லெப்டினன்ட் கேணல் குலவேந்தன் அவர்களின் ஒன்பதாவது ஆண்டு நினைவாக.

லெப்டினன்ட் கேணல் குலவேந்தன் அவர்களின் ஒன்பதாவது ஆண்டு நினைவாக.

எனை மீண்டும் முத்தமிட வாடா அண்ணா


அண்ணா குலவேந்தா!
ஒன்பது ஆண்டுகளை கடந்து நிற்கிறேன் உன் நினைவு தடங்களோடு. நீ எமை விட்டு போனதேனோ அண்ணா?
காடுகளை கடந்து பல சோதனைகளை கடந்து ஒரு வீரத் தளபதியாக எனை தூக்கி அணைப்பாயே. பவித்ரா என அழைத்தால் போதும் உன் காலை சுற்றி வருவேனே. அப்படிப்பட்ட நீ இன்று எனை விட்டு சென்றதேனோ. பகைவன் உனை கொல்ல அன்று அலறிய உன் தம்பிகள் உன் வீரச்சாவு பற்றி பேசும் போது மனம் கொதிக்கிறது. அண்ணா குட்டிசிறி படையணியின் மட்டு மாவட்ட துணைத்தளபதியாகவும், கிட்டு பீரங்கி படையணியின் மல்டி பரல் சிறப்பு தளபதியாகவும் உன் சேவை அளப்பெரியது. குடும்பம் பற்றி சிந்தனை இல்லை. ஈழம் பற்றியே போதிப்பாய். துரோகம் பற்றி போதிப்பாய். பள்ளி பாடங்களை பாதியில் விட்டு சென்ற நீ ஈழப்பாடங்களை சரியாக கற்றாயடா.

அன்பும் கண்டிப்பும் போலாளிகளிடம் காட்டி மனதால் அவர்களை நேசிப்பாய். அன்று கிபீர் குண்டு வீச்சில் நீ காப்பாற்றிய என் அப்பா இன்று இல்லை. இறுதி சடங்கு கூட நீயே நடாத்தி வைத்தாய்.

விவசாயம் செய்து உன் தம்பிமாரை வளர்த்து போராட்ட பாதையை கட்டி எழுப்பி சாதனை காட்டினாய். மறவேன் அண்ணா. என் வீட்டு முற்றமும் இடிக்கப்பட்டு விட்டது. உன் கல்லறையும் இல்லை. அன்று என் வீட்டு விறாந்தையில் உன் மடியில் அமர்ந்து செல்லம் பேசிய என் மழலை மொழி மட்டுமே ஞாபகங்களாக எஞ்சி கிடக்கிறது.
உமை விட்டு வன்னி செல்லும் போதெல்லாம் அழுதேன் வாடா அண்ணா போவோம் என்று. ஆனால் உன் கொள்கையில் நீ மாறவில்லை அண்ணா.

வணங்குகிறேன்.

பவித்ரா நந்தகுமார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக