மட்டுநகர் கமல்தாஸ் எழுதிய தலைவன் வழியில் ஈழம் மலர வழிசெய்வோம்

குருதி நிறைந்த ஊர்கள் இனி  வராது
நீர் நிரம்பிய விழிகள் இனி இராது

நான் போகும் வழியில் இடர்கள் வரலாம்
இன்றே இனிது பெற வழியனுப்பு தாயே
உந்தன் ஆசி  வேண்டும்
உனது புதல்வன் வெற்றி பெற வாழ்த்து

எமது இனம் இனிமை பெற களமாடுவோம்
தலைவன் வழியில் ஈழம் மலர வழிசெய்வோம் 
வழியனுப்பு  தாயே
வழியனுப்பு  தாயே

உன் முந்தானைக்காற்று
என்று என்னைத்திண்டும்
உன் அன்பு  முத்தம்
எப்போது என் கன்னம் நனைக்கும்

நீ பிசைந்த சாதம் எப்போது
என் பசியைப்போக்கும்
அனைத்துக்கும்  விடை பெரும் நேரம்
மகிழ்வோடு நான் போகிறேன் அம்மா

உன் மடிமீது உறங்கும் காலம் இனி வராது
என் தலையை கலைக்கும்
உன் விரல்கள் இனி தொடாது
உன் ஞாபகம்  வற்றாத ஊற்று
எம் தலைவன் மேல்  தீராத பற்று

எம் உறவுகள் உறங்க
உறைவிடம் தேடிப்போகிறேன்
உன்னிடம் பெரும் பாரச்சுமையை
தந்து செல்கின்றேன் தந்தையே

உன் கடினமான கரம் பற்றி
காணாத இடமெல்லாம் சுற்றித் திரிவாய்
கறல் வண்டியில் எற்றிச் செல்லும் போதெல்லாம்
தலைவனின் வீரம் பற்றியே உரைப்பாய்

நீ முத்தமிடுகையில் தட்டிவிடுவேன்
உனது மீசை குத்துகையில் -இன்று
ஆரத்தழுவில் முத்தமிடுகின்றாய்
உனது  முற்றிய மீசை எனது அரும்புத்தாடியில்
சிக்கிக்கொள்ளும் அத்தருணம்
நான் புன்னகைக்கின்றேன்
நீ என் கன்னம் நனைக்கின்றாய்

இருவரும் வழியனுப்புங்கள்
விடை பெறுகின்றேன்
வெற்றி செய்தி காதிலெட்டும்
தடை ஒன்று அகன்றிருக்கும்


ஆக்கம் மட்டுநகர் கமல்தாஸ்   

0 கருத்துகள்:

கருத்துரையிடுக