கல்லறைக்கடவுள்கள் கவிதை மட்டுநகர் கமல்தாஸ்

மழை பெய்யும் காலம்
மரகதங்கள் துாங்கி
கண்விழிக்கும் நேரம்
மாலைப்பொழுதினில்
மணியோசை கேட்க
விழி நீர் கசியுதம்மா

தலைவன் உரையில்
தலைகள் நிமிர்ந்தன அம்மா
 மாண்ட மறவர்கள்
மீண்டு வந்து போவது
எம் முன்னே தெரியுதம்மா

 மாவீரனின் தாயின் வீர அழுகை
மனதினில் பதியுதம்மா
கல்லறைக்கடவுள் வாழும்
கருவறைசொர்க்கமாய் திகழுதம்மா

களத்திலே களப்பலியான
காவிய தோழனின் கல்லறை
வீரம் புகட்டுதம்மா

மீண்டும் வருவார்கள் வென்று -உன்று
மனையாள் காத்திருப்பாள்
மாண்டு வருகையில்
துணையால் துடித்தழுவாள்

துயரத்தீயில் வேகும் எம் மக்களை
துயரம் தீர்க்கவே வேங்கைகள் ஆகிய
வீர தேவர்கள் துயவையானது-‌அதை
நினைந்து நனைந்த விழிகளை
துடைத்து துடைத்து
கைகளும் வலி சுமக்கின்றது

ஆக்கம் மட்டுநகர் கமல்தாஸ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக