தமிழினத் தலைவன் பிரபாகரன்.


தமிழன் யார் என்பதை அகிலமே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஒரு நாட்டின் வரலாற்றை மாத்திரமல்ல உலகின் பெரும் பகுதி வரலாற்றையே தலைகீழாக புரட்டிப் போட்ட ஈழப் போராட்டத்தின் நாயகன் பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உலகத் தமிழினத்தின் எண்ணம், சொல், செயல், மாற்றமடையக் காரணமானவர் பிரபாகரன்.
தமிழர்களுக்கு தமிழுணர்வை ஊட்டியவர். சோம்பிக் கிடந்த இனத்தைத் தட்டியெழுப்பினவர் என்பதோடு நிறுத்த முடியாது. பூமிப் பரப்பெல்லாம் தமிழின் விதை விதைக்கக் காரணமானவர் அவர்தான.;
சென்ற இடத்தில் மறைந்து வாழ்ந்த தமிழர்களை நான் தமிழன் என்று துணிந்து சொல்ல வைத்தவர் பிரபாகரன் தான் .

இனித் தமிழர் வரலாறு தூக்க நிலைக்குத் திரும்ப வாய்ப்பில்லை அவர் அடியெடுத்த போராட்ட மரபு தொடரும். கூலிகள் என்றும் வந்தேறு குடிகள் என்றும் நாதியற்றவர்கள் என்றும் தூற்றப்பட்ட உலகத் தமிழர்களை வலிமை பெற்று உரிமை கோர வைத்தவர் தலைவர் பிரபாகரன்.
இணையத்தில் தமிழ் உலகின் முக்கிய மொழிகளில் ஒன்றாகத் திகழக் காரணமானவர் தமிழியலுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் ஊக்கு கருவியாகத் திகழ்பவர் தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, தமிழன் தோற்றம், வளர்ச்சி பற்றிய ஆய்வுக்குத் தோன்றாத் துணையாக நிற்பவர்.
பலரை வரலாறு படைக்கின்றது ஒரு சிலர் வரலாற்றைப் படைக்கிறார்கள் அந்தச் சிலரில் ஒருவர் பிரபாகரன். மிக விரைவில் பிரபாகரன் யுகம் தோன்றும் அப்போது உலகம் நினைத்துப் பார்க்காத உயரத்திற்க்குத் தமிழினத்தைப் பிரபாகரன் தூக்கிச் சென்று நிறுத்தியதைத் தமிழினம் உணரும்
..
அன்று தொட்டு இன்று வரை தமிழரின் போரட்டம் அற வழியைத் தழுவி நிற்கின்றது அகிம்சை வழியிலும் சரி, ஆயுத வழியிலும் சரி தமிழர் வரித்துக் கொண்ட போராட்டம் தர்மத்தின் நியமத்தில் நெறிப்பட்டு நிற்கின்றது அவர் நடத்திய ஈழவிடுதலைப் போர் தார்மீக அடிப்படையிலானது. அது தமிழர்களின் ஆன்மபலமாகவம் இருந்து வருகிறது.
சிங்களவர்கள் உண்மையான புத்த மதத்தினராக இருந்தால் தமிழீழ விடுதலைப் போருக்கான அவசியம் இராது சமாதானப் பேச்சென்றாலும் சரி, போர் என்றாலும் சரி, சிங்களவர்கள் நேர்மை, நிதானம், காருண்யம் அற்றவர்களாக வெளிப்படுகிறார்கள் சிங்களப் பயங்கரவாதம் ஈழத் தமிழர்களின் தேசிய ஆன்மாவில் விழுத்திய வடுக்கள் என்றுமே மாறப்போவதில்லை.
விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியல் பாதை’ என்று பிரபாகரன் மிகச் சுருக்கமாகக் கூறியிருக்கிறார். அவர் தொடர்ந்து பேசுகிறார் விடுதலை என்ற இலட்சியத்தை நாம் இலகுவாகத் தேர்ந்தெடுக்கவில்லை. வரலாறுதான் அதை எம்மிடம் வலுக்கட்டாயமாகக் கையளித்துள்ளது சுதந்திரம் வேண்டுவதைத் தவிர வேறு வழி எதையும் வரலாறு எமக்கு விட்டு வைக்கவில்லை.
..
✍ தலைவர்
வே பிரபாகரன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக