பிரான்சில் இடம்பெற்ற பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்கள்9ஆம் ஆண்டுவணக்க நிகழ்வுகள் !






பிரான்சில் இடம்பெற்ற பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்கள் கேணல் பரிதி ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வுகள் !
பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 9 ஆம் ஆண்டு மற்றும் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கேணல் பரிதி அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 19.11.2016 சனிக்கிழமை 15.00 மணியளவில் பிரான்சு நந்தியார் பகுதியில் மண்டப நிகழ்வாக இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ்ப் பெண்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வ பொது ச்சுடரினை நந்தியார் தமிழ்ச்சங்கத் தலைவர் ஏற்றிவைத்தார்.சங்கத் தலைவர் ஏற்றிவைத்தார்.ஈகைச்சுடரினை கேணல் பரிதி அவர்களின் பெற்றோர் ஏற்றிவைத்து திரு உருவப்படங்களுக்கு மலர் அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து அனைவரும் சுடர்வணக்கத்துடன் மலர் வணக்கம் செலுத்தினர். வரவேற்புரையைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தமிழ்ச்சோலை மாணவர்களின் எழுச்சி நடனங்கள், எழுச்சிக் கானங்கள், கவியரங்கம், கவிதைகள், சிறப்புரைகள் போன்றவை அமைந்திருந்தன.
நிகழ்வில் கேணல் பரிதி அவர்களின் விருப்பத்திற்கமைவாக பிரான்சு தேசத்தில் பட்டம்பெற்ற தமிழ் மாணவர்கள் 13 பேர் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ்பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மதிப்பளிக்கப்பட்டனர். குறித்த மதிப்பளித்தலை கேணல் பரிதி அவர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் வழங்கியிருந்தனர்.
கடந்த ஆண்டும் பிரான்சு தேசத்தில் பட்டம்பெற்ற தமிழ் மாணவர்கள் 14 பேர் தமிழர் மதிப்பளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் சிறப்புரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு.சத்தியதாசன் அவர்கள் ஆற்றியிருந்தார்.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலிக்க அனைவரும் எழுந்து கைகளைத் தட்டி நின்றனர்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக