வன்னி மண்ணே அழுகிறது

வள்ளலே உன்னை
வாவென்று அழைத்து
வழியெங்கும்
செங்கம்பளம் விரித்து
காத்திருந்த வன்னி நிலம்
இன்று வெறும் காடாய்
கிடக்கிறதே.....
தம்பியுடன் நீயும்
சட்டத்தை
நம்பித்தானே
சரித்திரத்தில்
மாற்றம் வரவழைக்க
காலமெல்லாம்
காத்திருந்தாய்
வரலாற்றில்
உன் பெயரெழுதி
வடம்பிடித்து நீ
வன்னிக்கு
வந்த பொழுதெல்லாம்
உன் பாதங்களில்
எங்கள் ஊர்புழுதி
ஐயா
ஆழுமையில்
சிங்கமே
எங்கே போனீரய்யா
எமக்கு
வாய் இருந்தும்
போகும்
வழி தெரிந்தும்
தாய் மொழியினாலா
நாம்
தோற்றுப்போனோம்
வாய்கிழியக் கதறினாலும்
வந்தொரு ஆறுதல் சொல்ல
அரசியலில்
யாருமில்லை
ஆலமர
வேருமில்லை
தாய் நிலமேயின்று அழுகிறது
பாய் விரித்து உன்னை
விருந்துக்கு
அழைக்கிறது
தேசத்தின் குரலே
தேம்பித் தேம்பி
அழுகின்றோம்
தலை சாய்ந்து
தொழுகின்றோம்
திசைபார்த்து வாரும்
எமக்கொரு
ஆறுதலைத் தாரும்
வழியெல்லாம்
தீபங்கள்
உமக்காக
எரிகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக