தனுக்குட்டிஎழுதிய அரக்கனின் பிடியில்....!என் தங்கை

முள்ளிவாய்க்காலில்...
தவறவிட்ட என்
தங்கை இவள்
தானோ..!
இரையும் இரைப்பையின்
கதறலைத்
தெரிந்து,
மூன்று வேளை உணவுதான்
கனவு என புரிந்து
காணும் கனவின்றி
நினைவில்....
பசி மட்டுமே பக்கத்தில்
அவளுக்கு சுடு மணல்
கொதிக்கப் பிஞ்சுப் பாதம்
பஞ்சு இல்லாமல்,
வறுமையின் வன்மம் இன்று
இதிகாசமாய்.
ஓட்டை உடை பதட்ட நடை
தலையில் பல ஐடை ஊசியாய் எடை
நாவினில் தாகம்,
உமிழ் நீர் பருகும் வேகம்.
சுடு மணலில் மிதந்த
பாதம் புண்ணாக
என்னுள்.....
மரணத்தின் யாக்கையாய்
கண்ணீரும் கண்ணுள்ளே
கருகிப் போகுதே
இவள் என் தங்கை தானோ!
ஏக்கங்களுடன்
உலா வரும் என் கண்கள்.
இல்லை என்று சொல்லிவிட
எனக்கும் ஆசை தான்
உரு மாறிய நிலையில்
தன் உள்ளத்தில் உள்ள
வலிகளை
இரு விழிகளால்
எழுத தொடங்குகியவள்
எழுதியும் விட்டாள்
"அ" ஆம் இவளும்
என் தங்கை தான்
ஒரு வாய் சோற்றுக்கு
யாசகம் செய்யாமல்
உண்டி தேடி
வெந்து போகிறாள்
வறுமையின் மடியில்முள்ளிவாய்க்காலில்
எத்தனை தங்கைகள்
என் தங்கை போல
ஏதிலியாக
அரக்கனின் பிடியில்....!
  

ஆக்கம் தனுக்குட்டி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக