தமிழின அழிப்பின் உச்சக்கட்டத்தின், நினைவில் நிற்க்கின்றோம்..

எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியில் நிற்க்கின்றோம். கண்ணிருந்தும் குருடர்களாய் உலகமே மௌனித்து, மனிதம் மரத்துப்போன அந்தநாட்கள் ஒவ்வொரு தமிழனினது நெஞ்சினில் என்றும் அகலாத கரிய நாட்க்கள். அந்த நாளில் தமிழீழத்துக்காய் வித்தாகிய அனைவருக்கும் வீரவணக்கம்.
தமிழீழம் என்பது ஈழத்தமிழருக்கான சலுகையல்ல, அது உரிமை. காலங்காலமாக எமக்கு சொந்தமான பூமி, எம் பாட்டர்களும், முப்பாட்டிகளும் அதற்க்கு முந்தியவர்களும் வாழ்ந்த எமக்கே உரித்தான மண், அதைத்தானே உரிமை கொண்டாடினோம் !! அதுக்காக்கத்தானே போராடினோம். இந்த உலகமும், ஆதிக்க சக்திகளும் முக்கால்வாசி விடையங்களை, தலை கீழாகவே புரிந்து வைத்திருந்தன என்பதற்க்கு தமிழீழ விடுதலைப்போராட்டம் சிறந்த உதாரணம். யாரை குற்றம் சொல்வது என்பதை விட, நாம் என்ன செய்யப்போகின்றோம் என்பதுதான் முக்கியம்.
எவ்வளவு இழப்பைக்கொண்டும் ஒற்றுமை வரவில்லையே நமக்கு ? சிங்களத்தின் எல்லாக்கட்சியும் தமிழனுக்கு உரிமை கொடுப்பதில்லை, தமிழர்களை அடிமைப்படுத்துதல் என்ற கருத்துக்களில் ஒற்றுமையாய் இருக்கிறார்கள், நாங்கள் தமிழீழம் என்ற கோட்ப்பாட்டில் கூட ஒற்றுமையாக இருக்க முடியவில்லை, இதற்க்கு மேலும் திருந்தவும் வாய்ப்பில்லையோ என்று எண்ணத் தோன்றுகின்றது. நம்முள் ஒற்றுமை இல்லை, இருந்தாலும் எதிரி அதை இலகுவாக உடைத்துவிடுகின்றான், இதற்க்கு நாமே முழுப்பொறுப்பு. ஒற்றுமை இல்லாத இனம் என்றுமே சுதந்திரமடையாது.
சிங்களம் எமது உரிமைகளுக்கு செவிமடுக்குமென்ற முட்டாள்த்தனத்திலிருந்து எப்படி வெளிவந்தோமோ, அதேபோல இந்தியா தமிழீழத்தைப் பெற்றுத்தரும் என்ற நிலை மாற்றம் அடைய வேண்டும். சனநாயக வழியில் சர்வதேச போர்க்குற்ற விசாரணைகள் வெற்றி பெறச்செய்வதன் மூலம், பொதுவாக்கெடுப்பு மூலம் தமிழீழம் அமைக்கலாம். ஆக ஒற்றுமை என்ற முதற்படியில் நாமெல்லாம் கால்வைத்தால் எமது பலம் பல்கிப்பெருகும், அதன் மூலம் எல்லா விடையங்களையும் சாதிக்கலாம். இந்த ஒற்றுமைப்படுத்தலுக்கான மிகப்பெரிய அமைப்பாக ஊடகங்கள் இருக்கின்றன என்பதை இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டும்.
ஆங்காங்கே நீட்டப்படும் ஆதரவுக்கரங்களை இறுகப்பற்றி, மெல்ல மெல்ல எமது இறுதி இலக்கை எட்டவேண்டும், விடுதலை என்ற நீண்ட இலக்கை அடைவது சுலபமல்ல, அது நாடு, அயல் நாடுகள், பிராந்தியம் என நீண்ட அலகுகளை தாண்டி உருவாக்க வேண்டும். மாவீரர்களும், போராளிகளும், மக்களும் செய்த தியாகங்கள் போற்றுதற்க்குரியது, அதற்க்கு தமிழீழம் மட்டுமே ஈடானது என்பதை அனைவரும் புரிந்து செயற்ப்படுவோம்.
மே 18 உலகத் தமிழர்களால் இனவழிப்பு நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் அன்றையதினத்தில் கேளிக்கை நிகழ்வுகளை தவிர்த்து, எம்மாவீரர்களையும்,எம் மக்களையும், நினைவேந்தல் செய்வோம்.
“சிங்களத்தின் கனவுகள் ஒருநாள் கலையும் எம்மாவீரர்கள் கண்ட கனவுகள் பலிக்கும்” என்ற தலைவனின் கூற்றின்படி, தேச விடுதலையை முன்னெடுப்போம்.
தலைவர் வருவார் அவர் தலைமையில் தமிழீழம் அமையும்..
..................................................................
தமிழன் செந்நீரும் கண்ணீரும் சிந்திய
முள்ளிவாய்க்கால் நினைவுகளை மறக்கமுடியுமா ?
அந்த நினைவுகளை வெறும் வார்த்தைகளால் கூறிவிட முடியாது
அனுபவித்தவர்கள் இப்போதும் அநாதைகளாய்த்தான் அந்தரிக்கிறார்கள் !!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக