நாம் மௌனித்திருக்கின்றோமே தவிர மரணிக்கவில்லை!

* “நித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே தலைவா! எத்தனை துயர்வந்தும் உனைத் தேடுதே! தமிழ் ஈழத்தின் தலைமகனே! தமிழ் இனத்தின் தலைமகனே! நித்தமும் என் மனம் உந்தன் முகம் தேடுதே தலைவா…எத்தனை துயர்வந்தும் உனைத் தேடுதே தலைவா”…!!!
* “தமிழ் ஈழப் போர் என்பது வேலுப்பிள்ளை! பார்வதியின்! வீரமகன் பிரபாகரன் மூட்டிய நெருப்பு…இந்தப் போராட்டம் தமிழீழம் மீட்கும் வரை தொடரும்”…!
* “நாம் ஆடிய ஆட்டம் என்றும் அடங்காது – வேலுப்பிள்ளை பிரபாகரனின் தமிழீழ விடுதலைப் புலிக் கூட்டம் என்றுமே உறங்காது”…!
* “நாம் மௌனித்திருக்கின்றோமே தவிர மரணிக்கவில்லை! நாம் தனித் தமிழ் ஈழம் வென்று நந்திக்கடலில் மீண்டும் நீந்துவோம்”…!
* “நாம் தயங்க மாட்டோம்…எமது தமிழ் ஈழ மண்ணை எம் தானைத் தலைவனின் தலைமையில் மீட்கும் வரை நாங்கள் அடங்க மாட்டோம்”…!
எம் தானைத் தலைவனின் தலைமையில் எத்தனை…எத்தனை தமிழீழ விடுதலைப் புலி வீரர்கள்! வீராங்கனைகள்! வீழ்ந்திட்டபோதிலும் அச்சமென்பதே அற்பமுமின்றி உங்கள் உயிர்களை துச்சமென நினைத்து நீங்கள் இச்சைகொண்ட எமது தமிழ் ஈழத் தாய் நாட்டிற்காய் மண்ணில் சரிந்தீர்கள் எம் மாவீரர்களே! எம் மாவீராங்கனைகளே!
* “நீறுபூத்த நெருப்பாய் உள்ள எமது வலிகள்! உணர்வுகள்! வெகுவிரைவில் பீறிட்டு எரிமலையாக வெடிக்கும்”…!!!
தமிழ் ஈழத் திருநாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஏற்படும் வெற்றிகளுக்கும்! வீரசாதனைகளுக்கும்! பின்னல் ஒரு இரத்த காவியம் நிலவிக் கொண்டே இருக்கின்றது. இளமையான இனிமையான வாழ்க்கைப் பருவத்தையுடைய எம் தோழர்கள்! எம் தோழிகள்! ஒவ்வொருவரினதும் வீர தீரங்களும், வீரத் தற்கொடைகளுமே தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் உறுதியான படிக்கற்களாகும் இன்றுள்ள போராட்டத்தின் அதியுன்னத வளர்ச்சிப்பாதையில் நின்று நாம் ஏறிவந்த கடினமான, கரடு முரடான பாதையை திரும்பிப் பார்க்கும் போது எம்முடன் ஒன்றாகவந்த பல உயிர்களைக் காணவில்லை.
எம் உயிரிலும் இனிய மக்கள், எமக்கு உயிரான எம் தோழர்கள்…தோழிகள் என்று நிறைய உயிர்களை இழந்து விட்டோம். இவர்களை நாம் தேடும் போது தமிழ் ஈழ மக்கள் ஒவ்வொருவரினதும் உயிரின் ஒளியாகிய தமிழ் ஈழ இலட்சியத் தீபத்தில் அவர்களைப் பார்க்கின்றோம். எம் உயிர் தோழர்காளையும்…தோழிகளையும் நாம் நிச்சியமாக சென்றடைவோம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அப்போது நாம் மானசீகமாக, ஆத்ம ரீதியாக ஒன்றை உணர்ந்திருப்போம்.

* “காலம் எமக்கென்றொரு பணியைத் தந்திருக்கிறது…இது வீரவரலாறாகிப் போன எம் அண்ணனின் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரச் செல்வங்கள் தம் இறுதிக் கணத்தில் உச்சரித்த வீர வார்த்தைகள் இவை”…!
* “எம் தானைத் தலைவனின் தமிழீழ விடுதலைப் புலிகளின் வரிப்புலிக் கோடுகள் எப்போதும் வறுமைக் கோடாய் ஆகாது – நம் கண்களில் எறும்புகள் மொய்த்தாலும் எம் தமிழ் ஈழக் கனவுகள் செத்துப் போகாது”…!
* “எமது தமிழீழ வீர மண்ணே! முள்ளிவாய்க்கால் வீர மண்ணே! உன்னை என்றும் மறக்குமா எம் நெஞ்சம்? தமிழீழ எதிரிகளையும், மாபெரும் துரோகங்களையும்…பெரும் துரோகத்தனங்களையும் மன்னிக்குமா எம் நெஞ்சம்? என்றும் மறக்குமா எமது நெஞ்சம்?.?.?
* “எம் தமிழீழ விடுதலைப் புலி மாவீரர்களே…மாவீராங்கனைகளே உங்களை என்றும் மறக்குமா எம் நெஞ்சம்”…!
* “எம் அண்ணனின் அணியில் தமிழீழ விடுதலைப் புலியாய் அலையெனத்திரண்டீர்கள் எம் புலி மாவீரர்களே…மாவீராங்கனைகளே”…!
* “எமது தமிழீழத் தாய் மண்ணுக்காக மடிந்தவர்கள் எம் தமிழீழ விடுதலைப் புலி மாவீரர்கள்…மாவீராங்கனைகள்”…!
இன்றைய நாளில் தமிழீழத் தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இனிய,  இளைய, வீர இன்னுயிர்களை ஆகுதியாக்கி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து எம் மாவீரர்களையும்…மாவீராங்கனைகளையும், எமது மக்களையும் எனது நெஞ்சில் நிறுத்தி தலை சாய்த்து எனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.
– பா.பாலா

0 கருத்துகள்:

கருத்துரையிடுக