யாழ் நூலக எரிப்பும், அதன் வரலாற்றுப் பின்னணியும்


இலங்கையில் அப்போது அதிகளவான பொது மக்கள் பயன்படுத்தும் நூலகமாகவும், வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இரண்டாவது பெரிய நூலகமாகவும் திகழ்ந்த யாழ் நூலகம் எரிக்கப்பட்டு 35 ஆண்டுகளாகிவிட்டன.
எம்பி. தியாகராஜாவை புளொட் இயக்க சுந்தரம் சுட்டுக்கொல்ல அதற்குப்பதில் இராணுவம் நாச்சிமார் அம்மன் கோயில் கோபுரத்தை எரித்தது. இதிலிருந்து யாழில் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. 
இதற்குப்பதிலாக இதுவரை ஆயுதமெளனம் காத்துவந்த விடுதலைப் புலிகள் இயக்கம் லெப்.சீலன் தலைமையில் 18 பேர் (தலைவர் உட்பட) உரும்பிராய் பிள்ளையார் கோயிலடியில் வைத்து முதலாவது வீதித் தாக்குதலை 28.05.81 நள்ளிரவு நடத்தினர். . இதில் கலந்துகொண்ட வர்களில் 5பேர் புலம்பெயர் தேசங்களின் உள்ளனர். கலாவதி உட்பட.இதுவே விடுதலைப்புலிகளின் கன்னி வீதித்தாக்குதலாகும். இரண்டாவது உமையாழ்புரத்தாக்குதல்
இதேநேரம் 31.05.81 இலங்கையின் மாவட்ட அபிவிருத்தி சபைத்தேர்தல் நடைபெற இருந்தது. இதற்கான ஆயத்தம் எல்லா இடமும் நடைபெற நல்லூரிலும் சிவசிதம்பரத்தின் பிராந்திய செயலகத்திலும் ஆயத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவ்வாறு ஆயத்த வேலைகள் செய்துகொண்டிருந்த 2 பேர் இதன் எதிரொலியாக கொல்லப்பட்டனர்.
அதுவரை தேர்தலைப் புறக்கணிப்பதாக இருந்த மக்கள் இச்சம்பவத்துடன் கிளர்ந்தெழுந்து 100% வாக்கினை அளித்து கூட்டணியை வெல்லவைத்தனர். இது இராணுவத்தை மேலும் ஆத்திரமூட்டச் செய்தன. 31.05.81 தேர்தல் வெற்றிக்களிப்பில் இருந்த மக்களுக்கு அன்று நள்ளிரவு இடி விழும் என எதிர் பார்க்கவில்லை.
இது இப்படி இருக்க பிரேமதாச - லலித் - காமினி திசாநாயக்க இடையிலான முக்கோண போட்டி காமினியை உந்த காமினி இவர்களை வீழ்த்தி முன்னுக்குவர யாழ் நூலகத்தை எரிக்க திட்டமிட்டான். இதற்கு அவன் ஆலோசகரும், சட்டத்தரணியும் உந்துதலாக இருந்தனர்.
காமினியுடன் 3 பஸ்களில் சுமா‌ர் 150 வரையான காடையர்கள், விடுப்பில் இருந்த பொலிஸ், யாழ் பொலிஸ் ஆகியோர் இத்துரோகத்திற்கு துணைநிண்டனர். யாழ் நூலகமும் இவர்கள் எண்ணம்போல் எரிந்தது. ஆனால் காமினியின் அரசியற் கனவு கறைபடிந்ததாக ஆகிவிட்டன. இதனால் ஈழத்தமிழர்களின் விலை மதிக்க முடியாத பொக்கிசங்கள் அழிந்து நாசமாகின
இதனா‌ல் கையெழுத்துப்பிரதிகள், ஓலைச்சுவடிகள், சங்கிலியன் கால மருத்துவ நூல்கள், வாகடங்கள் என விலைமதிப்பற்ற நூல்கள் எரிந்து சாம்பராகின.
யாழ் நூலகம் எரிதல் கண்டு கலங்கிய பல்கலைக்கழக மாணவர்கள் கையில் டைனமேற் வெடியுடன் பல்கலைக்கழக நூலகத்தை காப்பாற்ற திரிந்தனர். இவர்களுடன் தலைவர் பிரபாகரன், லெப் சீலன் உள்ளிட்ட போராளிகளும் அப்போது கிட்டத்தட்ட இரண்டு லட்சம் புத்தகங்கள் வரையில் இருந்த பல்கலைக்கழக நூலகத்தை காப்பாற்ற காவலிருந்தனர்.
இந்நூலக எரிப்பானது ஈழத்தமிழர் மத்தியில் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக