கவிஞர் வன்னியூர் செந்தூரன் எழுதிய மூன்றாம் விதி நடக்கும்

தண்ணீரில் கண்ணீர்கரையும்
காலம் கங்கணமிட்டிருக்கும்
செங்குருதி சிதைந்தோடும்

வெஞ்சினவேளை விரையும்



துரோகத்தின் கொடுமையை
விரோதத்தின் வெப்பியாரத்தை
புத்தனின் தேசப்பித்தர்களும்
புத்தியிலேற்றும் நாள்வரும்


ஈழத்தின் புனிதத்தை கலைத்த
அத்தனை வல்லரசுப் போர்முனையும்
முற்றுகை முகாமிட்டழிக்கும் ஒருநாள்
புத்தனின் போதிமரத்தோடு தேசத்தையும்


உடல்கருகி ஊண்சிதைந்து
கடல்தாண்டி அலை கொதிக்க
உணவளித்து ஆறுதலுரைப்பார்
எல்லாளன் வம்சத்துப்பிள்ளைகள்


முள்ளிவாய்க்காலின் எதிர்த்தாக்கம்
கட்டாயம் நடக்கும் தென்புலத்தில்
துட்டகாமினியின் குடிகளையும் காக்கும்
தூயசோழவீர வேங்கைக்கொடி அன்று



ஆக்கம்  கவிஞர்
வன்னியூர் செந்தூரன் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக