மகிழ்ந்து நிற்கும் முல்லைத்தீவு – பாகம் I


முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு – ஒட்டிசுட்டான் அடர்ந்த காட்டுப்பகுதி வழியாக நான் பயணம் செய்துகொண்டிருந்த பஸ் வண்டி புதுக்குடியிருப்பு நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. சாரதி பஸ் வண்டியின் வேகத்தை திடீரெனக் குறைத்து மெதுவாக நகர்த்தினான். நான் யன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தேன். அங்கு நூற்றுக்கணக்கான வயோதிபர்களும், இளைஞர்களும், பெண்களும் கூட அந்தக் காட்டுப் பாதையை மூடி மறைத்துக்கொண்டு நின்றனர். “தம்பி என்ன நடந்தது? இந்த சனம்மில்லாத காட்டுப்பகுதியில் ஒரே சனமாகக் கிடக்குது” என்று எனக்கு முன்னால் இருந்த சாரதியை ஆவலுடன் கேட்டு எட்டிப்பார்த்தேன். “ஏதுவும் விபத்தா தெரியவில்லை அல்லது வேறெதுவோ தெரியவில்லை.” என்று அவர் தனக்குத் தெரிந்த ஊகங்களை எல்லாம் சொல்லி மண்டையைப் போட்டு குழப்பிக் கொண்டிருந்தார். எங்களுடைய பஸ்வண்டி நகரமுடியாமல் நின்றது. அங்கே பிரமாண்டமான பீரங்கி வண்டி ஒன்று வீதியோரமாக நிற்பாட்டிக் கிடந்தது. அதைச் சுற்றித்தான் நூற்றுக்கணக்கானோர் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இது என்ன சாமான்? நான் என்னுடைய கண்ணால் ஒருநாளும் காணவில்லையே என்று வியப்பாகப் பார்த்துக் கொண்டு அருகில் இருந்த இளம் போராளி ஒருவரைக் கேட்டேன். இதுதான் ஐயா ஆட்லறி ஷெல் அடிக்கின்ற பீரங்கி.முல்லைத்தீவு ஆமிக்காம்பை எங்கடை ஆட்கள் கைப்பற்றினர் என்று அந்த இளம் போராளி கூறினார். அவர் களைப்பாக இருந்த போதும் முகம் பூரிப்பினால் மலர்ந்து கொண்டிருந்தது.
ஆமாம் ஆயுதத்திற்காக தமது உயிரை அர்ப்பணித்த இந்த மண்ணுக்கு உரமாகின போராளிகளை நினைத்தேன். இதற்காகப் பலியான அவர்களை நினைத்து அந்த ஆயுதத்தை தொட்டுப்பார்த்தேன். அண்ணை இன்னும் கொஞ்சம் போங்கோ அங்கே இன்னுமொரு ஆட்லறி நிற்கிறது என்று யாரோ கூறியது காதில் விழுந்தது ஆச்சரியமாக இருந்தது. ஒரு ஆட்லறி முகாமில் இருந்து எடுத்து வரவே பெரியபாடாக இருந்திருக்கும் அதற்கிடையில் இன்னும் ஒன்றா? மீண்டும் பஸ்ஸில் நாங்கள் ஏறி பயணத்தைத் தொடர்ந்தோம். அந்த இடத்தில் இருந்து சிறிய தூரம் சென்றதும் அதைவிடப் பெரிய ஆட்லறி ஒன்று புல்டோசரில் கட்டிவைத்தபடி நின்றது. அங்கும் ஒரே சனக்கூட்டம். நல்லூர் திருவிழாக் கூட்டத்தில் குவிந்தவர்கள் மாதிரி எல்லோர் முகத்திலும் ஒரே குதூகலம். “முல்லைத்தீவு முகாம் சரியாம்” “ஆயிரம் ஆமிவரை முடிஞ்சுதாம்” “கனபேர் சரணடைந்திருக்கலாமாம்”, “எத்தனையோ ஆயுதங்கள் சாப்பாட்டுச் சாமான்கள், வாகனங்கள் எல்லாம் அள்ளிக்கொண்டுவந்து விட்டினமாம்” என அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சனமெல்லாம் தமக்குத் தெரிந்தபடியெல்லாம் கதைத்துக் கொண்டிருந்தது.
முல்லைத்தீவு முகாம் வன்னிப் பேரு நிலப்பரப்பிலுள்ள மிகப் பெரியதொரு கேந்திர முக்கியத்துவம் வந்த ஐராணுவ கடற்படைக் கூட்டுத்தளம். 1990ம் ஆண்டு முல்லைத்தீவில் காலம் காலமாக வாழ்ந்து வந்த மக்களை ஒரே இரவில் அகதிகளாக்கி உடுத்த உடுப்புடன் வெளியேற்றிய ஆயிரக்கணக்கான இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட அந்த நிலம் முல்லைத்தீவு முகாமாக காட்டியளித்துக் கொண்டிருந்தது.
வடக்குக் கிழக்குப் பகுதியில் கடலாலும் தெற்கே நிலப்பரப்பினாலும் சூழப்பட்ட முகாம். 5 மைல் பரப்பிற்குள் தமது தளத்தை அமைத்து அப்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர். அந்த இராணுவ முகாம் அமைக்கப்பட்ட பின்னர் குமுளமுனை, செம்மலை, தண்ணீருற்று, முள்ளியவளை, அலம்பில் பகுதியில் உள்ள மக்கள் திலமும் சொல்லொணாத் துயரத்துக்கும், எறிகணை வீச்சுக்கும் ஆளாகி வந்தனர். இது சர்வதேசத்தின் கண்களுக்குப் படாத தமிழர்களின் பெரிய அவலம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு அருகில் உள்ள மாட்டுப் பட்டியில் அடுத்தடுத்து விழுந்த ஆட்லறி எறிகணைகளால் 40 பசுமாடுகள் உடல் சிதறிக் கொல்லப்பட்டன. அந்த பரிதாபகரமான சம்பவம் நடந்து முடிந்து சில நாட்களுக்குள் அதே எறிகணை பீரங்கிகள் எமது மக்கள் குடியிருப்புக்களில் உலாவருகின்றன. “இந்தப் பெரிய சாமான்களைக் கொண்டு வந்து சேர்த்துப் போட்டாங்கள். இனி என்ன எங்களுக்குத் தமிழீழம் கிடைச்சமாதிரித்தான்” அந்தக் கூட்டத்தோடு ஒருவராக நின்ற அந்தப் பெரியவர் குதூகலித்தார். சில மாதங்களுக்கு முன் வலிகாமத்தில் இருந்தும் பின் தென்மராட்சியில் இருந்தும் இடம்பெயர்ந்து வந்து சேர்ந்தவரின் முகத்தில் எவ்வளவு குதூகலம் அந்த ஆட்லறியை இழுத்து வந்த புல்டோசரின் முனால் நான்கு போராளிகள் தூங்கிக் கொண்டு இருந்தனர். ஆம் களத்தில் பல இரவுகள் தூக்கமில்லாமல் தண்ணீர் உணவு கூட அருந்த முடியாமல் போராடிக்களைத்துப் போய் வந்த அந்தப் போராளிகளைப் பார்த்தபோது உடல் சிலிர்த்தது.
முல்லைத்தீவு இராணுவத் தளத்தில் கைப்பற்றப்பட்ட அந்த 122 மி.மீ நடுத்தர பிரிவு ஆட்லறி எறிகணைகளை இழுத்துக் கொண்டு வந்த புல்டோசர்களின் முற்தளத்தில் இருந்த போராளிகளைப் பரிவோடு பார்த்துக்கொண்டு நின்ற மக்கள் அவர்களின் களைத்துப் போன முகங்களைத் தடவிக் கொடுத்தது நெஞ்சைத் தொட்டது. எங்களுடன் பஸ்வண்டியில் வந்துகொண்டிருந்தவர்களில் ஒருவரான கலாதரன் என்ற அதிபர் கண்களை அகலத் திறந்தபடி வியப்புமாறாத நிலையில் ஆட்லறிப் பீரங்கியை மேலும் கீழும் பார்த்துக்கொண்டிருந்தார். “இந்த ஆட்லறியால எங்கட எத்தின ஆயிரம் மக்களைப் பறிகொடுத்தோம் நாங்கள். எத்தனை கோடிக்கணக்கான சொத்துக்களை அழித்திருக்கின்றார்கள்.” உணர்ச்சிவந்த அவரது கண்களில் இருந்து நீர் வடிந்தது. பச்சை நிறத்திலான அந்த பீரங்கியைத் தொட்டு கண்களில் ஒத்திக்கொண்டார். இனி எங்கட உயிரையும் சொத்துக்களையும் காப்பாற்றுவதற்கு பயன்படும் என்று அவர் சொல்லிக்கொண்டே பஸ்வண்டியில் ஏறி அமர்ந்தார்.
முல்லைத்தீவு இராணுவத்தளம் விடுதலைப் புலிகளின் கையில் வீழ்ந்ததால் ஆங்காங்கே மக்கள் தம்மை மறந்து ஆனந்தக்கூத்தாடுவதும் கைதட்டிப் பாட்டுப்பாடுவதுமகா இருந்தனர். சில இடங்களில் வெடிகளைக் கொழுத்தியும் கையில் பந்தங்களை வைத்தும் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். கிளிநொச்சியில் புலிகளுக்கெதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தினர் எனச் சில நாட்களுக்கு முன்னர்தான் இலங்கை வானொலி தொடர்ந்து மூன்று நாட்களாகக் கூறிவந்ததை மீண்டும் நினைத்துப் பார்கிறேன். ஆம் புலிகளின் சாதனையால் தம்மை மறந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்து தெருவில் நடமாடிய அந்த மக்களைப் பார்க்கும் போது, மக்கள் எங்கே நிற்கின்றார்கள் என்ற செய்தியை மீண்டும் முழங்கிச் சொல்வது போல் இருந்தது.
நாங்கள் ஏறிய அந்த விஷேட சேவை பஸ்வண்டி உறுமலுடன் புறப்பட்டு புதுக்குடியிருப்பையும் கடந்து உடையார்கட்டை நோக்கி பரந்தன்சாலை ஊடாக விரைந்து கொண்டிருந்தது. முல்லைத்தீவுiranuva முகாம் ஓர் இரவினுக்குள் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்ப்பட்டுவிட்டதாம் என்ற செய்தியைக் கேட்டதும் எங்கள் எல்லோருக்கும் வியப்பாகத்தான் இருந்தது. ஆம் எத்தனையோ காவலரண்கள், பாதுகாப்பு வளையங்கள், ஆயிரக்கணக்கான விஷேட பயிற்சிபெற்ற இராணுவப் படையணிகள் அங்கிருந்தன, நவீனரக ஆயுதங்களைக் குவித்து வைத்திருந்ததுடன் இன்னும் ஒரு சில தினங்களுக்குள் வன்னித் தாக்குதலைத் தொடங்கி வன்னிப்பெரு நிலப்படப்பு முழுவதையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடுவோம் என்ற பெரியளவிலான ஆயுதங்களை மேற்கொண்டிருந்த நிலையில்தான் முல்லைத்தீவு இராணுவமுகாம் மீதான புலிகளின் “ஓயாத அலைகள்” இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 1996ம் ஆண்டு ஆடி 17ம் திகதி இரவு பத்துமணியளவில் இருந்து புதுக்குடியிருப்பு பகுதிகளில் தொடங்கிய ஆரவாரமும் இடைச்ச்சலும் தொடர்ந்து காதைப் பிளந்துகொண்டேயிருந்தன. ஒன்றுக்குப்பின் ஒன்றாகச் சென்றுகொண்டிருந்த நூற்றுகணக்கான வாகனங்கள், புல்டோசர்கள், மோட்டார் சைக்கிள்கள் என்று அந்தப் பிரதேசம் அதிர்ந்து கொண்டிருந்தது. அன்றிரவு எங்கள் ஒருவருக்கும் தூக்கம் வரவில்லை. கடவுளே இவ்வளவு ஆயிரக்காணக்கான பெடியள் போகுதுகள் அதுவும் வெற்றியோடு சுகமாகத் திரும்ப வேண்டும் என்று இரவு முழுவதும் ஒவ்வொருவரின் பிராத்தனைகளும் இருந்தன. நள்ளிரவு 12.30 மணிபோல் ஊரே அடங்கி இருந்த வேளையில் ஒருசில எறிகணைச் சந்தங்கள் கேட்டன. அதன்பின் பெரிய அளவில் சத்தங்கள் கேட்கவில்லை. மீண்டும் இரவு 2.30 மணி இருக்கும் திரும்ப அமைதியையும் கிழித்துக்கொண்டு வட்டமிட்டுக்கொண்டிருந்த புக்காரா விமானங்களின் இரைச்சல் எல்லோரையும் ஒரு கணம் உளிக்கிவிட்டது. மறுநாள் அதிகாலை வரை சுப்பர்சொனிக் புகாரா விமானங்கள் இறைந்து கொண்டே இருந்தன. “நேற்றிரவு முல்லைத்தீவினில் காயப்பட்ட போராளிகளை பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு போகினமாம்” “இராணுவ முகாம் முக்கால்வாசிப் பகுதியினையும் பிடிச்சாச்சாம்.” அன்று காலை ஊர் முழுவதும் இதுதான் பேச்சு. காலை 8.30 மணிபோல் 15க்கு மேற்பட்ட பஸ்வண்டிகள், லொறிகள், இழுவை இயந்திரங்களில் வந்த போராளிகள் “முல்லைத்தீவு முகாமில் இருக்கும் ஆயுதங்களை சாமான்களையும் அள்ளிறத்துக்கு ஆட்கள் தேவை, எங்களோட வரவிரும்பிற ஆட்கள் இதுகளிலே இருங்கள் என்று சொல்லி முடிக்க முன்னர் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தாமாகவே ஓடிவந்து வண்டிகளில் ஏறிக்கொண்டனர். அவர்களில் இளைஞர்கள் மட்டுமல்ல வயோதிபர்களும், குடாநாட்டில் இருந்து இடம்பெயர்ந்த அகதிகளும், அரச ஊழியர்களும் கூட இருந்தனர். “ஐயா நீங்கள் போறது ஆபத்தான இடம். காம்பில் இருந்து தப்பியோடிப்போன ஆமிக்காரங்கள் பற்றைகள் வழியே ஒழிந்து நின்று ரவுண்ஸ் அடிப்பாங்கள்” அந்தப் போராளிகள் கொடுத்த முன்னெச்சரிக்கையையும் கூடப் பொருட்படுத்தாமல் முண்டியடித்து ஏறிக்கொண்டிருந்தனர். “தம்பி எங்கட மண்ணை அந்த சிங்களவனிடம் இருந்து மீட்க நீங்கள் செய்கிற இந்த தியாகத்திற்கு நாங்கள் இதுகூடச் செய்யாவிட்டால்” என்று அவர்கள் சொல்லிக்கொண்டு பஸ்வண்டியில் ஏறினர். உற்சாகமும் உத்வேகமும் நிறைந்த அந்த மக்கள் கூட்டத்தை பார்த்ததும் அந்த இளம் போராளிகளின் உள்ளம் மகிழ்ச்சியால் குதூகலித்தது. ஆம் அங்கே ஒரு மக்கள் போராட்டம் முனைப்பெடுத்துக் கொண்டு இருந்தது. அந்த மக்களை ஏற்றி நிறைத்துக் கொண்ட பஸ்வண்டிகள் தகர்க்கப்பட்ட முல்லைத்தீவு இராணுவ முகாம் நோக்கி விரைந்து கொண்டு இருந்தன.
புதுக்குடியிருப்பு – முல்லைத்தீவு பிரதான வழியாகச் சென்றுகொண்டிருந்த அந்த பஸ்வண்டிகளும் லொறிகளும் சிவன் கோயிலைத் தாண்டி முள்ளிவாய்காலையும் பரந்தன் வெளியினூடாக கடந்து சென்றது. இடையிடையே வானத்தில் சுப்பர் சொனிக் விமானங்கள், கிபிர் குண்டுவீச்சு விமானங்களின் மிரட்டல் ஓடிக்கொண்டிருந்த வண்டிகளில் இருந்தவர்களைக் கலக்கிக்கொண்டிருந்தது. அந்த மக்களின் தொடர் வண்டிகள் அடர்ந்த காட்டுப் பகுதியூடாக சென்று வெட்டுவாய்க்கால் பாலத்தின் முன்பு நிறுத்தப்பட்டதும், அவற்றில் இருந்து இறங்கியவர்களின் இதயங்கள் படபடவென அடித்துக் கொண்டிருந்தன. “பாலத்தாலை இப்ப உள்ளுக்குப் போக ஏலாது. கடலுக்கு இறங்கிச் சுற்றித்தான் போகவேண்டும்.கொஞ்சத்தூரம்தான் போகவேண்டும்” அவர்களை அழைத்துக் கொண்டு சென்ற போராளி சிரித்துக் கொண்டு கலளிநூடாக நடக்கத் தொடங்கினான்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகப்பெரும் பழமை வாய்ந்த கடலேரிதான் அது. நந்தி உடையார் என்பவரால் அணை கட்டப்பட்டதால் அது நந்திக்கடல் எனப் பெயர் பற்றதாக ஒரு ஐதீகம். அந்த சிறிய ஏரி ஒரு காலத்தில் செல்வம் கொழிக்கும் விலை கடலாக இருந்தது. கடல் நீரும் நன்னீரும் சங்கமிக்கும் அந்த நந்திக்கடலில் இறால் வளர்ப்பு பிரபல்யம் வாய்ந்த ஒரு தொழிலாக இருந்து வந்தது. அந்த பெரிய இன இறால்களை வளர்த்து வருவதர்கேற்ற இயற்கை சூழல் இருந்ததால் பெருமளவில் ஏற்றுமதி செய்யக்கூடிய இறால் பண்ணையாக அந்த நந்திக்கடல் இருந்தது. (இப்போது 2009ம் ஆண்டு ஓர் வரலாறாக…. இந்தக் கட்டுரை 1996 வரையப்பட்டது ஆயினும் காலத்தின் தேவை உணர்ந்து தேசக்காற்று இணையம் வராலார்ருடன் மீள்பதிவாக்கிறது)
1990ம் ஆண்டின் பின்னரான இராணுவ முற்றுகையைத் தொடர்ந்து அந்தப் பிரதேச மக்களின் வாழ்வும் வளமும் அழிக்கப்பட்டுவிட்டது. தமிழீழ மாவட்டங்களில் வளம் செழிக்கும் மாவட்டமாக விளங்குவது முல்லை மாவட்டம் ஒன்றுதான். ஆம் கடல்வளம், காட்டுவளம், மண்வளம், நீர்வளம் என எல்லாமே ஓரிடத்தில் இருப்பதாலோ என்னவோ இங்கு வாழும் மக்களும் வந்தோரை வரவேற்கும் பண்புள்ள பரந்த உள்ளம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். அந்த மண்ணில் கால் வைத்ததும் அந்த மக்களில் ஒன்றாகச் சென்ற வேலாயுதம் என்ற வயோதிபர் ஒருவர் நந்திகடலைத் தொட்டுக்கும்பிட்ட காட்சி நெஞ்சை உருக்கியது. அவரும் அந்த மண்ணிலேயே காலம் காலமாக வாழ்ந்து பரம்பரை பரம்பரையாகச் சேர்த்துவைத்த சொத்துக்களை எல்லாம் பறிகொடுத்துவிட்டு உடுப்புக்களுடன் ஒரு சில சமையல் பாத்திரங்களுடன் மட்டுமே வெளியேறி இன்று அகதியாய் புதுக்குடியிருப்பில் வாழ்ந்து வருகின்றார். ஆம் மரணித்துப் போன அந்த நகரத்தை நோக்கி உயிர்த்துடிப்புள்ள மனிதர்களின் பயணம் அந்த நந்திக்கடல் நீரேரியூடாக ஆரம்பமாகியது. கோரைப் பற்றைகளும் பனைமரங்களுமகாக் காட்சியளித்த அந்த வரலாற்றுப் புகழ்பெற்ற நகரம் பேய்வாழ்ந்த வீடு போல் இருந்தது. உடைந்த கட்டிடங்கள் பற்றைகளால் மூடிப்போய் பாழடைந்து கிடந்தன. தூரத்தில் தெரிந்த இராணுவக் காவலரன்கள அந்தப் போர்ச் சூழழில் ஒரு பயங்கரமான தோற்றத்தைக் கொடுத்துக் கொண்டு இருந்தன. அவர்களை அழைத்துவந்த போராளிகள் முன்னே செல்ல அவர்களைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முழங்கால் அளவு தண்ணீர் ஊடாக நடந்து சென்று கொண்டிருந்தான்ர். அந்த ஆழம் குறைந்த நந்திக்கடளையும் கடந்து கடற்கரைக்கு வந்து சேர்ந்தவர்களுக்கு அங்கு இருந்த காட்சி பென்கெர் ஆங்கிலத் திரைப்படம் பார்த்தது போன்று திகிலூட்டுவதாக இருந்தது. அந்தக் கடற்கரை நீளத்திற்கு இரண்டு மூன்று அடிகளுக்கு ஒன்றாக ஆயுதம் தாங்கிய போராளிகளின் பெருந்தொகையாக தயார் நிலையில் நின்றனர். கடலில் கடற்புலிகளின் நூற்றுக்கணக்கான அதிவேகப் பீரங்கிப்படகுகள் அணிவகுத்து நின்றன. அங்கிருந்து சுமார் மூன்று மெயில் தூரம் வரை கடற்கரை மணலிநூடாக நன்னது சென்று முல்லைத்தீவு இராணுவ முகாமின் மையப்பகுதியை அடைந்தனர். அங்கே இராணுவத்தினரின் மிகப் பெரிய தகவல் தொடர்புக் கோபுரம் சரிந்துபோய்க் கிடந்தது. சுற்றுப்புறமும் கிடக்கும் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் சடலங்கள் சிதறிக் காணப்பட்டன. அந்த சடலங்களையும் கடந்துபோவதற்கு அவர்களுக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. ஆம் தமிழ்மக்களை குண்டு வீசிக் கொன்றவர்கள், தமிழர் சொத்துக்களை நீர்மூலமாக்கி அழித்தவர்கள் காலம் காலமாக வாழ்ந்த மக்களை அவர்களின் சொந்த மண்ணிலிருந்து அடித்துத் துரத்தியவர்கள். அந்தப் போர் வெறியர்களின் இறந்த சடலங்கள் தெருவீதிகளிலும் கட்டிட இடிபாடுகளிலும் காவலரண்களிலும் முட்கம்பிகளிலும் தொங்கிக்கிடந்தன.
கடந்த சில வாரங்களாக முல்லைத்தீவு இராணுவ முகாமில் இருந்து ஏவப்பட்ட நூற்றுக்கணக்கான ஆட்லறி எறிகணைகள் பசு மாடுகளை மட்டுமா கொன்றொழித்தன? தினமும் குறைந்தது ஒருவர் என்ற கணக்கில் மனித உயிர்களைப் பலிகொண்டு வந்தன. முள்ளியவளை விநாயகர் ஆலயத் தேரில் விழுந்த செல் அந்தத் தேரையும் ஆலையத்தையும் சிதைத்து 15 இலட்சம் ரூபாவிற்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அந்த முகாம் வளவினுள் சென்ற பொதுமக்கள் வியப்புடன் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு நின்றனர். அவர்கள் இந்தப் பாரிய படைத்தளத்தினுள் வருவார்கள் என நினைத்துக்கூடப் பார்த்து இருக்கமாட்டார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து வீடுகளை விட்டு வெளியேறி இனி தங்க தங்கட வீடுகளுக்கு எப்போ போகப் போகிறோம் என்றிருந்த அவர்களுக்கு முல்லைத்தீவு நகரம் ஒரு நம்பிக்கையைக் கொடுத்து விட்டது. அங்கே உதவி செய்வதற்காக விளிகாமத்தில் இருந்து இடம்பெயர்ந்து விசுவமடுவில் வாழும் ஒருவரும் வந்திருந்தார். அந்தக் காட்சி அவர்களுக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது. “ஐயா தம்பிமாரே கெதியாயாய் ஓடி வாருங்கள். இந்தப் பெட்டிகளைக் கொண்டுபோய் வள்ளத்திலும், டிரக்கர்களிலும் ஏற்றுங்கோ” அங்கே நிற ஏனைய போராளிகளுக்கு கட்டளையிட்டுக்கொண்டு நின்ற ஒருவர் உரக்கக் கத்திக்கொண்டு நின்றார். அவரின் அந்த வேண்டுகோளைத் தொடர்ந்து முகாமின் மையப்பகுதியில் இருந்த மூட்டைகள் பெரிய பெரிய பேட்டிகள் எல்லாம் வெளியே கொண்டு வரப்பட்டன. கடலில் நின்ற வளங்களிலும் டிராக்டர்களிலும் இவை ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. அங்கே ஆயிரக்கணக்கான பெண் போராளிகளும் ஆண்போராளிகளும் நின்று இயந்திரமாகச் செயல்பட்டுக் கொண்டு நின்றனர். போராளிகளுடன் சென்ற இளைஞர்கள் மட்டுமல்ல முதியவர்களும் கூட உற்சாகமாகச் செயல்பட்டுக் கொஞ்சத்தூரம் தூக்கிக் கொண்டுவந்து தாங்கோ” அங்கே ஒரு பெண்போராளி பெரிய பெட்டியை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்தார். சிரல் ஓடிப்போய் அவற்றை வாங்கி தூக்கிக் கொண்டு போய் டிராக்டரில் ஏறினர். அதைப் போல் ஆயிரக்கணக்கான பெட்டிகள் வள்ளங்களில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. சிலர் இரனுவமுகாமின் ஏனைய பகுதிகளுக்கும் ஓடிச் சென்று ஆசை தீரப் பார்த்து பிரமித்துப்போய் நின்றனர். அங்கே கண்ட காட்சிகள் அவர்களை மலைக்க வைத்துவிட்டன.
அந்த அரை முழுவதும் பலகோடி ரூபாய் பெறுமதியான உணவுப் பொருட்கள் மட்டும் அடுக்கடுக்காய் இருந்தான். சீஸ்கட்டிகள், நூடில்ஸ் பைகள், லிப்டன் தேயிலைப் பைகள், ஓவல்டின், மைலோ, நெஸ்டமோல்ட் பெட்டிகள், கொடியால் வகைகள், அரிசி மூடைகள், மா மூடைகள், என்று ஏராளமான உணவுப் பொருட்கள் மூட்டை மூட்டையாக அடுக்கப்பட்டு இருந்தன. இந்தப் பண்டகசாலைகளில் செமிக்கபட்டிருந்த உணவுப் பொருள்களே பலகோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று பார்த்தவர்கள் கூறிக்கொண்டார்கள். இவை யாவும் போதாதென்று பெட்டி பெட்டியாக சிகரட் பக்கெட்டுக்கள், வைன், பியர், சாராயம் போன்ற பல்வேறு மதுபான வகைகளும் கூட பெட்டி பெட்டியாக அடுக்கப்பட்டிருந்தன. “மச்சான் இதுகளை ஏற்றுவதற்கே பத்துநாட்களுக்கு மேல் போகும்” காலமையிளிருந்து வெயிலுக்க வேலை செய்கின்றோம். ஒரே தண்ணி விடாயாய் இருக்குது என்றான் இளையவனான முரளி. “டேய் முரளி அங்க பார் அந்தத் தட்டு நிறைய யூஸ் போத்தல்கள் அடுக்கிக்கிடக்குது” அவனும் அவனுடன் நின்ற ரமேஷும், அந்த அரை மூலையில் இரண்டு தட்டில் நீளத்திற்கு அடுக்கடுக்கா வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பலரக பழச்சாறு யூஸ் போத்தல்களைக் காட்டியதும் இருவரும் ஓடிச்சென்று அதில் ஒன்றை வாயில் கொட்டினர். அத்தகைய வெயிலிலும் தண்ணீர் தாகத்திலும் அனைவரும் ஓயாது வேலை செய்தனர். வெளியில் கொச்சி நீளத்திற்கு நின்ற டிரக்ரர்களிலும் லொறிகளிலும் பெட்டி பெட்டியாக ஆயுத தளபாடங்களையும், எறிகணைகளையும், ரவைகளையும் ஏற்றி நிறைத்ததும் அவை ஒவ்வொன்றாக முகாமைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தன. வழியில் ஒரு சிறிய வீட்டின் முனால் அழகான “பொமேரியன்” நாய்க்குட்டிகள் இரண்டுகளில் ஒன்று கத்திக்கொண்டு இருந்தது. அந்த அழகான பேட்டை நாய்க்குட்டு வருவோர் போவரைக் கைகாட்டி அழைப்பது போன்று முன்னம் கால்களை ஆட்டி ஆட்டிக் குரைத்துக் கொண்டிருந்தது. அது பிரிகேடியர் வளர்த்த செல்லப் பிராநியாம். அதனுடைய அழகையும் செயல்காளையும் கண்ட ஒரு போராளி ஓடிப்போய் அந்த நாய்க்குட்டியைத் தூக்கிக் கொண்டு வந்து அவனது வாகனத்துக்குள் ஏற்றி விட்டான்.
ஆடி மாதம் 17ம் திகதி இரவு 12.30 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் படையணிகளினால் தொடுக்கப்பட்ட இந்த அதிவேகத் தாக்குதலுக்கு “ஓயாத அலைகள்” எனப் பெயரிடப்பட்டது எவ்வளவு பொருத்தமானது. அன்றைய தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத ஓடி சுமார் நூறு மீற்றருக்கு அப்பால் உள்ள ஒரு மரத்தில் ஏறி இருந்து தப்பிச் சென்ற இராணுவ கோப்ரல், பி.பி.சி நிறுவனத்திற்கு அளித்த பெட்டி சண்டையின் அகோரத்தை வெளிக்காட்டியது. “நாங்கள் அன்றும் வழமைபோல் இராணுவக் காவலரண்களில் உசாராக இருந்தபோது அலை அலையாக ஆண்புலிகளும், பெண்புலிகளும் ஓடிவந்து அதிவேகத்தில் சுட்டுக் குண்டு நாலாபுறத்திலும் இருந்து தாக்கினார்கள். அந்த நேரத்தில் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது திணறிவிட்டோம். முடிந்தவரை நாங்களும் எதிர்த்து சுட்டுக் கொண்டிருந்தோம். அவர்களின் துரிதமான அடியின் வேகம் தாங்க முடியாமல் என்னிடம் இருந்த ரவைகள் தீர்ந்ததும் ஓடிப்போய் தென்னை மரத்தில் ஏறி ஒழிந்திருந்தேன். பின்னர் ஒரு ஜீப்பில் ஒரு புலி வந்து தமிழில் எதோ கூறியதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து ஆயுதங்களையும், போருலகளையும் இறந்த எங்களுடைய இராணுவத்தின் உடல்களையும் டிரக்டரிகளில் ஏற்றிக்கொண்டு இருந்தனர். புலிகள் மற்ற தளத்திற்கு சென்றதும் நான் மரத்திலிருந்து இறங்கி தப்பிச் சென்றேன்.” அந்தப் 19 வயது சிங்களச் சிப்பாய் புலிகளின் இந்தப் புயல்வேகத் தாக்குதலினால் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதை அவரது மருண்ட வெளுறிய முகம் காட்டிக் கொண்டிருந்ததாகச் செய்தியாளர் கூறினார்.
ஆம் கொரில்லா இயக்கமாகத் தோற்றம் பெற்ற விடுதலைப் புலிகள் இயக்கம் காலப்போக்கில் தரை, கடல், விமான வழித்தாக்குதல் ஊடாக வளர்ச்சி பெற்று ஒரு மரபு வழிப் படையணியாக முதிர்ச்சி பெற்றது. உலகில் விடுதலை இயக்கங்களுக்கு எல்லாம் முன்னோடியாகத் திகழ்கிறது. இந்த முல்லைத்தீவு முகாம் சமர் தலைவர் பிரபாகரனால் நன்கு திட்டமிடப்பட்டு, நேரிப்படுத்தப்படுத்தப்பட்டு பல மூத்த தளபதிகள் மூலம் வழிநடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் ஆகும். “ரிவிரச” இராணுவ நடவடிக்கைகள் மூலம் விடுதலைப்புலிகளின் முதுகெலும்பை உடைத்து விட்டோம். அவர்கள் பின்வாங்கிப் போயுள்ளார்கள். அவர்களால் இனியொரு மரபு வழிப்போரை மேற்கொள்ள முடியாது. ஒழித்திருந்து கொரில்லாத் தாக்குதலையே மேற்கொள்ள முடியும். இன்னும் 25 வீதமான புலிகளே இருக்கின்றனர். அவர்களையும் விரைவில் ஒழித்து நாட்டில் அமைதி நிலையை ஏற்படுத்துவோம்” என்று உலகத்திற்கு பாதுகாப்பு பிறது அமைச்சர் அனுரத்த ரத்வத்த அவர்கள் அறிக்கை விடுத்து சில வாரங்கள் கூட ஆகவில்லை. இந்தப் பாரிய முகாம் மீதான தாக்குதல் நடத்தப்பட்டது. சிறீலங்கா அரசுக்கும் அவருக்கும் பேரதிர்ச்சியையும், உலகுக்கு திகைப்பையும் கொடுத்துள்ளது.
இரவு 12.30க்கு ஆரம்பித்த தொடர்ச்சியான மோட்டார் தாக்குதலின் பின்னர் இராணுவ முகாமில் இருந்த எறிகணை பீரங்கிகளையும், கவசவாகனங்களையும் புலிகள் கைப்பற்றிவிட்டனர். அதனைத் தொடர்ந்து இராணுவ சிப்பாய்கள் எதுவும் செய்யமுடியாத அளவுக்கு ஆயுரக்கனக்கான புலிகளா

0 கருத்துகள்:

கருத்துரையிடுக