சிறீலங்கா சிங்கள பெளத்த நாடு! திரு திருக்குமரன்

சிறீலங்கா சிங்கள பெளத்த நாடு அதற்கே இங்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் வழங்கப்படுமென ரணில் திரும்பவும் அறிவித்த பின்னணியிலும், அதனைத் தொடர்ந்து எளிமையின் நாயகனான மைத்திரி பெளத்தர்கள் வாழாத வடக்கில் அதிகளவான விகாரைகளை அமைப்பதற்காக நிதியினை ஒதுக்கீடு செய்திருப்பதனையும், அதனைத் தொடர்ந்து பிக்கு மற்றும் பின்னால் நடைபெறும் ஆக்கிரமிப்பு சம்பவங்களையும் பார்க்கும் போது ஈழத்தின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான
அமரர் செ.யோகநாதன், எழுதிய 'அரசு' என்ற நாவலில் குறிப்பிடப்பட்ட சம்பவங்களே நினைவுக்கு வருகிறது. 

யாரோ ஒரு தமிழனின் வீட்டுக்கூரையில் பறவையொன்று எச்சமிட்டுச் செல்லும் சில காலங்களில் அந்த எச்சத்திலிருந்து ஒரு மரம் முளைக்கும் அது ஒரு அரச மரமென வளர்ந்த பின் தான் அவருக்கு தெரியவரும், தெரிய முதலே பிடுங்கி இருக்கலாம், பின்னர் பிடுங்குவோமென அவர் இருந்து விட்டார், அவரது சோம்பேறித்தனத்தால் அது வேர்பிடித்து வளர்ந்து கூரையில் வெடிப்பேற்பட அரச மரத்தை அங்கிருந்தவர் அகற்ற முயல்வார், அதற்குள் அது அரசமரமென்று ஊருக்கு தெரிய வந்து விடும். இதனால் அருகில் இருந்த சிங்கள இனவாதிகள், அந்த மரத்தை கூரையில் இருந்து அகற்றுவதானது தங்களது புனித சின்னத்தையும் பெளத்தத்தையும் அவமதிக்கும் செயலென போராட்டம் செய்வார்கள். உயிர் அச்சுறுத்தல் விடுப்பார்கள், நாளாந்தம் வளர்க்கின்ற அந்த அரசமரம் கூரையை மேலும் மேலும் சிதைத்துக் கொண்டே இருக்கும். தன் வீட்டைக் காக்க வேண்டுமாயின் அரசை மேலும் வளரவிடாமல் பிடுங்கி எறியவேண்டும், ஆனால் அப்படி செய்தால் அவர் புலி தமிழினவாதியெனச் சித்தரிக்கப்படுவார். இப்படியாக
இந்த அரசமரப்பிரச்சனையை எப்படி பெளத்தத்துக்கு எதிரான தமிழர்களின் சதியாக திரித்து அவர்கள் பெரியதொரு இனக் கலவரத்தையே உருவாக்கினார்களென்பதுதான் அந்தக் கதை.
மீண்டும் அந்தக் காலம் மீண்டு வருகிறது.
நீங்கள் எவ்வளவு தான் சமாளிச்சு, ஒத்தோடி, இணங்கிப் போனாலும் சிங்களவனால சொறியாமச் சும்மா இருக்கேலாது. தமிழனின் வாழ்வுக்குள் ஏதோ ஓர்வடிவில் தடி ஓட்டாவிட்டால் அவனுக்கு நித்திரை வராது.
தமிழரசியல்வாதிகள் பேசப்போனபோதெல்லாம் சிங்களவர்கள் அடித்தனுப்பினார்கள்.
அடித்ததற்கு தமிழ்ப் போராளிகள் திருப்பி அடித்தபோதுதான் சிங்களவர்கள் பேசவே வந்தார்கள்.
இதுதான் என்றென்றைக்குமான இலங்கையின் அரசியல்..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக