பவித்ரா நந்தகுமார் எழுதிய நமக்கான பாதை!


ஈழம் எனும் அழகிய தீவில் பிறந்த நாம் கருவிலே வீரம் சுமந்தோம். தாயவள் ஊட்டாமல் பரிசளித்த சேய் நம் ஈழம். காலம் வரலாறு கூறலாம். அதில் திரிபுகள் ஏராளம் இருக்கலாம். அது வருங்கால சந்ததி பல்வேறு கோணங்களில் பார்க்கலாம். அனைத்து உண்மைகளையும் அறிந்த சந்ததி நம் சந்ததியே. திரிபுகள் இன்றி அனைத்தும் உண்மையாக உரைக்கப்படவேண்டும்.
வருங்கால விருட்சங்களின் உணர்வுகளில் பதிக்கப்பட வேண்டும். அதுவே எம் உணர்வுகளை, உடமைகளை, உயிர்களை இழந்த வலியை எதிர்கால குழந்தைகள் மனதில் பதிய வைக்கும். காத்திருந்தோம் பல காலம். செத்து மடிந்தாலும் வீர மறவர்களாகவே மடிந்தோம். கொத்து கொத்தாக குண்டு மழை பொழியும் போதெல்லாம் பல்லாயிரம் வீரர்கள் களம் கண்டார்கள். உண்ணத தலைவனின் காலத்தில் வாழ்கிறோம். வருங்காம் நம் தலைவனின் பாதையிலேயே பயணிக்க வேண்டும்.
ஆயுதமோ, அகிம்சையோ தர்மத்தின் பாதையிலேயே நகர்த்தி இருக்கிறோம். எதிரியால் ஆபத்தை உணர்ந்தே தாக்கியிருக்கிறோம். ஆனாலும் பகைவன் அப்பாவி மக்களையும் கொத்தாக கொன்று குவித்தான். அப்போதும் எம் தலைவன் நிதானமாக எதிரி படைகளையே பந்தாடினார். மாறாக சிங்கள மக்களை சீண்டவில்லை. அவர்கள் ஆபத்துக்கள் பலவற்றில் இருந்து காப்பாற்றியும் விட்டிருக்கிறோம். இப்போதும் எம் இலக்கு எதிரியே அன்றி மக்கள் அல்ல. எமது போராட்டம் சீரானது. ஆயுதம் மௌனித்மாலும் அகிம்சை தொடரும். அதில் விதி விலக்கல்ல. எமக்கான பாதையே நாமே உருவாக்க ஆயுதங்கள் ஏந்தினாலும் சரி அகிம்சையானாலும் சரி எப்போதும் எம் தலைவனின் பாதையிலேயே பயணிப்போம்.
நன்றி
ஆக்கம் பவித்ரா நந்தகுமார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக