பிரான்ஸ் இல் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2016

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் ( நவம்பர் 27 ) - விதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள் !!
வீரர்களுக்கு மா என்ற அடைமொழி கொடுத்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் மா என்ற தழுவுசொல் ஒரு அர்த்தமுள்ள உயிர்மெய் எழுத்து. உயிரும் உடலும் கலந்த அர்த்தம் அதில் வெளிப்படுகின்றது. அழகு, வலிமை, பெருமை, பெரிய, குற்றமற்றவர் என்பன மா அடையின் பிற அர்த்தங்கள்.
பழந்தமிழர் வரலாற்றில் மாவீரர் என்ற சொற் பிரயோகம் கிடையாது. விசேட அர்த்தங்களோடு மாவீரர் என்ற சொல்லை முதன் முதலாகப் பயன் பாட்டிற்குக் கொண்டு வந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளாவர் மாவீரர் என்பது ஆண் பெண் இருபாலாரையும் ஒரு சேரக் குறிக்கும் பொதுச் சொல்.
வரலாற்றில் முதல் ஆண் மாவீரர் லெப் சங்கர் என்றழைக்கப்படும் செல்வச்சந்திரன் சத்தியநாதன் ஆவார். இவர் யாழ் வடமராட்சி மாவட்டத்திலே கம்பர் மலை எனும் கிராமத்தில் 1961 யூன் 19ம் நாளில் பிறந்தவர். 1982 நவம்பர் 27ம் நாளில் அவர் வீரச்சாவடைந்தார்.
மாவீரர்களின் இறப்பை வீரச்சா என்று அழைப்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் இன்னுமோர் மரபு மாவீரர்களின் சா தனித்துவமானது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் “காலத்தால் அழியாத சிரஞ்சீவிகள், சுதந்திரச்சிற்பிகள், எமது மண்ணில் ஒரு மாபெரும் எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள் “ என்று கூறியுள்ளார்.
லெப் சங்கரின் வீரச்சா நாளான நவம்பர் 27 ஈழத் தமிழர்களாலும் உலகத்தமிழர்களாலும் மாவீரர் நாளாகக் கொண்டாடப் படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக