பவித்ரா நந்தகுமார் எழுதிய கண்ணை விட்டு அகலா அழகிய தீவே என் ஈழம்.

மறத்தமிழன் படையமைத்து தனிப்பெரும் கோட்டை
கட்டி சுதந்திர தீவிலே தமிழுக்கோர் அடையாளமாய் சீறும்
வேங்கைகளாக சினம் கொண்டு எழுந்த இளையோர்
கூட்டத்தோடு தானைத் தலைவன் பாதையமைக்க கிழக்கு
வெளித்தது ஈழம் எனும் தேசத்தில்.

இதமான தென்றல் காற்றும், குளிர் நீரும் அருவிகளும்
ஓடைகளும் புடை சூழ அழகிய வண்ணமாய் பனைமரக்
காடுகளும், வயல் வெளிகளும் கண் குளிர இளைப்பாறி போகும்
தேசமாய் தமிழ் விருந்தோடு வரவேற்றது எம் தேசம்.

முற்றத்து செவ்வரத்தையும், பந்தலில் கொடி மல்லிகையும்,
மாமரத்து பூவின் வாசமும், ஒருங்கே தாலாட்டும் முற்றத்தில்
வீட்டின் அறையை மறந்து.

வரி உடை தரித்து நிரை நிரையாய் புலி மறவர்களின் அணி வகுப்பும்,
தமிழீழ கானமும் ஒருங்கே சேர்ந்து ஊட்டும் இன விடுதலையின் உணர்வை.

கனவோடுதான் நிற்கிறோம் இன்று வரை நிஜத்தில் அழிந்தவர்களாக!

ஆக்கம் பவித்ரா நந்தகுமார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக