பழிவாங்குதல் வீரமல்ல பொறுப்புதான் வீரம்!!!

சிங்களவன் முன்னொடுத்த கடைசி யுத்தத்தில் கிளிநொச்சி சிங்களவனிடம் வீழ்ந்தபிறகு முக்கியமான தளபதிகள் போராளிகள் என்று மிக அவசரமாக அண்ணனை சந்திக்கின்றனர் மிகவும் இறுக்கமான சூழ்நிலையில் இக்கட்டான சூழ்நிலையில் இந்த சந்திப்பு நிகழ்கின்றது.
தளபதிகள் அண்ணனிடம் இவ்வாறறாக கூறுகின்றனர் நாம இப்போ கிளிநொச்சியை இழந்து நிக்கின்றோம் ஆமிகாரன் மிகக் கடுமையான படை நடவடிக்கைககளை முன்னொடுத்து வருகின்றான் நாங்கள் அவனுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் நமது இருப்பை நிலைநாட்ட வேண்டும் இப்போ இருக்கின்ற சூழ்நிலையில் இரணைமடு ஏரியை நாம் உடைத்துவிட்டால் சிங்களனின் படை நடவடிக்கை மேலும் முன்னேறாமல் தடுத்து நிறுத்த முடியும் அவன் உள்ளே கொண்டுவந்த ஆயுதங்களையும் டேங்கிகளையும் கைப்பற்றி விடலாம் இதன் மூலம் ஆமிக்கு மரணஅடி கொடுக்காலம் கிளி நொச்சியயையும் மீள கைப்பற்றி விடலாம் மேலும் இதிலிருந்து சிறிலங்கா ஆமி மீண்டு வருவதற்கு ஒண்றிரண்டு மாதங்கள் ஆகும் இந்த காலஇடைவெளியை நாங்கள் பயன்படுத்தி நாங்கள் இழப்புகளை சரிகட்டி பலம்பெற்று போராட்டத்தை முன்னொடுத்து செல்ல ஏதுவாக இருக்கும் என்று ஒருமனதாக கூறுகிறன்றனர்.

தலைவரிடம் இந்த திட்டத்துக்கு எப்படியும் அனுமதி வாங்கிவிட வேண்டும் என்பதில் தளபதிகள் உறுதியாக இருக்கின்றனர் தளபதிகள் கூறியதை மிகப் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த அண்ணா சற்றும் தாமதிக்காமல் அவருக்கே உரிய அதே நிதானத்துடன்,அவருக்கே உரிய அதே தெளிவுடன்,அவருக்கே உரிய தீர்க்கதரிசனத்துடன் இவ்வாறக கூறுகின்றார் நீங்கள் சொல்லுறது சரிதான் ஏரியை உடைச்சுவிட்டா ஆமிக்கு மரணஅடி கொடுக்கமுடியும் ஆனால் அதுக்கு பிறகு அந்த ஏரியையே நம்பியிருக்கின்ற விளைநிலங்களில் அடுத்த பத்தாண்டுகளுக்கு புல்,பூண்டுகூட முளைக்காது எங்கட மக்களின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பதிக்கப்படும் ஆமியை வெற்றிகொள்வதைவிட மிகமுக்கியமானது எங்கட மக்களின் வாழ்வாதாரம் என்று கூறி தளபதிகளின் அந்த திட்டதை நிராகரித்தார்.இவ்வளவு இறுக்கமான இக்ககட்டான சூழ்நிலையிலும் கூட தன்னிலை மாறாது தமிழர்களின் நலனை மட்டுமே முன்னிறுத்தி இதுபோன்ற முடிவுகளை எடுக்கின்ற தைரியம் துணிச்சல் இந்த உலகத்தில் பிரபாகரனன்றி வேறு யாருக்கு வரும் இப்போது புரிகின்றதா அண்ணன் பிரபாகரனை ஏன் தலைவர் என்று மண்ணிக்கவும் தமிழ்கடவுள் என்று கூறுகிறமென்று.
பழிவாங்குதல் வீரமல்ல பொறுப்புதான் வீரம்
-ஷேக்ஸ்பியர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக