப் புலிகளின் கடற்புலிகள் மற்றும் தரைப்புலிகளும் பலமாக காவலரண், அரண் அமைத்திருந்தார்கள்.
அச்சூழலில் முள்ளிவாய்க்கால் மக்கள் தமது பாதுகாப்பைகருத்தில் கொண்டு தற்காலிகமாக இடம்பெயர்ந்து வலஞர்மடம், புதுமாத்தளன் உள்ளிட்டபகுதிகளில் குடியமர்ந்தார்கள்.
ஆனந்தபுரம் அதிஉச்ச சமரின் பின் குறித்த மக்கள் தமது சொந்த இடங்களில்மீள்குடியமர்ந்தார்கள்.
ஒரு பெரும் சமர்க்களம் நிறைந்த சூழலில் பல ஆயிரக்காணக்கான பொதுமக்களை தமதுபூர்வீக வாழ்விடங்களில் குடியமர தமது இருப்பிடங்களை பகிர்ந்தளித்தார்கள்.
அதற்குப்பின் முள்ளிவாய்க்கால் மக்கள் தாம் பிறந்து தவழ்ந்த மண்ணிலே கொடூரமாககொல்லப்பட்டார்கள். அவர்களுடன் ஏனைய அப்பாவி பொதுமக்களும் அடங்குவார்கள்.
இது இவ்வாறிருக்க 2009ம் ஆண்டு மே 16,17,18.ல் முள்ளிவாய்க்காலை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முன்பே அவர்கள்இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.
இன்று இறுதி யுத்தம் முடிந்து ஏழு வருடங்களை கடந்தும் குறித்த மக்கள் மீள்குடியேற முடியாமல் கடற்படையினர் அவர்களின் பூர்வீக நிலங்களை அபகரித்துள்ளனர். அவர்கள் அவற்றை மீட்பதற்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறான சூழலில் அவர்களின் பூர்வீக நிலங்களின் தற்போதைய நிலை என்ன? அதற்குள்கடறபடையினரின் பயன்பாடு இருக்கின்றாதா? என்னும் பலகேள்விகளுக்கு ஊடகத்தின்பார்வை அங்கே திரும்புகின்றது.
அவர்களின் வாழ்விடங்களின் அடையாளமாக தற்பொழுது கிணறுகள் மட்டும்தான் அங்கேகாணப்படுகின்றன.
தானும் படுக்க மாட்டார் தள்ளியும் படுக்க மாட்டார் என்னும் பழமொழிக்குஏற்றாற்போல் அப்பிரதேசத்தை படையினர் தமது தேவைக்கு பயன்படுத்தவும் இல்லை.பொதுமக்களிடமும் கையளிக்கவில்லை.
சரி இனி அந்தப் பக்கத்தில் இருக்கும் கிணற்றுக்குள் இறங்கிப் பார்ப்போம் என்றுஇறங்கினால் கிணற்றுக்குள் தமிழ் மக்களின் பூர்விக சொத்துக்கள்புதைந்து கிடக்கின்றன.
அவர்களின் பாட்டன், முப்பாட்டன் வழியில் தொடர்ந்த தளபாட சொத்துக்கள் தண்ணீரில்எழுதிய கதை போல தண்ணீருக்குள் புதைந்துள்ளது.
குறித்த செயலால் நியாயமானது அல்ல என்று இராணுவ உயர் அதிகாரி ஒருவர் அவ்வூர்மக்களுக்கு கருத்து தெரிவித்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.
ஒக்டோபர் 23,1991 - யுத்த சூழ் நிலையில் பெற்றோர்களை இழந்த பிள்ளகளின் பராமரிப்புக்காக தமிழீழ தேசியத் தலைவரின் பணிப்பின் பேரில் செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அப்போது தமிழீழ தேசியத் தலைவரால் அனுப்பபட்ட வாழ்த்துச் செய்தியில்
" வரலாற்று பெருமைமிக்க சுதந்திர போராட்ட சூழலில் இந்த செஞ்சோலை வளாகத்தில் நாம் இன்று இளம் விதைகளை பயிரிடுகின்றோம்.
இவை வேர்விட்டு வளர்ந்து விழுதுகள் பரப்பி விருட்சங்களாய்
மாறி ஒரு காலம் தமிழீழத்தின் சிந்தனைசோலையாகச் சிறப்புற வேண்டும் என்பதே எனது ஆவல்.
இந்த புரட்சிகரமான பணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட எனது நல்லாசிகள் " என்றார்.!!!
(Rasan Sri)
"தாயில்லா குழந்தைகளுக்கு எல்லாம் தாயாக இருந்த தாயுமானவன் மடியில் எங்கள் தாயில்லா குழந்தைகள் தாயில்லா கவலை இன்றி கொஞ்சி மகிழ்ந்து குலவி மகிழ்ந்த அந்த அழகிய பொற்காலம் கனவாகி கலைந்ததுவோ.. - --- எங்கள் மண்ணில் அநாதைகள் என எவருமே இல்லாதிருந்த காலம் அன்று!!!
இன்று...??????
தன் கல்விக்கும் பசிக்கும் சாராயம் விற்கும் குழந்தைகள், பசிக்காக பிச்சை எடுக்கும் சிறுவர்கள்..... எத்தனை கோடி துன்பம் கண்டோம் எங்கள் தாயான தலைவன் இல்லா இந்த காலங்களில்.
1991 அக்டோபர் 23ம் நாள் தொடங்கப்பட்ட இவ்வில்லத்தில் 2005 வாக்கில் 242 பெண் பிள்ளைகள் பராமரிப்பில் இருந்தனர்
மாவீரரே...
கொஞ்சமும் கண்
விழித்து பார்க்காதீர்
நீங்கள் கனவாய் கண்ட
தேசம் பூக்களாய்
பூத்து குலுங்குது...

அழகான ரோசா செடி
வான் நோக்கி
நிமிர்ந்திருக்குது
பூக்களின் வாசம்
நாசியை துளைக்குது
ஆனாலும் அது
உங்களுக்கு வேண்டாம்

தேசத்தின் பூஞ்செடிகளின்
அழகை நீங்கள்
அறிய வேண்டாம்
அவன்றின் மீது ஊற்றப்பட்டு
கிடக்கும் வஞ்சக
குளிர்மையை உணரவே
வேண்டாம்

நீங்கள் நின்மதியாய்
உறங்குங்கள்
ஆழ கிடங்கு படுக்கைக்குள்
சுருண்டு கிடக்கும்
உங்களுக்கு எதுவுமே
தெரிய வேண்டாம்

பச்சை வர்ணம் பூசப்பட்டு
சூரிய ஒளி கீற்று புகுத்தப்பட்டு
பருவக்காற்றில் பறந்த
மகரந்தங்கள் பரவி
பூஞ்சோலை
உருவாக்கப்பட்ட போது
நாங்கள் கிளிசல்
துணியாகினோம்
அதையும் நீங்கள்
அறிய வேண்டாம்

வந்தவன் பூக்களை
நுகரத் தொடங்கிய போது
நாம் வெறும் பேச்சானோம்
அப்போதும்
கிளறப்பட்டுக் கொண்டிருந்த
பூந்தொட்டிகளுக்கு கீழ்
உறைந்து கிடந்த
தமிழனை யாரும்
அறியவே இல்லை

உங்களுக்கு மட்டும் தான்
தெரியும் அதன்
வேர்களிடையே நீங்கள்
ஊற்றிய குருதியின் அளவு
நீங்கள் எருவாக்கிய
உங்கள் உயிர்களின் கணக்கு
நீங்கள் விதைத்த
வித்துக்களின் தொகுப்பு

நீங்கள் விழி திறக்காதீர்கள்
நின்மதியாய் தூங்குங்கள்
அப்போதுதான் நிலத்தின் மேல்
அரங்கேற்றப்படும்
சுழல்முறை விவசாய
பதனிடல்
எம் உடல்களை தின்று
சுழன்று கொண்டே இருக்கும்.
ஆக்கம் கவிமகன்.இ

1987ம் ஆண்டு யாழ். குடாநாட்டில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிகாக்கும் படையினர் என்ற போர்வை வைத்தியசாலைக்குள் நுழைந்து மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதிகள், மேற்பார்வையாளர் உள்ளிட்ட 21 பணியாளர்களும், சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாளர்களுமாக 68 பேர் கொல்லப்பட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் யாழப்பாண போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.
அமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, யாழ் போதனா வைத்தியசாலை வளாகத்தில் நிகழ்ந்த படுகொலை. இந்தியப்படையின் துப்பாக்கிச் சூட்டில், வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதிமார்கள், மேற்பார்வையாளர், ஊழியர்கள் உட்பட இருபத்தியொரு பணியாளர்களும், நோயாளார் விடுதிகளில் சிகிச்சை பெற்றுவந்த நாற்பத்தியேழு நோயாளர்களுமாக, மொத்தம் அறுபத்தியெட்டுப் பேர் கொல்லப்பட்டார்கள்.
இந்திய இராணுவம் தமிழர்கள் மீது செய்த படுகொலை பற்றி ஒருவரின் வாக்குமூலம்....
இன்றுவரை மறக்க முடியவில்லை. அந்தச் சம்பவத்தில்தான், வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டிச் சாரதியான எனது அப்பாவும் சுட்டுக்கொல்லப்பட்டார். தந்தையை இழந்து, மனிதவேட்டை நடந்த பகுதிக்குள் இருந்து உயிர் தப்பிய சம்பவம் இருபத்திநான்கு வருடங்கள் கழிந்தும் மனதை விட்டு அகலாமல் ரணமாகப் பதிந்துள்ளது. தற்போதும் கனவாக வந்து தூக்கத்தை கலைத்துக் கொண்டிருக்கின்றது. இரத்தமும் கண்ணீரும் மரண ஓலமுமாகக் கழிந்த நிமிடங்கள். இப்போது நினைத்தாலும் மனதை உலுக்கும் சம்பவம் அது.
https://www.facebook.com/SiiNnavan.EeLam.MPK/posts/1138443506246766
https://youtu.be/Yleu4-eVPhA
https://www.facebook.com/SiiNnavan.EeLam.MPK/videos/1138452779579172/
எழுக தமிழிற்கு எதிராக தென்னிலங்கையில்
தோன்றிய எதிர்ப்பு எழுக தமிழின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தியுள்ளது. ‘எழுக தமிழ்’; தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்திருக்கக் கூடிய விளைவுகளை விடவும் அதிகரித்த விளைவை அது தென்னிலங்கையில் ஏற்படுத்தியிருக்கிறது என்று கூடச் சொல்லலாம்.
இத்தனைக்கும் எழுக தமிழ் ஒரு போர்ப்பிரகடனம் அல்ல. அது யாருக்கும் எதிரானது அல்லவென்று விக்னேஸ்வரன் தனது உரையின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டிருந்தார். அவர் தனது உரையில் பாவித்த வார்த்தைகளிலும் சரி கருத்துக்களைத் தெரிவித்த விதத்திலும் சரி ஆகக் கூடிய பட்சம் அந்த உரையை ஒரு நல்லெண்ணச் சமிக்ஞையாகக் காட்டவே முற்பட்டார்.
அது மட்டுமல்ல எழுக தமிழ் பிரகடனமும் இச்சிறிய தீவைப் பிரிக்கச் சொல்லிக் கேட்கவில்லை. அது சமஷ;டியைத் தான் கேட்கிறது. அது கூட நாட்டை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு சமஷ;டிதான்.அப்பிரகடனத்தை வாசித்தவர் ஒரு மருத்துவ நிபுணர். அவர் ஒரு முழுநேர அரசியல் செயற்பாட்டாளர் அல்ல. அவர் ஓர் அரச ஊழியர். ஒரு மருத்துவ நிபுணர் இவ்வாறாக ஒரு பிரகடனத்தை வாசிப்பது என்பது ஈழத்தமிழ் அரசியற் பரப்பில் மிக அரிதான ஒரு நிகழ்வுதான். மருத்துவர்கள் அரசியல்வாதிகளாக மாறியதுண்டு.
ஆனால் மருத்துவர்கள் சமூக அரசியற் செயற்பாட்டாளர்களாக இவ்வாறு மேலெழுவது என்பது ஈழத்தமிழ் அரசியற் பரப்பில் மிகவும் அரிதானது. மருத்துவ நிபுணர்கள் தொடர்பில் சாதாரன ஈழத்தமிழ் மனம் உருவாக்கி வைத்திருக்கும் படிமங்களுக்கு அது முரணானது. 2009 மேற்குப் பின்னரான ஈழத்தமிழ் அரசியற் பரப்பில் உருவாகி வரும் புதிய தோற்றப்பாடுகளில் இதுவும் ஒன்று.
ஒர் இருதய மருத்துவ நிபுணரால் வாசிக்கப்பட்ட எழுக தமிழ்ப் பிரகடனமானது சிங்களமயமாக்கலுக்கும், பௌத்த மயமாக்ககலுக்கும் எதிராகவே காணப்படுகிறது. இச்சிறிய தீவில் ஒரு இனமும் ஒரு மதமும் ஏனைய இனங்கள்,மதங்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரு போக்கைத்தான் அது எதிர்த்தது. அப்போக்கானது பல்லினத் தன்மைக்கு எதிரானது. எனவே எழுக தமிழ் பிரகடனத்தில் எதிர்க்கப்பட்டது ஒற்றைப் படையாக்கம் அல்லது ஓரினத் தன்மையாக்கம் போன்ற போக்குகள் தான். அப்பிரகடனம் முன்வைக்கும் தீர்வெனப்படுவது பல்லினச் சூழல் ஒன்றையே கேட்கின்றது. பல்லினச் சூழல், பல மதச் சூழல் எனப்படுவது அடிப்படையில் ஒரு ஜனநாயகச் சூழல் தான். உலகின் வளர்ச்சியடைந்த எல்லா ஜனநாயகங்களினதும் பொதுப் பண்பு அதுவே. எனவே முடிவாகக் கூறின் எழுக தமிழ் பிரகடனம் எனப்படுவது உயர்ந்த பட்ச ஜனநாயகச் சூழல் ஒன்றையே கோரி நிற்கின்றது.

இப்படிப்பட்ட ஒரு பிரகடனத்தையும், பேரணியையும் தென்னிலங்கையில் இருக்கும் ஒரு பகுதியினர் ஏன் எதிர்க்கிறார்கள்? ஒன்றில் அவர்கள் அந்தப் பிரகடனத்தையும், முதலமைச்சரின் உரையையும் முழுமையாக வாசிக்கவில்லை. அல்லது இப்படியொரு எழுச்சியைக் கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள் என்று பொருள். எழுக தமிழோ, பொங்கு தமிழோ எந்தத் தமிழாக இருந்தாலும் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து ஒரு சிறு நிமிர்வு ஏற்பட்டாலும் அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. தமிழ் மக்கள் தோல்வியுற்ற ஒரு தரப்பாகவே தொடர்ந்தும் இருக்க வேண்டு;ம் என்று அவர்கள் விரும்புகிறார்கள். இதை ஒரு சில பிக்குக்கள் மட்டும் தான் செய்கிறார்கள் என்று கருதத் தேவையில்லை.
தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பொதுபலசேனா மட்டும் தான் எழுக தமிழை எதிர்க்கிறது என்பதல்ல. அரசாங்கத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அதற்கு எதிர்ப்புக் காணப்படுகின்றது. அது மட்டுமல்ல தாராண்மை வாத ஜனநாயக வாதிகளாகத் தோன்றும் படித்த நடுத்தர வர்க்கத்தினர் மத்தியிலும் கூட அதற்கு எதிர்ப்பு தோன்றியுள்ளது. அதை வெறுமனே பொதுபல சேனா காட்டும் எதிர்ப்பாக சிறுப்பித்துக் காட்ட முடியாது. மாறாக சிங்கள பொது உளவியலின் தவிர்க்கப்படவியலாத ஒரு பகுதி அது.
கடந்த செப்ரெம்பர் மாதம் முதலாம் திகதி கொழும்பில் நடந்த பாதுகாப்புத்துறை மாநாட்டில் உரையாற்றிய அரசத்தலைவர் சிறிசேனா இலங்கைத் தீவிற்கு இப்பொழுது எதிரிகள் இல்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் எழுக தமிழிற்கு எதிராக உருவாகி இப்பொழுது வரை நிலவி வரும் உணர்;;வலைகள் யாருக்கு எதிரானவை?
முன்னைய காலங்களில் கடும்போக்குடைய சிங்கள இயக்கங்களின் சின்னங்களையும், கொடிகளையும் முச்சக்கர வண்டிகளிலும், வறிய அடிமட்ட மக்கள் மத்தியிலும்தான் அதிகம் காண முடியும் என்றும் ஆனால் இ;ப்பொழுது ‘சிங்க லே’ தேசிய முன்னணியின் சின்னங்களை ஹைபிறிற் வாகனங்களின் பின்பக்கக் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டிருப்பதைக் காண முடியும் என்று ஒரு தொழிற்சங்க வாதி அண்மையில் சுட்டிக்காட்டினார். அதாவது சிங்கள பௌத்த கடும்போக்குவாதம் எனப்படுவது படித்த நடுத்தர வர்க்கத்தின் மத்தியில் செல்வாக்கோடிருப்பதை இது காட்டுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதிகம் போவானேன். கடந்த மாதம் ஜெனீவாவில் ஐ.நா மன்றில் உரையாற்றிய பொழுது அரசுத் தலைவர் சிறிசேனா என்ன சொன்னார்? ஸ்ரீலங்கா ஒரு சிங்கள, பௌத்த நாடு என்றுதானே சொன்னார்? அவர் பதவிக்கு வந்து 22 மாதங்கள் ஆகின்றன. இக்காலப் பகுதிக்குள் அரசியலமைப்பில் பௌத்தத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் முதன்மையை நீக்கப்போவதாக எங்கையாவது எப்பொழுதாவது அவர் கூறியிருக்கிறாரா? அல்லது ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறாரா? இதுதான் மெய்நிலை. இலங்கைத் தீவின் சிங்கள பௌத்த மேலாண்மை வாதம் எனப்படுவது நன்கு நிறுவனமயப்பட்டுள்ளது.
சிறிசேனா அதன் ஒரு முனையில் காணப்படுகின்றார். பொதுபலசேனா அதன் இன்னுமொரு முனையில் காணப்படுகிறது. அது மிருக முகத்துடன் காணப்படுகின்றது. ஆனால் ரணில், மைத்திரி அரசாங்கமோ மனித முகமூடியுடன் காணப்படுகின்றது.
ஆனால் அவர்கள் கூறுகிறார்கள். விக்னேஸ்வரன் தமிழ் இனவாதத்திற்கு தலைமை தாங்குவதால் அது தென்னிலங்கையில் சிங்கள இனவாதத்தைத் தூண்டி வருகிறது என்று. விக்னேஸ்வரன் அவ்வாறு இனவாதத்தைத் தூண்டவில்லை என்று சம்பந்தர் நாடாளுமன்றத்தில் உறுதியாக கூறிய பின்னரும் அவர்கள் விக்னேஸ்வரனை தொடர்ந்து தாக்கி வருகிறார்கள். இக் கட்டுரையில் முன்பு குறிப்பிடப்பட்ட பாதுகாப்புத்துறைக் கருத்தரங்கில் உரை நிகழ்த்தும் பொழுது சிறிசேன மற்றொரு விடயத்தையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
‘தமிழ் மக்கள் மத்தியிலிருந்த கடும் போக்காளர்களான புலிகள் இயக்கத்தையும் தோற்கடித்து விட்டோம் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள கடும் போக்குடைய ராஜபக்ஷவையும் தோற்கடித்து விட்டோம்’ என்று தொனிப்பட. இதன் பொருள் என்ன?
அதாவது இப்பொழுது கடும் போக்கு வாதிகள் இரு தரப்பிலும் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள். எனவே மிதப் போக்குடையவர்கள் தங்களுக்கிடையில் ஏதோ ஒரு இணக்கத்திற்கு வந்து ஒரு தீர்வைக் கண்டு பிடிக்கலாம் என்று அவர்கள் வெளியுலுகத்திற்கு காட்ட முனைகிறார்கள். இவ்வாறு இரு தரப்பிலும் உள்ள மிதப்போக்குடைய சக்திகள் தங்களுக்கிடையே ஓர் இணக்கத்தைக் கட்டியெழுப்பி வரும் ஒரு பின்னணியில் விக்னேஸ்வரன் மறுபடியும் நிலைமைகளைக் குழப்புகிறார் என்ற ஒரு குற்றச் சாட்டை சிங்களமக்கள் மத்தியிலும் காண முடிகிறது. தமிழ் மக்கள் மத்தியிலும் காண முடிகிறது.
ஆனால் விக்னேஸ்வரனோ அல்லது எழுக தமிழோ முன் வைக்கும் கோரிக்கைகள் இச் சிறிய தீவின் பல்லினச் சூழலையும், பல்மதச் சூழலையும் கட்டியெழுப்பும் நோக்கிலானவைதான். அவற்றைத் தீவிரவாதம் என்று சொன்னால் எது மித வாதம்? இத்தனைக்கும் விக்னேஸ்வரன் தமிழ் அரசியலின் ஒரு புதிய அணிக்கு தலைமை தாங்கப் போவதாக இன்று வரையிலும் வெளிக்காட்டவில்லை என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். 
தமிழரசுக் கட்சிக்கு எதிரான அழுத்தக் குழுவொன்றின் ஜனவசியமிக்க ஒரு குறியீடாகவே அவர் தோன்றுகிறார். அதற்குமப்பால் தமிழரசுக் கட்சி மீதும் அதன் செயற்பாடுகளின் மீதும் அதிருப்தி கொண்டவர்;களை ஓர் அணியாகத் திரட்டி அதற்குத் தலைமை தாங்க அவர் இன்று வரையிலும் தயாரில்லை. தமிழ் மக்கள் பேரவையானது ஒரு கட்சியாக மாறப் போவதில்லை என்பதை அவர்; கடந்த மாதம் மட்டக்களப்பில் வைத்துக் கூறியிருந்தார். அங்கு நடந்த முத்தமிழ் விழாவில் உரை நிகழ்த்தும் பொழுது அவர் அவ்வாறு கூறியிருந்தார்.
எனவே விக்னேஸ்வரன் ஓர் எதிரணிக்கு தலைமை தாங்கத் தயாராகக் காணப்படாத வரை அவர் முன் வைக்கும் அரசியலும் செயற்திறன் மிக்க விதத்தில் நிறுவனமயப்படப் போவதில்லை. இவ்வாறு எதிர்த்தரப்புக்களை அச்சுறுத்தும் அளவிற்கு இன்னமும் முழு அளவு நிறுவனமயப்பட்டிராத அரசியற் செயற்பாடுகளைக் கண்டு தென்னிலங்கையில் இருப்பவர்கள் ஏன் அச்சமடைய வேண்டும்? ஒரு எழுக தமிழிற்கே இவ்வளவு ஆர்ப்பாட்டமாக எதிர்ப்பு காட்டப்படும் என்றால் அது போன்ற தொடர்ச்சியான மக்கள் மையச் செயற்பாடுகளுக்கு எதிர்வினை எப்படியிருக்கும்? எழுக தமிழிற்கு தென்னிலங்கையிலும், தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பகுதியினரிடமிருந்தும் காட்டப்படும் எதிர்ப்புக்களிலிருந்து தமிழ் மக்கள் பேரவையும், அதன் ஆதரவாளர்களும் ஒரு புதிய உத்வேகத்தைப் பெறவேண்டியிருக்கிறது. எழுக தமிழிற்கு அடுத்தது என்ன? என்று அவர்கள் சி;ந்திக்கவும், திட்டமிடவும் வேண்டி இருக்கிறது.
இலங்கைத் தீவிற்கு இப்பொழுது எதிரிகளே இல்லையென்று கூறிக் கொண்டு இருதரப்பு மிதவாதிகளும் ஒரு இணக்கத்திற்கு வந்து ஒரு தீர்வை அதாவது ஒரு புதிய யாப்பை தமிழ் மக்களின் முன் வைக்கவிருக்கும் ஒரு பின்னணியில் எழுக தமிழிற்குப் பின்னரான அரசியற் செயற்பாடுகளுக்கான தேவைகளும் அதிகரித்து வருகின்றன. 
குறிப்பாக யாப்புருவாக்கச் சூழலில் யாப்பைக் குறித்து தமிழ் மக்களை விழிப்பூட்ட வேண்டிய ஒரு பொறுப்பு தமிழ் மக்கள் பேரவைக்கும், தமிழ் கட்சிகளுக்கும், புத்திஜீவிகளுக்கும், செயற்பாட்டாளர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும்,  படைப்பாளிகளுக்கும் உண்டு. அதிலும் குறிப்பாக தமிழ் மக்கள் பேரவையானது ஏற்கெனவே ஒரு முன்மொழிவை வைத்திருக்கிறது. அம் முன்மொழிவை இலகு தமிழில் எழுதி மக்கள் மத்தியில் கொண்டு போக வேண்டும். லட்சக் கணக்கில் அதன் பிரதிகளை தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக்க வேண்டும். தான் முன் வைத்த ஒரு முன்யோசனையை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு தமிழ் மக்கள் பேரவைக்கு உண்டு என்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.
யாப்புருவாக்கத்தைக் குறித்தும் தமிழ் மக்களின் கோரிக்கைகளைக் குறித்தும் தமிழ் மக்கள் மத்தியில் தெளிவில்லாத ஒரு நிலையே காணப்படுகின்றது. எனவே தமிழ் மக்கள் பேரவையும் தமிழ் கட்சிகளும் இது தொடர்பில் உடனடியாக அடுத்த கட்டத்தைக் குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. எழுக தமிழிற்கு எதிராக தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பானது தமிழ் மக்களை எந்தளவிற்கு ஐக்கியப்படுத்தியுள்ளது? விக்னேஸ்வரனை எதிர்ப்பதில் சிங்கள கட்சிகள், புத்திஜீவிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் எவ்வறானதோர் ஐக்கியம் ஏற்பட்டிருக்கிறது என்பதை தமிழ் மக்கள் உற்றுக் கவனிக்க வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் முதலாவது பொங்கு தமிழ் ஒழுங்கு செய்யப்பட்ட பொழுது அதில் பங்கேற்ற யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு புத்திஜீவி என்னிடம் பின்வருமாறு சொன்னார். ‘முதலில் அதில் பங்கேற்பதில்லை என்றுதான் தீர்மானித்திருந்தேன். ஆனால் பொங்கு தமிழிற்கு முதல் நாள் பல்கலைக் கழகச் சூழலில் ராங்கிகளும், கவச வாகனங்களும் செறிவாக நடமாடத் தொடங்கின. பார்க்கும் இடங்களில் எல்லாம் படையினர் ஏதோ ஒன்றை தடுக்கப் போவது போல தயார் நிலையில் காணப்பட்டார்கள். இவற்றையெல்லாம் பார்த்ததும் நான் யோசித்தேன். இவர்கள் ஏன் பொங்கு தமிழை தடுக்க வேண்டும்?இவர்கள் யார் அதைத் தடுப்பதற்கு? எனவே நான் எனது எதிர்ப்பை பதிவு செய்வது என்று தீர்மானித்தேன். அதனால் பொங்கு தமிழில்; பங்கெடுத்தேன்’ என்று. 
எழுக தமிழிற்கு எதிராக தென்னிலங்கையில் தோன்றியிருக்கும் உணர்வலைகளை தொகுத்துப் பார்க்கும் ஒரு சராசரித் தமிழ் மனம் எப்படிப்பட்ட முடிவை எடுக்கும்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதல் களப் பலியான பெண் போராளி 2ஆவது லெப் மாலதி உட்பட 5 மாவீரர்களின் நினைவு வணக்க நிகழ்வானது நேற்று (16) லுட்சேர்ன் மாநிலத்தில் நடைபெற்றுள்ளதாக தமிழர் ஒருங்கிணைப்புகுழு அறிவித்துள்ளது.

குறித்த நிகழ்வானது சுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.

இதன் போது சுடரேற்றலுடன் தமிழீழ தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு மலர்மாலை அணிவித்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கம், மலர்வணக்கம் மற்றும் சுடர்வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

தாய்நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்திற் கொண்டு ஆயுதமேந்தி இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிராக போராடிய மாலதியின் நினைவு நாளானது தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாக நினைவு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

மக்களால் மலரஞ்சலி, சுடர்வணக்கம் செலுத்தப்பட்ட வேளையில் வணக்கப் பாடல்கள் கலை பண்பாட்டுக் கழக இசை கலைஞர்களால் இசைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் எழுச்சிப் பாடல்கள், இளையோர்களின் எழுச்சி நடனங்கள், கவிதை, நினைவு உரை, சிறப்புரை இடம்பெற்றதுடன், நீதிக்கு முன்னால் எனும் கருப்பொளைக் கொண்ட எழுச்சி நாடகமானது நிகழ்வின் சிறப்பம்சமாகவும் அமைந்திருந்தது.

நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடி இறக்கலுடன், தமிழர்களின் தாரக மந்திரமும் இடம் பெற்றுள்ளது.

தமிழீழப் பெண்களின் புரட்சிக்கு வித்திட்டவர்களின் நினைவுகள் சுமந்த இவ்வணக்க நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

விழிகள் மடல் மூடிட
உதடுகள் திறந்திட
உள் நா அசைந்திட
மூக்குக்கும் நுகர்ந்திட
முடியாத நிலையெனில்
கோமா எனலாமா!

பார்த்த இடங்கள்
பாழடைந்து போயின.
பார்த்த மனிதர்கள்
காணாமல் போயினர்.
அடுத்த தலை முறையினர்
அகரம் மறந்து போயினர்.
சிங்காரத் தமிழ் சிதைந்திட
நற்றமிழ். வீசிய தென்றல்
நாணிக் குறுகிட
பிற மொழிக் கலப்பு
பிறப்பெடுத்து உலைக்குது.!

கந்தகம் கலந்த நஞ்சு
தேசக் காற்றில் கலந்து
குஞ்சுகளின் சுவாசத்தில்
உறைந்ததினால் விளை
நிலத்தில் விஞ்சியது சாவு..!
போர் முடிந்ததாய் கங்கணம்
பட்டி தொட்டி எங்கனும்
இன்னமும் காவலரண்.!

பாது காப்பு வலையங்கள்
நவீன கொலைக் களங்கள்.
எஞ்சிய தமிழருக்கு
அதுவே பலிக் களம்..
இந்திய சீன பாக்கியுடன்
ரூசியா ஆயுத வினியோகம்.
பெரும் போர் நடந்தது
தாக்குப் பிடித்தது எங்கள்
படை.!காட்டிக் கொடுப்பினால்
கை விட்டுப் போனது விடியல்.

நாட்டியம் போடுது
நாட்டில் நரிப்படை.
ஐநாவும்! அகிலமும்
இயங்க மறுக்கினம்
இம்சை அரசனை கழு
ஏற்றிட எவர் மறுப்பினும்
ஐந்தாம் கட்டம் ஆரம்பம்
என ஆய்வுகள் அச்சுறுத்து..!

அழிவினை நிறுத்தி அவரவர்
உரிமையைப் பகிர்! பகை விலகும்.
எமக்கென்றோர் கொடி பறக்கும்.
அதுவே எங்கள் மறவர் கொடி
தினமும் போற்றும் புலிக் கொடி..!
 
ஆக்கம்  கவிஞர் எழுத்தாளர் தயாநிதி
உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் லண்டன் வருகைதரும் வட மாகாண முதல்வர் நீதியரசர் விக்னேசுவரன் அவர்களுக்கு கீத்றூ விமானநிலையத்தில் கொடுக்கும் வரவேற்பும் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அணிதிரளும் மக்கள் திரட்சியும் முற்றவெளியின் தொடர்ச்சி என வரலாற்றில் இடம்பெறும்வகையில் பேரெழுச்சியுடன் அமைவது காலத்தின் கட்டாயமாகும்.
கொள்கைத்திடத்துடனும் இலட்சியத்திலுறுதியுடனும் மக்கள் நலனில் மாறா அக்கறையுடனும் சமரசமின்றிப் பயணிக்கும் அறம்சார்ந்த அரசியல்துணிவே தமிழர்களின் அரசியல் தலைமையாக கௌரவ நீதியரசர் விக்னேசுவரன் அவர்களை அரியணையேற்றியுள்ளது.
வட மாகாண சபையின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அந்த நொடிவரை அரசியல் நெடியேதும் இல்லாதவராக இருந்த கௌரவ நீதியரசர் விக்னேசுவரன் அவர்களால் பாரம்பரிய அரசியல் பின்னணி கொண்டவர்களையும், தமிழ்த்தேசிய அரசியல் பின்னணி கொண்டவர்களையும், சிங்கள அரசின் ஆசீர்வாதமும் ஆதரவும் கொண்டவர்களையும் பின் தள்ளி தமிழ் மக்களின் நன்மதிப்பை பெற்று முன்னிலைக்கு வரமுடிந்துள்ளதென்றால் அவரின் அறம்சார்ந்த அரசியல் துணிவே காரணமாகும்.
தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கள்ளமௌனத்தின் பின்னணியில் சம்பந்தன், சுமந்திரனின் அடிபணிவு அரசியல் மூலம் தமிழர்களது அரசியல் அபிலாசைகள் சிங்கள பௌத்த பேரினவாதிகளின் காலுக்கடியில் கொண்டுசேர்க்கப்படுவதை தடுக்கமுடியாது நாம் கலங்கி நின்ற வேளையில், தாயகம்-தேசியம்-தன்னாட்சி உரிமை ஆகியவற்றின் அடிப்படையிலான தீர்வு ஒன்றே இறுதித்தீர்வாகும் என்றுரைத்து அது சார்ந்து மாறா நிலைப்பாட்டில் பயணிக்கும் தமிழ்த் தேசிய சக்திகளையும் ஒன்றிணைத்து ‘தமிழ் மக்கள் பேரவை’ யினை உருவாக்கியதுடன் இணைத்தலைமையேற்று வழிநடத்திவருகின்றார் வட மாகாண முதல்வர் கௌரவ நீதியரசர் விக்னேசுவரன் அவர்கள்.
தமிழின விரோதிகள்-சிங்கள-பிராந்திய-அனைத்துலக அழுத்தங்களையும் நெருக்கடிகளையும் அறம்சார்ந்த நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டு தமிழ் மக்களின் உரிமைக்காக சமரசமின்றி போராடிவரும் வட மாகாண முதல்வர் கௌரவ நீதியரசர் விக்னேசுவரன் அவர்களை அனைத்து தமிழர்களும் ஆதரிப்பது வரலாற்றுக் கடமையாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணக்க அரசியல் செயல்பாடும் தாயகத் தமிழர்களின் மௌனமும் புலம்பெயர் தளத்தை சோர்வுநிலைக்கு இட்டுச்சென்றுகொண்டிருந்த நிலையில், சதிகளையும், எதிர்ப்புகளையும், தடைகளையும் தவிடுபொடியாக்கி யாழ்.முற்றவெளியில் ‘எழுக தமிழராக’ பேரெழுச்சி கொண்ட தாயக உறவுகள் தமது நிலைப்பாட்டினை தீர்க்கமாக பிரகடனம் செய்துள்ளார்கள்.
இந்நிலையில் புலம்பெயர் தளம் மீளெழுச்சி கொள்வதென்பது உடனடித்தேவையாகும். அதுவும் வட மாகாண முதல்வர் கௌரவ நீதியரசர் விக்னேசுவரன் அவர்களின் லண்டன் வருகையின் போது வெளிப்படுத்தப்படும் எழுச்சியானது இரட்டிப்பு பலமாக அமைந்துவிடுகிறது.
குழுக்களுக்கிடையிலான நான் பெரிது.. நீ பெரிது.. என்ற தன்முனைப்பு செயற்பாடுகளின் அடிப்படையில் தமிழீழ நினைவெழுச்சி நிகழ்வுகள் கூறுபோடப்பட்டதன் விளைவாக தமிழீழ விடுதலையை நேசித்த புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களின் பங்கேற்பானது பல்லாயிரத்தில் இருந்து ஆயிரம், இரண்டாயிரமாக குறைவடைந்துள்ள நிலையில் அந்த சோர்வுநிலையகற்றி புலம்பெயர் தளத்தை மீளெழுச்சி கொள்ளவைப்பதற்கான விதையாக வட மாகாண முதல்வர் கௌரவ நீதியரசர் விக்னேசுவரன் அவர்களின் வருகையை மாற்றுவோம்.
சம்பந்தன், சுமந்திரன் வரிசையில் மாவை, சிறீதரன் ஆகியோரின் புலம்பெயர் தேச வருகையின் போது நடைபெறும் எதிர்ப்பு போராட்டங்கள் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஏகபிரதிநிதித்துவம் உடைத்தெறியப்பட்டிருக்கும் புறச்சூழலில் வட மாகாண முதல்வர் கௌரவ நீதியரசர் விக்னேசுவரன் அவர்களுக்கு கொடுக்கும் ஆதரவானது தெளிவான செய்தியை அனைத்துத் தரப்பினருக்கும் எடுத்துரைப்பதாக அமையும்.
எமதருமை லண்டன் வாழ் உறவுகளே!
யார் யாருக்கோ விமான நிலையத்தில் வரவேற்பு கொடுத்த நாம் எம் இனத்தின் முதல்வருக்கு வரவேற்பு கொடுக்க ‘எழுக தமிழராய்’ அணிதிரழ்வோம் வாரீர்!
எம் மாவீரர்களின் இலட்சியக் கனவை தன் தோள்களில் சுமந்துவரும் எம் இனத்தின் முதல்வருக்கு எழுச்சிபூர்வ ஆதரவளிக்க புலிக்கொடியேந்தி வாரீர்!
வட மாகாண முதல்வர் கௌரவ நீரியரசர் விக்னேசுவரன் அவர்களின் கால்கள் பதியுமிடெங்கும் எமது கால்களும் சேர்ந்தே பதியட்டும்!
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
ம.செந்தமிழ்.
mythrn@yahoo.com


மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் விக்ரர் அண்ணாவின் வீரவணக்க நாள் ( 12.10.1986 ) !!
அடம்பன் பகுதியில் 12.10.1986 அன்று சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் வீர வணக்க நாள் இன்றாகும். விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரான விக்ரர் இயக்கத்தின் தலை சிறந்த போர் தளபதிகளில் ஒருவராவார். அத்துடன், மன்னார் பிராந்தியத் தளபதியாகப் பணியாற்றியர்.
யாழ். குடாநாட்டுக்கு அது புதிய காட்சியாக இருந்தது. ஒவ்வொரு ஊர்களின் ஊடாகவும், கிராமங்களின் வழியாகவும், நகரங்களின் ஊடாகவும் அந்த வீரனின் இறுதி ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது.
வீதிகளின் இருமருங்கிலும் மக்கள் வரிசையாக நின்று தமது தோட்டங்களிலும், முற்றங்களிலும் பூத்திருந்த மலர்களை கொண்டுவந்து அவனின் உடல்தாங்கிய அந்த ஊர்திக்கு முன்பாக தூவி கண்ணீர் மல்க நின்றனர்.
அதற்குமுன்னர் ஒருபோதும் இப்படியான இறுதி ஊர்வல நிகழ்வு உணர்வுடனும், லட்சோபலட்சம் மக்களின் வழியனுப்பலுடனும் நடந்ததே இல்லை.
யாழ். மண்ணில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு இருப்பதால் மக்கள் எந்தவித பயமுமின்றி தமது இதயத்துள் இருக்கும் விடுதலை வீரனுக்கு தமது இறுதி மரியாதையை செலுத்தியபடி இருந்தனர்.
இரவு பகலாக அந்த ஊர்தி யாழ். மண்ணின் அனைத்து இடங்களுக்கூடாகவும் நகர்ந்தது. எமது மண்ணில் இருந்து சிங்கள இராணுவத்தினர் விரட்டியடிக்கப்பட வேண்டும்.
எமது மக்கள் அச்சமின்றிய வாழ்வு ஒன்று வாழவேண்டும் என்ற கனவு கண்ட அந்த வீரன் அந்த பேழைக்குள் இருந்தபடியே அவற்றை பார்த்து உண்மையில் மனம் நிறைந்திருப்பான்.
யாழ். மண் விடுதலைப் போராளிகளின் கைகளுக்குள் வருவதற்காக ஓய்வற்ற உழைப்பும் திறனும் காட்டிய அந்த வீரன் லெப்.கேணல் விக்ரரின் இறுதி ஊர்வலம்தான் அது. ஒஸ்கார்..ஒஸ்கார்..என்ற சங்கேத அழைப்பிற்குரிய அந்த பெருவீரன் தாயக மண்ணில் விதையாகி கால் நூற்றாண்டுகள் கடந்து போய்விட்டன.
விக்ரர், இவனை எப்படி அடையாளப்படுத்துவது. அச்சம் கொஞ்சமும் இல்லாத பெருவீரன் என்றா? பழகும்போது குழந்தையை போல பழகும் மனதுள்ளவன் என்றா ?
களங்களில் நெருப்புகனரும் விழிகளுடன் உத்தரவிடும் ஆளுமைமிக்க தளபதி என்றா?…எப்படியும் அவனை அடையாளப்படுத்தலாம். அத்தனை ஆளுமைகளும் அவனிடத்தில் இருந்தன.
எந்த விடுதலைப் போராட்டம் என்றாலும் புரட்சி அமைப்பு என்றாலும் அதில் இணைபவர்கள் இரண்டு வழிகளில் இணைவார்கள். அடக்குமுறையும், ஒடுக்குமுறையும் மெல்லியதாக முளைவிடும் பொழுதிலேயே அதனை நிராகரித்து அதனில் இருந்து விடுதலைபெற என்று ஆரம்பித்திலேயே அமைப்பில் இணையும் வழி ஒன்று.
அடக்குமுறையும், ஒடுக்குமுறையும் உச்சமாகி கொடிய கொலை வெறியாட்டத்தினூடாக உணர்வுபெற்று விடுதலை அமைப்பில் இணையும் வழி அடுத்தது.1983 கறுப்பு யூலை இனப்படுகொலைகளுக்கு பின்னர் விடுதலை அமைப்புகள் வீச்சுப் பெறவும், வீக்கம் பெறவும் ஆரம்பிக்க முன்னரே 1983 க்கு முன்னரேயே விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தவன் விக்ரர்.
1981ன் இறுதிப் பகுதியில் விக்ரரின் விடுதலைப் புலிகளுடனான தொடர்பு ஆரம்பிக்கிறது. ஆரம்பப் பொழுதுகளில் அமைப்புக்குள் உள்வாங்குவதற்கான அனைத்து கவனிப்புகளிலும் விக்ரரின் உறுதி தலைமையால் கவனிக்கப்பட்டு பயிற்சிக்காக முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் அமைந்திருந்த முகாம் ஒன்றுக்கு அனுப்பப்படுகின்றான்.
அங்கே லிங்கம், பொட்டு, பசீர், ரஞ்சன், கணேஸ், விக்டர், ஆனந்த் ஆகியோரும் இன்னும் சிலருக்கும் தலைவர் நேரடியாகவே பயிற்சிகளை ஆரம்பிக்கிறார்.
பயிற்சி முகாமின் உணவுப்பிரிவில் மூத்த உறுப்பினர்களான கிட்டுவும், ரஞ்சன்லாலாவும் இருக்கின்றனர். உடற்பயிற்சியாளராக செல்லக்கிளி அம்மான் இருக்கிறார்.
இந்த பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்த அதிகமானவர்கள் உறுதியிலும், விடுதலைப் போராட்டத்தின் ஏற்ற இறக்கங்கள் பற்றிய தெளிவிலும் தமது இறுதிக்கணம் வரைக்கும் மலையை நிகர்த்த உருக்கு உறுதியுடன் நின்றதற்கு காரணம் தலைவரின் நேரடி பயிற்சி, பயிற்சியின் பின்னான மாலைப் பொழுதுகளில் அமைப்பின் மூத்த உறுப்பினர்களான செல்லக்கிளி அண்ணா, சீலன், கிட்டு, ரஞ்சன், புலேந்திரன் ஆகியோர் உட்பட மற்றும் சிலரும் இணைந்த அனுபவ பங்கீடுகள்.
இவைகளேதான் விக்ரரையும் ஒரு உன்னதமான போராளியாக, மிகப்பெரும் வீரனாக வரித்தெடுத்த காரணிகளாகும்.சக போராளிகள் அனைவர் மீதும் அளவற்ற அன்பும், பாசமும் காட்டும் ஒரு பெரிய குழந்தையாக அவன் இருந்தான்.
அதிலும் பயிற்சிக்கு முன்னரும் பயிற்சிக்கு பின்னரும் அவன் இருந்த இளவாலைப் பகுதியில் அமைந்திருந்த வீட்டில் அவனுடன் இருந்தோர் இன்றும்கூட அவனின் நினைவுகளையும் செயல்களையும் ஒருவகையான பெருமிதத்துடனும் ஈர்ப்புடனும் கண்களில் ஒளிபொங்க நினைவு கூருவதை பார்க்கலாம்.
விக்ரரின் அஞ்சாமையையும், சீறிப்பாயும் துப்பாக்கி சன்னங்களுக்கு மத்தியிலும் நிதானமாக நகரும் அவனின் வேகத்தையும் அந்த நேரம் இருந்த போராளிகளுக்கு அடையாளம் காட்டியது திருநெல்வேலி தபாற்பெட்டி சந்தியில் 1983 யூலை 23ல் சிங்கள இராணுவத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட தாக்குதல் ஆகும்.
மிகவும் செறிவான வாகனப் போக்குவரத்தும், சிங்கள காவல்துறை, சிங்கள இராணுவ நடமாட்டம் என்பன அடிக்கடி நிகழும் திருநெல்வேலி வீதியில் இரவில் வீதியை குழிதோண்டி அதில் சக்கையை வைத்து எக்ஸ்புளோடருக்கு தொடர்பு கொடுக்கும் வேலையை செல்லிக்கிளி அம்மான், அப்பையா அண்ணை ஆகியோருடன் இணைந்து செய்து முடித்தவன் விக்ரர்.
விக்ரர் அமைப்பில் இணைந்த பிறகு மன்னார் பகுதியில் நிகழ்ந்த தாக்குதல்களில் அநேகமாக அனைத்திலும் விக்ரரின் நேரடி பங்களிப்பும் விக்டரின் எம்16 கிறனைற் செலுத்தியின் வெடிப்பும் இருந்தே இருக்கும்.
மன்னார் பொலிஸ் நிலையம் மீதான தாக்குதலில் விக்ரருடன் குமரப்பா போன்றோர் இணைந்திருந்தாலும்கூட அந்த தாக்குதலுக்கான திட்டமிடல், ஒருங்கிணைப்பு என அனைத்தையும் அற்புதமாக கையாண்டவன் விக்ரர்.
வெறும் தாக்குதல்களை மட்டும் நடாத்திக் கொண்டிருக்காமல் சிங்களத்திடம் இருந்து விடுவிக்கப்பட்ட மன்னார் பிரதேசத்தின் பகுதிகளில் மக்கள் அமைப்புகளை உருவாக்குவதிலும், மக்கள் மத்தியில் விடுதலைப் போராட்டம் பற்றி தெளிவையும், அரசியல் அறிவையும் ஊட்டுவதிலும் விக்டரின் செயற்பாடுகள் மிகவும் ஆழமாக அமைந்திருந்தன.
அவன் மக்களால் ஆழமாக நேசிக்கப்பட்டதற்கு பின்னால் மக்களுடனான அவனின் ஆத்மார்த்தமான தொடர்பே காரணமாகும்.
விடுவிக்கப்பட்ட மன்னார் நிலப் பகுதியில் விக்ரர் பயிற்சி முகாம்களையும் உருவாக்கி ஏராளமான புதிய போராளிகளை தாய் மண்ணிலேயே உருவாக்குவதிலும் முனைப்புடன் செயற்பட்டவன்.
விக்ரர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் காட்டிய உறுதியும், தலைமைப் பண்பும், வீரமும் மிகவிரைவாகவே அவனை விடுதலைப்புலிகள் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினர் என்ற அதியுச்ச நிர்வாக மையத்துக்குள் உள்வாங்கி கொண்டது.
சிங்கள தேசத்தின் இராணுவத்தினரை தமிழீழ மண்ணில் இருந்து துரத்தும் நடவடிக்கை தினமும் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்த காலமது.
இராணுவம் முகாம்களுக்குள் முடங்கிக் கிடப்பதும், சிலவேளைகளில் முகாம்களை விட்டு சிறிய தொகையாக வெளிவரும் இராணுவத்தினரை உடனடியாக அந்த பகுதிக்கு விரையும் விடுதலைப்புலிப் போராளிகள் விரட்டியடிப்பதும் அன்றாட நிகழ்வுகள் அப்போது.
அப்படியான ஒருபொழுதில் 12.10.1986 அன்று அதிகாலையில் அடம்பன்நகருக்குள் இராணுவம் நுழைந்துவிட்டதாக கிடைத்த தகவலை அடுத்து, கருக்காய்க் குளத்தினூடாகவும், ஆண்டான்குளப் பகுதியாலும், நாயாற்று வெளிக்குள்ளாக தாமரைக்குளத்தினூடாகவும் அடம்பனுக்குள் விக்ரரின் தலைமையில் நுழைந்து விடுதலைப் புலிகள் நடாத்திய தாக்குலில் சிங்கள இராணுவத்துக்கு துணையாக ஹெலிக்கொப்படரும் வந்து தாக்குதலை ஆகாயத்தில் இருந்து நடாத்தியபோதும் வீரமுடன் போரிட்ட அந்த தளபதி எதிரியின் சன்னம் ஒன்று நெஞ்சுக்குள்ளாக புகுந்து சென்றுவிட வீரமரணமடைகிறான்.
ஒருமாமலையின் சரிவாக விக்ரரின் மரணம் அமைப்பை உலுக்கியது அந்த பொழுதில். தலைமை கொடுக்கும் பணியை செயற்படுத்தும் திறனும், அதனை செயற்படுத்தியே தீரவேண்டும் என்ற இலட்சிய உணர்வும் உடைய ஒரு பெருவீரன் அவன்.விக்ரர் மரணித்த அந்த சண்டையில்தான் முதன்முதலாக பெண்கள் அணி தாக்குதலில் நேரடியாக இறக்கப்பட்டனர்.
நாயாற்று வெளிக்குள்ளாக தாமரைக்குளம் கடந்து அடம்பனுக்குள் நுழைந்த சாஜகானின் அணியில் விக்ரரின் வழிகாட்டலில்தான் முதலில் பெண்புலிகள் எதிரிக்கு எதிரான சண்டையில் நின்றனர்.
அதுமட்டுமல்லாமல் அந்த சண்டையில்தான் முதன்முதலாக சிங்கள இராணுவத்தை செர்ந்த இரண்டு வீரர்கள் உயிருடன் பிடிக்கப்படுகிறார்கள். 2வது லெப்.அஜித் சந்திரசிறீ, கோப்ரல் கே.டபிள்யூ பண்டார ஆகியோரே பிடிக்கப்பட்ட சிங்கள இராணுவத்தினர்.
விக்ரர் தாயக மண்ணில் வீழ்ந்துவிட்ட தாக்குதலில்கூட அவன் இன்னொரு அங்கீகாரத்தையும், விடுதலைப் போராட்டத்துக்கு பாரிய எழுச்சியையும் இந்த இராணுவ வீரர்களின் கைதுகள் மூலம் உருவாக்கிச் சென்றிருந்தான்.
சிங்கள தேசத்துடன் தமிழர் தேசம் ஒரு உத்தியோகபூர்வமான கைதிகள் பரிமாற்றத்தைச் செய்வதற்கு விக்டரின் அடம்பன் சண்டையில் சிறைபிடிக்கப்பட்ட இராணுவத்தினர் காரணமாக இருந்தனர்.
சிங்கள தேசத்தின் பாதுகாப்பு அமைச்சர் அத்துலக் முதலியும், சிங்கள தேசத்தின் முப்படைகளின் தளபதியான சிறில் ரணதுங்கா, பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் நேரடியாக பலாலி சென்று பலாலி வாசலில் வைத்து விடுதலைப்புலிகளான அருணாவையும், காமினியையும் விடுவித்தனர்.
அதற்கு பரிமாற்றமாக அடம்பன் சண்டையில் பிடிக்கப்பட்டவர்களை கிட்டு விடுவித்தார். இப்போது பார்த்தால் இது சிறிய சம்பவமாக தெரியும். ஆனால் அன்றைய பொழுதில் இது ஏற்படுத்திய எழுச்சியும் மன உறுதி ஏற்றமும் வார்த்தைகளில் வடிக்க முடியாதவை.
விக்ரர் என்ற என்ற அற்புதமான வீரனின் நினைவுகளும், மாசுமறுவற்ற அவனின் உன்னதமான இலட்சிய பற்றும் என்றென்றும் எமது மக்களால் இதயத்தின் ஆழத்திலிருந்து நினைவு கொள்ளப்ப