புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள், விசாரணைக்காக கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதன் முதற்கட்டமாக, யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகள் அனைவரையும் எதிர்வரும் 30ம் திகதி கொழும்புக்கு வருமாறு புனர்வாழ்வு அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. இந்த அறிவித்தல் யாழ் மாவட்ட புனர்வாழ்வு அமைச்சினூடாக வழங்கப்பட்டுள்ளது.
வடக்குக் கிழக்கில் அமைந்துள்ள அனைத்து மாவட்டச் செயலகங்களிலும், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் பொருளாதார விடயங்கள் உள்ளிட்ட பதிவுகளை மேற்கொள்வதற்காக அரசாங்கத்தினால் அலுவலகங்கள் இயக்கப்பட்டு வந்தன.இதில் விடுதலையான முன்னாள் போராளிகள் பதிவுகளை மேற்கொண்டிருந்தனர். குறித்த பதிவின் அடிப்படையிலேயே தற்போது கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்ணன் இருக்கும் போது நாம் யாரிடமும் கை ஏந்தவில்லை. இப்போ கண்டவன் நின்டவனிட்டை எல்லாம் கை ஏந்தி பிச்சை எடுக்கிறோம்… என்கிறார் மண்மீட்புக்காய் தம்மை கொடையாக்க சென்ற  போராளி பேச்சோடு இருப்போர் இதைப்பார்த்து அவர்கள் நல்வாழ்வில் அக்கறைகொள்ள  இந்த இணைப்பை பாருங்கள் போர்களம் சிறக்க அள்ளிக்கொடுத்த புலம்பெயர் உறவுகளே முள்ளிவாய்காள் மௌனிப்பின்பின்   விழிமூடி உள்ளவர்கள் மட்டும் விழிதிறந்து கொள்ளுக்கள் எமக்கு உள்ள கடமையை  நாம்செய்ய தவறலாமா....? இணைவோம் விழித்து விழிதிறந்து போர்களம் நின்றவர் புதுவாழ்வு காணக்கரம்கொடுப்போம் 
யுத்தத்தின் கொடூரத்தில் இடுப்பிற்கு கீழ் இயங்காத நிலையில் குடும்பந்தினரால் தூக்கியெறியப்பட்டு அனாதரவாக விடப்பட்ட கொடூரம்.
படுக்கையில் இருந்து படுக்கை புன்களுடனும் அவதியுற்று ஒரு வேளை உணவிற்கும் வழியின்றி மருத்து வசதிகள் இன்றி பெரும் துயரத்தை அனுபவித்து வாழ முடியாது தவிக்கும் நிலை.
உதவிடும் நல்ல மனம் கொண்டோரே  உயிரைக்காப்பாற்ற நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி உதவிட முன்வாருங்கள்.
தொலைபேசி இலக்கம்: 0094771530409
வங்கி கணக்கு இலக்கம்: நந்தகுமார் நவநேசன், 72832719, இலங்கை வங்கி
மேலதிக தொடர்புகளுக்கு: ராம்
தொலைபேசி இலக்கம்: 00447448452286
புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி ராம் கடத்தப்பட்டுள்ளார், கைது செய்யப்பட்டார் இது தான் ஸ்ரீலங்கா..
எதிர்மன்னசிங்கம் அரிச்சந்திரன் எனப்படும் அம்பாறை மாவட்டத் தளபதி ராம் இனம் தெரியாதோர்களால் உதலில் கடத்தப்பட்டார், ஞாயிறன்று காலை, திருக்கோவில் பிரதேசத்திலுள்ள அவரது வீட்டுக்கு நீல நிற ஜீப் வண்டியில் வந்த அடையாளம் தெரியாத சிலர் அவரைக் கடத்திச் சென்றனர், அவரது மனைவி காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்தார். அதன் பின்னர் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியை வெளிவிட்டது இலங்கை காவல் துறை.. ஆனால் அவரிடமிருந்து வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
ஆகவே கடத்தல்களுக்கு தொடர்பானவர்களுக்கும், காவல்துறைகளுக்கும் எப்படியான தொடர்புகள் உள்ளன என்பதை ஊகிக்க முடிகிறது..
கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவராக இருந்த அவர், இறுதியாக அம்பாறை மாவட்டத் தளபதியாக இருந்தார்.
இலங்கை அரசால் கிழக்கு மாகாணம் முழுமையாக விடுவிக்கப்பட்ட பின்னர், அவர் திருகோணமலை மாவட்டத்திலுள்ள காட்டுப் பகுதியில் வைத்து 2009ம் ஆண்டு இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பின்னர் 2013 ம் ஆண்டு விடுதலையாகி திருமணம் முடித்து திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்துவருவதுடன் விவசாயம் செய்து கொண்டு வந்தார்.
எப்பொழுது விடியும் தமிழர்கள் வாழ்க்கை..
EeLam MPK BoYs !!

இறுதியுத்தத்தில் சரணடைந்தும் பிடிக்கப்பட்டும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்கள் இராணுவத்தினருடன் இணைந்து செயற்படுவது போன்று செயற்பட்டு
வெளிநாட்டுப் புலிகளுடன் இணைந்து மீண்டும் புலிகள் அமைப்பைக் கட்டமைக்க முற்படுவதாக அரசாங்கப் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறான தகவலின் பிரகாரமே தற்போது புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் சிலர் பிடிக்கப்படுவதாகவும் அத்துடன் இப்புலிகள் அமைப்பினருக்குத் தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் மிகவும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அரச புலனாய்வுத் துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.
சர்வதேச விசாரணைக்கும் போர்க்குற்றவாளிகள் தண்டனைக்கு உள்ளாகுவதையும் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலர் அரசாங்கத்துடன் சேர்ந்து நீர்த்துப் போக வைத்துள்ளதாக விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அறிந்துள்ளதாகவும் இதன் காரணமாக சில உறுப்பினர்களுக்கு அவர்கள் தண்டனை வழங்க முற்பட்டுள்ளதாகவும் அரச புலனாய்வுத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளதாம்.

தமிழர்கள் வாழும் பகுதிகளில் முக்கியமாக யாழ்மாவட்டத்தில் மாவா எனும் போதைப் பொருள் ஊட்டிய பாக்கு சர்வசாதாரணமாக விற்கப்படுகிறது
பாக்கு, வெத்திலை வைத்து கொடுத்து வரவேற்பது தமிழினத்தின் பண்டைய பண்பாடும், காலாசாரப்படிமம் ஆகும். இது இலட்சுமி கடாச்சமானது என்றும், தெய்வீகமானது என்றும் கருதப்பட்டது. வாக்குச் சொல்பவர்கள் கூட பாக்கு உருட்டியும், வெத்திலை நாடி பார்த்தும் குறி சொன்னார்கள். இப்படி இருந்த பாக்கு இன்று போக்குமாறி, வாக்குமாறி இனத்தையே பலவீனப்படுத்தும் தாக்கு பொருளாக மாறியுள்ளது.
தமிழர்கள் வாழும் பகுதிகளில் முக்கியமாக யாழ்மாவட்டத்தில் மாவா எனும் போதைப் பொருள் ஊட்டிய பாக்கு சர்வசாதாரணமாக விற்கப்படுகிறது. இதை அரசோ, குற்றத்தடுப்புப்பிரிவோ, அரசவதிகாரிகளோ இதைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன்? சமூக ஆவலர்கள் இது குறித்து விசனப்பட்டு, புகார் செய்தாலும் இதைக் அரசு கண்டு கொள்ளாதிருப்பதும், தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட மறுப்பதும், பெற்றோர், சமூக ஆவலர்கள்,காலசாரக்காவலர்கள், தமிழ் அரசியல்வாதிகள் எனப்பல வேறுபட்ட வகுப்பினர்கள் விசனத்துக்குள்ளாகி உள்ளார்கள்.
அண்மையில் இந்த மாவாப்பாக்கை மல்லாகத்திலுள்ள உயர்தரவகுப்பில் பயிலும் இருமாணவர்கள் பாவித்தமை நேரடியாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது மாணவசமூகத்தினுள் இளைஞர், யுவதிகள் மத்தியில் இப்படிப்பட்ட போதைப்பாக்கு வகைகளைப் பாவிக்கும் நிலை சர்வசாதாரணமாகப் புழக்கத்தில் வருகிறது. இது எப்படி வருகிறது? இதன்பின்னணி என்ன? எதிர்கால இலக்கு என்ன? என்பது பற்றி ஆராயவுள்ளோம்.
பாக்கு
பாக்கை சிங்கப்பூர், சில மத்தியகிழக்கு நாடுகள் போதைப் பொருளாகவே பார்க்கின்றனர். விமானநிலையங்களில் பாக்குடன் பிடிபட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் இயற்கையாகவே போதைப் பொருள் உள்ளதாகக் கருதப்படுகிறது. இது தமிழ், சிங்கள மக்களிடையோ சர்வசாதராணமாக பாவிக்கும் பாவனைப் பொருளாகவே அன்று இருந்தது. வல்லுவம் என்ற சிறுபையில் பாக்கு வெத்திலை சுண்ணாம்பு போன்றவற்றைக் கொண்டு திரிந்தார்கள். அதில் கொட்டைப்பாக்கு நாறல்பாக்கு எனபலவகையில் பதப்படுத்தி சீவலாக்கிப பயன்படுத்துவார்கள். பல்லும்போனவர்களும் பாக்கை சிறு உரலில் இடித்துத் தூளாக்கிப் பயன்படுத்துவார்கள். இன்று சூவீங்கள் எனும் இறப்பறை சப்புவதுபோல் அன்று பாக்கு வெத்திலை என்பது பொழுதுபோக்காகப் பொருளாக சமூகவிணைப்புக்குப் பயன்படுத்தப்பட்டது. இது தேனீர்இ காப்பி போன்ற சமூகதொடர்பு உண்டிகள் போல் இதுவும் பயன்படுத்தப்பட்டது. பழக்கமில்லாதவர்கள் இதை உண்ணும் போது தலைசுற்றும். இதில் சிறு போதைத்தன்மை இருக்கிறது என்பதற்கு இந்த உதாரணம் போதுமானது.
போதைப்பொருட்கள்
போதை என்று பார்க்கும் போது தேனீர், காப்பி போன்றவைகளும் போதைப் பொருக்களே. போதையின் அளவை, தாக்கு வீரியத்தை வைத்தே போதைவஸ்து எது என்றும் மென்போதைப் பொருள் எது என்பதும் சமூகத்தால் தீர்மானிக்கப்பட்டது. தாக்குதிறன் குறைந்த தங்குதன்மையற்ற காப்பி ,தேனீர் போன்றன ஊக்கம் தரும்   சமூகப்பாவனைப் பொருட்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. போதை ஏற்றும், தங்கிவாழப்ப்பண்ணும் பொருக்களான கஞ்சா ,அபின் ,கரோயின், கொக்கோயின் போன்றன தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களாகக் கொள்ளப்பட்டன. இப்போதைப் பொருட்கள் மனிதனை, மனிதமூளையை தாக்கு தங்கிவாழச் செய்வதால் இதை தடைசெய்யப்பட்டன.
வெள்ளைக்காரன் இலங்கைக்கு வந்து எம்மை தம்மில் தங்கிவாழப்பண்ணினான். இதில் ஒருவடிவமே தேயிலை, காப்பி அறிமுகமாக இருந்தது. எமக்கு அதைப் பழக்கி, எமக்கே விற்றுப் பணம் சம்பாதித்தான். இதனால் பாக்கின் பயன்பாடும் குறையத்தொடங்கியது. இதை புதுமுறையில் உயிர்பிக்க பீடா என்று இதேபாக்கை சீனி, வாசனைப் பொருட்களுடன் கலந்து விற்கத் தொடங்கினார்கள். இது இளைஞர் யுவதிகள் மத்தியில் ஓரளவு வளர்ந்தாலும் அங்கிகரிக்கப்பட்டதும் சமூகவந்தஸ்துப் பெற்ற கோப்பி தேனீருடன் போட்டி போட முடியவில்லை. இன்று கோப்பி தேனீருக்கென்றே பல கடைகள் உருவாயிருப்பதை அனைவரும் அறிவர்.
போதைப்வஸ்துக்கள் மனிதனை அதில் முழுமைகாகத் தங்கி வாழப்பண்ணுகிறது என்பதுடன் அழித்தும் விடுகிறது. இதனால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் பாவனையாளர்களையும் விற்பனையாளர்களையும் தண்டிக்கும் சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைப்படடுத்தப்பட்டது. வன்போதைப் பொருட்கள் பாவனை திறனற்ற சமூகத்தை உருவாக்க வழிகோலும் என்பது திண்ணம். உலகிலேயே தடைசெய்யப்பட்ட வன்போதைப் பொருட்கள் சமூகமயப்படுத்துவது அடிப்படையில் தமிழினத்தை அழிக்கும் ஒருசெயலாகவே பார்க்கப்படவேண்டும். இது ஒரினத்தின் அத்திவாரத்தை ஆணிவேரை பிடுங்குவதாக அமையும். இளையவர்களே ஒரினத்தின் எதிர்காலம். இவர்கள் போதையில் தங்கி வாழ்ந்தால் சமூகம் கட்டுப்பாடு இழந்து  வன்செயல்களைத் தொடர்ந்து அறிவிலிகளாக, வல்லுறவாளர்களாக வாழத்தொடங்குவார்கள்.
இப்பாக்கப் போதைப் பொருளை யார்விற்பனை செய்கிறார்கள்? எப்படி நாட்டுக்குள் நுளைகிறது? என்ற கேள்விகளுக்கு விடை அரச அனுமதியுடனே இவை புளக்கத்துக்கு வருகிறது என்பதாகும். வன்போதைப் பொருக்களை பாக்கு என்ற சமூகவந்தஸ்துப் பெற்ற சப்புபொருளை போதைப் பொருட்களுடன் கலந்து இராணுவத்தினூடு இலவசமாக முக்கியமாக இளைஞர் யுவதிகளைக் குறிவைத்தே அரசாங்கம் திட்டமிட்டுச் செயற்படுகிறது. சுயமாகச் சிந்திக்கும் விவேகமுள்ள இளைஞர்களே நாட்டின் நாடி நரம்பாகவும் இனத்தின் காப்பரண்களாகவும் அமைகிறார்கள். இக்காப்பரண்களைச் சிதைப்பதன் ஊடாக ஒரு இனத்தையே அழித்து  புரட்சி, போராட்டம் என்ற சொற்களையே அர்த்தமற்றதாக்கி விடலாம் என்பதில் அரசு குறியாக உள்ளது. இப்போதைவஸ்துக்களால் பாலியல் வல்லுறவுகள், விபச்சாரம், சுயசிந்தனை அழிப்பு, இனவேற்றுமை உடைப்பு, தேசிய அறுப்பு என அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வன்போதைப் பொருட்கள் இலகுவாகவும் இலவசமாகவும் கிடைக்கப் பெறும் போது அதன் பாவனை வீதம் அதிகரிப்பதற்கும் வன்செயல்கள் உயர்வதற்கும் ஏதுவாக அமைகியும்.
அரசின் சாதகமான முயற்சியோ, உதவியோ கிடைக்காத பட்சத்தில் இதைத்தடுப்பதற்கு நாம் என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். நாட்டின் சட்டம் என்பது கோட்டில் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் காலாசாரச்சட்டம் என்பது மனங்களில் உறுதியாக்கப்படுவது. இதனால் இப்போதை வஸ்துக்கள் பற்றிய விளிப்புணர்வுகளை ஏற்படுத்துவதும். இதன் தீமைகளை எடுத்துரைப்பதும், இப்பானையாளர்களை விற்பனையாளர்களை சமூகவிரோதியாக பார்ப்பதற்கு தமிழ்சமூகத்தை உந்துவதும் இப்படியான வன்போதைப் பொருள் பாவனையை முளையிலேயே கிள்ளுவதற்கான யோசனைகளாகும். சட்டத்தால் முடியாதவற்றை சில காலாசாரங்கள் திறமையாகவே செய்யும்.
ஒருவினத்தை அழிக்கவேண்டுமானால் அவ்வினத்தின் மொழி,கலை, கலாசாரம், ஆழ்நிலம், பொருளாதாரம், கல்வி போன்றவற்றை அழிப்பதனூடாகவே மிக இலகுவாக இனவழிப்பை நிறைவேற்றலாம். இதில் இளையவர்களை சுயசிந்தனையற்றவர்களாக உருவாக்கும் போது ஒரினமே தனக்குத் தானே தீயிட்டுக் கொள்கிறது. இதில் இந்த மாவா பாக்கு பெரும்பங்கை ஆற்றுகிறது.  காலாசாரம், கல்வி, பொருளாதாரம் என்பற்றை ஒரேநேரத்தில் குறிவைத்துத் தாக்குகிறது. இனவிடுதலை, தேசியம், போராட்டம், விடுதலை பற்றி வாயறக்கத்தும் பெருமக்களே! இப்போதைப் பொருள் பாவனையைத் தடுப்பதும் போராட்டமே என்பதை அறியுங்கள். ஆயுதம் எடுத்துப் போராடுவதும், கூட்டங்கள் போடுவதும், மேடையில் பேசுவதும், ஊர்வலங்கள் நடத்துவது மட்டல்ல போராட்டம். ஒரினத்தை அதன் ஆரோக்கியத்தைக் காப்பதற்காகப் போராடுவதும் மனிதநேயத்துடன் கூடி இரட்டிப்பான இனவிடுதலைப் போராட்டம் என்பதை உணர்க. தேசியம் சுயநிர்ணயம் பேசுபவர்கள் அடிப்படையில் சுயமாகச் சிந்திக்க முடியாத மக்களிடம் அது குறித்து எப்படிப் பேசுவீர்கள். சுயமாகச் சிந்திக்கும் மனிதனால் மட்டுமே தன்னினம், மக்கள், தன்னிலம், தேசம் என்று சிந்திக்க முடியும். சுயநினைவுடன் ஆரோக்கியமாக சிந்திக்கும் மனிதனாலும் மக்களாலுமே ஒரு இனவிடுதலையை வென்றேடுக்க முடியும். புலத்தில் இருந்து சுயநலனுக்காக போராட்டம், இனம், சுயநிர்ணயம் என்று பேசுபவர்கள் அம்மண்ணின் மக்களின் நிலையை சிந்திக்கவே மாட்டார்கள். ஏதாவது சாட்டுகச் சொல்லிப் பணம் பறிப்பதே குறியாக இருக்கும். ஈழத்தமிழர்களின் போராட்டத்தின் தோல்வியே சுயநலன்களின் விஸ்வரூபமே என்பதை அறிக.
எம்மினத்தை ஆரோக்கியமாகவும், கல்வி, கேள்வி, பொருளாதாரம், கலை, கலாசாரம், உடல் உளநலன்களுடன் வாழவைத்தாலே போதும் விடுதலை, சுதந்திரம் என்பது தானாகவே வந்துசேரும். தமிழ்தேசியம் தானாகவே காப்பாற்றப்படும். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்குத்தான். சுயம்பன் கொடியும் பணம் சுருட்டலே நடப்பு. எம்மினம் சிந்திக்குமா? இதற்கான முதலடியை எடுத்து வைக்குமா? கால் முழுமையாக முறிவதற்குமுன் பத்தைக் கட்டிவிடுங்கள். சமூகம் தானாகவே நடக்கும்.
நம்பிக்கையுடன் நோர்வே நக்கீரா

தனக்கென சொந்தங்கள் எதுவும் இல்லை- கவலை தெரிவிக்கும் முன்னாள் போராளி

வயிற்றில் துப்பாக்கிச்சூட்டுக் காயத் தழும்புகளுடன் வாழ்ந்துவரும் தனக்கு ஆஸ்துமா வருத்தமும் உள்ளதாக முன்னாள் போராளியான இளையதம்பி தவராணி கவலை வெளியிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி தனது சொந்த ஊரான மட்டக்களப்பிற்கு வரும் போது தனக்கு 24 வயது என தவராணி குறிப்பிடுகின்றார்.
இவரின் தற்போதைய நிலைமை குறித்துஅவர் இவ்வாறு குறிப்பிட்டார். 9 வருடங்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இருந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தனக்கு தாயும் இல்லை, தந்தையும் இல்லை என மிக வேதனையுடன் தெரிவித்தார். தனக்கு காணித்துண்டு ஒன்று மாத்திரம் உள்ளதாகவும், ஆனால் வீடு கட்டுவதற்கு வசதி இல்லாமல், கொக்கட்டிச்சோலையிலுள்ள தனது நண்பி ஒருவரின் வீட்டில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றிய ஒரு சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார். இதேவேளை, தனக்கென்று சொந்தங்கள் எதுவுமில்லை எனக் கவலை தெரிவிக்கும் தவராணி, தன்னை யாரும் பார்ப்பதற்கும் தயாரில்லை என்றும் தெரிவித்தார்.
ஆகவே, தனக்கு ஓர் வீடாவது இருக்குமானால் தானும் குடும்ப வாழ்வில் இணைந்து கொண்டு வாழலாம் எனவும் தனக்கு இருப்பதற்கும் வீடற்ற நிலையில் அங்கும் இங்குமாக அலைந்து திரிவதாகவும் கண்ணீருடன் தெரிவித்தார். எந்தவித சுயதொழிலும் இல்லாமல், வருமானமும் இல்லாமல் தனக்கு உதவுவதற்கு யாரும் இல்லையே என்ற ஏக்கம் தனக்கு உள்ளதாகக் குறிப்பிட்டார். ‘ஸ்ரீலங்கா இராணுவத்திலிருந்து வெளியேறியவர்களுக்கு, அரசாங்கம் பல உதவிகளைச் செய்வதாகக் குறிப்பிட்ட அவர், தம்மைப் போன்றவர்களைக் கவனிக்க யாரும் இல்லை’ என அங்கலாய்கின்றார்.
தமிமீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வீடு வந்துள்ள முன்னாள் போராளிகளையும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களையும் அரசாங்கம் கவனிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த வருடம் வீடு வழங்குவதற்காக பயனாளிகள் பட்டியலில் தனது பெயரும் உள்வாங்கப்பட்டிருந்த போதிலும், தான் ஒரு தனிநபர் என்ற காரணத்தினால் தனது பெயர் அந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டார். இதுதொடர்பில் பிரதேச செயலகத்தில் 3 தடவைகள் கடிதம் கொடுத்துள்ள நிலையில், இதுவரையும் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டார். தனது வயிற்றில் துப்பாக்கிச் சூட்டுக் காயத் தழும்புகளுடனும், ஆஸ்துமா வருத்தத்துடனும் வைத்திய செலவிற்கே பணம் இல்லாத துர்ப்பாக்கிய நிலையில் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்த பலர், தற்போதும் சிறைகளில் வாடுவதாகவும் அனைவரையும் அரசாங்கம் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே தனது வேண்டுகோள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
(தொலைபேசி எண் விரைவில் தரப்படும் உதவி செய்யுங்கள் எம் உறவுகளே)

அண்ணையோடு இருக்கையில் நாங்கள் காயப்பட்டு இருந்தாலும் எங்கள் காயப்பட்ட வலிகளை உடைத்து ஒரு மாற்று வலிகளோடு நிமிர்வோடு வெளி வர எமக்கு வழிகள் இருந்தன


“எங்கள் தலைவரோடு இருக்கையில் நாங்கள் எவ்வளவோ மகிழ்ச்சியாக இருந்தோம். எங்கள் அண்ணையோடு இருக்கையில் நாங்கள் காயப்பட்டு இருந்தாலும் எங்கள் காயப்பட்ட வலிகளை உடைத்து ஒரு மாற்று வலிகளோடு நிமிர்வோடு வெளி வர எமக்கு வழிகள் இருந்தன. ஆனால் இப்பொழுது காயப்பட்ட போராளிகள் நாங்கள் எங்கு போவது என்ன செய்வது என தெரியவில்லை.” காயப்பட்ட பெண் போராளி ஒருவரின் வலிகளை வார்க்கும் கூற்று.
அநாதைகள் என எவரும் இருந்ததில்லை தேசியத் தலைவரின் காலத்தில். இன்று அநாதரவான முன்னாள் காயப்பட்ட போராளிகளை, போராட்டத்தை எதிர் கொண்ட மக்களை காக்க அரசும் வழி செய்யவில்லை. தாயகத்தில் உள்ள உறவுகளும் முன் வர முடியாதவாறு அச்சுறுத்தப்படுகிறார்கள். புலத்தில் வாழும் மக்களும் ஒட்டுமொத்தமாக அவர்கள் துயர் போக்கும் பணியில் ஈடுபடவில்லை. “அநாதைகளாணோம்” என்ற கவலையை விட “புறக்கணிக்கப்படுகின்றோம்” என்ற வலிகளே எங்கள் மண்ணில்  முன்னாள் போராளிகளை அணு அணுவாக கொல்கின்றனர்.
போராளியின் மனக்குமுறல்.