மர்மமாக உயிரிழந்த போராளிகளின் விபரங்கள் திரட்டப்படுகின்றன!

சிறீலங்கா இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மர்மமாக உயிரிழந்து வருகின்றனர் என வெளியாகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தாம்  முன்னாள் போராளிகளின் விபரங்களைச் சேர்த்து வருவதாகவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்  ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு பெற்ற போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டிருந்தால் அது சர்வதேச சட்டத்தை மீறிய ஒரு செயலாகுமெனவும், இவ்வாறு குற்றம் நிரூபிக்கப்பட்டால் நாம் சர்வதேச விசாரணையைக் கோரத் தயங்கப்போவதில்லையெனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் போதிய ஆதாரங்களோ தரவுகளோ இல்லாததன் காரணமாக அவசரப்பட்டு அவை, குறித்து எதுவும் கூறமுடியாது என்று தெரிவித்துள்ள அவர், கூறப்படும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் தகவல்களைத் திரட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக