புத்தர் சிலை வைத்து தமிழர் பூமியை தமதாக்க என்னும் சிங்களம்

தமிழர் பூமியை தமதாக்கும்
அதீத முயற்சியில் சிங்களவர்கள்
புத்தர் சிலை விவகாரம் அரசாங்கத்தை கவனம் செலுத்துமாறு கோரிக்கை!
புத்தர் சிலை விவகாரம் அரசாங்கத்தை கவனம் செலுத்துமாறு கோரிக்கை!
Posted By: 0333on: July 17, 2016In: இலங்கைNo Comments Print Email
சில நாட்களுக்கு முன்னர் சாம்பல்தீவில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டுமென திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. துரைரட்ணசிங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
திருகோணமலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இந்த விடயம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
நல்லாட்சி இதுவரை தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மைகளையும் செய்யவில்லை. ஆனால் இந்தச் சம்பவத்துக்கும் அரசாங்கத்துக்கும் எந்தவித நேரடித் தொடர்பும் இல்லையென நினைக்கின்றேன்.
இது திட்டமிட்டு ஒருசிலரால் மேற்கொள்ளப்பட்ட செயல்.
கடந்த காலத்தில் திருகோணமலை பிரதான பேருந்து தரிப்பிடத்தில் இவ்வாறான சிலை ஒன்று வைக்கப்பட்டதனால் எழுந்த நிலமையால் மாவட்டத்தில் மக்கள் பல பிரச்சனைகளைச் சந்திக்க நேர்ந்தது.
அந்தக் காலத்தில் தற்போதைய அதிபர் அமைச்சராக இருந்தபோது, இந்தப் பிரச்சனையில் தலையிட்டு சிட நடவடிக்கைகளை எடுத்திருந்ததார்.
குறித்த விடயம் நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டதனால் குறித்த சிலையை வழிபாட்டுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அது இன்றும் நடைமுறையில் உள்ளது.
இந்நிலையிலேயே சாம்பல்தீவு பிரச்சனையும் எழுந்துள்ளது. அத்துடன் குச்சவெளிப் பிரதேச அபிவிருத்திக் கூட்டத்தில் குச்சவெளியில் 14 விகாரைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புல்மோட்டை, அரிசிமலை மற்றும் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் பல இடங்களில் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டது. இவ்வாறு பௌத்த மக்கள் இல்லாத இடங்களில் ஆலயங்களை அமைப்பது நல்லிணக்கத்துக்குக் குந்தகமான விடயமாகும்.
பௌத்த மக்கள வசிக்கும் இடங்களில் விகாரைகள் அமைக்கப்படவேண்டும். அவர்கள் வசிக்காத இடங்களில் விகாரைகள் அமைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இது ஏனைய மக்களைப் புண்படுத்தும் ஒரு விடயமாகும். இந்த விடயத்தில் அரசாங்கம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளா

0 கருத்துகள்:

கருத்துரையிடுக