பவித்திராஎமுதிய ஈழம்!!

 அரசியலும் கயவரும் கூடு கட்டி வாழும் அழுக்கடைந்த தேசமாகி விட்டதா? பலர் வீதியில் கூவி விற்கும் வியாபார பொருளா ஈழம். பெண்களின் மார்பு கிழித்து அந்த உதிரத்தில் கால் கழுவி அழித்த காடையர் கூட்டம் தலை விரித்தாடும் பூமியில் அரசியல் சாக்கடைகளும் சேர்ந்தால் நம் கனவு தேசம் கனவோடுதான் போய் விடுமோ?

தமிழ் மக்களின் ஏக பிரதி நிதிகளாக விடுதலைப்புலிகளின் ஆட்சியில் இப்படி நடந்ததா என்றால் அரிதே! புலிகள் வேறாகவும் மக்கள் வேறாகவும் இருக்கவில்லை மக்களோடு மக்களாக மக்கள் சக்தியாக புலிகள் இருந்தனர். அதனால் தான் எதிரியை விட துரோகிகள் பலர் விரட்டப்பட்டனர்.

அன்று விடுதலைப்புலிகளை பிரதிநிதித்துவப்படுத்தி களப்படமற்ற அரசியல் வேண்டும் என்ற நோக்குடனே தமிழ் தேசிய கூட்டமைப்பு வளர்த்தது. இன்று புலிகள் இல்லை என்றவுடன் புலிகள் எங்கள் பிரதிநிதிகள் அல்ல அவர்கள் எங்களுக்கு நல்லதே செய்யவில்லை என இன்று சிங்கள தேசத்துடன் கைகோர்த்து நிற்கின்றனர்.

அன்று புலிகளை காண வரிசையில் நின்ற சம்பந்தன் போராளிகளை பார்க்க கூட அனுமதி கொடுக்க மறுக்கிறார் இன்று.

தேர்தல் நெருங்குகிறது கும்பிட்ட கையுடன் வெள்ளை வேட்டை சட்டையுடன் வீடுகள் நோக்கி நரிக்கூட்டம் வருகிறது. தந்திரமாக திட்டம் போடும் நரிக்கூட்டங்கள் மீண்டும் மீண்டும் ஏமாந்து போகும் எம் உறவுகள் என வரலாற்றை மாற்றிட முடியாத நிலையில் நாங்கள்.

புனிதமாக கட்டப்பட்ட ஈழத்தின் கோட்டை நரிக்கூட்டத்தின் கைகளில் இருந்து எப்போது மீளப்போகிறது.

- பவித்ரா-

0 கருத்துகள்:

கருத்துரையிடுக