தமிழ்மானம் பெரிதாக தம் உயிர் தந்தவர்கள்

 கரை தாண்டிச் சென்று களம் ஆடி கயவரை கருவறுத்து
கரிகாலன் நெஞ்சத்தில் வாழ்ந்து ஈழக் கனவோடு
கல்லறையில் கண்முடித் துயில்கின்றவர் இவர்கள்

காற்றாய் அலை கடல் கிழித்து வான் மேகத்தை உடைத்து
வரும் பகை எதிர்த்து எம்மை காத்த காவல் தெய்வங்கள் இவர்கள்

கொட்டும் மழையிலும் கொளுத்தும் வெய்யிலும்
வீசும் புயலிலும் எல்லைச் சுவராய் நின்றவர்கள் இவர்கள்

உண்ணும் உணவைப் பறித்தான் பசித்த வயிற்றில் அடித்தான்
பச்சிளம் குழந்தை பால் குடிக்கும் மார்பை அறுத்தான்
கன்னியரின் கருப்பையை எடுத்தான்
பாவி அவன் எத்தனை கொடுமைகள் செய்தான்

கந்தகம் சுமந்து தமிழ்மானம் பெரிதாக - தம் உயிர் தந்தவர்கள்
மண வாழ்வை வெறுத்து தாயகத்தைக் காதலித்து
தாய் தேசம் மீட்கச் சென்றவர்கள்

பகை சூழ்ந்த எம் ஈழத்தில் புலி மறவர் வருகை அறிந்து
உயிர் வேண்டி ஓடுவார்கள் பகைவர்கள்
மரணம் வந்திடும் போது தலைவன் பெயரை உச்சரித்து
தாய் மண்ணை முத்தமிட்டு கண்களை மூடுவார்கள்

விடியலுக்காய் விடை தேடி விதைகள் ஆன மாவீரர்களை
விழிகளில் கண்ணீரோடு என்றும் நாம் தொழுதிடுவோம்!

கவி அஜய்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக