மகனே எங்கள் நிலமும் எங்கள் வீடும் இதுதான்..... !


இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கும் தமது காணிகள், வீடுகளை விடுவிப்பது தொடர்பாக இராணுவத்தினரிடம் கலந்துரையாடுவதற்கு குறித்த இடத்திற்குச் சென்ற தாயொருவர் தனது மகனுக்குத் தாங்கள் இருந்த காணியை அடையாளப்படுத்திக் காட்டியுள்ளார்.
இராணுவத்தினரால் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி பரவிப்பாஞ்சான் மக்கள் போராட்டங்கள் மேற்கொண்ட நிலையில் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் அந்த காணிகளில் ஒரு பகுதி விடுவிக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.
உறுதியளித்தபடி காணிகள் விடுவிக்கபடவில்லை எனத் தெரிவித்த மக்கள், அண்மையில் குறித்த இடத்திற்குச் சென்று இராணுவ முகாம் அதிகாரியைச் சந்தித்து இந்த விடயம் தொடர்பாகக் கேட்டறிய முற்பட்டனர்.
இராணுவ அதிகாரி வெளியில் சென்றுவிட்டார் என்று தெரிவிக்கப்பட்ட காரணத்தால் நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன், வீடு திரும்பியிருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக