அரசாங்கத்தின் உத்தரவாதத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது – ருத்ரகுமாரன்:-

அரசாங்கத்தின் உத்தரவாதத்தின் ஏற்றுக்கொள்ள முடியாது என நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் விசாரணை குறித்து இலங்கை அரசாங்கத்தின் உத்தரவாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தனது வாய் மொழி மூல அறிக்கையில் வரவேற்றிருந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், நீதி நிலைநாட்டப்படுவது மிகவும் அவசியமானது எனவும் அது ஸ்தம்பிதம் அடைவதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார் என ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்தும் பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

2015ம் ஆண்டு செப்டம்பர் அமர்வுகளின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் இலங்கை குறித்து வெளியிட்ட கருத்துக்களை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஒப்புக்கொள்ள தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் போன்ற விவகாரங்களில் சர்வதேச சமூகம் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக