இன்று ஊடகங்கள் புலித்தோல் போர்த்திய நரிகளாக

2003ம் ஆண்டின் இறுதி வாரத்தில் ஒருநாள் முல்லைத்தீவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதியொருவருடனான சந்திப்பில் கலந்து அவருடன் உரையாடும் போது நம்பிக்கை அடிப்படையில் சில விடயங்களை பரிமாறிக்கொண்டார்.
அதில் ஒன்று தமிழீழத்த தேசியத் தலைவரால் இரு தமிழ் ஊடகங்களின் வளர்ச்சிக்காய் பல நூறு கோடி ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டு வழங்கப்பட்டதாக, அந்தச் செய்தியை சொல்லி தொடர்ந்த போது அந்த முதுபெரும் தளபதியின் கண்கள் கசிவதை அவதானித்தேன். அந்தப் பணத்தை கரும்புலிகளுக்காக ஒதுக்கியிருந்தால் உயிராயுதம் இல்லாமல் தானியங்கி படகுகள் மூலமே தாக்குதல்களை நடாத்தலாம் அல்லது உயிரிழப்பில்லாத தாக்குதல்களை நடாத்தும் தொழில் நுட்பத்தை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் தலைவர் ஊடகங்களின் தேவையை உணர்ந்து, அவற்றினூடாக கருத்துருவாக்கத்தையும் மக்களுக்கான தெளிவையும் முன்னெடுக்க முடியுமென பெரிதும் நம்பினார். அதனால் அந்த ஊடகங்களை பலப்படுத்தியுள்ளார். என்று கூறி முடித்தார்.
அப்படி கரும்புலிகள் உயிர் கொடுத்து செய்ய முடியாததை இந்த ஊடகங்கள் நிறைவேற்றும் என பெரிதும் நம்பினார்கள். ஆனால் அத்தகைய புனிதத்தை அடித்தளமாகக் கொண்ட அவ் ஊடகங்கள் இன்று எதிர்த்திசையில் பயணிப்பது வேதனை தருகின்றது.
இன்று அந்த ஊடகங்கள் புலித்தோல் போர்த்திய நரிகளாக மாற்றம் பெற்று நிற்கின்றன. தேசியவாதிகளாக காட்டியவர்களும் பிழைப்புக்காகவும் புகழுக்காகவும் கண்மூடி பூனைகளாய் நக்கிக் கிடக்கின்றார்கள்.

ஈழப்பித்தன் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக