பவித்ரா நந்தகுமார் எழுதிய "கண் மூடி நீ உறங்கு தோழா"

கண் மூடி நீ உறங்கு தோழா
உன் இலட்சியம் தொடர
நான் இருக்கேன் தோழா
தலைவன் பாதை
நடப்பேன் தோழா
உன் வீரம் எனக்கு தா தோழா

கருவறையும் கல்லறையும்
ஒன்றே தோழா
நம் ஈழம் மலரும் வரை
மரணத்திலும் இன்னொரு
வீரன் பிறப்பதனால்
படையுண்டு என
கலங்காதே
அவை போலியான மாயைகள்
என அமைதி கொள் தோழா
நம் சேனையின் பலம்
எங்குண்டு பாரினில்
நம் தலைவன் போல்
யாருண்டு அணைத்திட

தமிழன்னை உனையணைத்தாள்
நிரந்தர தூக்கம் காண
நீ கொடுத்து போனாய்
உன் ஆயுதம்
மட்டுமல்ல ஈழம்
எனும் மிகப்பெரிய
பொக்கிசத்தையும் தான்

உன் போல் வீரனாக
இறக்க விரும்புகிறேன்
கோழையாக அல்ல
உன் வீர மரண
சேதி சொல்ல தயங்குகிறேன்
ஏன் எனில் உன்
அம்மா கையால் நானும்
ஒரு வேளை உண்டதால்
அழுது புலம்புவாளோ
உனை எண்ணி
பெருமை கொள்வாளோ
என நான் அறியேன்

உன் அரும்பு மீசை
எனக்கு இல்லை
அதை பார்க்க
நாளை நீயும் இல்லை
என் இருப்பும் நிச்சயம்
இல்லை ஆனாலும்
துடிக்கிறேன் என்
கண் முன் உன் கனவு
தேசம் மலர வேண்டும் என்று

நெருப்பாக இருந்தாய்
தோழா
இப்போது ஒளியற்று
கிடக்கிறாய் தோழா

  ஆக்கம்  பவித்ரா நந்தகுமார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக