முன்னாள் தளபதி ராம், கைது (எப்பொழுது விடியும் தமிழர்கள் வாழ்க்கை.).

புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி ராம் கடத்தப்பட்டுள்ளார், கைது செய்யப்பட்டார் இது தான் ஸ்ரீலங்கா..
எதிர்மன்னசிங்கம் அரிச்சந்திரன் எனப்படும் அம்பாறை மாவட்டத் தளபதி ராம் இனம் தெரியாதோர்களால் உதலில் கடத்தப்பட்டார், ஞாயிறன்று காலை, திருக்கோவில் பிரதேசத்திலுள்ள அவரது வீட்டுக்கு நீல நிற ஜீப் வண்டியில் வந்த அடையாளம் தெரியாத சிலர் அவரைக் கடத்திச் சென்றனர், அவரது மனைவி காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்தார். அதன் பின்னர் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியை வெளிவிட்டது இலங்கை காவல் துறை.. ஆனால் அவரிடமிருந்து வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
ஆகவே கடத்தல்களுக்கு தொடர்பானவர்களுக்கும், காவல்துறைகளுக்கும் எப்படியான தொடர்புகள் உள்ளன என்பதை ஊகிக்க முடிகிறது..
கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவராக இருந்த அவர், இறுதியாக அம்பாறை மாவட்டத் தளபதியாக இருந்தார்.
இலங்கை அரசால் கிழக்கு மாகாணம் முழுமையாக விடுவிக்கப்பட்ட பின்னர், அவர் திருகோணமலை மாவட்டத்திலுள்ள காட்டுப் பகுதியில் வைத்து 2009ம் ஆண்டு இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பின்னர் 2013 ம் ஆண்டு விடுதலையாகி திருமணம் முடித்து திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்துவருவதுடன் விவசாயம் செய்து கொண்டு வந்தார்.
எப்பொழுது விடியும் தமிழர்கள் வாழ்க்கை..
EeLam MPK BoYs !!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக