சுவிஸ்சூரிச் மாநில தமிழீழக் கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு

சுவிஸ் தமிழர் இல்லம் 15 ஆவது தடவையாக அனைத்துலக ரீதியில் மிகப் பிரமாண்டமாக தமிழீழக் கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழா மிகச்சிறப்பாக ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய தினம் சூரிச் மாநிலம் வின்ரத்தூரிலுள்ள Sportanlage Deutweg and Talgut மைதானத்தில் நடைபெறுகின்ற இந்த விளையாட்டு விழாவில், வழமை போல் இவ்வருடமும் ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கனடா உள்ளிட்ட ஏனைய நாடுகளிலிருந்தும் ஏராளமான விளையாட்டு அணிகள் ஆர்வத்துடன் களமிறங்கியிருக்கின்றன.

இதேவேளை, ஆண்கள், பெண்களுக்கான உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், துடுப்பாட்டம், கிளித்தட்டு, முதலான குழு விளையாட்டுக்களும், இளையோருக்கான தடகளப் போட்டிகளும் இடம் பெற்றுவருகின்றன.

இவை தவிர, கயிறு இழுத்தல், குறிபார்த்துச்சுடுதல், சங்கீதக்கதிரை என்பனவும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களான கண் கட்டி அடித்தல், தலையணை அடிச்சமர் போன்றனவும் வெகு சிறப்பாக நடைபெற்றுவருகின்றன.

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் இளையோர்களை விளையாட்டு துறையில் மேம்பாடடையச் செய்வதோடு, அவர்கள் மத்தியில் தாயகம் குறித்த புரிதலை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டே தமிழர் விளையாட்டு விழா ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றதென இவ்விழா ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த இவ்விழாவிற்கு லங்காசிறி இணையத்தளம் ஊடக அனுசரனை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக