புலிகளின் விமானத் தாக்குதல் நடத்தலாம்,


இலங்கைக்கு இராணுவம் மற்றும் பாதுகாப்பு விடங்களில் உளவுத் தகவல்கள் வழங்கும் நாடுகள் வரிசையில் அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பெரும் பங்கு வகித்து வருகின்றது. அந்த வகையில் அண்மையில் இலங்கை அரசுக்கு ஒர் எச்சரிக்கை இந்த நாடுகளால் விடுக்கப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது. அதாவது வெளிநாடுகளில் வாழும் ஈழ விடுதலைப் புலிகளால் இலங்கை மீது ஒரு விமானத் தாக்குதல்கள்; நடாத்தக் கூடிய வாய்பொன்று இருப்பதாகவும் அதற்கான பாதுகாப்பை பலப்படுத்துமாறும் கட்டளை இடப்பட்டுள்ளதாம்.
கடந்த மாதம் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கின்றாரா? என்ற தலைப்புக் கொண்ட ஒரு கட்டுரையில் சொல்லியிருந்தோம். புலிகள் எதிர்காலத்தில் இலங்கை மீது விமானச் சண்டையை விமானத் தாக்குதலை செய்யலாம் என்றும் இலங்கை எதிர்கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தோம். அது கூட எங்காவது ஒரு நாட்டில் இருந்துதான் அந்த விமானத் தாக்குதலை செய்ய முடியுமேயொழிய, இலங்கைக்குள் இருந்து செய்ய முடியாது என்றும் சொல்லியிருந்தோம் என்பதை இங்கு ஞாபகமூட்டுகின்றோம்.
வெளிநாடுகளில் வாழும் புலிகள் மற்றும் புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் புலம் பெயர் மக்களில் சிலருக்கு அரசு அஞ்சுகின்றது. காரணம் வெளிநாடு வாழ் புலிகள் ஆதரவு கொண்ட அணியொன்று இறுதி யுத்தத்தின் பின்னர் இஸ்ரவேலுடன் நெருங்கிச் செல்வதாகவும் எதிர்காலத்தில் ஏதாவது விமானத் தாக்குதலுக்கு இலங்கை எதிர் கொள்ளலாம் என்று அஞ்சுகின்றது.
அதிபர் சிறிசேன கருத்து
அண்மையில் அமெரிக்கா சென்று வந்துள்ள அதிபர் மைத்திரிபால சிறிசேன புலிகள் வெளிநாடுகளில் பெரும் பலத்துடன் உள்ளார்கள் என்று கருத்துத் தெரிவித்திருந்திந்தார். விடுதலைப் புலிகளை ஒழித்து விட்டதாக சொல்வதில் உண்மையில்லை. அவர்கள் வெளிநாட்டில் இன்னமும் மிகவும் பலத்துடன்தான் உள்ளனர் என்றும் விடுதலைப் புலிகளை முழுமையாக அழித்து விட்டதாக மஹிந்தர் பீற்றிக் கொள்கின்றார். அதில் கொஞ்சமும் உண்மையில்லை. இலங்கையில் வேண்டுமானால் புலிகள் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் வெளிநாடுகளில் இன்னமும் புலிகள் மிகவும் பலத்துடன்தான் உள்ளனர் என்று அதிபர் அமெரிக்கா சென்று ஐ,நா மன்ற கூட்டத் தொடரில் உரையாற்றிய பின்னர் நாடு திரும்பிய பின்னர் ஊடகத்திற்கு கருத்துத் தெரிவித்திருந்தார். அதிபர் மைத்திரிக்கு அமெரிக்க பாதுகாப்பு உயர் மட்டத்தால் சொல்லப்பட்ட கருத்தைத்தான் அதிபர் மைத்திரி தெரிவித்திருந்தார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
அரசு யுத்த விமானக் கொள்வனவு
இலங்கை அரசு புதிய ரக சண்டை விமானங்களை கொள்வனவு செய்கின்றது. அந்த வகையில் பாகிஸ்தானில் இருந்து ஜேஎப் 17 சுப்பர் சொனிக் விமானம் கொள்வனவு செய்கின்றது. அதற்காக விமானப்படைத் தளபதி ஏர்மார்ஷல் சுகன் புளத் சிங்கள பாகிஸ்தான் செல்கின்றார். இப்போது இந்தியாவும் இலங்கைக்கு யுத்த விமானங்களை வழங்க முன்வந்துள்ளது. விமானப்படையிடம் தற்போது தம்வசம் இஸ்ரவேல் தயாரிப்பான கிபிர் மற்றும் சீனத் தயாரிப்பான எப்-7 விமானங்கள் உள்ள நிலையில்தான் இந்த நவீன ரக விமானங்கள் கொள்வனவு செய்யப்படுகின்றது.
நாடு ஒரு அமைதியான நிலையில் இருக்கும்போது அரசு எதற்காக யுத்த விமானங்களை கொள்வனவு செய்ய வேண்டும். என்ற கேள்வி பலமகாத்தான் உள்ளது. நாட்டில் சமாதானம் அமைதி நிலவுகின்ற இந்த நிலையில் நவீனரக போர் விமானங்களை அரசு கொள்வனவு செய்வதன் நோக்கம்தான் என்ன.அதில் மறைந்துள்ள மர்மம்தான் என்ன. வடகிழக்கில் விமானப்படை, கடற்படையினர் உஷார் நிலையில்…..
வடகிழக்கில் உள்ள விமானப்படையினர் மற்றும் கடற்படையினர் உஷார் நிலையில் உள்ளனர். வடக்கில் பலாலி, இரணைமடு, கொக்குவில், வவுனியா, கிழக்கில் மொரவெவ, சீனக்குடா, மட்டக்களப்பு ஆகிய விமானப்படை முகாம்களில் புதிய பயிற்சிகள், புதிய யுத்த பயிற்சிகள் வெடிப்புப் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றது.
மற்றும் வடக்கில் காரைநகர் மண்டைதீவு தொட்டு கிழக்கில் திருகோணமலை வரையுமான கடற்படையினர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். விசேடமாக பலாலி, சீனக்குடா, மட்டக்களப்பு விமானப்படை தளங்களில் விசேட பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. எதற்காக திடீரென்று இந்தப் பயிற்சிகள் என்று நாம் ஆராய்ந்த போது வெளிநாடு வாழ் புலிகளால் அரசு அஞ்சுகின்றது என்பது தெரிய வருகின்றது.
எது எப்படியானாலும் வெளிநாடு வாழ் புலிகளால் இலங்கை அஞ்சுகின்றது என்பது மட்டும் உண்மை. இதேநேரம் இந்திய அரசு இலங்கை விமானப்படை மற்றும் கடற் படையினருக்கு விசேட பயிற்சிகள் அளிக்கவுள்ளார்கள். கருணாவை காப்பாற்ற இந்தியா எடுக்கும் முயற்சிகள்
வடக்கில் இறுதி யுத்த மீறல்கள் சம்மந்தமாக உள்நாட்டு விசாரணை என்ற போர்வையில் நடைபெறவுள்ள விசாரணையில் இராணுவம் மற்றும் மஹிந்த கம்பனி கொண்ட சிங்களவர்களைக் காப்பாற்றிவிட்டு கருணா பிள்ளையான் போன்றோரை பலிக்கெடாவாக்க இந்த அரசு முயன்று வருகின்றது. அதன் முதற் கட்டம்தான் பிள்ளையான் கைது மற்றும் அவரது செயலாளர் பிரசாந்தன் கைது.
பிள்ளையான் கம்பனியின் அடுத்த குறி திருக்கோயில் இனியபாரதி. ஏற்கனவே பிள்ளையான் மூன்று மாதங்கள் தடுத்து வைப்பு என்று சொன்னாலும் அவர் மீது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரவுள்ளதால் தடுத்து வைப்பு நீடிக்கும். பிள்ளையான் கம்பனி பலிக்கெடாவாக ஆக்கப்படலாம்
கருணாவையும் அரசு கைது செய்யும் திட்டத்தில் உள்ளது. ஆனால் இந்தியா வேண்டாம் என்று தடுக்கின்றது. காரணம் இந்தியாவை மாட்டிவிடும் திட்டத்தில் உள்ளாராம். பிள்ளையான் போன்று கருணா இல்லை. கருணா சற்று தந்திரமாக செயல்படுவார். இதேவேளை கருணாவுக்கு ரணில் தரப்பில் இருந்தும் ஒரு எம்பியூடாக உதவி கிடைக்கலாம்.கருணா மீது அரசு கை வைத்தால், கருணா இந்தியாவின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் கொண்டு வந்து விடுவார் என்று இந்தியா அஞ்சுகின்றது.
அதனால் இந்தியா பெரும் தர்மசங்கடத்தில் திண்டாட வேண்டும். கருணாவில் அரசு ஏவல்களை ஏவிவிட்டால், கருணா இந்தியா வடக்கில் செய்த அத்தனை தறுதலை வேலைகளையும் அரங்கேற்ற வேண்டிவரும் என்ற ஓலையொன்று இந்தியாவுக்கு சொல்லப்பட்டுள்ளது. அதனால் இந்தியா கருணாவை காப்பாற்றும். ஆனால் சர்வதேச விசாரணையின் போது இந்தியா கருணாவுக்கு எதுவும் செய்ய முடியாமல் போகலாம்.
காரணம் வெளிநாட்டு விசாரணையில் எழுத்து மூல ஆவணம் என்பதால் இந்தியா இந்த இடத்தில் மூக்கை நுழைக்காது. கருணா பிள்ளையான் கம்பனி மஹிந்தவை நம்பி ஏமாந்து விட்டார்கள். பிள்ளையான் மஹிந்தவின் கூலிப்படையாகச் செயல்பட்டது குறித்து ஏற்கனவே ரணிலுக்கு தெரியும். அதைவிட மஹிந்த ஆட்சியில் மஹிந்தர் நடத்திய முக்கியமான கொலைகள் பற்றிய தகவல்கள் தற்போது ரணில் தரப்புக்கு கிடைக்கப்பெற்று வருகின்றது.
இதேவேளை நிதிக் குற்றவியல் சம்மந்தமான விசாரணை பற்றிய தகவல்கள் முன்கூட்டியே மஹிந்தருக்கு கிடைத்து வருகின்றது. இப்படியாக ஒரு கண்ணாம்மூச்சி விளையாட்டு நடைபெற்று வருகின்றது. விரைவில் முக்கியமான கொலைகள் பற்றிய தகவல்கள் வெளிவரலாம். அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்று சும்மாவா சொன்னார்கள். அந்தப் பழமொழிக்கு இப்போதுதான் மக்களுக்கு விடை கிடைத்துள்ளது.
கிழக்கில் தமிழ் கூட்டமைப்புக்கு ஒரு தொல்லையாக இருந்து வந்த பிள்ளையான் கம்பனிக்கு கால்கட்டுப் போடப்பட்டுள்ளது. கருணா எவ்விதமான தேர்தலிலும் ஈடுபடமாட்டார். அதில் அவர் ஈடுபாடு காட்டவுமாட்டார். அதனால் எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தல் மற்றும் மாகாணத் தேர்தல் மட்டக்களப்பில் தமிழ் கூட்டமைப்புக்கு எவ்விதமான தொல்லைகளுமின்றி தேர்தல் பணிகளைச் செய்யக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக